Originally Posted by
Yukesh Babu
One of the sivaji fan wishes thalaivar birthday in his facebook
திரு.mgr அவர்களைப் பற்றிச் சொல்ல புதியதாய் ஒன்றுமில்லை. ஆனால் அவர்தான் என்றும் புதியவர்.
உதயசூரியனின் பார்வையிலே உலகத்தை விழிக்கச் செய்தவர்.ஈ.வெ.ரா.தி.மு.க. அண்ணா.m.g.r. ஜானகி பதவி பணிவு துணிவு அன்பு பண்பு கடமை கருணை நேர்மை வாய்மை தூய்மை இன்னும் எத்தனையோ மூன்றெழுத்தில் தன் மூச்சைக் கொண்டவர்.
அன்னை சத்யாவின் மடியிலும் m.r.ராதா சுட்ட பின்பும் நோயுற்று எழுந்து வந்தும் முப்பிறவி கண்டார் காலன் அவரைக் கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் இன்றும் அவர்தான் முதல்வர்.
தனக்கென்று ஓர் இயக்கத்தை ஆரம்பிக்கும் வரை தான் சார்ந்த இயக்கத்தின் கொள்கைகளை தனது திரைப்படங்களில் புகுத்தியவரில்லை.அதற்கு முன் எந்த உள்நோக்கமும் இல்லாமல் திரைப்படங்களிலே நீதி நேர்மை நியாயம் ஒழுக்கம் தர்மம் அன்பு போன்ற பண்புகளை வளர்த்தவர்.
எத்தனை எத்தனையோ கவிஞர்களிடமிருந்து அவர் பெற்று நமக்குக் கொடுத்திட்ட பாடல்கள் நம் வாழ்க்கைக்கு வித்திட்டவை.அந்தப் பாடல்களின் படியே அவரும் தம் வாழ்வில் நடந்து காட்டினார்
கூட இருந்தே குழி பறித்தோரையும் தாண்டி அவர் செய்த தர்மம் அவரைக் காத்தது
பதவியிருந்த போது பணிவும் துணிவும் கொண்டதோடு பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வந்தார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்கிறோம் இவர் போல யாரென்று ஊர் சொல்கிறது.
தனியானாலும் தீமைகள் நடப்பதைத் தடுத்தவர்.செத்துப் பிழைத்தவர்.எமனைப் பார்த்துச் சிரித்தவர்.வாழை போல வெட்ட வெட்ட முளைத்து சங்கு போல சுடச்சுட வெளுத்தவர்.
நன்றி மறவாத நல்ல மனத்தை மூலதனமாகக் கொண்டவர்.
காலத்தை வென்று காவியமாய் நின்று வேதனை தீர்த்து மக்கள் விழிகளில் நிறைந்தவர்.
ஓடி ஓடி உழைத்து ஊருக்கெல்லாம் கொடுத்தவர்.
நல்ல மனிதனுக்கும் நன்றி மறந்தவர்க்கும் உண்டான உறவின் பிரிவைக் கண்டவர்.
தவறு செய்தவன் தேவனென்றாலும் விட்டதில்லை.அவர் உரிமைப் பொருளைத் தொட்டதுமில்லை.
நல்ல தீர்ப்பை உலகம் சொன்ன நாள் வந்த போது சிரித்தார்.
அவர் ஒரு தீர்க்கதரிசி.ஆம் சொந்தமாக ஓர் இயக்கத்தை ஆரம்பித்து தமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லுமென்றார்.வென்றார்.இன்றும் சரித்திரம் சொல்கிறது.
நாளை உலகை ஆள வேண்டுமென்றார்.ஆண்டார்.
நாளை நமதே என்றார்.இந்த நாடு அவரானது.
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டுமென்றார்.பறந்தது அவர் கொடி பறந்தது.
பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவர்களை மூலைக்கு மூலை தூக்கியெறிந்து தலைகுனிவாக்கினார்.
இப்படி தான் நினைத்ததை நடத்தியே முடித்த அவர் ஒரு தீர்க்கதரிசிதானே.
நான் திரு.சிவாஜி அவர்களின் ரசிகன்.மாற்றான் தோட்டத்து மல்லிகை மணத்தின் பெருமையை பறைசாற்றுவதில் பூரிப்படைகிறேன்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்.
திரு.m g r அவர்கள் வாக்கினில் நிறைவேறாமல் போனது "எனக்கொரு மகன் பிறப்பான்"என்றது மட்டுமே.அதற்கும் அர்த்தம் உள்ளது. அவர் புகழைப் பகிர்ந்தளிக்க ஆண்டவன் விரும்பவில்லை.எனவே
ஒன்றே ஒன்றே உலகம் ஒன்றே!
உலகில் m g r ஒன்றே!!
நன்றி ! நன்றி !! நன்றி !!!
BY RAMASAMY THIAGU