இப்படி 'தல' நாயகி சம்பளம் உயர்ந்திடுச்சே: கவலையில் 'தளபதி' நாயகிகள் Posted by: Siva Published: Wednesday, February 5, 2014, 9:49 [IST] சென்னை: பொங்கலுக்கு ரிலீஸான தல நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகையின் சம்பளம் உயர்ந்துவிட்டதை நினைத்து தளபதி படத்தில் நடித்த 2 நாயகிகள் கவலையில் உள்ளார்களாம். கோலிவுட்டில் பறவை பெயர் கொண்ட படம் மூலம் பிரபலமான மில்க் நடிகை தளபதி நடிகரின் லீடர் படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். படம் மட்டும் ஹிட்டாகட்டும் அடுத்து கோலிவுட்டின் முன்னணி நடிகை நான் தான் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால் லீடர் படம் பப்படமாகி நடிகையின் எதிர்பார்ப்பில் மண் விழுந்தது. இந்நிலையில் கோலிவுட்டில் காணாமல் போன பால் மேனி நடிகை தல நடிகரின் பொங்கல் ரிலீஸ் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆனார். இந்த படம் ஹிட்டாகும் என்ற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இதையடுத்து அம்மணிக்கு வாய்ப்புகளும் வந்து குவிகிறது. இந்நிலையில் தல நாயகி தனது சம்பளத்தை ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1.5 கோடியாக உயர்த்திவிட்டாராம். இதனால் மில்க் நடிகையும், மாவட்டம் படத்தில் தளபதி ஜோடியாக நடித்த ஜல் நடிகையும் கவலையில் உள்ளார்களாம். நம்மால் சம்பளத்தை உயர்த்த முடியவில்லை இவர் இப்படி உயர்த்திவிட்டாரே என்று தான் அவர்களுக்கு வருத்தமாம்.
Read more at:
http://tamil.oneindia.in/movies/goss...es-192879.html