Originally Posted by
RAGHAVENDRA
இசைக்கு எந்த பேதமும் இல்லை ... மொழி பேதம் ... நிச்சயமாகக் கிடையாது... இனிமையாக காதில் விழும் எந்த இசையும் நெஞ்சில் நின்று விடும்.
ஹிந்தி தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள இனிமையான இசையே மனிதனின் வாழ்வில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மருந்தாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் வாசு சாரின் இந்தத் திரி பலரது உள்ளத்தில் மன நிம்மதியைத் தரும் மருந்தாகவும் திகழும், திகழ்கிறது என்பதும் உண்மை.
1960 மற்றும் 1970களில் தமிழில் டி.எம்.எஸ். போன்று கன்னடத்தில் பி.பி.எஸ். அவர்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார். இறுதி வரை அவரது புகழ் நிலைத்து நின்றது மட்டுமின்றி இன்றும் அவரது பாடல்கள் மூலம் வாழந்து கொண்டும் இருக்கிறார்.
அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை கன்னட மொழித் திரைப்படங்களிலிருந்து நாம் கேட்டு மகிழ்வோம்.. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், இசையரசியின் பங்கும் அதே போல் குறிப்பிடத் தக்கதாகும். மொழியின் உச்சரிப்பில் சற்றும் சறுக்கலின்றி அவர் பாடிய கன்னடப் பாடல்கள் கேட்பவர் உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்யும்.
தொடக்கமாக கஸ்தூரி நிவாஸ படத்திலிருந்து ஒரு பாடல் நீ பந்து நிந்தாக என்ற பாடல், ஜி.கே. வெங்கடேஷ் இசையில் ஆர்.என்.ஜெயகோபால் வரிகளில்...
பல்லவியின் மொழி பெயர்ப்பு ... நீ வந்து நின்ற போது, நின்று நீ புன்னகை புரிந்த போது... எனத் தொடங்கும்..
ராஜ்குமார் அவர்களை புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் கஸ்தூரி நிவாஸ.
தற்போது இப்படதத்தை வண்ண மயமாக்குவதாக ஒரு செய்தி நிலவுகிறது. இது உண்மையா தெரியவில்லை.
இந்த கஸ்தூரி நிவாஸ படத்தைப் பார்த்தால் நிச்சயம் நடிகர் திலகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்த அவன் தான் மனிதன் படத்தின் ஒரிஜினல் தான் கஸ்தூரி நிவாஸ.