http://i62.tinypic.com/ic4whj.png
Printable View
https://www.youtube.com/watch?v=MjVqC4O55Qo
thanks sailesh sir
super duet song
https://www.youtube.com/watch?v=cOptgcYcDds
இவரும் அவரும்
பிப்ரவரி 17 1980 , மக்கள் திலகத்தின் ஆட்சி கலைக்கப் பட்ட நாள் . கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருந்தார் இந்திரா காந்தி . மே 1980 இல் தேர்தல் , காங்கிரசும் தி மு க வும் கூட்டணி அமைத்தன , ஆனால் அ தி மு க மீண்டும் வெற்றி பெற்றது 9 ஜூன் 1980 மக்கள் திலகம் மீண்டும் முதல்வராக பொறுபேற்றுக் கொண்டார் ... ஜூன் 23 1980 சஞ்சய் காந்தி விமான விபத்தில் இறந்தார் . தகவல் மக்கள் திலகத்திற்கு தெரிவிக்கப் பட்டது .
உடனே கிளம்பிமார் மக்கள் திலகம் ஆறுதல் சொல்வதற்கு ... வேண்டாம் என்று கட்சியினர் சிலர் தடுத்தனர் , அவர் நமது ஆட்சியைக் கலைத்தவர் , இப்பொழுது நடந்த தேர்தலிலும் கூட நம்மை தோற்கடிக்க தி மு க வுடன் கூட்டணி வைத்தவர்கள் . இவ்வளவு அவமானங்களை சுமத்தியவங்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமா என்று கேட்டனர் .
அரசியல் வேறு மனிதப் பண்பு வேறு . அவங்க தேசத் தாய் அவங்க கலங்கினா நாம சிரிக்க முடியுமா ? என்று போனார் . இந்திரா காந்தி அம்மையாரைக் கண்டதும் , கண் கலங்கினார் , ஆறுதல் கூறினார் , இறுதிச் சடங்கு முடியும் வரை இருந்து விட்டுத் தான் திரும்பினார் .
கருணாநிதி கூட்டணியில் இருந்தும் கண்டுக் கொள்ளவே இல்லை .
அதே மக்கள் திலகம் , அக்டோபர் 5 1984 இல் நோய்வாய்பட்டு சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார் , இரண்டே நாட்களில் பக்கவாதமும் தாக்கியது . நரம்பியல் , சிறுநீரகம் , இருதயம் என்று மூன்று உறுப்புகளும் பாதிக்கப் பட்டிருந்தது .
அக்டோபர் 13 1984 , சென்னை வந்தார் பிரதமர் இந்திரா காந்தி . நேராக மக்கள் திலகம் இருந்த மருத்துவமனைக்குச் சென்றார் . சிறு கண்ணாடி வழியே மட்டுமே பார்க்க முடிந்தது மக்கள் திலகத்தை . " இவரா எம் ஜி ஆர் ?" என்று அதிர்ச்சியானார் . அருகில் இருந்த ஜானகி அம்மையாருக்கு ஆறுதல் கூறினார் .
" அமேரிக்கா போகலாம் , அந்நிய செலாவணிக்கு , எந்த பயமும் வேண்டாம் , ரிசர்வ் பாங்கின் சட்டம் உங்கள் கணவருக்காகத் தளர்த்தப் படும் , எவ்வளவு செலவானாலும் அந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் , அவரது தர்மமே அவரைக் காக்கும் , உங்கள் பிராத்தனை , என் பிரார்த்தனை , வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாவது பலிக்காமலா போகப் போகிறது ? என்று ஜானகி அம்மையாரைக் கட்டிப் பிடித்து ஆறுதல் கூறினார் .
மக்கள் திலகத்திற்காக ஏர் இந்திய பொறியியல் நிபுணர்கள் சிறப்பு விமானத்தில் ஒரு மருத்துவமனையே இருக்கும் படி அமைத்தார்கள் . முதன் முதலில் இந்தியாவில் மக்கள் திலகத்திற்காக பறக்கும் மருத்துவமனையே தயாரானது . 23 மணி நேர பயணத்தில் அமெரிக்காவுக்கு செம்மல் பத்திரமாக அழைத்துச் செல்லப் பட்டார் .
31 அக்டோபர் 1984 இந்திரா காந்தி அம்மையார் கொல்லப் பட்டார் , இதை மக்கள் திலகத்திடம் சொல்வது உகந்ததாக இருக்காது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் , அவருக்கு செய்தி சொல்லப் படாமலேயே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப் பட்டார் .
இவ்வளவும் நடந்தது , இந்திரா காந்தி அம்மையாரின் இறுதி ஆசையாக கருதி மக்கள் திலகம் அமெரிக்காவுக்குச் செல்வதை , இந்த கொலை சம்பவத்தால் தாமதப் படுத்த வேண்டாம் என்று ராஜீவ் கூறிவிட . மக்கள் திலகம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப் பட்டார் .
இந்திராவின் மரணத்திற்கு பின்னர்
மரியாதை செலுத்தக் கூட கருணாநிதி செல்லவில்லை , அவரது அஸ்திக் கலசம் சென்னைக்கு கொண்டு வரப் பட்ட பொழுதும் அனைத்து தலைவர்களும் கட்சி மாச்சரியமின்ரி சென்று மரியாதை செலுத்திய பொழுதும் , செல்லாத ஒரே நபர் கருணாநிதி .
அரசியல் நாகரீகம் குறித்தும் பண்பு குறித்தும் சமீபத்தில் அவரது இல்லத் திருமண விழாவில் மருத்துவர் ஐயா அவர்கள் கருணாநிதியை மேற்கோள் காண்பித்து பெருமையாகச் சொன்ன பொழுது , இந்தச் சம்பவங்கள் எல்லாம் மனதில் வந்து போகிறது
இன்று இந்திராவின் நினைவு தினம்
courtesy facebook
http://i60.tinypic.com/9t3mlc.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/2uswn7t.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/9qjoe9.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/hum138.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்