https://www.youtube.com/watch?v=fCFARzYCEWI
Printable View
அடக்கத்தின் எவரெஸ்ட்
ஏற்கனவே சொன்னபடி, இன்று ரிக்க்ஷாக்காரன் படத்தைப் பற்றி எழுத முடியவில்லை. நாளை எழுதுகிறேன். இந்த படத்தில் நடித்ததற்காக பாரத் விருது கிடைத்தது பற்றி காஷ்மீர் வானொலிக்கு தலைவர் அளித்த பேட்டியை மட்டும் இன்று குறிப்பிடுகிறேன்.
1972ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியன்று 1971-ம் ஆண்டில் ரிக்க்ஷாக்காரன் படத்தில் நடித்ததற்காக தலைவருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்பதற்கான ‘பாரத்’ விருது அறிவிக்கப்பட்டது. இதுவே மிக தாமதமாக கிடைத்த விருது. ஏற்கனவே, அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தாலும், நாளை நமதே படத்தில் ‘‘நான் நல்லோர்கள் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு செல்வாக்கை பெறுகின்றவன்’’ என்று தலைவர் பாடுவது போல, மக்களின் பாராட்டு, ஆதரவு ஆகியவற்றையே உயரிய விருதாக கருதும் தலைவர், இந்த விருதை எதிர்பார்த்தவர் அல்ல. பட்டங்களுக்கோ, பதவிகளுக்கோ அவர் என்றுமே ஆசைப்பட்டதில்லை.
பாரத் விருது அறிவிக்கப்பட்டபோது, இதயவீணை படப்பிடிப்புக்காக தலைவர் காஷ்மீரில் இருந்தார். காஷ்மீர் வானொலி அவரை பேட்டி கண்டது. அதில் முக்கியமாக பாரத் விருது பற்றி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியையும் அதற்கு தலைவர் அளித்த பதிலையும் அப்படியே கீழே தருகிறேன்.
கேள்வி: பாரத் பட்டம் அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
தலைவர் பதில்: நான் இதை எதிர்ப்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் நான் இருந்த காரணத்தால் அதை நம்புவதற்கே சிறிது நேரம் ஆகியது.
எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போய்விடுமானால், அதை தாங்கிக் கொள்ள இதயத்திற்கும் போதுமான வலிவு இல்லாமல் போய்விடுமானால், அது பெரும் ஏமாற்றமாகத்தான் முடியும். அதே சமயம் எதிர்பாராத ஒன்று கிடைத்தால் அது மனத்தை நிரப்பி பெரும் மகிழ்ச்சியைத் தரும். சில சமயங்களில் அதுவே பெரும் அதிர்ச்சியாகவும் அமைந்து விடும்.
........ தலைவர் சொல்வதை பார்த்தீர்களா? இந்தப் பண்பும் பணிவும் அடக்கமும்தான் அவரை எவரும் எட்டாத உயரத்துக்கு எவரெஸ்டாக உயர்த்தின.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்