-
வருந்துகிறோம்
SSR had a close association with our NT both on-screen and off-screen since their debut film Parasakthi (1952). Like GG, SSR was also a favourite tandem actor for NT in many of his movies, particularly Aalayamani, Shanthi, Kungumam and Pachchai Vilakku
NT தலைமுறை நடிகர்களில் இறுதி விழுதான இலட்சிய நடிகர் ssr அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பே! அவர்தம் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறோம்.
https://www.youtube.com/watch?v=WeVngwG66OQ
https://www.youtube.com/watch?v=FlkDNOi21i8
-
-
இன்று காலை பேப்பரில் எஸ்எஸ்ஆர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருக்கிறார் என்ற செய்தியைப் படித்தவுடன் நேற்றைய முன்தினம் இரவு அருமை நண்பர் சுவாமியோடு உரையாடிக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அன்று பேசும்போது ஒரு விஷயத்தை சுவாமி பகிர்ந்துக் கொண்டார். மாதம் இருமுறை வெளியாகும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் ஒரு புதிய பகுதி செப்டம்பர் 1 இதழிலிருந்து தொடங்கியிருப்பதாகவும் அதில் இதுவரை சிவாஜி, எம்ஜிஆர் ஜெமினி மற்றும் எஸ்எஸ்ஆர் பற்றிய செய்திகள் [நான்கு இதழ்களில் நான்கு பேர்] பிரசுரமாகியிருப்பதாகவும் தெரிவித்த சுவாமி அதில் எஸ்எஸ்ஆர் பற்றிய பதிவில் அவர் மொத்தம் 80 படங்களில் நடித்திருப்பதாக வந்திருக்கிறது என்றார். அவற்றில் 52 படங்களில் நாயகனாகவும், 20 படங்களில் இரண்டாம் கதாநாயகனாகவும் 8 படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருக்கிறார் என்ற செய்தியையும் சொன்னார். இதை படித்தவுடன் நண்பர் சுவாமிக்கு அந்த 80 படங்களையும் பட்டியலிட வேண்டும் என்று ஒரு ஆசை தோன்ற அதை செயலாக்க முனைந்திருக்கிறார். படங்களின் பட்டியல் அவை வெளியான தேதியுடன் எழுத தொடங்கிய அவர் விரைவிலே 79 படங்களை பட்டியலிட்டும் விட்டார். 80-வது படம் எதுவென்று தெரியவில்லை என்ற அவர் அந்த லிஸ்டை படித்துக் காண்பித்து எனக்கு தெரியுமா என்று கேட்டார். இரட்டை மனிதனுக்கு பிறகு எனக்கு எதுவும் நினைவிற்கு வரவில்லை. விரைவில் அந்த பட்டியலை நிறைவு செய்து சினிமா எக்ஸ்பிரஸ் இதழிற்கு அனுப்ப வேண்டும் என்றார். நான் கூட ஏன் சினிமா எக்ஸ்பிரஸிற்கு அனுப்புகிறீர்கள் பேசாமல் எஸ்எஸ்ஆர் அவர்களிடமே அதை கொடுத்தால் சந்தோஷப்படுவார் என்றேன்.
இன்று காலை தினமலர் பேப்பர் பார்த்தவுடன் அது நினைவிற்கு வந்தது. அதில் எஸ்எஸ்ஆர் நடித்த கடைசி படம் தம் என்று இருந்தது. அது சுவாமி வாசித்துக் காண்பித்த பட்டியலில் இல்லை. இதை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது எஸ்எஸ்ஆர் அவர்களின் மறைவு செய்தி அந்த mood -யே மாற்றி விட்டது.
எஸ்எஸ்ஆர் செந்தமிழை சிறந்த முறையில் பேசக் கூடியவர். சாதாரண பேச்சு தமிழில் கொஞ்சம் Colloquial வாடை அடிக்கும். நடிகர் திலகத்துடன் 18 படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதில் மனோகரா தெலுங்கு மற்றும் ஹிந்தி பின் தாயே உனக்காக [இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் கிடையாது] ஆகியவற்றை நீக்கி விட்டால் 15 படங்கள். எஸ்எஸ்ஆரின் சிறந்த படங்கள் என்று எடுத்தோமென்றால் நிச்சயமாக அதில் நடிகர் திலகத்துடன் அவர் இணைந்த நடித்த படங்கள்தான் அதிகமாக இடம் பெறும். குறிப்பாக ஆலய மணி, பச்சை விளக்கு மற்றும் கை கொடுத்த தெய்வம். அதற்கு அடுத்த வரிசையில் தெய்வப்பிறவி, பழனி மற்றும் சாந்தி.
நடிகர் திலகம் இவரை ராஜு என்றே அழைப்பார். கட்டபொம்மனுக்கு போட்டியாக சிவகங்கை சீமை படத்தை எஸ்எஸ்ஆர் எடுத்த போதும் அவர் மீது விரோதம் பாராட்டாமல் தெய்வப்பிறவி படத்தில் எஸ்எஸ்ஆர் நடிப்பதை எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அனுமதித்தவர் நடிகர் திலகம். அரசியல் வேறுபாடுகள் வந்தபோதும் அந்த நட்பு தொடர்ந்தது. எதிரொலி படத்தில் எஸ்எஸ்ஆர் நடிப்பதற்கும் காரணமாக இருந்தவர் நடிகர் திலகம்.
எஸ்எஸ்ஆர் அவர்களுக்கு யாருக்கும் கிடைக்காத ஒரு தனி சிறப்பு உண்டு. அதாவது உலகத்திலேயே முதன் முதலாக ஒரு நடிகர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆன பெருமை எஸ்எஸ்ஆர் அவர்களையே சாரும். 1962 சட்டமன்ற பொது தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1967-ற்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1980-84-ல் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். சிறுசேமிப்பு திட்ட குழு தலைவராகவும் இவர் இருந்தார் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்தார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
அன்புடன்
-
-
-
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வினோத் சார்!
இது போன்ற பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்!
அன்புடன்
-
இதுபோன்ற பெருமக்கள் நடிகர் திலகம் தவிர அவர் காலத்தில் வேறு எவரை சந்தித்து மகிழ்ந்தார்கள் ?
திறமையை மதித்த பெருமக்கள் வாழ்க...!
நடிகர் திலகத்திற்கு GOLDEN KEY OF NAYAGARA வழங்கப்பட்டது என்று உலகமே கூறி பாராட்டும்போது..ஒரு சில ஞான சூனியங்கள் மட்டும் அதற்க்கு ஆதாரம் கேட்டனர் ஒரு காலத்தில்.
அந்த சூநியங்களுக்காக இதோ ...
மையம் திரியில் முதன் முறையாக நடிகர் திலகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட "GOLDEN KEY OF NAYAGARA " அதாரம் பதிவிடப்படுகிறது !
http://i501.photobucket.com/albums/e...ps24247bfd.jpg
-
திரை உலக ஜோதியுடன் ஆசிய ஜோதி மகிழ்ந்து உரையாடுவதை பார்க்க கண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.....
ஒரு சிலர்க்கு வயிறு பற்றி எறிந்தாலும், உண்மை தமிழர்க்கு இது மகிழ்ச்சி மற்றும் பெருமை !
http://i501.photobucket.com/albums/e...ps15f0dd97.jpg
-
சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் படங்கள் யாரை வைத்து எடுத்தாலும்...நமது நடிகர் திலகம் அவர்களுடன் அவர் எந்தளவிற்கு உறவு வைத்திருந்தார், அன்யோன்யமாக இருந்தார் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் ஆதாரம் போதுமே !
http://i501.photobucket.com/albums/e...ps1d421943.jpg
-
பல வருடங்கள் முன்னால் நடிகர் திலகம் அவர்கள் ராணி எலிசபெதிர்க்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் என்று ஒரு புளுகு அவிழ்த்து விடப்பட்டது. ராணி எலிசபெத் நடிகர் திலகம் அவர்களுக்கு புதியவரல்ல. ராணி எலிசபெத் அவர்களுடைய DUKE OF EDIINBARO அவர்களுடன் நடிகர் திலகத்திற்கு நல்ல ஒரு நட்பு இருந்ததை இந்த ஆவணம் மூலம் அறியலாம் !
தனது நடிப்பு திறமை ஒன்றை மட்டுமே மூலதனமாக கொண்டு உலகை ஆண்ட அரச பரம்பரையை தனது கலைக்கு அடிபணிய வைத்த உலக மகா நடிகர் நம்முடைய நடிகர் திலகம்.
திராவிட காழ்புணர்ச்சி கொண்ட பொறாமைகார அரசியல்வாதிகள் அனைவரும் இதை கண்டு இன்று வரை பொறாமையால் நடிகர் திலகத்தை கண்டு வெதும்புகின்றனர் !
http://i501.photobucket.com/albums/e...ps9173a4bf.jpg