உள்ள(த்)தை அள்ளித்தா
http://sim01.in.com/62/ff8c89be5880b...1f5a_pt_xl.jpg
பேருன்னதும் ஞாபகம் வருது..
முத்துராமன் இரு வேடங்களிலும் விஜயகுமாரி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்த படம் பேர் சொல்ல ஒரு பிள்ளை. 1978ம் ஆண்டு வெளிவந்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இப்படத்திற்கு இசை விஜயபாஸ்கர். வாணி ஜெயராமுடைய குரலை தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பயன் படுத்திக் கொண்ட இசையமைப்பாளர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சங்கர் கணேஷ். இதிலும் வாணி ஜெயராமுக்கு இரண்டு சூப்பர் பாடல்கள். அது மட்டுமின்றி இசையரசி சுசீலா அவர்களின் குரலில் இன்னொரு இனிமையான பாடலும் உண்டு.
முத்துராமன் சிறந்த தொழிலாளி, நிர்வாகத் திறமையுள்ளவர். பண வசதியில்லை, குறிப்பாக முதல் பிள்ளை பிறக்கும் போது அவர் சிரமப் படுகிறார். அதன் காரணமாக அவரை தரித்திரம் எனத் திட்டுகிறார். இரண்டாவது பிள்ளை பிறக்கும் சமயத்தில் அவருடைய தொழில் திட்டம் ஒரு பணக்காரரால் ஒப்புக் கொள்ளப் பட்டு பண உதவி செய்கிறார். இதன் காரணமாக இரண்டாம் பிள்ளையை செல்லமாக வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகும் இளைய பிள்ளை ஒழுக்கமில்லா வாழ்க்கை வாழ்கிறார். செலவு நிறைய செய்து விடுகிறார். ஒரு கட்டத்தில் திருடவும் முனைகிறார். அதே நேரத்தில் அவரால் பெண்டாளப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையை அவள் பாட்டுப் பாடி வளர்க்கிறாள். இறுதியில் இளைய பிள்ளை திருந்துகிறாரா, அதில் நல்லவனான மூத்த பிள்ளையின் பங்கு என்ன இவையே கதையின் இறுதிப் பகுதி.
இதில் மூத்த பிள்ளையாகவும் முத்துராமன் நடிக்க, இளைய பிள்ளை நம்ம தென்னாட்டு ஓமர் ஷெரீஃப் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் திருடனாக உருவெடுக்கும் சமயத்தில் குழந்தையை வைத்து அவருடைய தாலி கட்டாத மனைவி பாடும் பாடலை இசையரசி அருமையாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலைத் தான் இப்போது நீங்கள் தரவிறக்கிக் கேட்க உள்ளீர்கள்.
பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமா அல்லது கவியரசரா தெரியவில்லை.
முத்து நகை சிந்தி வரும்