இன்று முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
மாட்டுக்கார வேலன்
டிலைட்டில்
இரண்டாவது
வாரம்
இதயவீணை
Printable View
இன்று முதல்
கோவை
ராயல்
திரையரங்கில்
மாட்டுக்கார வேலன்
டிலைட்டில்
இரண்டாவது
வாரம்
இதயவீணை
தின இதழ் 30/06/2017
http://i68.tinypic.com/fz22ie.jpg
http://i65.tinypic.com/fvwc50.jpg
மக்கள் குரல் 30/06/2017
http://i66.tinypic.com/t6vwgw.jpg
Puducherry Edition - Malaimalar
http://i68.tinypic.com/2pq87eb.jpg
Daily thanthi - Puducherry edition
http://i68.tinypic.com/fxuyv5.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆரின் நிரந்தர கோட்டை மதுரை என்பதை மதுரையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிரூபித்துள்ளது .
மதுரை மாநகரம் முழுவதும் எம்ஜிஆரின் படப்பாடல்கள் ஒலித்தது.
மாநகரம் முழுவதும் எம்ஜிஆர் வண்ண சுவரொட்டிகள் - பதாகைகள் அலங்கரிப்பட்டு காண்போர் கண்களை கவர்ந்தது .திரும்பிய திசையெல்லாம் அதிமுகவின் கொடிகளுடன் நேற்றய தலைமுறை ரசிகர்களும் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ஆர்வத்துடன் கலந்த கொண்ட காட்சிகள் கண்களுக்கு விருந்து.
நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய தமிழக முதல்வரின் உரை எல்லா எம்ஜிஆர் ரசிகர்களின் உணர்வையே பிரதிபலித்தது . எம்ஜிஆருக்கும் மதுரைக்கும் இருந்த சினிமா மற்றும் அரசியல் தொடர்பை பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார் .
எம்ஜிஆர் மறைந்து 30 வருடங்கள் உருண்டோடிவிட்டாலும் அவரது சாகாவரம் பெற்ற சாதனைகளும் புகழும் மக்கள் உள்ளங்களில் நிலைத்து விட்டது .
மதுரை என்றாலே அது என்றென்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் கோட்டை என்பதை அறிந்து மிகவும் பெருமை கொள்கிறோம் .
30.6.2017
எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக பதவி ஏற்று 40 ஆண்டுகள் நிறைவு

பாரத ரத்னா எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக அரியனை ஏறி இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. துணை நடிகராக வாழ்க்கையை தொடங்கி புரட்சிதலைவராக உயர்ந்து இன்றும் மக்களின் இதயக்கனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவர் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதியில் துணை நடிகராக தமிழ் திரை உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர்.. 1950ல் வெளிவந்த மந்திரிகுமாரி.. மலைகள்ளன்.. என திருப்பு முனை தந்த படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மாபெரும் நாயகனாக உயர்ந்தார்..!
அலிபாபாவும் 40 திருடர்களும் , திருடாதே, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல்வேறு படங்கள் மூலம் சமூக கருத்துக்களை மக்களிடையே விதைத்து மக்கள் திலகாமய் உயர்ந்ததால் எங்கவீட்டு பிள்ளை என கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் , 1967 ஆம் ஆண்டு திமுக சார்பில் பரங்கிமலை தொகுதியில் களமிறங்கி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி கண்டார்.
அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்த எம்.ஜி.ஆர் அரசியலையும், சினிமாவையும் இரு கண்களாக பாவித்தவர். அறிஞர் அண்ணா மறைவிற்கு பின்னர் கருத்து வேறுபாட்டால் 1972ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 1972ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கி தமிழக அரசியலின் புதிய வரலாற்றை எழுதினார் எம்.ஜி.ஆர்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக முதல் வெற்றியை பதிவு செய்து, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஜூன் 30 ந்தேதி தமிழக முதல் அமைச்சரானார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்..!
அரசு பள்ளிகளில் செயல்பட்டு வந்த மதிய உணவு திட்டம் காமராஜர் ஆட்சிக்கு பின்னர் முறையாக செயல்பாடாமல் இருப்பதை உணர்ந்து, கூடுதல் சிறப்பம்சங்களுடன் திட்டத்தை மாற்றி அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் சேர்த்து சத்துணவு திட்டமாக அமல்படுத்தினார் எம்.ஜி.ஆர். குழந்தைகளின் உடல் நலன் காக்க சத்து மாவு உருண்டைகளும் பள்ளிகளில் வழங்கப்பட்டன.
ஏழை மாணவர்களுக்கு இலவசமாக சீறுடைகள், காலணிகள், பாட புத்தகங்களையும் வழங்கி கல்வி வளர்ச்சிக்கு உதவினார். அவரது மகத்தான மக்கள் பணி காரணமாக 1980 மற்றும் 1984 ஆகிய இரு பொது தேர்தல்களிலும் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
தென்காசி ராஜகோபுரம் உள்ளிட்ட ஏராளமான பழமையான கோவிகளை பராமரித்து குடமுழுக்கு நடத்திவைத்த பெருமைக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆர்.. 1987ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
ஏழை எளியோருக்கு தனது சொந்த பணத்தை அள்ளிக்கொடுத்து வள்ளலாக வாழ்ந்த எம்.ஜி.ஆர் தமிழக முதல் அமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உடலால் அவர் மறைந்தாலும்… அவரது வள்ளல் குணத்தால்… ஏழைகளின் இதய சிம்மாசனத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டு வருகிறார் .
Courtesy - polimer tv
எம்ஜிஆரின் சத்துணவு தொடக்க விழா - 1.7.1982
மக்கள் திலகத்தின் தீர்க்க தரிசனதிற்கு உதாரணம் - 1.7.1982 அன்று துவக்கி வைத்த சத்துணவு திட்டம் . உலகமே பாராட்டியது . 35 ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்து நடை முறை படுத்த பட்ட திட்டம் .
கிண்டல் கேலி பேசியவர்கள் எல்லாம் இன்று மனதார பாராட்டும் திட்டம் . இத்திட்டத்தால் பயன் பெற்ற குழைந்தைகள் இன்று பெரியவர்களாகி சமுதாயத்தில் நல்ல நிலையில் முன்னேறி உள்ளார்கள் .
அந்த திட்டத்தின் நாயகன் வள்ளல் எம்ஜிஆர்இன்றும் சரித்திர நாயகனாக சத்துணவு தந்த நாயகனாக வாழ்கிறார்
ஜூலை மாதத்தில் வெளி வந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
நாளை நமதே - 1975
ஆயிரத்தில் ஒருவன் -1965
நேற்று இன்று நாளை -1974
தெய்வத்தாய் - 1974
குலேபகாவலி - 1955
மலைக்கள்ளன் - 1954
தலைவன் -1970
சபாஷ் மாப்பிளே - 1961