thanks for the wishes sir....! I too wish you because you are also part of this !!!!
Well done raghavendran sir !!
Printable View
பார்த்ததில் பிடித்தது -43
கீழ்வானம் சிவக்கும்
முக்த ஸ்ரீநிவாசன் மற்றும் நடிகர் திலகம் கூட்டணியில் வந்த வெற்றி படம்
1981 ஆண்டு நடிகர் திலகத்தின் சினிமா வாழ்வில் hits & flops இரண்டும் சரிசமமாக இருந்தது என்றே சொல்லலாம் , அந்த வருடத்தை இந்த வெற்றி படத்துடன் முடித்தார் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்
கோவையில் பெரிய கண் மருத்துவர் துவாரகநாத் , தன் மகன் , மருமகள் மஞ்சு , மற்றும் தன் மனைவியின் தம்பி , அண்ணன் மகன் உடன் வசித்து வருகிறார்
தனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால் தன் மருமகளை தன் மகளாக நினைத்து அன்பு செலுத்துகிறார்
செந்தில் என்ற நபர் துவாரகநாத் மருத்துவனையில் சிகிச்சைக்காக வருகிறார் , அவர் வசம் இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைகிறார் துவாரகநாத் , படத்தை கிழித்து விடுகிறார் , அதை பார்க்கும் மஞ்சு அந்த படத்தில் இருப்பது யார் என்பதை அறிய முயற்சிக்கிறார் , CAT & mouse game ஆரம்பம் .
மஞ்சு தனக்கே தெரியாமல் lymphosarcoma என்ற கொடிய நோயால் தன் நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறார்
யாரை காப்பாற்ற துவாரகநாத் முயற்சிக்கிறார் , மஞ்சுவுக்கு என்னவாயிற்று என்பதே முடிவு
Positives:
இந்த படம் அழகான குடும்ப கதை , ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் கொஞ்சம் கூட சலிப்பு ஏற்படாத வந்ன்னம் திரைகதை அமைக்க பட்டு இருக்கும் , இதற்க்கு காரணம் குரியகோஸ் ரங்கா , மணல் கயிறு படத்தில் சந்திக்ரிஷ்ணவின் அண்ணனாக நடித்து இருப்பார் , பிற்காலத்தில் அரட்டை அரங்கம் வெற்றி நடையில் இவர் பங்கும் இருந்தது . முக்தா ராமசாமி நல்ல தயாரிப்பாளர் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து இருப்பார் , இயக்குனர் ஸ்ரீநிவாசன் நடிகர் திலகத்தின் நடிப்பு திறமையை நன்றாக exploit (positive sense) செய்வதில் வல்லவர் , கடவுள் நினைத்தான் பாடல் இன்று வரை திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல் ,
Portions that could have been handled better
படம் வந்த வருடத்தில் அரசியல் சூழ்நிலையை நினைத்தால் படத்தில் வரும் அரசியல் நையாண்டியை ரசிக்கலாம் , ஆனால் இந்த குடும்ப கதைக்கு சற்று அந்நியமாக இருந்தது , அடுத்து , ஜெய்ஷங்கர் அவர்களின் கதையில் வலு இல்லை , படத்தின் அடித்தலமே இது தான் , இதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் , ஆனால் இது எல்லாம் நம் நடிகர் திலகம் தன் நடிப்பினால் மறைத்து விடுகிறார்
துவாரகநாத் என்ற பெயர்க்கு ஏற்ப கிருஷ்ணர் போல் அமைக்க பட்டு இருக்கிறது நடிகர் திலகத்தின் பாத்திரம்
முறுக்கு சுடுவதில் அறிமுகம் ஆகிறார் நடிகர் திலகம் , அந்த காட்சியில் அவர் முகபாவனை ஆகட்டும் , தன் மருமகள் கேட்டு முறுக்கு சுட்டு தரவில்லை என்று வேலைக்காரியை கடித்து கொள்வது ஆகட்டும் , முதல் காட்சியிலே மாமனார் மருமகள் உறவை அழகாக establish செய்து விடுகிறார் நம்மவர் , தன் மகன் மனைவியுடன் சினிமா செல்லும் பொது அதை தடுப்பதும் , மருமகள் கோவத்தில் கத்தும் பொது , flower vase எடுத்து கொடுக்கும் போதும் , பிறகு தூக்கமாத்திரை போட்டு தூங்க வைப்பதும் , ஆர்பாட்டம் இல்லாத நடிப்பு , அடுத்த நாள் ஐவரும் வீம்புக்கு மருமகளிடம் பேசாமல் செல்வதும் , ராத்திரி வந்து உண்மையை சொல்வதும் இருவரின் childish குணங்களை காட்டுகிறது
இப்படி செல்லும் இவர்களின் வாழ்வில் சந்தேக நிழல் விழுகிறது . தன் மருமகள் தன்னை சந்தேக படும் பொது இவர் துடிப்பதும் , அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பதும் , மருமகளின் உயிருக்கு ஆபத்து வராமல் பார்த்து கொள்வதும் , தனக்கு பாடம் சொல்லி கொடுத்த குருவிடம் தன் நிலைமையை சொல்லி ஆறுதல் தேடி கொள்ளுவதும் நெஞ்சை பிழிகிறது
கண் டாக்டராக தன்னிடம் வரும் செந்தில் என்ற பார்வை தெரியாத நபரை இவர் handle பண்ணும் விதம் டாப் , அதுவும் , அரிவாள் வாங்கிய காசையும் கொடுத்தால் தான் கண் கிடைக்கும் என்று சொல்லுவதும் , தன்னிடம் கொடுக்கப்பட்ட படத்தை இவர் கிழிக்கும் பொது நம்மளுக்கும் அதிர்ச்சி தான் , ஆனால் தன் patient மனதை கொஞ்சம் கொஞ்சமாக படித்து , அறிந்து , அவர் மனதில் இருக்கும் ரணங்களை தீர்த்து வைத்து , கடைசியில் அந்த புகைப்படத்தை அவரிடம் கொடுக்கும் பொது ஒன்று தான் தோன்றுகிறது , இவரை நம்பினால் யாரும் கெடுவதில்லை
இப்படி உத்தமனாக இருக்கும் நபருக்கு மகன் தான் வாழ்கை தந்த ஏமாற்றம்
அதுவும் இவர் கோயிலுக்கு போவிய என்று கேட்கும் பொது நான் எதற்கு என்று மகன் கேட்க , இவர் அதானே , அதுக்கு தான் நான் iஇருக்கிறேன் என்று குரலை வேறு மாதிரி வைத்து பேசுவதும் , தன் தந்தை தன் மனைவியின் உடல் நிலை பற்றி சொல்லவில்லை என்று மகன் கோபித்து கொண்ட உடன் இவர் பேசும் வசனம் உணர்ச்சி பிழம்பு
அந்த காலத்தில் சிவாஜி அவர்கள் matured roles தேர்ந்து எடுத்து நடிக்கவில்லை என்று பேசும் நபர்கள் இந்த படத்தை பார்க்கலாம்
படத்தில் இவர் உடை கண்ணை உறுத்தாமல் இவர் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது
சரித்தாக்கு இது ஒரு life time ரோல், சிவாஜி சார் வரும் அணைத்து காட்சியிலும் இவரும் இருப்பார் , சிவாஜி சாரின் நடிப்புக்கு எடு கொடுத்ததும் நடித்து இருப்பார்
இவர் கடைசியில் ஆவியாக பேசும் பொது நம் கண்ணில் வரும் கண்ணீர் இதற்கு சான்று ,
படத்தில் வேறு பாத்திரங்களில் ஜெய்சங்கர் அவர்களின் பாத்திரம் இவரின் வழக்கமான action பாத்திரங்கள் போல் இல்லாமல் , கண் தெரியாதவராக , மனதில் பழி வாங்கும் வெறியுடன் , அதே சமயம் மனதில் பாசமும் பளிச்சிட சரிதாவின் அன்புக்கு இவர் மரியாதை செலுத்தும் விதம் படத்தின் highlight
மூர்த்தி , YG மகேந்திரன் , மனோரமா , காத்தாடி ராமமூர்த்தி நகைச்சுவை காட்சிகளில் வந்து போகிறார்கள் , சரத்பாபு , மேஜர் மற்றும் பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள்
சிவாஜி என்ற மாபெரும் நடிகரும் , முக்தாவுக்கும் மீண்டும் ஒரு வெற்றி படம்
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி
டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தர்மம் எங்கே தியேட்டர் அனுபவம் தொடர்ச்சி
அரங்கத்தினுள்ளே நுழைந்து இடம் தேடினால் ஒரு காலி சேர் கூட கண்ணுக்கு தெரியவில்லை. பாடல் வேறு ஆரம்பித்து விட்டது. காதைப் பிளக்கும் அலப்பரை சத்தம். அந்த 90 பைசா வகுப்பின் முதல் வரிசையில் ஒரு காலி நாற்காலி தெரிய உடனே என்னை அங்கே உட்கார வைத்துவிட்டு என் கசின் பின்வரிசைக்கு போய் விட்டான். சிறிது நேரத்தில் உள்ளே வந்த மற்றொரு நபர் தம்பி கொஞ்சம் இடம் கொடுப்பா என்று சொல்லி நான் அமர்ந்திருந்த நாற்காலியில் அவரும் வந்து அமர்ந்து விட்டார்[ஆஹா இதற்கு என் கசினையே உட்கார சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது].
முதல் பாடலே நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் பாடல் வரிகளின் அர்த்தம், முத்துராமன் குமாரி பத்மினியின் காதல் காட்சி, ராஜபிரதிநிதியின் ஆட்கள் ஊருக்குள் கொள்ளையடிக்க வருதல் என்று பல சம்பவ கோர்வைகளின் சங்கமமாக அமைந்திருந்ததால் [முதல் காட்சியிலே கதை ஆரம்பித்து விடும்] இங்கே அலப்பரை அதிகமானது. அதிலும் கண்ணதாசனின் வரிகள்
மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்
தன்னிகரிலா தலைவன் பிறப்பான் ஆயிரத்தில் ஒரு நாளே
என்ற வரிகளின் போது பெருந்தலைவரை வாழ்த்தி கோஷம் கிளம்பியது.
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும் என்ற வரியின்போதோ
அடுத்த வரிகளை கேட்கவே முடியாமல் அப்படி ஒரு சத்தம். அந்த சத்தம் சற்றே அடங்கவும்
தோட்டம் என்பது எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம் என்ற வரி திரையில் ஒலிக்கவும் மீண்டும் பயங்கர கைத்தட்டல், கோஷம்.
அடுத்த சரணத்தில்
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை
என்ற வரிகளுக்கெல்லாம் தியேட்டர் உள்ளே எழுந்த கோஷம், கேட்ட கைதட்டல், ரசிகர்கள் எழுந்து ஆடியதை எல்லாம் எழுத வேறு புதிய வார்த்தைகள்தான் உருவாக்க வேண்டும்.
அதுவும் அந்த இறுதி சரணத்தை முடித்து பல்லவியைப் பாடிக் கொண்டே நடிகர் திலகம் நடந்து வரும் அந்த ஸ்டைல் [ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்] என்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் சீட்டில் .உட்காரவேயில்லை.
குமாரி பத்மினியிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் தளபதியை முத்துராமன் கொல்வது, ஊர் மத்தியில் ஆட்களை கூட்டி வைத்து ராமதாஸ் கேள்வி கேட்கும்போது முத்துராமன் சட்டையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை மறைக்க சொல்லி நடிகர் திலகம் சுட்டிக் காட்டி விட்டுப் போவது, ராஜ பிரதிநிதியை சந்திக்கப் போய்விட்டு அங்கே ராமதாசை குற்றவாளி என்று சொல்லிவிட்டு திரும்ப உன் பெயர் என்ன என்று கேட்கும் நம்பியாரிடம் அப்படியே பக்கவாட்டில் திரும்பி சேகர் ராஜசேகர் என நடிகர் திலகம் சொல்லும்போதெல்லாம் ஒரே இடியோசைதான்.
அதன் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நம்பியார் சந்திக்கும் காட்சி. உங்கள் ஆட்கள் நாடு மக்கள் சுதந்திரம் தியாகம் என்று பேசுவார்கள். ஆனால் நாங்களோ சூழ்ச்சி வலை விரித்து நாட்டை வசப்படுத்தி விடுவோம் என்று நம்பியார் சொல்ல அதற்கு மக்கள் முன்பு போல் இல்லை. உங்களை இனம் கண்டுகொண்டு விட்டார்கள். உங்கள் ஆட்சி முடிவக்கு வரத்தான் போகிறது என்று நடிகர் திலகம் பதில் சொல்லும்போது அன்றைய நாளின் அரசியல் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்களுக்கு அமோக வரவேற்பு.
அடுத்து சிறைச்சாலை சண்டைக்கு தியேட்டர் அலறியது என்றால் அங்கேயிருந்து தப்பித்து நாடோடி கும்பலால் காப்பாற்றப்பட்டு கெட்டப் மாறி வரும்போது மீண்டும் அலப்பரை. தாயை பார்க்க வந்துவிட்டு தாய் இறந்துவிட வாய் விட்டு அழக் கூட முடியாமல் விம்முவார். அதகளமானது அரங்கம். அதே காட்சியில் தாய் இறப்பதற்கு முன் தாயை விட்டு விலகி நடக்க முயற்சிப்பார். அப்போது அவரின் தாய் சேகர் என்று ஈனக்குரலில் அழைக்க முகம் திரும்பாமல் காலை வளைத்து அவர் முதுகு காட்டி நிற்கும் போஸிற்கு பயங்கர அலம்பல். இதையெல்லாம் அன்று பார்த்தபோது [எங்கே பார்க்க விட்டார்கள்?] அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க முடியவில்லை. மீண்டும் படம் பார்த்தபோதுதான் எந்தெந்த காட்சிக்கு ஏன் அப்படி ஒரு அலப்பரை நடந்தது என புரிந்தது.
அடுத்து நாற்சந்தியில் வைத்து முத்துராமனியும் குமாரி பத்மினியையும் தூக்கிலிட முயற்சிக்கும்போது அந்த இடத்திற்கு வெள்ளை குதிரையில் சிவப்பு நிற உடையணிந்து வரும் நடிகர் திலகதைப் பார்த்ததும் ஆரம்பித்த கைதட்டல் அவர் மக்களிடையே பேசும் வசனங்களுக்குயெல்லாம் [குறிப்பாக இரண்டு முறை அவர் வெவ்வேறு modulation-ல் சொல்லும் இதே போல் இதே போல் என்ற வார்த்தை எல்லாம் பெரிதாக வரவேற்கப்பட்டன]. உடன் வந்த தர்மம் எங்கே பாடல் காட்சி, அதன் பிறகு ஆற்றின் கரையில் நடக்கும் சண்டைக் காட்சி. அதில் இரண்டு கைகளிலும் கத்தி பிடித்து சற்றே உயரமான மணல் திட்டிலிருந்து நடிகர் திலகம் குதிக்கும் காட்சியெல்லாம் ஆஹா ஓஹோ!
பிடித்து செல்லப்பட்ட ஊர் மக்களை விடுவிக்க ஒற்றை கண் தெருப் பாடகனாக வந்து பாடும் வீரமெனும் பாவைதனை கட்டிக் கொள்ளுங்கள் பாடலுக்கும் சரி பாடல் முடிவில் கிடாரின் பின்புறத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து சுடும் ஸ்டைல் அதன் பிறகு அதே காட்சியில் பிச்சுவா கத்தி வீசும் வேகம், கை அசைவு. தொடர்ச்சியாக வரும் காட்சிகளை பார்க்க பார்க்க நிற்காமல் வரும் அலைகளைப் போல் கைதட்டல்கள் கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.
மீண்டும் ஒரு முறை ஊர் மக்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கோட்டைக்குள் கம்பங்களோடு சேர்த்து கட்டப்பட்டு உயிரோடு எரித்து கொல்லும்படி நம்பியார் உத்தரவிட கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் 5 பேர் போக வேண்டும் என முடிவு செய்வது அதற்கு சிவப்பு வண்ண அட்டையை வைத்திருப்பவர்கள்தான் போக வேண்டும் என்பது, செங்குத்தான மலையின் மீது கயிறை கட்டி ஏறுவது, மேலே ஏறி செல்லும் ஒவ்வொருவரும் சிப்பாயிடம் மாட்டிக் கொள்வது, தந்திரமாக அவனை வீழ்த்தி விட்டு மாளிகைக்குள் புகுந்து பின், நடிகர் திலகம் நம்பியார் போல் உடையணிந்து [பையில் அதற்கான ஆயத்த உடைகளை கொண்டு வந்திருப்பார்] சிப்பாய்களை கட்டளையிடுவது இப்படி படம் விறுவிறுப்பின் உச்சிக்கே போக அப்போது நம்பியார் அங்கே வந்து விடுவார்.
இருவரும் மெய்க்காப்பாளனிடம் தான்தான் உண்மையான ராஜ பிரதிநிதி என்று கூற அந்த கைகலப்பில் நடிகர் திலகம் வேடம் கலைந்து விட ராஜ பிரதிநிதியின் உடைகளை முற்றிலுமாக களைந்து விட்டு white and white-ல் நடிகர் திலகம் நின்று அங்கே சுவரில் மாட்டியிருக்கும் நீண்ட உடை வாளை எடுத்து நீட்டி காலை வளைத்து நின்று ஒரு போஸ் கொடுப்பார். அப்போது ஆரம்பித்தது இடியோசை. கத்தி சண்டையின் போது ஒரு கையை இடுப்பில் வைத்து காலால் வேகமான ஸ்டெப்ஸ் போட்டு வலது கையால் கத்தியை சுழற்றி சண்டை போடும்போதெல்லாம் வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை அது.
சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
(தொடரும்)
அன்புடன்
by Murali SreenivasQuote:
Quote:
இருவரும் மெய்க்காப்பாளனிடம் தான்தான் உண்மையான ராஜ பிரதிநிதி என்று கூற அந்த கைகலப்பில் நடிகர் திலகம் வேடம் கலைந்து விட ராஜ பிரதிநிதியின் உடைகளை முற்றிலுமாக களைந்து விட்டு white and white-ல் நடிகர் திலகம் நின்று அங்கே சுவரில் மாட்டியிருக்கும் நீண்ட உடை வாளை எடுத்து நீட்டி காலை வளைத்து நின்று ஒரு போஸ் கொடுப்பார். அப்போது ஆரம்பித்தது இடியோசை. கத்தி சண்டையின் போது ஒரு கையை இடுப்பில் வைத்து காலால் வேகமான ஸ்டெப்ஸ் போட்டு வலது கையால் கத்தியை சுழற்றி சண்டை போடும்போதெல்லாம் வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை அது.
Dear Murali Sir. From your explicit view point 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ', your spontaneous description of this scene in NT's 'Dharmam Enge' is really exceptionally marvelous and deserves a standing ovation for your inherent latent talent for narrations of events. But if Murali Sir doesn't take otherwise.... It only gives an implicit feel of hearing a high class NT's 'olichithram' or a fast paced 'cricket commentary' in FM radio,(when we do not have an option of visual aids), as we only feel without seeing that scene. If Murali Sir had incorporated that visual feast of video clipping certainly we would have been taken to share your cloud o' 9 thrill and enjoyment. Sometimes extensive descriptions to the intrinsic satisfaction of a prolific writer like you may get an intensive impulse-response reaction and an impressive proliferation of the essence of your write-up into the viewer's mind if one actually sees that scene...after all hearing is only a feeling but seeing is believing and doing is perceiving! This is out and out my personal view only Sir.
நடிகர் திலகத்தோடு அறிமுகமாகி இலட்சிய நடிகராக வலம் வந்த நடிகர் திலகத்தோடு எண்ணற்ற படங்களில் நடித்த எஸ்.எஸ்.ஆர் மறைந்தார் .அன்னாருக்கு அஞ்சலி
நடிகர்திலகத்தின் முதல் படமான பராசக்தியில் அறிமுகமாகி, பிறகு நடிகர்திலகத்துடன் பல திரைப்படங்களில் இனைந்து குணச்சித்திர வேடங்களில் நடித்த இலட்சிய நடிகர் என்று அழைக்கப்பட்ட திரு.S .S ராஜேந்திரன் அவர்களின் மறைவுக்கு, நடிகர்திலகத்தின் ரசிகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வோம்
http://i1234.photobucket.com/albums/...ps87181e6f.jpg
http://i1234.photobucket.com/albums/...ps30c062d0.jpg
மறைந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அந்நாளைய கலைஞர்களின் அனுபவங்களை தமிழ்த் தொலைக்காட்சிகள் இனியாவது பதிவு செய்து தமிழ்த் திரையுலகின் வரலாற்றுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எஸ்.எஸ்.ஆரின் மறைவு நமக்கு உணர்த்தும் படிப்பினையாகும்.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு பழைய படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கென ஒதுக்கி அவர்களுடைய அனுபவங்களை பேட்டிகளாகத் தொகுத்துத் தந்தால் நல்லது.
எஸ்.எஸ்.ஆருக்கு நமது உளப்பூர்வமான அஞ்சலி.
ராஜா ராணி திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் எஸ்.எஸ்.ஆர்.
https://www.youtube.com/watch?v=kYGv...vRs38&index=26
ராகுல்
கீழ் வானம் சிவக்கும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு சுவாரஸ்யமாக உள்ளது.
தொடர்ந்து மேலும் பல படங்களைப் பற்றிய தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.