-
ராகவேந்திரன் சார்,
தற்புகழ்ச்சிக்கும் தங்களுக்கும் துளியூண்டும் சம்பந்தம் உண்டா? இது ஆசைக் குத்து.:) உள்குத்து அல்ல.:) உள்குத்துபவர்களுக்கு வஞ்சகமில்லாமல் உள் குத்து குத்த வேண்டியதுதான்.:) அதே போல வெளிக்குத்துக்கும் வெளியே நின்று எட்டிப் பார்த்தபடி வெளிக்குத்துதான்.:) நம்மைப் பொறுத்த வரையில் பொறுமை அதிகம். அதையே அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு சீண்டினால் அப்புறம் ஒரிஜினல் மங்கி குணம்தான்.:)
அந்தப் பாடல்களை நான் தங்களுக்கு அன்பளிப்பாக அளித்ததற்குக் காரணமே தங்கள் ரசனை தான். (அதற்காக மற்றவர்கள் எவரேனும் எங்களுக்கு ரசனை இல்லையா என்று உள்குத்து பதிவுகள் ஏதேனும் போட்டு விடப் போகிறார்கள்?:)
வித்தியாசமான பாடல்களை மிகவும் ரசிப்பவர் நீங்கள். கொஞ்சம் அதே ரகம் நானும். எங்கள் பிதாமகர் நீங்கள். அதனால்தான் 'மை ஃபிரண்டா'ன உங்களுக்கு நிச்சயம் நான் தந்த 'நேச்சுரல் பியூட்டி'.
அதே பாணியில் பதிலுக்கு இரு பாடல்கள் தந்து அசத்தி விட்டீர்கள் என்றால் அந்த 'காணக் கண் கோடி வேண்டும்' பாடலுக்கு ஈடு இணையே இல்லை சார். கேட்கக் காது கோடி வேண்டும். நான் தினம் தினம் கேட்டு மகிழும் பாடல் சார் அது. 'இன்றைய ஸ்பெஷல்' தொடரில் கூட அது பற்றி எழுதி இருக்கிறேன். மெல்லிசை மன்னரின் பிரம்மாண்ட இசைக்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம். அதுவும் இடையிசையில் அவர் பயன்படுத்தாத இசை வாத்தியங்களே இல்லை எனலாம். பாடலின் நடுவில் 'குட்டி ரொம்ப ஷோக்கா இருக்கா இல்லே? யாரது என்று?' ஒருவர் நாகேஷிடம் சொல்லுவார். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் அந்தக் குரல் எனக்கென்னமோ ஸ்ரீகாந்தின் குரல் போலவே தெரியும்.
நன்றி ராகவேந்திரன் சார்.
-
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 27) Sunday Special
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
முள்ளும் மலரும் பாடல்கள்...
http://i.ytimg.com/vi/vbwJ2LRnyLY/hqdefault.jpg
அடடா! என்ன ஒரு பாடல். சாகா வரம் பெற்றது. அழிவென்பதையே அறியாத ஒரு பாடல். எல்லாமே சேர்ந்து அமையக் கூடிய பாடல்கள் ரொம்பக் கம்மி. ஒளிப்பதிவு, பாடல் வரிகள், இசை, நடிக நடிகர்கள், பாடகர், சிச்சுவேஷன் என்று அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமையப் பெற்று என்றுமே நம் நெஞ்சில் இன்பக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் பாடல்.
http://i.imgur.com/bTNkLvX.jpg
கண்ணதாசனின் விரசமில்லாத இரு பொருள் தரும் அழகான வரிகளுக்கு தன் மதுரக் குரலால் உயிர் கொடுக்கிறார் ஜேசுதாஸ் என்றால் இருவரையும் மிஞ்சி இளையராஜா தரும் அந்த நெளிவு சுளிவு இசைப் பிரவாகம் எனக்கு இன்று வரை ஒரு ஆச்சர்ய அதிசயமாகவே படுகிறது.
'நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நான் என் வேலையை செவ்வனே செய்து முடிப்பேன்' என்று போட்டி போடாமல் போட்டி போட்டு, ஜீப்போடு மலைப் பாதைகளையும், மேடு பள்ளங்களையும் இயற்கை வண்ணங்களையும் தன் காமிரா மூலம் பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்த அழகுடன் கூட்டிக் காட்டி, நம்மையும் அந்த ஜீப்புடனேயே பயணிக்க வைத்து, கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாமல் மகேந்திரனுக்கு ஏற்ற மகேந்திராவாய் ஒளிப்பதிவு ஜாலம் செய்யும் பாலு மகேந்திரா.
மிக அழகாக ஜீப்பின் ஸ்டியரிங்கைப் பிடித்து, சற்றே தலையை மேலே தூக்கியவாறு, இயற்கை அழகில் லயித்து, பெண்களுக்காக ஃபிலிம் காட்டாமல், அலட்டாத முகபாவங்களை இயற்கை அன்னையின் அழகில் தன் அகலமான முகத்தால் அளந்து காட்டி, ஜீப்பில் அமர்ந்திருக்கும் ராஜகுமாரியை மேகத்துக்கு ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ வைக்கும் நம் சரத் எஞ்சினீர் ஜென்டில்.
http://i.ytimg.com/vi/8e17naoTrmE/hqdefault.jpg
சின்னதான முகச் சுழிப்புகளுடன் பாடலை ரசிக்கும் ஷோக்கான ஷோபா, அவரின் அழகுத் தோழிகள் என்று முழுவதுமாகவே நம்மை ஆட்கொண்டு நம்மை சீக்கிரம் வெளியே விடாத பாடல்.
கவிஞன் இயற்கை அழகை பெண்ணுக்கு ஒப்பிட்டு பெருமிதம் கொள்கிறான்.
தாழம்பூவின் வாசம் அவனிடம் ஆனந்தமாக மேடை போடுகிறதாம். சாலைகளின் வளைவு நெளிவுகளை மங்கையின் கூந்தலின் வளைவு நெளிவுகளோடு ஒப்பிடுவது அழகல்லவா! மெதுவாக ஊர்ந்து செல்லும் ஆற்று வெள்ளம் பருவ மங்கையின் ஊடலோடு கூடிய வெட்கமாமே!
பாஷை இல்லாமல் இன்னிசை ராகம் இசைக்கும் குயில்களையும், ஆலமரத்தில் ஆலம் பழங்களைத் தேடும் கிளிகளையும் கண்டு இச்சை கொள்கிறானே இந்த நாயகன். அவன் தேடும் கிளி அவன் அருகிலேயேதானே! தன் சூசகமான எண்ண வெளிப்பாட்டை அந்தக் கிளி புரிந்து கொள்ளுமா?
இப்படி கவிஞரின் கற்பனை கரை புரண்டு ஓடுகிறது பாடல் முழுதும்.
https://lh6.googleusercontent.com/-M...10028501_n.jpg
பாடலின் ஆரம்பமே அப்படியே நம்மை 'ஜிவ்'வென்று 'வாராய்... நீ வாராய்' என இன்ப மலை உச்சிகளில் தூக்கிக் கிடாசும். ஜேசுதாசின் அந்த 'ம்ம்ம்... ம்ம்ம்...ஹம்மிங் துவக்கம் நாடி நரம்புகளுக்கும் புகுந்து நாட்டியமாட ஆரம்பித்து விடும். அந்தக் குரலுடனேயே ராஜா ஆரம்பித்து தொடரும் அந்த மாயமந்திர இசை பிட் ஈடு இணை இல்லாதது. ஹம்மிங் முடிந்ததும் அந்த புல்லாங்குழலின் ஆதிக்கம்... பின் அதைத் தொடர்ந்து வரும் இடையிசை என்று இடைவிடாத இன்பம். இடை இசையிநூடே வரும் கிளிகளின் சப்தம் கிளுகிளுக்க வைக்கும். மலைப்பாதை வளைந்து செல்லும் போது அதற்கேற்ப ஜீப் வளைந்து கொடுக்க, வளைந்து நெளிந்து போகும் பாதை என்று ஜேசுதாஸ் குரலெடுக்க, இசையும் வளைந்து நெளிந்து உடல் முழுவதும் இன்பச் சூட்டைத் தெளிக்க, இனம் புரியாத சுகம் ஏகத்துக்கும் பரவுவதை உணர்வுபூர்வமாக உணரமுடியும். 'ஆலங்கொடி மேலே கிளி' எனும் போது எழும் அந்தக் கிளியின் குரல் சத்தம் படு தெளிவு. அடடா! காட்சிக்குத் தக்கவாறு என்ன அழகான சப்தங்கள்! இத்தனைக்கும் கிளிகளைக் காட்டாமலேயே!
வழியில் ஆட்டுக் கூட்டம் வந்து மறிக்க, ஆடுகளை மேய்ப்பவன் ஆடுகளை ஓரம் ஒதுங்கச் செய்ய, ராஜா தரும் அந்த கொட்டாங்கச்சி வயலின் போன்ற இசையும், தொடரும் புல்லாங்குழல் இசையும் அமர்க்களமான அமர்க்களம். ரிக்கார்டிங் அவ்வளவு அற்புதமாக இருக்கும். ஒரு நாலாந்தர டேப் ரெகார்டர் ஒன்றை (பெட் செட் என்று சொல்வார்கள்) விலை ரொம்பக் கம்மி... அப்போது இந்தப் பாடல் கேட்பதற்கென்றே பாண்டியில் வாங்கினேன். அந்த செட்டில் கூட அவ்வளவு துல்லியமாக உணர முடியும் ராஜாவின் ரகளையான நகாசு வேலைகளை.
http://i1087.photobucket.com/albums/..._001463788.jpg
'இளைய பருவம் மலையில் வந்தால்' மூன்றாவது சரணத்தில் ஜீப் ஓட்டம் நிறுத்தப்பட்டு ஷோபாவைக் காண்பிப்பார்கள். பாலு மகேந்திராவுக்காகவே இந்த சரணம்.:) ஷோபா பூந்தோட்டத்துக்குள் வருவது, தண்ணீர் குடம் சுமந்தபடி பாடலையும், பாடியவரையும் மனதில் அசை போட்டுக் கொண்டே வருவது, பூவைக் கையில் வைத்துக் கொண்டு தலைமுடி காற்றில் பறக்க ஷோபாவை ஒரு சைட் போஸ் தர வைத்திருப்பார் பாலு. ஒரே வார்த்தை. கவிதை. பாடல் முடியும் போது மரங்களினூடே சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பிப்பதையும், அந்த சிகப்புப் புள்ளியான சூரியனுடனே ஷோபா உடன் நடந்து செல்வதையும் பாலு இழைத்திருப்பார்.
http://i1087.photobucket.com/albums/..._001492305.jpg
இந்தப் படம் வெளிவந்த போது இந்தப் பாடலில் மிகவும் மனம் லயித்து வெறி பிடித்து திரிந்தேன் என்றும் சொல்லலாம். கடைக்கு சென்றால், கல்லூரி சென்றால், சைக்கிளில் ஊர்களுக்கு சென்றால், பஸ் பிரயாணம் மேற்கொண்டால் இந்தப் பாடல் ஒன்றையேதான் வாய் முணுமுணுத்தபடி இருக்கும். இந்தப் பாட்டின் ஆளுமையிலிருந்து, தாக்கத்திலிருந்து நான் விடுபட்டு வர சில மாதங்கள் பிடித்தது.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜ குமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று
வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
https://www.youtube.com/watch?featur...&v=8e17naoTrmE
-
ஹாய் குட்மார்னிங்க்..
ஹச்சோவ்.. நிறைய இருக்கே.. பாலச்சந்தர் பதிவுகள் கிருஷ்ணாஜி வாசுதேவர் ராகவேந்தர் கோபாலர் மிக்க நன்றி
கல் நாயக் கடிதப் பாடல்களுக்கு நன்றி
வாசுசார் முள்ளும் மலரும் பாடல்களுக்கும் விவரணைகளுக்கும் ஒரு ஓ அண்ட் தாங்க்ஸ்..
த.புபாடல்கள் வாசுசார் ராகவேந்தர் மிக்க்க நன்றி..
ராகவேந்தர் சார்..இந்தக் கண்ணன்களை வளர்த்து வரும் யசோதை போன்றவர் நீங்கள்..உங்களுக்கு என் நமஸ்காரங்கள்..
ஆமா த. பு பாடல்கள்ல யாரோ நீச்சலடிச்சுக்கிட்டே பாடறாங்களாமே..யார்ப்பா பார் அதிரூப சுந்தரி.. பாரதி ரூப சுந்தரின்னும் சொல்லலாமா..(கண்ணாவ் எங்கேயோ போய்க்கிட்டிருக்கடா நீ! :) )
http://www.youtube.com/watch?v=-r_C8nuj1dw
மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி
கனி எது என் கன்னம் தான் என்று சொல்வேனடி
காலத்தில் வசந்தமடி நான் கோலத்தில் குமரியடி..
நாயகியரின் போதைப் பாடல்களில் மிஸ்ட்டர் கார்த்திக் சொன்னதாக நினைவு..
வர்றேங்ன்க மறுபடி மேபி டுடே ஈவ்னிங்க்.. (ரொம்ப சாஸ்திங்க்ணா வொர்க்..ஸாரி)
-
//ஆலங்கொடி மேலே கிளி எனும் போது எழும் அந்தக் கிளியின் குரல் சத்தம் படு தெளிவு. அடடா! காட்சிக்குத் தக்கவாறு என்ன அழகான சப்தங்கள்! இத்தனைக்கும் கிளிகளைக் காட்டாமலேயே!//
'//இளைய பருவம் மலையில் வந்தால்' மூன்றாவது சரணத்தில் ஜீப் ஓட்டம் நிறுத்தப்பட்டு ஷோபாவைக் காண்பிப்பார்கள். பாலு மகேந்திராவுக்காகவே இந்த சரணம். ஷோபா பூந்தோட்டத்துக்குள் வருவது, தண்ணீர் கடம் சுமந்தபடி பாடலையும், பாடியவரையும் மனதில் அசை போட்டுக் கொண்டே வருவது, பூவைக் கையில் வைத்துக் கொண்டு தலைமுடி காற்றில் பறக்க ஷோபாவை ஒரு சைட் போஸ் தர வைத்திருப்பார் பாலு. ஒரே வார்த்தை. கவிதை. பாடல் முடியும் போது மரங்களினூடே சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பிப்பதையும், அந்த சிகப்புப் புள்ளியான சூரியனுடனே ஷோபா உடன் நடந்து செல்வதையும் பாலு இழைத்திருப்பார். // கலக்கல் காட்சி சுவையான வர்ணிப்பு வெர்ரிகுட் அண்ட் தாங்க்ஸ் வாசு சார்.. எனிவே.. எனக்கு இன்னா தோணிச்சுன்னா..கொஞ்சம் சரததையும் பாடறா மாதிரிகாட்டி மிக்ஸ் பண்ணியிருக்க்லாம்னு.. கண்ணதாசன் பத்தி வெகு நாட்கள் முன்னால எழுத ஆரம்பிச்ச தொடர்ல இந்தப் பாட்டு தான் ஃபர்ஸ்ட்.கிட்டத் தட்ட என்னோட சிந்தனா (?!) அலைகளுக்கு ஒத்தே உங்களுடையதும் இருக்கிறது..
ம்ம் தொழில் பாட்டு பாதி எழுதியிருக்கேன்..இன்னிக்கு முடிக்க முடியுமா.. பார்க்கலாம்..அதோட வர்றேன்..
-
பாடல் 5 ,
பாணி ஒன்று
தாய் ( வாசு ) எட்டடி பாய்ந்தால் , குட்டி ( நாங்கள் ) பதினாறு ஆடி பாய வேண்டாமா ? - ஒன்று , இரண்டு அல்ல , 5 பாடல்கள் , ஒரே பாணி , ஒரே நோக்கம் , ஒரே கருத்து - உறவின் அருமையை அழகாக சொல்லும் பாடல்கள் - கணவன் - மனைவி உறவு மட்டும் அருமையாக அமைந்து விட்டால் , வேறு எந்த தோல்வியும் நம்மை ஒன்றும் செய்யாது -- திருமணங்கள் இன்று ஒரு கோர்ட்டில் ஆரம்பித்து , மறு கோர்ட்டில் முடிவடைந்து விடுகின்றன - உறவு என்பது இரு உடல்கள் சம்பந்த பட்டது மட்டும் அல்ல - இரு வேறு வேறு மனங்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது தான் உறவு . உறவு எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று சொல்லவில்லை - இப்படி வாழ்ந்தால் நன்றாகவே இருக்கும் என்று மட்டுமே சொல்கின்றது . அப்படி வாழாமல் எவ்வளவு உறவுகள் பிறக்காமலேயே இறந்து விடுகின்றன , மலராமலேயே வாடி விடுகின்றன , பூக்காமலேயே கருகி விடுகின்றன ---- இந்த பாடல்களை கேளுங்கள் - உறவின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வெண் பனி தென்றல் உள்ளவரையில்
http://youtu.be/ORM86VivNUM
தந்தை வாழ்வு முடிந்து போனால் , தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை - தாயின் வாழ்வு முடிந்து போனால் , தந்தைக்கு என்று யாரும் இல்லை - ஒருவராக வாழ்கிறோம் , பிரிவதர்க்கோ இதயம் இல்லை -
பிரிந்த மகளை நினைத்து ஒரு தந்தை பாடும் பாடல் - உறவின் அருமையை இதைவிட அருமையாக சொல்ல முடியாது .
http://youtu.be/GAQFU7dU8LM
இங்கு நானொரு பாதி , நீயொரு பாதி - இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி ---- உன்னை காணாத கண்ணும் கண் அல்ல -
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்ச்சிகள்
http://youtu.be/6ZByhP1ebCQ
நான் பாதி - நீ பாதி கண்ணே -
வேறு விதமாக , ஆனால் அதே உணர்சிகளுடன் ------
http://youtu.be/DxgdPJ8rUSI
ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான மனம் வேண்டும் - உடலாலும் , உயிர் உறவாலும் பிரியாத மனம் வேண்டும்
http://youtu.be/fn9NxPDy8Ok
இந்த ப்ராத்தனை மட்டும் ஒவ்வருவருக்கும் நிறைவேறி விட்டால் , மகிழ்ச்சிக்கும் , நிம்மதிக்கும் அளவேது ??
:):smile2:
-
விநாயக பெருமானே , பிரணவத்தின் பீடமே, !
ஞானத்தின் பரம்பொருளே ! வேண்டும் வரத்தை கொடுக்கும் வேலவனின் தமையனே ! வேத நாயகனின் தலை மகனே !
என் அன்னை கொடுத்த கன்னி தமிழால் உன்னை இன்னும் சில நாட்களில் பிறக்க போகும் இந்த இனிய புத்தாண்டில் வருக வருக என்று வரவேற்கிறேன் !! வணக்கம் !!!
மகாபாரதத்திற்கு நீர் பிரதி எடுத்தது உண்மையானால் ,
அந்த மாபெரும் காவியம் அழிந்துவிடகூடாது என்பதற்காக ,
புலமைக்கு முதலிடம் கொடுத்து , நீரே சுவடி எடுத்து
எழுத்தாணியாக உமது கொம்பை உடைத்து பாரத்தை
ஏட்டிலே பதித்தது உண்மையானால்;
ஆற்று நீரை கமண்டலத்திர்க்குள் அடக்கி அகஸ்த்திய முனிவன் எடுத்து செல்கிறான் என்பதை அறிந்து , காக்கை வடிவெடுத்து ,
கமண்டலத்தின் நீரை கவிழ்த்து , அதன் காரணமாக காவேரி ஆறு
பரந்து ஓடுவது உண்மையானால் ;
அன்னை தந்தையே உலகம் என்பதை மற்றவர்களுக்கு எடுத்து காட்ட அவர்களையே வலம் வந்து நீரே ஞான பழம் பெற்றது உறுதியானால்;
கல்வி கற்ற சாண்டோர்கள் , முதலில் உம்மை நினைத்து , உமக்கு ஒரு காப்பு செய்யுள் இயற்றிய பின்பே மற்றவைகளை எழுதுவது
உறுதியானால் ;
தமிழ் மகளாம் வள்ளியை தம்பி முருகனுக்கு மணம் முடிக்க இதே யானை வடிவில் வந்து நீரே திருமணத்தை நடத்தி வைத்தது நிச்சயமானால் ;
ஞானத்தின் பீடத்திலே அமர்ந்து ஓம் என்ற பிரணவத்தின் வடிவமே நீர் என்பது திண்ணமானால் ,
பாலும் , , தேனும் , பாகும் பருப்பும் - இவை நாலையும் தந்த தமிழ் மூதாட்டி ஔவைக்கு , நீரே சங்க தமிழ் மூன்றையும் கொடுத்தது சத்தியமானால் ---- என் கல்வி மீது ஆணையிட்டு கேட்கிறேன் . இதை கேள் !!!!
புதிய வருடம் "மையம் " திரியில் இருக்கும் எல்லோருக்கும் , திரிகளை படிக்கும் பல கோடி வாசகர்களுக்கும் , அவர்கள் குடும்பங்களுக்கும் இந்த புத்தாண்டில் நல்லதே நடக்கும்! சந்தோஷமாக இருப்பார்கள் என்று ஆசீர்வதி !!!
நன்றி கணேசா ! மிக்க நன்றி !!!
http://youtu.be/1WdZqJxmuco
(இசை : இளைய (வாசு ) ராஜா
ராகம் : நாட்டை ( இந்த விபரம் கிருஷ்னாஜிக்காக -----)
-
COLLECTION FROM OLD CINEMA MAGAZINE ''FILIMALAYA''
http://i58.tinypic.com/23tqtuf.jpg
-
-
-