yes, he is only in his 60's.
Printable View
To everyone who are expecting some news on Rajini's health and Rana shooting...
கேஎஸ்.ரவிகுமார் எங்குபோனாலும் அவர் முன் வைக்கப்படுகிற கேள்வி, ரஜினி சார் எப்படியிருக்கிறார்? என்பதுதான். சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார் அவர். வந்த இடத்தில் வழக்கமான கேள்விகளை வீசினார்கள் ரசிகர்கள். ரஜினி பற்றி பதில் சொன்ன ரவிக்குமார், கூடவே தீபிகா படுகோனே பற்றியும் சொல்லி அவர்களை திக்குமுக்காட வைத்தார்.'
ரஜினி சார் முன்பை விட இளமையா இருக்கார். தினமும் யோகா, உடற்பயிற்சி என்று உடலை மெருகுபடுத்துகிற வேலைகளில் இறங்கியிருக்கார். இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்புக்கு தயாராகிடுவார். இந்த நேரத்தில் தீபிகா படுகோனே பற்றியும் சொல்லியாகணும்.
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகை அவர். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு இருக்காங்க. ஆனால், அவ்வளவு எளிமையாக இருந்தார் படப்பிடிப்பில். ஒரு பாடல் காட்சியில் சேற்றில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும். வேறு யாராவது இதில் நடித்திருந்தால் முடியாது என்று கூட மறுத்திருக்கலாம். ஆனால் நான் சொன்னவுடன் எந்தவித மறுப்பும் சொல்லாமல் சேற்றில் மூழ்கி எழுந்தார். ஒரு முறையல்ல, இருமுறை அல்ல, மூன்று முறை அப்படி மூழ்கடித்தோம்.
நான் சொல்றதை நம்பலைன்னா அந்த பாடல் காட்சிக்கு நடனம் அமைத்த பிருந்தா மாஸ்டரை கேளுங்க என்றார் அவர் பக்கம் திரும்பி. பிருந்தாவும் அவசரம் அவசரமாக ஒரு ஆமாம் போட்டார்.
http://www.tamilcinema.com/CINENEWS/...ly/270711a.asp
From this week vikatan
ரஜினி என் கடவுள்!.....அஜீத்
''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''
''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''