-
அன்புள்ள தலைவர் பக்தர்களுக்கு ஒரு அரிய தகவல்.தலைவருடன் பயணித்தவர்களுக்கு இந்த செய்தி தெரியும்.ஆனால் அரசுகட்டில் இருக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு தெரியவில்லை எனில் அறிந்து நெல்லை தூத்துக்குடி பக்தர்களின் கோரிக்கையை தலைமைக்கு வலியுறுத்தி நியாய வழிகளில் ராயப்பேட்டை அ.தி
மு.க தலைமை அலுவலகத்துக்கு 'ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை' என பெயர் சூட்டிட ஒட்டு மித்த குரலை கொடுக்கும்படி வேண்டுகிறோம்.:
நம் தலைவர் கடசியை நிர்வகிக்கும் காலத்தில் 1987 வரை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமையக மாத வாடகையாக ரூபாய் 12,500 தலைமைக்கழக பொருளாளர் மாதவன் அவர்கள் அன்னை ஜானகி அம்மையாருக்கு வழங்கி வந்தார்.ஏனெனில் அந்த சொத்து அன்னை ஜானகி அம்மையாருக்கு சொந்தம்.அப்போது ப.உ. சண்முகம் பொதுச்செயலாளர்.தலைவர் நிறுவனர்.இது தான் நிலை.பின்னர் தலைவர் அன்னை ஜானகி அம்மையாரிடம் கோரிக்கை வைத்து,இந்த வாடகைப்பணம் நமக்கு வேண்டாம்.எனவே அந்த சொத்தை கழகத்திற்கு தானமாக வழங்கிவிடு என கேட்டுக்கொண்டார்.அதன்படி அன்னை ஜானகி அம்மையார் அந்த சொத்தை கழகத்துக்கு தானமாக வழங்கினார்.அதனால் தான் நாங்கள் அந்த தலைமைக்கழகத்துக்கு ஜானகி எம்.ஜி.ஆர் மாளிகை என பெயர் சூட கோரிக்கை விடுகிறோம்.நியாயம் தானே.ஆனால் ஒருமுறை மதுரை அமைச்சர் ஒருவர் தலைமைக்கழகத்துக்கு அம்மையார் பெயர் சூட்டும்படி கோரிக்கை வைத்தார்.யார் சொத்துக்கு யார் பெயர் வைப்பது ?
எனவே பக்தர்களே,கழக தொண்டர்களே,நிர்வாகிகளே இந்த கோரிக்கை நியாயமான ஒன்று.பெயர் சூட்ட ஒட்டுமொத்த குரலை கொடுங்கள். இத்துடன் எங்களது கோரிக்கை படத்தையும் இணைத்து பதிவிடுகிறோம்.
நெல்லை.எஸ்.எஸ்.மணி........ Thanks wa.,
-
ஆண்டவன்கட்டளையை அரசகட்டளை வெல்லமுடியுமா என்று கேட்டவர்களை ஒட.ஓட விரட்டியடித்து ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் எங்கள் புரட்சித்தலைவரின் சாதனைகளைத் தடுக்கவுமமுடியாது முறியடிக்கவும் முடியாது வாழ்க எங்கள் தானைத்தலைவன் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் மதுரை.எஸ் குமார்..... Thanks wa.,
-
மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரி (இணைய தளத்தில் )25000 பதிவுகள் என்கிற அரிய சாதனை கடந்து பயணிக்கிறேன் என்பது தங்கள் கவனத்திற்கு. எந்த ஒரு நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் நடவாத நிகழ்வு. அந்த வகையில் நமது மக்கள் தலைவர் இதிலும் முதல்வரே என்பது பெருமைக்குரிய செய்தி...... Courtesy: Loganathan...
-
மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..
ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!
நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்
ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..
நிலவைப் போலே.. பளபளங்குது
நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது
மலரை போலே.. குளுகுளுங்குது
மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது
பளபளங்குது கிறுகிறுங்குது
குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...
ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.
எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.
எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.
135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.
எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.
எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.
எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.
ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.
அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?
'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.
எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.
அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும். எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.
முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.
இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?
52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.
இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.
அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.
'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll, 'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.
ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.
சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.
’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?
சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.
கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.
எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.
நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.
அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.
எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.
அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.
எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.
படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது தமிழ்நாட்டுக்கு தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.
அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.
இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து
மனதை கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்
வாழ்வை சோலை ஆக்கலாம்
இந்த காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவை கொண்டு
மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி
கருத்தை கவரும்
ரசிகன் என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க
கவிதை பாடும் கவிஞன்
என்னை தெரியுமா
ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...
புரட்சித்தலைவர்
மறுபதிவு....... Thanks wa.,
-
அமரா எம்.ஜி.ஆர்
உயிர் வாழ்கிறவர்களும், ஜீவனைக் கொடுப்பவர்களும், அவருடைய ஞானத்தினாலும், உட்பார்வையினாலும் கோடிக்கணக்கான மக்களுக்கு பயன் தருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். ஜீவனைக் கொடுக்கும் பிரிவை சார்ந்தவர். எம்.ஜி.ஆர் மனிதகுலத்தின் இதயத்திலும் மனதிலும் உயிருடன் இருக்க முடியும் என்று எங்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு நபர் வாழ்க்கையில் உயர்ந்தவராகவும், மரணத்திற்குப் பிறகும் கூட உயிருடன் இருக்கமுடியும் என்று எங்களுக்குக் கற்பித்தார்.
எம்.ஜி.ஆர். மக்களோடு உணவு உண்ணுதல், கலந்துரையாடுதல் /அவர்களுடன் சமமானவராக பணிபுரிதல் என்று தான் விரும்புவதை செய்தார்.
எம்.ஜி.ஆர் மற்ற மாநிலங்களின் முதல்வர்கள்/இந்திய நாட்டின் பிரதமர்கள் இதயங்களையும் தனது நெறிவழியால் வென்றார். அவர் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை ஒரு எளிய முறையிலேயே தீர்த்து வைத்தார் மற்றும் ஏழைகளின் மேம்பாட்டிற்காக தனது முயற்சிகளையும் சக்தியையும் அர்ப்பணித்தார்.
அவரது மதி நுட்பம் மற்றும் அவரது பெருந்தன்மையால் ஈர்க்கப்பட்ட இதயங்களை கவர்ந்தார். இந்த அனுபவத்தின் ஞானத்தின் மூலம் இவையெல்லாம் அவரை அடைந்தன.
எம்.ஜி.ஆர் எதையும் எதிர்பார்த்து கொடுக்கவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் பொதுமக்களுக்கு வழங்கிய நன்கொடை அவர் எல்லோருக்கும் தெரிந்து வழங்கியதை விட மிக மிக அதிகமாக இருந்தது. எதை செய்தாலும் நேர்மையுடன் செய்தார்.
எம்.ஜி.ஆர் என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார். அவரது மறக்க முடியாத மாண்பு மூலம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தை தொடர அவரை ஒரு "திசைகாட்டியாக/கலங்கரை விளக்கமாக" பயன்படுத்துகின்றனர்.
எம்.ஜி.ஆர் ஒருபோதும் இறந்து போவதில்லை [நிழலிலும் நிஜத்திலும் ]. ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்தவர் என்றும் இறக்க மாட்டார்...... Thanks fb.,
-
இரட்டை தலைமை அதிமுக ஆட்சியாளர்களிடமிருந்து எம்ஜிஆர் பக்தர்கள் எதிர்பார்க்கும் முக்கிய கோரிக்கைகள் .
1. எம்ஜிஆர் உருவப்படத்தை சிறியதாக போட்டு அவமானம் செய்யாதீர்கள் .
2. எம்ஜிஆர் விரும்பாத வாரிசு அரசியல் வேண்டாம் .
3. எம்ஜிஆர் முழு உருவத்தை இனி வரும் காலங்களில் அதிமுக அரசு மற்றும் கட்சி விளம்பரங்களில் .அச்சிடவும்
4. எம்ஜிஆர் பெயரில் டிவி துவங்கிட வேண்டும் .
5. எம்ஜிஆர் பெயரில் நூலகம் திறந்திட வேண்டும் .
6. எம்ஜிஆர் படங்களின் நெகட்டிவ் காப்பாற்றப்பட வேண்டும்
7. எம்ஜிஆர் படங்கள் நல்ல திரை அரங்கில் குறைந்த கட்டணத்தில் வெளியிட அரசு முன் வர வேண்டும் .
8. எம்ஜிஆரின் கொள்கைகள் காப்பாற்றப்படவேண்டும் .
9. எம்ஜிஆரின் உண்மையான விசுவாசிகளின் சிறந்த ஆலோசனைகளை கேட்க வேண்டும் .
10. எம்ஜிஆர் பெயரில் சட்ட மன்ற தொகுதி உருவாக முயற்சிக்க வேண்டும் ........... Thanks Friends Groups...
-
புரட்சித்தலைவர் பாடல் பாடமால் எந்த நிகழ்ச்சியும் முழுமை அடைவதில்லை. இதில் ஈஷா யோக மையம்"மஹாசிவராத்திரி" என்ன விதிவிலக்கா?
உண்மை சொல்லவேண்டும் என்றால் "குறிப்பிட்ட" பல புரட்சித்தலைவர் பாடல்களை கோயில்களிலும் ஒலிபரப்பு செய்யவேண்டும். பக்தி மட்டும் போதாது நல்நடத்தை, சமூக பொறுப்புணர்ச்சி மிக மிக அவசியம். ஒரு உதாரணத்துக்கு இந்த பாடல் வரிகளை பாருங்கள்:
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று.......
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உய*ரும் போது
இம*ய*ம் போலத் தெரிந்திட* வேண்டாமோ
பிற*ருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட* வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ..... Thanks wa.,
-
பெங்களூர் அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை ஏற்பாட்டின் பேரில் நேற்றைய முன்தினம்
10:03:2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, சி. கே. சி. கார்டன் , 1வது வீதியில் நடந்தேறிய , உலக மக்கள் பூஜிக்கும் உன்னதமான கடவுள் எம்ஜிஆர் அவர்களின் 102வது அகவை திருநாளை...
"புரட்சித் தலைவரின் புகழ் காக்கும் புனித விழா 2019" தலைப்பில் எழுச்சியுடனும், புரட்சியுடனும்.. சிறப்புடன் நடந்தேறியது.
விழாவின் சிறப்பம்சமாக மலேசியாப் புகழ் பொன்மனச்செம்மல் கலைக்குழு மேகநாதன் ஐயா குழுவினர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படப் பாடல்களை பாடி அசத்தி்...ரத்த உறவுகளின் இதயங்களை தன்வசப் படுத்திக் கொண்டார்கள்.
அரும்பெரும் சாதனை நிகழ்த்திய...
வற்றாத ஜீவநதி வள்ளல் மகான் எம்ஜிஆரின் இப்புனித விழாவை வெற்றி விழாவாக்கிய,
திருநங்கையர்களின்
காவல் தெய்வம்,
இதயதெய்வத்தின் தூய வழியில் தனக்கென்று வாழாது...பிறரது நலனுக்காக , உழைத்து சேர்த்ததை...
உதவி கேட்டு வருவோர்க்கு, இல்லை என்று சொல்லாமல்,ஜாதிமதம் ... மொழி பேதம் பார்க்காமல் வாரி வழங்கி, வாழ்ந்து கொண்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரரின் அருளாசிப்பெற்ற கீதம்மாநாயக் அவர்களுக்கும்,
மலேசியா நாட்டின் மக்கள் நலன் காக்க துடிப்பான குரல் கொடுத்து, பசித்த வயிறுக்கு உணவளித்து சுயநலமற்ற மனிதராக
வாழ்ந்து கொண்டிருக்கும்
சிறந்த பண்பாளர்...
மனிதநேயர்... பிரபல தொழிலதிபர் ,
திரு. டாக்டர் நெல்சன் முருகன் ஐயா அவர்களுக்கும், கர்நாடக மாநில அதிமுக முன்னாள் மாநிலச் செயலாளர் திரு. கே. ஆர். கிருஷ்ணராஜ் அவர்களுக்கும்,
வெளியூர்களிலிருந்து வருகை புரிந்து, புரட்சித்தலைவரின் புகழ் காக்கத் துடித்த...
கொடை வள்ளலின் கொள்கை வழி தொண்டர்கள்...
மதுரை மு. தமிழ்நேசன், சண்முக சுந்தரம், திருச்சி தேவராஜ் ஆம்ரூஸ், சென்னை ஆர்.லோகநாதன்,தாராபுரம். வி்.குருநாதன் , சவூதி அரேபியா கடல்ராஜா , வாடியன் பாலன், திண்டுக்கல் அய்யம்பாளையம் எம்ஜிஆர் இளங்கோவன், கோவை கணபதி தாஸ்,
பெங்களூர் ராஜகோபால் கார்டன் ஏழுமலை, மகாலட்சுமி லே அவுட் சுதர்சன், ஜே. ஜேசுதாஸ், கே. சங்கர், ஏழுமலை, அய்யாவு, சுந்தர், ஆர். ரவி, செல்வா, பிச்சை, சேவாநகர் காங். பிரமுகர். பி. சண்முகம், கன்னடர் - தமிழர் கூட்டமைப்பு குடும்பம் அமைப்பின் தலைவர் செந்தில்குமார் BNR,
தமிழ் திரைப்பட இயக்குநர் திரு சக்தி.மா. சரோஜ்குமார் , பில்டிங் காண்ட்ராக்ட் எம். ராஜா, தொழிற் சங்கத் தலைவர் சிம்சன் சண்முகம், கே. சண்முகம் (விக்டோரியா மருத்துவ மணை) சத்யாநகர் சி. முருகன்,
கமல், சுகுமாறன், சோமசேகர், இளங்கோவன், லாவண்யா திரையரங்கம் சீனிவாசன், ஆட்டோ ஓட்டுனர் ராஜா, அல்சூர் வி. கேசவன், வினோத்குமார், சி. எஸ். குமார், கஜநாத்சிங், முகப்பேர் சங்கர், மேலும் வருகை தந்த பலருக்கும்....
விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் , நிறைந்த மனதோடு வாழ்த்து வழங்கிய, பெங்களூர் காவேரி ப்ரியதர்சிணி பெண்ணுரிமை அமைபழபின் தலைவி பி. ஆர். மஞ்சுளா, சென்னை நக்கீரர் தமிழ்ச் சங்கம் திரு. மீடியா பாஸ்கர் அவர்கள், கோவை காளியப்பன் ஐயா , மதுரை மர்மயோகி மனோகர், சென்னை மேரி செல்வமணி, மலேசியாவிலிருந்து வாழ்த்து வழங்கிய,
திரு. குணா ஐயா,எம்ஜிஆர் ஹரி, நளினா, புவனேஷ்வரி, மணிவாசகம் ஐயா, சாரோன், இன்னும் உள்ள பலருக்கும் நன்றி... நன்றி... நன்றி... Special thanks to.....
Dr. Nelson murugan (Malaysia)
sri. Gheethamma nayak (Thirunangaiyar)
Sri. Meghanadhan / music troup (Malaysia)
Sri. K. R. Krishnaraj (Admk ex. state secretary)
Sri. P. Shanmugam (shevanagar)
Sri. A. Aadhiyanna ksg
Sri. T. E. Moses
Sri. A. Daniel (Pendal works)
Smt. B. R. Manjula
Sri. K. Kamaraj ksg
Sri. Ravi (4th cross, k. S. Garden)
Sri. Rajani velu mss
Sri. J. Raju (market)
Sri. V. Keshavan (ulsoor)
மாபெரும் சாதனை விழாவாக்கிய, மக்கள் மனங்கள் வாழ்த்து கோஷம் எழுப்பிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி... Thanks wa.,...........
-
புரட்சி தலைவர் முதல்வராக இருந்த சமயத்தில் ,கோட்டை அலுவலக ஊழியர்கள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணி செய்ய லிப் டுக்காக காத்திருந்தனர் , லிப்ட் வந்தவுடன் அனைவரும் ஏறினர் புறப்பட தயாராகும் போது புரட்சி தலைவர் வந்து விட்டார் , மரியாதைக்காக அனைவரும் வெளியே வந்தனர் , அவர்களை நோக்கி தலைவர் "ஏன் நின்று விட்டீர்கள்" என்றார்
அதற்கு அவர்கள்" நீங்கள் போங்கள் , நாங்கள் பின்னர் வருகிறோம்" என்றனர் தயக்கத்துடன் , அவர்களின் மனநிலையை புரிந்து கொண்ட தலைவர் "நானும் அரசு ஊழியன் தான் மக்கள் என்னை ஐந்து வருஷம் ஆள உத்தரவிட்டிருக்கிறார்கள் , ஆனால் நீங்களோ58 வயது வரை அரசு ஊழியர்கள் , வாருங்கள் அனைவரும் லிப்டில் செல்வோம்" என அனைத்து ஊழியர்களுடன் லிப்டில் சென்றார் புரட்சி தலைவர் .(இந்த செய்தியை சொன்னவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற , இன்றளவும் திமுக கட்சிக்காரர் ).............. Thanks fb.,
-
மனைவியின் சபதம்!!
-----------------------------------
பி.எஸ்.வீரப்பா!!
அந்த நாட்களில் மிகப் பிரபலமான வில்லன்!!
ஹீரோ வாக இருந்து ஆளுக்கு ஆள் இன்று செய்யும்,ஸ்டைலை,,அந்த நாட்களிலேயே,,அதுவும்,தம் வில்லன் பாத்திரத்திலேயே அரங்கேற்றம் செய்தவர்??
ஹா--ஹா-ஹஹ்ஹா--என்ற இவரது இடி முழக்க சிரிப்பும்--
சபாஷ்! சரியான போட்டி??
அடைந்தால் மகாதேவி!! இல்லையேல் மரணதேவி??
உதய சூரியன்,,நாளை அஸ்தமிக்கும் சூரியன்??--இப்படி ஏராளமான,,ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய இவரது வசனங்கள் அன்று ரசிகர்களிடையே இவரது தனித்துவத்தை பறை சாற்றின!!
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்,,தன்னிடம் உயிருக்கு மன்றாடும் சக்கரபாணியை இமைக்காமல் வெறித்துப் பார்ப்பது இவர் வில்லத்தனத்துக்கு ஒரு சான்று!!
எம்.ஜி.ஆருடன்,,இவர் வாள் எடுத்து மோதும்போது---
திரை அரங்குகள் தீப்பற்றிக் கொள்ளும்??
அவ்வளவு சூடாக இருக்கும்!!
ஆரம்பத்தில் வில்லன் நடிகராக இருந்தவர்,,
எம்.ஜி.ஆரின்-நாம்-படத்தில் பங்குதாரர் ஆகி,,--சபாஷ்--யார் நீ--ஆனந்த ஜோதி என்று நிறைய படங்களை-பி.எஸ்.வீ என்ற தன் நிறுவனத்தின் சார்பாக தயாரிக்க ஆரம்பித்து--நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்தார்!!
பொருளாதார நெருக்கடியால்--1975இலிருந்து தொடர்ச்சியாக,,,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை ,,,தன் படங்களில் இவருக்கு வாய்ப்பு தந்தார் எம்.ஜி.ஆர்!!
எம்.ஜி.ஆர்,,சிவாஜி,,ஜெமினி என்று எல்லா நடிகர்களையும் எதிர்த்த வீரப்பாவால் ஒருவரின் உண்மையான எதிர்ப்பை மட்டும் கடைசி வரை சமாளிக்கவே முடியவில்லை??
அது அவரது மனைவி??
ஏங்க?? நீங்க இவ்வளவு கெட்டவர்ன்னு தெரிஞ்சிருந்தா உங்களைக் கல்யாணமே பண்ணிக்கிட்டிருக்க மாட்டேனே??--என்று புலம்ப ஆரம்பிக்கும் மனைவியை--
மனைவியின் சொந்தக்காரர்கள் மூலம் ,,--இது தொழில் தான்!! உண்மையல்ல--என்று விளக்கம் சொல்லுவாராம் வீரப்பா!!--ஆனாலும்,,,,தன் கணவருடன் ஒரு படத்துக்குச் சென்ற அவரது மனைவி,,,,அதில்,,,,தன் கணவரின் கொடூரமான பாத்திரத்தைப் பார்த்து விட்டு --பாதியிலேயே எழுந்து கொண்டவர்,,தன் கணவர்--வீரப்பாவிடம் ஒன்றை உறுதியாகக் கூறி விட்டு--கடைசி வரை அதை நிறைவேற்றியும் காட்டினாராம் அந்த உத்தமி??
இனி நீங்க நடிக்கும் எந்தப் படத்தையும் நான் பார்க்க மாட்டேன்????
பி.எஸ்.வீரப்பா எவ்வளவோ விளக்கியும்,,சமாதானங்கள் கூறியும்,,,அவர் மனைவிக் கடைசி வரை அவற்றை ஏற்கவில்லையாம்??
அந்த கால ரசிகர்கள் எவ்வளவு தூரம் அப்பாவியாக இருந்திருக்கிறார்கள் என்பதையும்--
அந்த கால நடிகர்கள் எவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் உணர முடிகிறது அல்லவா உறவுகளே?????!!!!! Thanks wa.,