http://i58.tinypic.com/2evaozl.jpg
Printable View
http://i59.tinypic.com/142f1xs.jpg
இயக்குநர் மகேந்திரன் எழுதிய ‘மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர்’ (நக்கீரன் பதிப்பகம்) புத்தகத்தை எடுத்தவுடன் படித்து முடித்து விட்டேன். அந்த அளவுக்கு நடையில், சம்பவங்களில் சுவாரஸ்யம் என்பதைவிட எம்ஜியார் மீதான ஈர்ப்பு smile உணர்ச்சிலை
‘என் தங்கை’ போஸ்டரில் துவங்குதல், அழகப்பா கல்லூரியில் எம்ஜியாருக்கு எதிரான பேச்சு, பொன்னியின் செல்வன் திரைக்கதை எழுதுதல், ராஜா தேசிங்கு படப்படிப்பைப் பார்த்தல், காஞ்சித் தலைவன் படத்தில் உதவியாளராய்ச் சேருதல், அனாதைகள் நாடக முயற்சி, தங்கப்பதக்கம் வெற்றியை எம்ஜியாருடன் பகிராததல், இயக்குநர் வெற்றிகளை எம்ஜியாருக்குச் சொல்லாதிருத்தல் என்று அனுபவங்களோடு தான் இழைத்த தவறுகளையும் மனம் திறந்து எழுதியிருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
2010-ன் பதிப்பாய் வந்திருக்கும் இந்தப் புத்தகம், அதுவும் வித்தியாசப் படங்களின் இயக்குநராய் அறியப்பட்டவர் கமர்ஷியல் நாயகரைப் பற்றி விரிவாய் எழுதியிருப்பதைப் படித்தபோது ஆச்சரியமாயிருந்தது.
எம்ஜியாரின் பல பரிமாணங்களை (நினைவாற்றல், கொடைத்தன்மை, எடிட்டிங் முதலியன) இயக்குநரின் எழுத்தின் மூலம் அறியும்போது சுவை கூடுகிறது.
வாலி அவர்கள் எழுதிய ‘எனக்குள் எம்.ஜி.ஆர்’ புத்தகத்தை அழகு சேர்க்கும் அரிய கருப்பு/வெள்ளை புகைப்படங்கள் போல இந்தப் புத்தகத்திலும் பல படங்கள் உண்டு.
ஒருவர் மறைந்து, இருபது வருடங்களுக்குப் பின்னும் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அதுவும், மாறுபாடான கருத்தைக் கொண்ட இன்னொருவரிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது இந்தப் புத்தகம்.
இரு நேர்க் கோடுகளான எம்ஜியார் / மகேந்திரன் என்பதாலேயே இந்தப்புத்தகம் ‘பச்சக்’ என நம் மனதில் ஒட்டிக் கொள்ளும்.
COURTESY- FB
இமயத்தின் உயரம் உலகம் அறிந்தது வீட்டினுள் இருந்து கொண்டு இமயம் உயரம் தெரியவில்லை என்று சொல்வதனால் இமயத்தின் சிறப்பு யாருக்கும் தெரியாமல் போகுமா?
அது போல் தான் தலைவரின் பட வசூலில் குற்றம் காண்பவர்கள் அவர்களுக்கு ஒன்று சொல்லி கொள்ள போகிறோம் .
திரையுலகில் இன்றுவரை அவர்தான் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி
அரசியல் வானில் என்றும் ஒளிவீசும் முழு பௌர்ணமி
ஆன்மிகத்தில் பொதுமக்களால் ஆலயம் கண்ட ஆண்டவர் எங்கள் வள்ளல் வேந்தர் அவர்மட்டும் தான் .
வருடம் முழுவதும் எந்த ஒரு அரசியல் பக்க பலம் இல்லாமமல் விழா காணும் ஒரே தலைவர் எங்கள் கலைவேந்தன் ஒருவரே
தமிழகம் முழுவதும் மறு வெளியீடு திரைப்படங்களில் வசூலிலும் எண்ணிக்கையில் முதன்மையாக இருப்பவர் எங்கள் மன்னாதி மன்னன் ஒருவரே
https://www.youtube.com/watch?x-yt-t...yt-cl=84503534
Thanks to Shri. Tenaji Rajan - January 17th Producer's Day!