VERY NICE COMMENTS KRISHNA SIR . THANKS .
http://i59.tinypic.com/53rz7t.jpg
Printable View
VERY NICE COMMENTS KRISHNA SIR . THANKS .
http://i59.tinypic.com/53rz7t.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களில் ஆடைகள் மிகவும் வண்ணமயமாகவும் ,புதுமையாகவும் இருக்கும் .
ராமன் தேடிய சீதை - உலகம் சுற்றும் வாலிபன் இரண்டு படங்களில் மிக அதிகமான வண்ண உடைகளில் மக்கள் திலகம் நடித்திருந்தார் .அதே போல் அவர் அணிந்த வண்ண ஷூக்கள் மிகவும் பிரபலம் .ஆடைக்கு தகுந்த வண்ணத்தில் ஷூக்களும் இடம் அணிந்திருப்பார் .
EVERGREEN STILL. SUPERB POSE.
http://i62.tinypic.com/1zl8a4l.jpg
SEE THE MAJESTIC MAKKAL THILAGAM MGR
http://i57.tinypic.com/2qc2k4h.jpg
சிலர் சொன்னார்கள், எழுதினார்கள்; "நாடோடி மன்னன்" கதை " ஜென்டாவின் கைதி " என்ற படத்தின் மறு பதிப்பு என்று.
ஏன், நாங்களே முதன் முதலாக வெளியிட்ட விளம்பரத்தில் " ஜென்டாவின் கைதி " என்ற ஆங்கிலக்கதையின் தழுவல் என்று அறிவித்தோம். ஆனால் படமாக்கிய சமயம் அதன் அடிப்படையே மாற்றப்பட்டு விட்டது என்பதை கவனிக்காமல் சிலர் இக்கதையில் மாற்றமெதுவுமே இல்லை என்று எழுதினார்கள்; பேசினார்கள்; அந்த அன்பர்களுக்கு ஒரே ஒரு விளக்கத்தின் மூலம் எவ்வளவு பெரிய அளவில் நம் நாட்டு பண்புக்கு ஏற்றவாறு அந்தக் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
" ஜென்டாவின் கைதி " என்ற கதையில் மன்னனுடைய மனைவி மன்னனைப் போன்று நடிப்பவனிடமும் நெருங்கிப்பழகுகிறாள். போலி மன்னன் கடைசியில் திரும்பிப் போகும்போது அவளிடம் விடை பெறுகிறான். அவள் அவனை யாரென்று அறிந்த பின்னும் இணைந்து இணைந்து பழகி, நான் உன்னை விரும்புகிறேன்'; ஆனால் நான் அரசி என்றெல்லாம் எண்ணத்தை சொல்லுவது போல் அமைக்கப் பட்டிருந்தது, ஆங்கிலக் கதையில்.
நாடோடி மன்னனில், நாடோடியைத் தன் கணவனாக எண்ணி முதல் முதலில் மலர் தூவுகிறார், இராணி. நாடோடியோ, தான் இன்னொருவனுடைய மனைவியிடமிருந்து அவ்வித தொடர்பை பெறுவது தகாது...... அவள் இடும் மலர் கூடத் தன் மேல் படக் கூடாது என்று எண்ணி விலகிப் போகிறான். பிறகு அவளோ, அவனை அந்நியன் என்று, ஆனால் நல்லவன் என்றறிந்ததும், அண்ணா என்று முறை கொண்டாடுகிறாள். அடிப்படைப் பண்பாட்டிலேயே ஜென்டாவின் கைதிக்கும், நாடோடி மன்னனுக்கும் பெரும் மாறுபாடு இருக்கிறது.
மேலும் "ஜென்டாவின் கைதியில்" போலி மன்னன் என்ற பதவியையே ஒழிக்க உழைப்பவன் ஜென்டாவின் கைதியில் அரசை ஆட்டிப்படைக்கும் குருநாதர் கிடையாது. தீவு என்பதோ தீவின் தலைவன் என்பவனோ கிடையாது. கடைசியாக ஆங்கிலக் கதையின் அடிப்படையையே மாற்றி "நாடோடி மன்னன்" முழுக்க முழுக்க சில கொள்கைகளை இலட்சியமாக கொண்டு .அமைக்கப் பட்டிருக்கிறது.
1937-38 ம் ஆண்டுகளில், கல்கத்தாவில் " மாய மச்சேந்திரா" படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலம் ... ஒரு நாள் சில நண்பர்களுடன் if i were king என்ற ஆங்கிலப் படம் பார்க்கப் போனேன். ரொனால்ட் கால்மேன் என்ற நடிகர் நடித்த படம். ஆம் ஒரு காட்சியில் " நான் மன்னன்ஆனால் " என்று பேசுகிறார். என்னென்ன பேசினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கருத்து என் மனதில் அப்போதே பதிந்தது. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பேன், நான் மன்னனானால் என்று.
இப்போதைய நாடோடி மன்னனின் கருப்பொருள் அப்போதே தோன்றி விட்டது. அந்தக்காலத்திலேயே ஏழ்மையைப் பற்றியும் மக்களின் நிலையைப் பற்றியும் சிந்தித்தவன் நான். சிந்தித்தவன் என்பதை விட அனுபவித்து கொண்டிருந்தவன், என்பதே பொருந்தும்.
நாட்டிலே இது போன்ற தொல்லைகள் ஏனிருக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவேன். அப்போது எனக்கு கிடைக்கும் பதில்கள் கூறியதெல்லாம், அன்னிய ஆட்சி இங்கு இருப்பதனால்தான் என்பதே. ஆனால், அந்த எண்ணம் இன்று வரையிலும் நீங்காத உண்மையாகி விடும் என்று நான் அப்போது எதிர்பார்க்கவே இல்லை.
ஆகவே தான் நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றபட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வு அடைவர் என்பதை எடுத்துக் காட்ட நாடோடியின் பாத்திரத்தை அமைத்தேன். ஆனால் அதே நேரத்தில் மன்னனைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன். இங்கு மக்களை ஆளும் பொறுப்பிலே இருப்பவர்களும் நமது இனத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்களும் நம்மோடிருப்பவர்கள்தான். ஆனால், அவர்களுடைய ஆற்றலும், அறிவும், திறனும், திண்மையும் அன்னியர்களால் அடக்கி ஆளப்படுகின்றன. ஆக, இவர்களும் நம்மோடிணைந்தால் ?
இப்படி ஒரு கற்பனை செய்தேன். அதுதான் மன்னனின் பாத்திரம், மன்னன் உண்மையை உணருகிறான். தானும் மக்களுக்காக நாடோடியோடு சேர்ந்து பணியாற்ற முயலுகிறான்.
.................நாடோடி மன்னன் உருவான கதை என்ற தலைப்பில் புரட்சித்தலைவர் எழுதிய கட்டுரை...............
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
NOTE : The Advertisement Photos of ' IF I WERE KING " & ' THE PRISONER OF ZENDA follows