அன்புள்ள சிவாஜி செந்தில் - மற்றும் ஒரு உண்மை , நமது
Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events - லிருந்து கண்டு பிடிக்க பட்டது
From ராகவேந்திரா சார் - பதிவு எண் 989
தங்கப் பதுமை பிரதான ஊர்களில் ஓடிய நாட்கள் விவரம் - தகவல் பம்மலார் மற்றும் இதய வேந்தன் வரலாற்றுச்சுவடுகள் 4.
சேலம் - நியூசினிமா - 102 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
மதுரை - லட்சுமி - 94 நாட்கள் - ஷிப்டிங்கில் வெள்ளி விழா
சென்னை - பாரகன், கிரௌன், சயானி - 56 நாட்கள்.
From முரளி - பதிவு எண் 988
ஒன்றை குறிப்பிட மறந்து விட்டீர்களே! தமிழகத்திலேயே அதிக நாட்கள் ஓடியது எங்கள் மதுரையில்தான். அன்றைய நாளில் லக்ஷ்மி என்ற பெயரில் இயங்கி வந்து பின்னாட்களில் அலங்கார் என்று பெயர் மாற்றம் பெற்ற திரையரங்கில்தான் இந்த படம் வெளியாகி வெற்றி வாகை சூடியது. நமது படங்களுக்கே உரிய சாபக்கேடு இந்த படத்திற்கும் இருந்தது. பொங்கலுக்கு ஒரு சில நாட்கள் முன் வெளியாகி தமிழ் புத்தாண்டு வரை 94 நாட்கள் ஓடியது.
மறு வெளியீடுகளில் தாய்மார்கள் கூட்டம் அலைகடலென திரண்டு வந்த காட்சி ஒரு கண் கொள்ளா காட்சி. அந்த நாட்களில் மட்டுமல்ல அண்மையில் அதாவது சென்ற வருடம் தஞ்சை குடந்தை போன்ற நகரங்களை சுற்றியுள்ள டூரிங் மற்றும் c சென்டர்களில் படத்திற்கு வந்த கூட்டத்தையும் கிடைத்த வசூலையும் பார்த்துவிட்டு அரங்க உரிமையாளர்களே திகைத்துப் போனார்களாம். அதை நமது திரியிலும் நாம் பதிவு செய்திருக்கிறோம் எனபது உங்களுக்கு நினைவிருக்கும்.
From கோபால் - பதிவு எண் 990
தகவலுக்கு நன்றி. இந்த படம் நூறு நாள் ஓடியது ரசிகர்களாகிய எங்களுக்கே சரியாக தெரியாது. நடந்தவற்றை பற்றி கூட சரியான விளம்பரம் இல்லை. பம்மலார் வந்து உலகத்தின் கண்களை திறந்து யார் நிஜமான சூப்பர் ஸ்டார் என்று உலகிற்கே உணர்த்தி விட்டார்.
இதன் மூலம் 100 நாட்கள் ஓடவில்லை என்று நாமே ஒரு முடிவுக்கு வந்த படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவைகள் மட்டும் அல்ல வசூலிலும் புரட்சியை ஏற்படுத்தின , ஏற்படுத்துகின்றன , நாளையும் ஏற்படுத்தும் படங்கள்