'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் மூர்த்தியுடன் சைலஸ்ரீ
http://i1087.photobucket.com/albums/...0-2/rfgbhn.jpg
Printable View
'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் மூர்த்தியுடன் சைலஸ்ரீ
http://i1087.photobucket.com/albums/...0-2/rfgbhn.jpg
டியர் வாசு சார்,
'அண்ணாவின் ஆசை' படத்திற்கான பேசும்படம் சிறப்பு நிழற்பக்கங்கள் மிகவும் அருமை. பழைய நினைவுகளை மீட்டுகின்றன. உண்மையில் இவையெல்லாம் காணக்கிடைக்காதது. இதுவரை முழுப்படம் பார்த்ததில்லை. கே.ஆர்.விஜயா கியூட்டாக இருப்பார்போல தெரிகிறது. நீங்கள் குறிப்பிட்ட பாடல் அதிகம் கேட்டிராதது. அந்தப்படத்தின் பாடல் என்றால் 'பாட்டெழுதட்டும் பருவம்' தான் முதலில் நினைவுக்கு வரும். அதுகூட வானொலியிலோ, தொலைக்காட்சிகளிலோ பார்த்ததில்லை. 'பி'பி.எஸ்.ஹிட்ஸ்' என்ற ஆடியோ கேசட்டில் (சி.டி.க்கள் வருவதற்கு முந்திய வடிவம்) அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
அப்போதெல்லாம் சினிமா தலைப்புகளை சம்மந்தப்படுத்தி வார இதழ்களில் அரசியல் கார்ட்டூன்கள் போடுவார்கள். அப்படி ஒருமுறை, இப்படம் வந்த 1966-ம் ஆண்டில் குமுதம் இதழில், 'அண்ணாவின் ஆசை' என்று தலைப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியை அண்ணாதுரை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பது போல கார்ட்டூன் போட்டிருந்ததை, தம்மாத்தூண்டு வயதில் பார்த்த நினைவு இப்போது வருகிறது.
அண்ணாவின் ஆசை சரியாகப் போகாத நிலையில் அடுத்த ஆண்டில் நடிகர்திலகத்தை வைத்து 'தங்கை' படத்தை எடுத்து தலைவர் ஆக்ஷன் ஹீரோவாகவும் பின்னுவார் என்று நிரூபித்தார்...
கிருஷ்ணா ஜீ
கண்ணன் வருவான்... ஆஹா... பியானோ வில் கலக்கிய பாடல் பூவினும் மெல்லிய பூங்கொடி... கோரஸ் அற்புதமாக இருக்கும்.
நிலவுக்கு போவோம்...
இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தி்ல் உடனே நினைவுக்கு வருவது ரவியின் நாலும் தெரிந்தவன் படத்தில் இடம் பெற்ற நிலவுக்கே போகலாம் வான் நிலவுக்கே பாடல் தான். துரதிருஷ்டவசமாக டிவிடியில் இப்பாடல் இடம் பெறவில்லை. இணையத்திலும் தென்படவில்லை.. ரவி காஞ்சனாவின் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ்
வாசு சார்
புதிய பறவையில் தலைவர் சொல்வார்.. காதல் என்ற மந்திரத்தை வைத்தா என்னை வீழ்த்தினாய் என்கிற மாதிரி.
அதே போல் தெய்வீக ராகங்கள் பாட்டைப் போட்டு என்னைக் கவுத்துட்டீங்க சார்... ஆஹா... பாவை நீ மல்லிகை... எத்தனை ஜென்மம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
அது மட்டுமா பச்சை மோகினி பாட்டு கூடத் தான்.
மொத்தத்தில் எம்எஸ்வி ரசிகர்களின் மனம் கவர்ந்த படப் பாடல்களில் தெய்வீக ராகங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு.
காரணம் அவர் போடும் பாடல் ஒவ்வொன்றுமே தெய்வீக ராகம் தானே...
அண்ணாவின் ஆசை பள்ளி மாணவனாக இருந்த போது பாரகனில் பார்த்தது. அப்போதெல்லாம் பாலர் அரங்கில் குழந்தைகள் படம் 6 பைசாவில் பார்த்து விட்டு எதிரே பாரகனில் போஸ்டரைப் பார்த்து நின்று ரசித்து விட்டு வீட்டுக்குப் போவோம். அப்படி பேனர் பார்த்து ரசித்து பார்த்த படம் தான் அண்ணாவின் ஆசை.
இதே போல் பாரகனில் திரையிட்ட படங்களில் நினைவில் நிழலாடும் படங்களில் பாசமும் நேசமும், குழந்தைக்காக, கல்யாண ஊர்வலம் போன்று பல படங்கள்...
இல்லை கிருஷ்ணா சார்.
சைலஸ்ரீயுடன் அமர்ந்திருக்கும் அவர் ஜோடியைத்தானே கேட்கிறீர்கள்? அவர் பெயர் சூர்யகுமார்.
http://i1087.photobucket.com/albums/...t%20-2/soo.jpg
https://i1.ytimg.com/vi/MEfFRJut17U/mqdefault.jpg
ஸ்ரீராம் பற்றி ஒரு சிறுகுறிப்பு.
ஸ்ரீராம் 'பழனி'யில் நடிகர் திலகத்தின் சகோதரர்.
'பச்சை விளக்கு' படத்தில் எம்.ஆர். ராதாவுடன் சேர்ந்த வில்லன்.
'மர்ம வீரன்' என்ற படத்தின் ஹீரோ. (நடிகர் திலகம் இதில் கெஸ்ட் ரோல்).
'வாழ்விலே ஒரு நாள்' நடிகர் திலகம் நடித்த படத்தில் நடிகர் திலகத்தின் மகனாக இன்ஸ்பெக்டர் வேடம். நடிகர் திலகம் கூட இப்படத்திற்கு கமெண்ட் கூறும் போது 'என்னை விட வயதானவருக்கு நான் தந்தையாக நடித்த படம் ' என்று குறிப்பிட்டிருப்பார். (உண்மை. நடிகர் திலகத்தை விட ஸ்ரீராம் மூத்தவர்)
'கோடீஸ்வரன்' படத்திலும் நடிகர் திலகத்துடன் காமெடியில் இணைந்திருப்பார்.
http://i1110.photobucket.com/albums/...GEDC5892-1.jpg
நடிகர் திலகம் நடித்து பாதியில் நின்று போன 'ஜீவ பூமி' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். மேலே உள்ள படத்தைப் பாருங்கள் 'ஸ்ரீராம் புரொடக்ஷன்ஸ்' என்று போட்டிருக்கும்.
இளமையில் மிக அழகாக இருப்பார்.
அதே இளமையில் இவரைப் பார்த்து விடலாம் ஒரு அற்புத மறக்க முடியாத பாடல் மூலம்.
'சம்சாரம்' படத்தில் மாட்டு வண்டி ஓட்டி கல்லூரி பெண்களைக் கலாய்க்கும் ஸ்ரீராம்.
எனக்கு மிக மிக மிக மிக மிக மிக பிடித்த பாட்டு. (காரில் வரும் துணை நடிகைகளின் முகபாவங்கள் அற்புதம்)
http://www.youtube.com/watch?v=cklW1...yer_detailpage
டியர் வாசு சார்,
சைலஸ்ரீ தினப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். இவர்களுக்கென்று தனித்திரி இல்லாதநிலையில் இதுபோன்ற சாமானியர்களை 'தினம்' கொண்டாடி சிறப்பிப்பது நமது திரியின் ஸ்பெஷாலிட்டி.
திருமலை தென்குமரியில் இவர் எழுதிய வரிகள் 'நா பங்காரய்யா நா சிங்காரய்யா' சரியா?. (கர்நாடகாவில் இத்தனை ஆண்டுகள் குப்பை கொட்டியும் இன்னும் கன்னடம் தெரியாது. அலுவலகத்தில் அனைவரும் இங்கிலீஷ். வீட்டுக்கு வந்தால் தமிழ். பர்ச்சேஸ் எல்லாம் அம்மா, 'உங்களுக்கு எதுவும் ஒழுங்கா வாங்கத்தெரியாது' என்ற அடைமொழியுடன்).
'அழகே தமிழே நீ வாழ்க' என்ற அழகான செந்தமிழில் துவங்கும் பாட்டு, பின்னர் மலையாளம் 'கண்ணுகள் பூட்டி ஞான் ஒரு நிமிஷம்'
பின்னர் கன்னடம், பின்னர் தெலுங்கு ரமாபிரபாவின் 'கிருஷ்ணா'
மனோரமாவின் சென்னைத்தமிழில் 'பாடணும்னு மனசுக்குள்ளே ஆச நெறைய மீது' கடைசியில் கடைசி சீட் சிவகுமார், சந்திரன்பாபு, ஏ.பி.என்.பத்மினி ஆகியோரின் 'ஊரெல்லாம் பாரு' என்ற ட்விஸ்ட் பாட்டுடன், அழகான பாட்டை ஒருவழி பண்ணிடுவாங்க...