வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.- மக்கள் திலகத்தின் RED COMBINATION SHIRT SUCCESS SONG
https://www.youtube.com/watch?v=n6e3zPIlXok
Printable View
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.- மக்கள் திலகத்தின் RED COMBINATION SHIRT SUCCESS SONG
https://www.youtube.com/watch?v=n6e3zPIlXok
அன்பு எஸ்வி சார்
தெனாலி ராஜன் இன் பாடல்கள் மற்றும் காட்சிகள் selection சூப்பர்
முதன் முதலாக இவர் பெயரில் பதிவை பார்கிறேன் நமது மக்கள் திலகம் திரியில் .உண்மையில் மக்கள் திலகத்தின் அந்த சந்தன கலர் (தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம்) க்கு ரெட் கலர் ஷர்ட் மிகவும் பொருத்தம்
நல்ல ரசிகர் என்று நினைக்கிறேன்
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.- மக்கள் திலகத்தின் RED COMBINATION SHIRT SUCCESS SONG
https://www.youtube.com/watch?v=lCxA8X0BcF8
My experience, watching Nadodi Mannan in silver screen.
நாடோடி மன்னன் என்ற படத்தை முதல் முதலாக பார்த்தது வீடியோ காசெட்டில் 1986 வருடத்தில். நான் அப்பொழுது அவருடைய ரசிகன் அல்ல. 2வது முறையாக நான் காலேஜ் படிக்கும் போது பார்த்தேன். பாலா முரளி அரங்கம், வியாழகிழமை மதிய காட்சி. படம் பார்த்த பின் வியப்பு ஆச்சரியம் இவைகள்தான் எனக்கு தோன்றின. தலைவர் தனது ஆட்சியில் என்ன செய்தாரோ அதை தான் நாடோடி மன்னன் படத்தில் சொல்லி இருக்கிறார். 1958இல் திரையில் சொன்னதை தனது (1977 முதல் 1987 வரை) வாழ்நாளில் நடத்தி காட்டிவிட்டு சென்று இருக்கிறார்.
அங்கே திரையில் தலைவர் சொல்லும் வசனங்களை அவருடைய ரசிகர் என் பக்கத்தில் இருந்து ஒப்பித்தார். தலைவர் சொல்லுவார் "என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு நம்பி கெட்டவர்கள் இன்று வரை இல்லை" இந்த வசனத்திற்கு அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.
இந்த படத்தில் தலைவரின் சகோதரர் வில்லனாக வருவார். என் முன்னே இருந்த ஒருவர் MGC அவர்கள் தரும் சங்கடங்களை பொறுத்துக்கொள்ள முடியாததால் டே சொட்டை என்று கத்திவிட்டார் அருகில் இருந்த அவருடைய நண்பர் உடனே "அவர் நமது தலைவரின் சொந்த அண்ணன்" என்றவுடன் தெரியாமல் சொல்லிவிட்டேன் மன்னிச்சுருங்க என்றார். தலைவரின் அண்ணன் என்ற வார்த்தைக்கு அந்த நபர் தந்த மரியாதை எனக்கு வியப்பை தந்தது.
2006அம் ஆண்டு நாடோடி மன்னன் திரைபடத்தை பாரத் அரங்கில் கடைசி நாள் மதிய காட்சியாக பார்த்தேன். இந்த முறை நான் கவனித்தது தலைவரின் நடிப்பு, வசனங்கள், சண்டை காட்சிகள், எடிட்டிங் திறமை, இருவேட காட்சிகளை இன்றும் வியக்கும் வகையில் எடுத்த விதம், பிரமாண்டமான காட்சிகளை miniature மூலமாக காட்டிய விதம் அவருடைய இயக்க திறமையை பறைசாற்றியது.
நாடோடி மன்னன் படத்தை திரையில் கண்டு களித்தது மிக குறைவு CD யில் பார்த்தது தான் மிக அதிகம். 2008இல் 50வது ஆண்டில் நம்முடைய srimgr.com வலைப்பூவில் பல சிறப்பான காட்சிகளை பதிவு செய்தேன், நான் வலைப்பூவில் மிக அதிக அளவில் சுமார் 40 நாட்கள் நாடோடி மன்னன் 50வது ஆண்டின் பதிவிற்கு செலவு செய்தேன். இந்த பதிவின் மூலமாக தான் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தார்கள் அதில் மிக முக்கியமானவர் பெங்களூர் வினோத் அவர்கள்.
My post on the 50th year of Nadodi Mannan.
http://mgrroop.blogspot.in/2008/08/n...year-1958.html
The video clips were blocked by Raj Video vision on copy rights ground.
The cup used by MGR in Nadodi Mannan and I had the opportunity to handle, thanks to MGCB Pradeep for allowing me to have the chance to uphold the cup.
http://www.youtube.com/watch?v=zT8zr...-bZmNAZNpkHkfw
Dialog scene.
https://www.youtube.com/watch?v=FOQad32D26U
The epic three Emgeeyar Pictures movie celebrated in 2013, the reaction to Nadodi Mannan scenes.
https://www.youtube.com/watch?v=mJjOTtgXFms
Most of the videos that I have uploaded especially the people reaction to the scenes of Nadodi Mannan and Ithayani have been blocked and deleted due to copyright issues.