ராஜன் நாகேந்திராவின் அற்புத இசை. இதே படத்தில் மேடைக்கச்சேரிகளில் பாட மிகவு கஷ்டமான ஒரு பாடல்
பாலுவுடன் இசையரசி .. திரையில் ரங்கநாத் மற்றும் தீபா
https://www.youtube.com/watch?v=l5UDQX7zlS8
Printable View
ராஜன் நாகேந்திராவின் அற்புத இசை. இதே படத்தில் மேடைக்கச்சேரிகளில் பாட மிகவு கஷ்டமான ஒரு பாடல்
பாலுவுடன் இசையரசி .. திரையில் ரங்கநாத் மற்றும் தீபா
https://www.youtube.com/watch?v=l5UDQX7zlS8
அதே பந்துலம்மாவில் லக்*ஷ்மிக்கு இசையரசியின் குரலில் மனசெரிகனவாடு மா தேவுடு ஸ்ரீ ராமுடு
https://www.youtube.com/watch?v=lci_RyhU6uw
ராஜேஷ் சார்!
கன்னடப் பாடல்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. நீங்களும், ராகவேந்திரன் சாரும் புகழும் போது கண்டிப்பாக அதில் அற்புத விஷயங்கள் இருக்கும் என்று மட்டும் புரிகிறது. நிச்சயமாக பார்க்கிறேன். கேட்கிறேன். நல்ல பாடல்களை வழங்கியமைக்கு தங்களுக்கும், ராகவேந்திரன் சாருக்கும் நன்றி!
அண்ணாவின் ஆசையில் எப்பொழுதும் கேட்டு ரசித்த பாடல் பாட்டெழுதட்டும் பருவம் , வாலி ஐயாவின் வரிகள் .. நீங்கள் அதில் அதிகம் கேட்காத பாடலை தந்ததற்கு நன்றி நன்றி .. கே.ஆர்.வி க்யூட்டாக இருந்த காலங்கள்
http://upload.wikimedia.org/wikipedi...49_film%29.jpg
ராஜேஷ் சார்,
நடிகர் நாகேந்திர ராவ் எம்.கே ராதா, பானுமதி நடித்த பழைய 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'மார்த்தாண்டன்' என்ற அட்டகாசமான வில்லன். (மேலே உள்ள படத்தில் குளோஸ்-அப் பில் இருப்பவர்) 'அபூர்வ சகோதர்கள்' நீரும் நெருப்பும் ஆகும் போது அசோகன் அதில் வில்லன ஆனார்.
நடிகர் சுதர்சன் (நடிகர் திலகத்தின் சில படங்களில் பிரதான வில்லன்) கன்னட மற்றும் தமிழ் நடிகையான சைலஸ்ரீயை ('அள்ளிப் பந்தல் கால்கலெடுத்து') புகழ் மணந்து கொண்டார். சைலஸ்ரீயின் அப்போதைய பெயர் ஆஷா.
http://cdn3.supergoodmovies.com/File...c660b84317.jpg
http://www.tamilspider.com/attachmen...58-sumitra.JPG
இன்னொரு தகவலும் உண்டு. நடிகர் சுதர்சனின் சகோதரி நடிகை சுமித்ரா. சரியா?
நன்றி ராஜேஷ் சார்.
//கே.ஆர்.வி க்யூட்டாக இருந்த காலங்கள்//
'அண்ணாவின் ஆசை' யில் இன்னொரு நல்ல பாடலும் உண்டு. நமது இசையரசி அழகாகப் பாடியிருப்பார். கே.ஆர்.விஜயா படு ஸ்லிம்மாக பிகினியில் கவர்ச்சியாக வருவார். விஜயா 'பட்டணத்தில் பூதம்' படத்தில் மட்டுமே நீச்சல் உடையில் நடித்திருந்தார் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்தப் படத்திலும் நீச்சல் உடையில் வருவார்.
கண்ணியப் பாடகியின் குரல் வெகு இனிமை. அருமை. பாடலும் சுகமாகவே இருக்கும்.
'பூப்போல் மலர பொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையிலே இளம் சிட்டு வைத்தான்
இதைப் படைத்தவன் தனியே விட்டு வைத்தான்'
http://www.youtube.com/watch?v=JkEOK6HAl9U&feature=player_detailpage
ஆம் பழைய படங்களில் ரஞ்சன் மற்றும் எம்.கே.ராதாவுடன் நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிகர்
ஆம் சுதர்சன் சைலஸ்ரீயை மணந்து கொண்டார்.
சுமித்ராவிற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ..
Attachment 3445
பூ போல மலர பொட்டு வைத்தான் .. ஆஹா இனிமையான பாடல் . நீண்ட நாட்களுக்கு பின் கேட்கிறேன்
யாரங்கே வாசுஜிக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வா..
ராஜேஷ் சார்,
http://www.aptalkies.com/modules/gal...a%20(1970).jpg
தெலுங்கில் 'அடவி ராஜா' என்று ஒரு படம் வந்தது. அனேகமாக கன்னடத்திலிருந்து மொழி மாற்றப் பட்டிருக்க வேண்டும். இதில் சைலஸ்ரீ சுதர்சனோடு இணைந்து நடித்திருந்தார். சுதர்சன் இப்படத்தின் ஹீரோ. டார்ஜான் சுந்தரி ரேஞ்சுக்குக் கலக்குவார் சைலஸ்ரீ.
இங்கேயும் ஒரு கங்கை தமிழ்ப்படத்தின் நாயகி கன்னட தாரா முகமும், பழைய சைலஸ்ரீ முகமும் அப்படியே அச்சில் வார்த்தது போல் ஒன்றாக இருக்கும்.