-
ஒரு மாமனிதர் இருந்தார்!
கோடை காலம் விடை பெற்றுக் கொண்டிருந்த ஒரு ஜூலை மாதம் அது…
கல்லூரியின் இளங்கலை வகுப்பில் அப்போதுதான் அடியெடுத்து வைக்கிறார்கள் அந்த மாணவர்கள்.
கல்லூரியைப் பற்றியோ அந்த கடற்கரைச் சாலை பற்றியோ எந்த விவரமும் தெரியாத கிராமத்து மாணவர்கள்…
கல்லூரி அலுவலகத்தில் சேர்க்கைக் கட்டணம் செலுத்தப் போனபோது, திடீரென்று கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்கள்.
அழைப்புக் கடிதத்தில் சொன்னதைவிட 400 ரூபாய் அதிகம். அது ஒரு பெரிய தொகைதான். ஊருக்குப் போய் வாங்கி வந்தால்தான் உண்டு. மணியார்டர் அனுப்பச் சொல்லாம் என்றாலும், முகவரி கிடையாது.
கலங்கி நின்ற அனைவரையும் ஒன்று திரட்டினர் சிலர். ‘முதல்வரைப் பார்க்கப் போகலாம் வாருங்கள்’ எனப் புறப்பட்டனர். கல்லூரி முதல்வரையல்ல… கருணையின் அடையாளமான தமிழக முதல்வர் எம்ஜிஆரை!
20 மாணவர்கள் சென்றார்கள் தலைமைச் செயலகத்துக்கு. வாயிலில் இருந்த இரு காவலர்கள்தான் முதல்வர் அறையைக் காட்டினர். மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் கிடையாது. மனித நேயத்தின் உணர்வுகள் தெரியாத கருவிகளின் பாதுகாப்பு தேவை இருக்கவில்லை அப்போது.
அட, ‘முன் அனுமதி வாங்கினீர்களா?’ என்றுகூட மாணவர்களிடம் யாரும் கேட்கவில்லை.
முதல்வரின் உதவியாளர் அந்த மாணவர்களில் நால்வரை மட்டும் முதல்வரின் அறைக்குள் அனுமதித்தார்.
எதிரியையும் தன் வசப்படுத்தும் அசாத்தியப் புன்னகையோடு அந்த மாமனிதர், மாணவர்களை வரவேற்றார். அவரால் சரியாக பேச முடியாத காலகட்டம் அது. பக்தர்களிடம் என்ன மொழியில் பேசுகிறார் கடவுள்… அந்த மாமனிதரும் அப்படித்தான். எத்தனையோ லட்சம் ஏழை மாணவர்களுக்கு கல்விக் கண் திறந்த ஆண் சரஸ்வதி அவர்.
மாணவர்கள் கண்ணீருடன் சொன்னதைக் கருணையுடன் கேட்டவர்… சற்று தடுமாறியபடி சொன்ன வார்த்தை, ‘நல்லா படிக்கணும்… வகுப்புக்குப் போங்க. நான் பார்த்துக்கறேன்..!’
எழுந்து வந்து தோளில் கையை வைத்து, தேவ ஆசி மாதிரி கூறினார்.
அந்த வார்த்தைகள் இப்போதும், காதுகளில் ஒலித்தபடி இருக்கின்றன… நினைக்கும் போதெல்லாம் நெகிழ்வில் கண்களை நீர் முத்துகள் மறைக்கின்றன.
அந்த அறையை விட்டு வெளியில் வந்த சில வினாடிகளில் முதல்வரின் உதவியாளர் மீண்டும் வந்தார்.
‘போகும்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரைப் பார்த்துவிட்டுப் போங்கப்பா… முதல்வர் உத்தரவு போட்டுட்டார்… கவலைப்படாம பத்திரமா கல்லூரிக்கு போகச் சொன்னார்…’ என்றார்.
தலைமைச் செயலகத்திலிருந்து எழிலகம் செல்வதற்குள் உத்தரவு தயாராக இருந்தது.
‘அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் ரத்து… முதல்வர் எம்ஜிஆர் உத்தரவு!!’
நம்பினால் நம்புங்கள்… இந்த உத்தரவுக்குப் பின் கல்லூரிக்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கட்டிய தொகை வெறும் ரூ.65 மட்டும்தான். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கட்டியது ரூ.15!!
அந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகையை உயர்த்தி படிப்புச் செலவு குறித்த கவலையின்றி படிக்கும் வகை செய்தார்…
பொதுவாகவே பெயருக்கு முன்னாலும் பின்னாலும் பட்டங்களையும் படிப்புகளையும் சுமந்து கொண்டே திரியும் வழக்கம் பிடிக்காதவன் நான். எம்ஜிஆர் பார்க்காத பட்டமா…
ஆனால் இப்போது நிச்சயம் அவற்றை என் பெயருக்கு முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன்…
ஏன் தெரியுமா?
இந்த நாட்டின் அடையாளம் காணப்படாத ஒரு குக்கிராமத்தில், ஏழ்மையில் பிறந்தவனும்கூட, சர்வதேச பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் வாங்குமளவுக்கு படிக்க முடியும். அதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கத்தாலேயே செய்து தர முடியும் என்ற நிலையினை முதலில் உருவாக்கிக் கொடுத்தவர் எம்ஜிஆர்தான்!
இன்றைய உயர் அதிகாரிகளில் பலர் அப்படிப் படித்து ஐஏஎஸ் ஆனவர்கள்தான்… மருத்துவர்களில் பலர் வெறும் 1200 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்தி எம்பிபிஎஸ் படித்தவர்கள்தான்… முனைவர் பட்டம் பெற்று கல்லூரிகளில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் பல பேராசிரியர்களுக்கும் கல்விக் கண் திறந்த வள்ளல், இரண்டாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதைதான்… நிஜமாகவே பாரதத்தின் ஒப்பற்ற ரத்தினம் அவர்.
http://i63.tinypic.com/2lcl3rq.jpg
வாழ்க நீ எம்மான்…!
டாக்டர் எஸ்.சங்கர் M.A., M.Phil., Ph.D.
-
-
-
தினத்தந்தி 25/06/17 - நாகர்கோயில்
http://i66.tinypic.com/aoswhe.jpg
-
எம்ஜிஆருக்கு அமைந்த உயர்வு போல் வேறு எவருக்கும் அமையவில்லை .காரணம் எம்ஜிஆர் குறிக்கோளோடு வாழ்ந்தார் . உழைத்தார். தன்னை நம்பினார் . ரசிகர்களை நம்பினார் . மக்களை நம்பினார் . , வெற்றி கண்டார் . வரலாறு படைத்தார் .
1947ல் கதாநாயகன்
1950ல் சூப்பர் ஸ்டார்
1954ல் வசூல் சக்கரவர்த்தி
1956ல் மதுரை வீரன் - இமாலய வெற்றி
1957ல் திமுக வெற்றிக்கு உதயசூரியன் எம்ஜிஆர் உழைப்பு
1958ல் நாடோடி மன்னன் - வரலாற்று வெற்றி விழாக்கள்
1960ல் மன்னாதி மன்னன் எம்ஜிஆர்
1961ல் சமூக புரட்சி படம் திருடாதே - சீர்திருத்த காவியம்
1962ல் தேர்தலில் திமுக வெற்றிக்கு உழைப்பு
1963ல் 9 படங்களில் நடித்து மாபெரும் புகழ் ஈட்டியவர்
1964ல் ரசிகர்களை தீவிர பக்தர்களாக மாற்றிய எம்ஜிஆர் படங்கள்
1965ல் எங்க வீட்டு பிள்ளை - நாடே வியந்து பாராட்டி ஏற்று கொண்டது
1966ல் மீண்டும் 9 படங்களில் எம்ஜிஆர் ஜொலித்தார் .ரசிகர்கள் பேரானந்தம்
1967ல் மறுபிறவி . தேர்தலில் வெற்றி . நிலைத்து நின்றார் .
1968ல் ஒளிவிளக்கு 100வது படம் , வெற்றி மேல் வெற்றி
1969ல் அடிமைப்பெண் - நம்நாடு தித்திக்கும் விருந்து ரசிகர்களுக்கு .
1970ல் மாட்டுக்கார வேலன் வெள்ளி விழா .புகழ் உச்சக்கட்டம் .
1971ல் தேர்தலில் வெற்றி . ரிக் ஷாக்காரன் இமாலய வெற்றி .
1972ல் பாரத் எம்ஜிஆர் . புரட்சித்தலைவர் எம்ஜிஆர் - அதிமுக உதயம் .
1973ல் திண்டுக்கல் வெற்றி வீரர் . உலகம் சுற்றும் வாலிபன் வைர கிரீடம் .
1974ல் புதுவை - கோவை வெற்றி .உரிமைக்குரல் 200 நாட்கள் .
1975ல் இதயக்கனி இமாலய வெற்றி .
1976ல் அரசியல் மற்றும் திரை உலகில் முடி சூடா மன்னன் .
1977 - 1987 வரை முடிசூடிய மன்னன் .
எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த இந்த பெருமைகள் மறக்க முடியாது .
எம்ஜிஆர் அரசியல் இயக்கம் அழிந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டவர்கள் இன்று விழி பிதுங்கி எம்ஜிஆரின் புகழ் மேன்மேலும் உயர்ந்து வருவதை பார்த்து மனப்புழுக்கமும் கவலையும் ஆட்கொண்டு தங்களை ஆறுதல் படுத்தி கொள்ள வழியில்லாமல் தடுமாறுவது கண்டு பரிதாபம் கொள்வது மட்டும் தான் நம்மால் முடியும் .
-
-
http://i67.tinypic.com/2lsvgur.jpg
புரட்சித்தலைவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது சிறிதும் அதிர்ச்சியடையவில்லை. தான்தான் உண்மையான திமுக என்று தேர்தல் ஆணையத்தை நாடவில்லை! தான் பிரபலப்படுத்திய உதயசூரியன் சின்னத்திற்கோ, திமுக கொடிக்கோ, கட்சி அலுவலகத்திற்கோ உரிமை கோரவில்லை! அண்ணா திமுக என்ற புதிய இயக்கத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி ஆறே மாதத்தில் நடந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில்2,60,000 வாக்குகளைப்பெற்று அடுத்துவந்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரை 1,32,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாயத்தேவரை நிறுத்தி தோற்கடித்தார். மூன்றாவதாக திமுக90,000 வாக்குகள் பெற்றது. பதிவான வாக்குகளில் 52% அதிமுக பெற்றது. தலைவர் கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு முதலிபெரும்பாலான தொண்டர்கள், மகளிர் சமுதாயம் மற்றும் பொதுமக்களே! எனவேதான் அவர் மக்களைபற்றியே சிந்தித்து அவர்களுக்காகவே உழைத்தார். எனவேதான் நேற்றும் இன்றும் நாளையும் தலைவர்புகழ் குன்றின் மேலிட்ட தீபம்போல் பிரகாசிக்கிறது! மதிய வணக்கத்துடன்...Post
நன்றி சந்தானம் admk முகநூல்
--------------------------
புரட்சித் தலைவர் திமுகவுக்கு உழைத்தாலும் கூட அடுத்தவர் கட்சியை தன் கட்சி என்று சொந்தம் கொண்டாடவில்லை. திமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்.
தொண்டர்களை மதித்தார். ரசிகர்களையும் தொண்டர்களையும் புறக்கணித்து அலட்சியப்படுத்தியது இல்லை.
பிறர் வெற்றியை தன் வெற்றி என்று புரட்சித் தலைவர் கொண்டாடியது இல்லை. அவர் பெற்ற வெற்றிகள் அவருக்கே சொந்தம் ஆனாலும் என்னால்தான் இந்தக் கட்சி வெற்றி பெற்றது, என் பிரசாரத்தால்தான் அவர் வெற்றி பெற்றார் என்று கூறியது இல்லை.
ஏழைகளுக்கும் அநாதை இல்லங்களுக்கும் கல்விநிலையங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புரட்சித் தலைவர், தான் உழைத்து சம்பாதித்த பொருளை அள்ளிக் கொடுத்தார். தன் குடும்பம் தனக்கு மட்டுமே என்று கஞ்சமாக வைத்துக் கொண்டது இல்லை.
ஒரே நேரத்தில் சினிமாவிலும் அரசியலிலும் கடுமையாக உழைத்தார்.
பதவிக்கு வரும் முன்பே மக்களுக்கு கஷ்டம் என்றால் முதலில் உதவி செய்பவர் புரட்சித் தலைவர்தான். சீனா போரின் போது நாட்டிலேயே அதிக தொகையை (தனி மனிதனாக) யுத்த நிதியாக முதன் முதலில் கொடுத்த இந்தியக் குடிமகன் புரட்சித் தலைவர்தான். இதற்காக நன்றி சொல்லி நேரு கடிதம் எழுதினார்.
இந்த மாதிரி சிறப்புகளால்தான் தமிழக மக்களின் இதயத்தில் புரட்சித் தலைவர் இன்னும் தெய்வமாக வாழ்கிறார்.
-
Daily Thanthi - Puducherry Edition - 25.06.2017
http://i65.tinypic.com/fvy6f6.jpg
-
உழைப்பில்லாமல் உயர்வில்லை
1957 தேர்தலில் எம்ஜிஆர் திமுக கட்சியின் வளர்ச்சிக்காக , மக்களை நேரில் சந்தித்து திமுக என்ற இயக்கத்தின் கொள்கைகளை பரப்பினார் . அடித்தட்டு மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தார் .உதயசூரியன் சின்னத்தில் முதல் முதலாக 1962 தேர்தலில் திமுக போட்டியிட்ட நேரத்தில் எம்ஜிஆர் தமிழ்நாடு பட்டி தொட்டி எங்கும் சென்று திமுகவிற்கு ஒட்டு வேட்டையாடினர் .
எம்ஜிஆர் தன்னுடைய திரைப்படங்களில் திமுகவின் சின்னத்தையும் , கொள்கைகளையும் வசனங்களாக , பாடல்களாக இடம் பெற செய்தார் . திமுகவின் வெற்றிக்காக எம்ஜிஆர் செய்த தியாகங்கள் , பண உதவிகள் யாராலும் மறக்க முடியாது .
எம்ஜிஆருக்கு சேர வேண்டிய புகழ் , செல்வாக்கு தக்க நேரத்தில் நேர் வழியில் கிடைத்தது . எம்ஜிஆர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம் இன்றும் நிலைத்திருக்கிறது
எம்ஜிஆருக்கு ஈடு இணையாக எவருமே இல்லை . திரை உலகில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சரித்திரமாக நிலைத்து விட்டது .
எம்ஜிஆரின் வெற்றிகளை தங்களது தோல்விகளாக நினைப்பவர்கள் ஒரு சிலரே .
அவர்கள் மன வியாதிக்கு என்றுமே மருந்தில்லை .விரைவில் குணமடைய வாழ்த்துவோம் .
-
‘‘என் திரையுலக வாழ்க்கையில் திரைக்கதாசிரியனாக அங்கீகாரம் அளித்து என் திரையுலக வாழ்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தவர் நான் வணங்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்’’ என்று பின்னாளில் வி.சி.குகநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புதியபூமி படத்தில் தலைவரின் பெயர் கதிரவன். கிராம மக்களுக்கு சேவை செய்யும் டாக்டராக வருவார். புதியபூமி படம் வெளியான நேரத்தில் 1968-ம் ஆண்டு தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெயர் கதிரவன். தேர்தலில் கதிரவன் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
*எல்லாரும் தலைவரை எங்க வீட்டுப் பிள்ளை எனக் கொண்டாடுவதை தலைவரே கூறுவதைப் போல அமைந்த , ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ பாடல், மற்றும்,
* சின்னவளை முகம் சிவந்தவளை..
* நான்தாண்டி காத்தி....
* நெத்தியிலே பொட்டு வெச்சு...
* விழியே விழியே உனக்கென்ன வேலை....
போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்த படம் புதியபூமி.