நான் ஏற்கனவே சொன்னது போல் பெங்களுர் நட்ராஜ் தியேட்டர் புகைப்படங்களையும், அரங்கத்தை சுற்றி நடந்த செய்திகளையும் ஒன்று விடாமல் அள்ளிக் கொண்டு வந்து இங்கே கொட்டியிருக்கும் வாசு சார் அவர்களே, உங்களுக்கு கோடானு கோடி நன்றி.
குமார் அவர்களே,
நீங்கள் நடத்தும் விழா என்றால் அது எப்போதும் பிரம்மாண்டமாக அமையும் என்பது எனக்கு தெரியும். நீங்கள் முன்பு அனுப்பி வைத்த புகைப்படங்களே அதற்கு சாட்சி. அந்த எண்ணத்தை நிலை நிறுத்தும் வண்ணம் நீங்கள் வசந்த மாளிகைக்கு எடுத்துள்ள விழா கோலாகலங்கள் இனி காலம் முழுக்க உங்கள் கைவண்ணத்தை பறைசாற்றும். மனங்கனிந்த நன்றியும் வாழ்த்துகளும்
அன்புடன்
கர்ணன் வெளியாகியிருக்கும் தஞ்சை சிவாஜி திரையரங்கு புகைப்படங்களுக்கும் நன்றி சந்திரசேகரன் சார்.