-
என்கடமை - மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பின் ஆளுமைகள் நிறைந்த காவியம். மக்கள் திலகத்தின் புன்சிரிப்பு , திறமையான நடிப்பு , ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்த மேல் நாட்டு நடன அசைவுகள் , இனிமையான பாடல்கள் என்று SHORT & SWEET ஆக பல காட்சிகளில் நம்மை மயக்கிய மக்கள் திலகம் .
https://youtu.be/jWWOSUgPzNA
-
-
-
எம்ஜிஆர் 100 | 20 - அசைவ உணவுப் பிரியர்!
M.g.r. நன்றாக ரசித்து சாப்பிடுவார். அவருக்கு உள்ள சிறப்பு, மற்றவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்று விரும்புவார். தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே உணவு அதே தரத்தில் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் தனித்து சாப்பிட்ட நேரங்கள் மிக அபூர்வம். எப்போதும் குறைந்தது 10 பேராவது தன்னுடன் சேர்ந்து சாப்பிட்டால்தான் எம்.ஜி.ஆருக்கு திருப்தி.
எம்.ஜி.ஆர். என்றாலே எல்லாவற்றிலும் முதலா வதுதானே. சமீபத்தில் கூட அவர் படித்த கும்பகோணம் ஆனையடி பள்ளி தமிழ்நாட்டி லேயே முதலாவதாக ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்ற பள்ளி என்ற சிறப்பை பெற்றுள்ளது.
கும்பகோணம் ஆனையடி பள்ளியில் 2-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் வறுமை அவரை நாடகத்தில் தள்ளியது. பிள்ளைகளை பிரிய நேர்ந்தாலும் அங்கே போனாலாவது தன் இரண்டு பிள்ளைகளும் (எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும்) வயிறார சாப்பிடுவார் களே என்ற எண்ணத்தில் இருவரையும் நாடக கம்பெனியில் சேர்க்க கனத்த இதயத்துடன் அனுமதி அளித்தார் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யா அம்மையார்.
அங்கும் சில நேரங்களில் மூன்று வேளைகள் சாப்பாடு கிடைக்காது. நாடக கம்பெனிகளை சொல்லியும் குற்றம் இல்லை. கிடைக்கும் வருமானத்தை வைத்து அனைவருக்கும் சோறுபோட வேண்டிய நிலை. எனவே, குறிப்பிட்ட நாளில் நாடகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சாப்பாடு என்ற விதிமுறை. இப்படியே சுழற்சி முறையில் நடிகர்களுக்கு சாப்பாடு.
இது தெரியாத சிறுவன் எம்.ஜி.ஆர்., ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்காக பசியோடு மற்ற நடிகர்களுடன் பந்தியில் அமர்ந்தார். நாடக கம்பெனி மேலாளர் இதை கவனித்துவிட்டு ‘‘இன்றைய நாடகத்தில் நீ இல்லை. உனக்கு சாப்பாடு கிடையாது’’ என்று சிறுவனாக இருந்த எம்.ஜி.ஆரை எழுப்பி கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று சாப்பாட்டு கூடத்துக்கு வெளியே விட்டு வந்தார்.
அன்று பசியுடன் அழுத கொடுமையான அனுபவங்கள்தான் சிறுவர், சிறுமிகள், பள்ளிப் பிள்ளைகள் வயிறார சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சத்துணவுத் திட்டம் என்ற ஐ.நா.சபை பாராட்டும் திட்டத்தை கொண்டுவர எம்.ஜி.ஆருக்கு உந்து சக்தியாக விளங்கியது.
இளம் வயதில் கிடைத்த அனுபவங்களால், சாப்பாடு விஷயத்தில் யாராவது பாரபட்சம் காட்டினால் எம்.ஜி.ஆருக்கு கடும் கோபம் வரும். படப்பிடிப்புகளின்போது படத்தை தயாரிக்கும் கம்பெனி சார்பில் யூனிட்டில் உள்ள எல்லாருக்கும் சாப்பாடு வழங்கப்படும். சில பட கம்பெனிகளில் பட்ஜெட் கருதி, படத்தின் கதாநாயகன், நாயகி, டைரக்டர் போன்றவர்களுக்கு உயர்தரமான சாப்பாடும் தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடும் போடப்படும். தான் நடிக்கும் படங்களில் தொழிலாளர்களுக்கும் தரமான சாப்பாடு போடப்படுவதை எம்.ஜி.ஆர். உறுதி செய்து கொள்வார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு தினமும் வகை வகையான அசைவ சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. படத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சுமாரான சாப்பாடு போடப் பட்டது. அவர்களுக்கு சாப்பாட்டில் முட்டை மட் டுமே வழங்கப்பட்டது. பொறுத்துப் பார்த்த தொழி லாளர்கள் ஒருநாள் படப்பிடிப்பு இடைவேளை யில் ஓய்வாக அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரிடமே தயங்கித் தயங்கி தங்கள் குறையை தெரி வித்தனர். விஷயத்தை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் சிவந்த முகம், கோபத்தில் மேலும் குங்கும நிறமானது. ‘‘நீங்கள் போய் வேலையை பாருங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி தொழிலாளர்களை அனுப்பி விட்டார்.
மறுநாள் மதிய உணவு இடைவேளையின் போது தொழிலாளர்கள் வரிசையில் எம்.ஜி.ஆர். சாப்பிட அமர்ந்து விட்டார். சாப்பாடு பரிமாறு பவர்கள் கதிகலங்கிப் போய்விட்டார்கள். ‘‘அண்ணே, உங்களுக்கு சாப்பாடு உள்ளே இருக்கு..’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.
‘‘பரவாயில்லை, இருக்கட்டும். எங்கே உட் கார்ந்து சாப்பிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே? பசிக்கிறது. சீக்கிரம் சாப்பாடு கொண்டு வாங்க’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.
வேறு வழியில்லாமல் அவருக்கும் அங்கேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. முட்டையைத் தவிர வேறு அசைவ வகைகள் எதுவும் வரவில்லை. ‘‘ஏன் அசைவ உணவுகள் வரவில்லை. எடுத்து வந்து பரிமாறுங்கள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘‘உங்கள் அறைக்கு போய் எடுத்து வரு கிறோம்’’... பரிமாறியவர்களின் பவ்யமான பதில்.
‘‘ஏன்? தொழிலாளர்களுக்கு உள்ளது என்ன ஆச்சு?’’... எம்.ஜி.ஆரின் கேள்வியில் கூர்மை ஏறியது.
‘‘இவங்களுக்கு வெறும் முட்டை மட்டும்தான் போடச் சொல்லியிருக்காங்க’’... இந்த பதிலுக் காக காத்திருந்த எம்.ஜி.ஆர். கோபத்தின் உச்சிக்கே சென்றார்.
‘‘தயாரிப்பு நிர்வாகி எங்கே? ஏன் இப்படி சாப்பாட்டிலே பாகுபாடு செய்யறீங்க? தொழி லாளர்கள்தான் அதிகம் உழைக்கிறார்கள். அவங்க தான் நல்லா சாப்பிடணும். அவங்களுக்கு வெறும் முட்டை; எனக்கு மட்டும் காடை, கவுதாரியா? அவங்களுக்கும் தினமும் அசைவ சாப்பாடு கொடுங்க. கம்பெனியால முடியலைன்னா அதுக்கான செலவை என் கணக்கிலே வச்சுக்குங்க. சம்பளத்திலே கழிச்சுக்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். பொரிந்து தள்ளிவிட்டார்.
மறுநாள் முதல் தொழிலாளர்கள் அனைவருக் கும் எம்.ஜி.ஆர். சாப்பிடும் அதே வகை வகையான அசைவ சாப்பாடுகள்தான்.
எம்.ஜி.ஆருக்கு 1971-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது கிடைக்கக் காரணமாக இருந்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் ஒரு காட்சி. சக ரிக் ஷா தொழிலாளி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ரிக் ஷா ஓட்ட முடியாத நிலை. அதனால், அன்று அவரது குடும்பத்துக்கு வருமானம் இல்லை. அதனால் சாப்பாடும் இல்லை. மதியம் அங்கு வரும் சாப்பாட்டுக்கார அம்மாவான பத்மினியிடம் இருக்கும் மொத்த சாப்பாட்டையும் எம்.ஜி.ஆர். வாங்கி, தான் கூட சாப்பிடாமல் நோயுற்ற தொழிலாளியின் வீட்டில் எல்லாரும் சாப்பிடக் கொடுத்தனுப்புவார்.
எம்.ஜி.ஆர். சாப்பிடாதது பற்றி ஒரு தொழிலாளி வருத்தப்பட, இன்னொரு தொழிலாளி ‘‘மத்தவங்க வயிறு நிறைஞ்சாத்தான் இவருக்கு (எம்.ஜி.ஆருக்கு) மனசு நிறைஞ்சுடுமே’’ என்பார்.
அதற்கு பதிலளிக்கும் எம்.ஜி.ஆர்., ‘‘மனுஷங்க வாழ்த்தறதை நம்ப முடியறதில்ல. ஆனால், வயிறு வாழ்த்தினால் நம்பலாம்பா’’ என்று கூறுவார்.
எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள். இன்றும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வயிறு கள் எம்.ஜி.ஆரை தினமும் வாழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.
அசைவ உணவுகளை எம்.ஜி.ஆர். விரும்பி சாப்பிடுவார். இறால் குழம்பு மிகவும் இஷ்டம். சாப்பாட்டில் தினமும் கட்டாயம் ஏதாவது கீரை இருக்க வேண்டும். இனிப்பு வகைகளில் பாஸந்தி அவருக்கு பிடிக்கும். முந்திரி பகோடா அவரது ‘ஃபேவரைட்’. இதை எல்லாம் சாப்பிட்டாலும் தினமும் தவறாமல் சோற்றில் தண்ணீர் ஊற்றிவைத்திருந்து நீராகாரம் பருகுவார். கேட்டால், ‘‘உடல் உஷ்ணத்தை இது தணிக்கும் என்பதோடு, நான் பழசை மறக்காமல் இருக்க’’ என்று அடக்கமாக பதிலளிப்பார்.
-
எம்ஜிஆர் 100 | 19 - ஸ்ரீதருக்குச் செய்த உதவி!
M.g.r. நடிப்பில் நீங்கள் ஏன் படம் எடுக்கக் கூடாது?.. இயக்குநர் ஸ்ரீதரிடம் அவரது நெருங்கிய நண்பரும் இந்தி நடிகருமான ராஜேந்திர குமார் கேட்ட கேள்வி இது. தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான படங்களால் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஸ்ரீதர். தனது சொந்த நிறுவனமான சித்ராலயா பேனரில் திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். அவர் எடுத்த சில படங்கள் எதிர்பார்த்த அளவு போகாததால் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளானார். அந்த நேரத்தில் இந்தி நடிகர் ராஜேந்திர குமார், ஸ்ரீதருக்கு கொடுத்த ஆலோசனைதான் ஆரம்பத்தில் உள்ள கேள்வி.
ஆனால் ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆரிடம் செல்ல தயக்கம். காரணம், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் நடிக்க ‘அன்று சிந்திய ரத்தம்’ என்ற பெயரில் படப்பிடிப்பை தொடங்கினார். கருப்பு வெள்ளை படமான அதில், சில காட்சிகள் படமாக்கப்பட்டு ஸ்டில்களும் வெளியாயின. அந்த நேரத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யும் வண்ணப்படமாக தயாரிப்பதாக இருந்தார். விளம்பரமும் வெளிவந்தது. ‘புதுமுக நடிகர்களை போட்டு கலரில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை எடுக்கும் ஸ்ரீதர், உங்களை வைத்து கருப்பு வெள்ளையில் படம் எடுக்கிறாரே?’என்று எம்.ஜி.ஆரிடம் சிலர் திரித்துக் கூறினர். படமும் வளராமல் நின்று போனது. (பின்னர் இதே பெயரில் ஜெய்சங்கர் நடித்த படம் ஒன்று வெளியானது) அதுபற்றி எம்.ஜி.ஆரிடம் விளக்கம் தராதது தனது தவறுதான் என்று பின்னர் ஸ்ரீதர் வருந்தினார்.
‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ.25,000 அளித்தார் ஸ்ரீதர். படம் நின்று விட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்த பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை.
ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று யோசித் தார். இருந்தாலும் நண்பர் ராஜேந்திரகுமாரின் ஆலோசனையை ஏற்றார். இயக்குநர் பி.வாசுவின் தந்தையும், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஒப்பனையாளருமான பீதாம்பரம் மூலம் எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆரும் மனதில் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதித்தார். எம்.ஜி.ஆரின் உயர்ந்த பண்புக்கும் எப்படி எல்லாம் சிந்தித்து மற்றவர்களை கவுரவப்படுத்துகிறார் என்பதற்கும் ஒரு உதாரணம்... அப்போது ஸ்ரீதருக்கு ஏற்பட்ட நெருக்கடியை எம்.ஜி.ஆர். அறிந்தே இருந்தார். ஸ்ரீதராகத்தான் விரும்பி தனது படத்தில் நடிக்க எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்துள்ளார். எம்.ஜி.ஆர். நினைத்தால் ‘ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம்.
ஆனால், ஒப்பனையாளர் பீதாம்பரத்திடம் எம்.ஜி.ஆர். கூறியதுதான் அவரது உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும். ‘‘ஸ்ரீதர் பெரிய இயக்குநர். திடீரென்று என்னை வந்து சந்தித்து பேசினால், நெருக்கடியில் இருந்து மீள எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் போய் பார்த்தார் என்று செய்திகள் வெளியாகும். நான் போய் ஸ்ரீதரை பார்ப்பதும் சரியாக இருக்காது. அதனால், இருவருக்கும் பொதுவாக நம்பியார் வீட்டில் மதிய உணவுக்கு ஸ்ரீதரை வரச் சொல்லுங்கள். அங்கு சந்தித்து பேசி புதிய படம் பற்றி முடிவு செய்யலாம்’’ என்று பீதாம்பரம் மூலம் சொல்லி அனுப்பினார் எம்.ஜி.ஆர்.
இதைக் கேட்டு சிலிர்த்துப் போனார் ஸ்ரீதர். இருந்தாலும் எம்.ஜி.ஆர். வீட்டில் நான் அவரை சந்திப்பதுதான் முறை என்று கூறி, மறுநாளே ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை ஸ்ரீதர் சந்தித்துப் பேசினார்.
வழக்கம் போல எம்.ஜி.ஆரின் உணவு உபசரிப்புக்கு பிறகு தன் நிலைமையை சொல்லி நீங்கள் எனக்கு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அதற்கு சம்மதம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.
ஏற்கனவே கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆரிடம் மனம் திறந்து பேசினார் ஸ்ரீதர். ‘‘என் மீது பொறாமை கொண்டவர்கள் நமக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காக என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொன்னாலும் நீங்கள் நம்ப வேண்டாம். என்னிடமே நேரடியாக விளக்கம் கேளுங்கள்’’ என்று எம்.ஜி.ஆரிடம் ஸ்ரீதர் கேட்டுக் கொண்டார். அவரது நிலைமையை உணர்ந்து மற்ற படங்களை விட ஸ்ரீதர் படத்துக்கு முன்னுரிமை அளித்து 3 மாதங்களில் நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்த எம்.ஜி.ஆர்., ஸ்ரீதரே எதிர்பார்க்காத ஒன்றை செய்தார்.
அவ்வாறு, தான் உறுதி அளித்ததை கடிதமாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு ஸ்ரீதரிடம் கொடுத்தார். ‘‘இது நீங்கள் பைனான்ஸ் பெறுவதற்கு உதவும்’’ என்றார். எந்தக் கோணங்களில் எல்லாம் சிந்தித்து செயல்படுகிறார் என்று ஸ்ரீதர் வியந்துபோனார். ஸ்ரீதருக்கு எம்.ஜி.ஆர். கடிதம் கொடுத்திருப்பதை அறிந்து, கிரஸென்ட் மூவிஸ் நிறுவனத்தார் அவரை சந்தித்து படத்துக்கு பைனான்ஸ் செய்ததுடன், பல ஏரியாக்களின் விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டு அட்வான்ஸ் தொகையை அளித்தனர். இப்படி உருவான படம்தான் எம்.ஜி.ஆர்.-ஸ்ரீதர் கூட்டணியில் உருவாகி வெள்ளி விழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’ திரைப்படம்.
அந்தப் படத்தில் நடிப்பதற்காக எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையை கொடுக்க முன்வந்தார் ஸ்ரீதர். அப்போது ஸ்ரீதருக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக தனக்கு அட்வான்ஸாக கொடுத்த ரூ.25,000-த்தை எம்.ஜி.ஆர். கழித்துக் கொள்ளச் சொன்னார். ஸ்ரீதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
அதுதான் எம்.ஜி.ஆர்.
தெலுங்கில் நாகேஸ்வர ராவ் நடித்த ‘தசரா புல்லோடு’ படம்தான் சிறிய மாற்றங்களுடன் எம்.ஜி.ஆர். நடிக்க ‘உரிமைக்குரல்’ ஆனது. படத்தில் ஆந்திர பாணியில் பஞ்சகச்சம் போல எம்.ஜி.ஆர். அணிந்திருந்த வித்தியாசமான வேட்டி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். அட்டகாசமாக ஸ்டெப் போட்டு ஆடியபோது, தியேட்டரில் ரசிகர்களும் உற்சாகமாக ஆடினர். 12 திரையரங்குகளில் படம் 100 நாட்கள் ஓடியது. மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் வெள்ளிவிழா கொண்டாடிய ‘உரிமைக்குரல்’, 1974-ம் ஆண்டின் அதிக வசூல் பெற்ற மகத்தான வெற்றிப்படம்.

சென்னை சரவணாவில் , வெள்ளி முதல் (11/03/2016) புரட்சி நடிகர் / மக்கள் திலகம்
எம்.ஜி. ஆர். இரு வேடங்களில் அசத்திய "சிரித்து வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .அதன் சுவரொட்டியை காண்க.
http://i65.tinypic.com/2zqgcir.jpg
தகவல் உதவி :ஓட்டேரி திரு. பாண்டியன் .
-
மக்கள்திலகம் அவர்களின் என்றென்றும் வசூல் அள்ளும் அமுதசுரபி "ஒளிவிளக்கு" கடந்த வாரத்தில் சென்னை- மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசா அரங்கில் நீண்ட வருடங்களுக்கு பின் திரையிடப்பட்ட பழைய காவியம்...திரையரங்க உரிமையாளரே வியப்பிலாழ்த்திய காவியம்... ஞாயிறு மாலை காட்சியின் பொழுது உள்ளே அவருடைய கார் நுழைய இயலாமல் இடைவேளை நேரத்தில்தான் வர முடிந்திருக்கிறது...அதுதான் உண்மையான திரையுலக சக்கரவர்த்தி மக்கள்திலகம்--- தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்தி யுள்ளது... அதுமட்டுமல்லாமல் விரைவில் வசூல்திலகம் பட்டையை கிளப்பும் காவியம் "குடியிருந்த கோயில்" ------ ஸ்ரீனிவாசா அரங்கில் ஒப்பந்தம் அரங்க உரிமையாளரால் மேற்கொள்ள பட்டுள தாக தகவல்...
-
மறக்க முடியாத ''அருப்பு கோட்டை ''. 1977
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்து அனுப்பிய தொகுதி அருப்பு கோட்டை. .
என்றும் எங்கள் முதல்வர் நீங்கள்தான் என்று அரவணைத்த மதுரை மேற்கு தொகுதி -1980.
10,000 மைல் களுக்கு அப்பால் இருந்த முதல்வரை மூன்றாவது முறையாக தேர்ந்தடுத்த '' ஆண்டிப்பட்டி '' தொகுதி -1984,
-
மக்கள் திலகத்தின் சில அபூர்வ நிழற் படங்கள் மற்றும் வண்ணப்படங்கள் .
http://i67.tinypic.com/30j5zkh.jpg