-
என்றும் திரையுலக சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் தொடர் சாதனையில்..... தலைவரின் முதல் கதாநாயகன் திரைப்படம் ராஜகுமாரி 1947 ம் ஆண்டு வெளிவந்தது. இத்திரைப்படம் சென்னையில் ஸ்டார் கிரெளன் அரங்கில் முதல் கட்டமாக திரையிடப்பட்டது. அதன் பின் ராக்ஸியில் திரையிடப்பட்டது. இந்த விபரங்கள் 1947ல் வெளியான மாதஇதழான குண்டூசியில் கடைசி பக்கத்தில் இரண்டு முறை வெளிவந்தது. அதன் பின் மாகாணம் முழுவதும் ராஜகுமாரி திரைப்படம் எங்கும் சிறப்பாக செல்கிறது எனவும், ஜீபிடர் நிறுவனத்திற்கு பொருள் ஈட்டி தந்துக்கொண்டு வருகிறது எனவும் படத்தின் புதிய நாயகனாக திரையில் ஜொலிக்கும் எம்.ஜி. ராம்சந்தர் வாள் வீச்சில் சிறப்பு பெறுகிறார் எனவும் சங்ககீதம்
சிறப்பாக உள்ளது. "ராஜகுமாரி" க்கு இப்பொழுது ஜனங்களிடம் நல்ல வரவேற்பு. இப்படத்தில் டி.எஸ். பாலையா வில்லன் வேடத்திலும் எம்.என் நம்பியார் நகைசுவை நடிகராகவும் நடிகை மாலதி கதாநாயகியாகவும் என அன்றை முன்னனியினர் பலர் நடித்துள்ளனர் என தகவல் ! சென்னையில் ராஜகுமாரி நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றது. 100 நாள் அன்று சென்னையில் ஒடுவது என்பது பெரிய சாதனையாகும். ராஜகுமாரி படம் வெற்றியை சிறப்புடன் பெற்றுள்ளது. எத்தனை நாள், வாரங்கள் என்பது சரியான தகவல் இல்லை!.ஆனால் ராஜகுமாரி திரைப்படம் ஒடிய விபரங்களில்... மதுரை சிந்தாமணி நெல்லை ராயல் வேலூர் நியூ அபேரா சேலம் ஒரியண்டல் கோவை சண்முகா திருச்சி வெலிங்டன் 100 நாள் ஒடியுள்ளது. என்பது 1960 ம் ஆண்டு வெளியான திரையரங்கு பற்றிய மலரின் செய்தியாகும். திரையுலகம் 1962 ல் தொடங்கிய போது ராஜகுமாரி படம் இத்திரையரங்குகளில் ஒடியதாக தகவல். மேலும் 1965ல் எங்கவீட்டுப்பிள்ளை வெள்ளி விழா திரைபடமலர் தான் முதன் முதலில் 1964 வரை மக்கள்திலகம் படங்கள் ஒடிய திரையரங்கு பற்றி வெளியிட்டது. 1931.முதல் அன்று பல படங்களில் சில படங்கள் தான் பட கம்பெனிக்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. வெற்றி படம் என்பார்கள். அப்படம் 100 நாள் என்பது தெரியாது. 1950 க்கு பின் தான் 100 நாள் ஒடினால் நல்ல வசூலுடன் ஓடியது என்பார்கள். 1954 வரை சென்னை நகரை பொறுத்த வரை இரண்டு, மூன்று, நான்கு திரையரங்கில் படங்கள் வந்தாலும் 100 நாள் ஓடுவது, ஓரே ஒரு திரையரங்கு தான். அப்படி ஒடிய படங்கள் என்றால்
1931 முதல் 1954 வரை எடுத்துக் கொண்டால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் 100 நாள் ஒடிய படங்கள் இருக்கும்.... இந்த வரிசையில் தலைவரின் மந்திரிகுமாரி மர்மயோகி சர்வாதிகாரி மலைக்கள்ளன் குலேபாகவலி என ஐந்து படங்கள் ஒரு அரங்கு மூலம் ஐந்து அரங்கில் 100 நாள் ஒடியுள்ளது என்பது பல தகவல்களுடன் தெரிவிக்கப்படுகிறது. 1931 - 1955 வரை ( 25 ஆண்டுகளில்) சென்னையில் சுமார் 27 படங்கள் தான் 100 நாளை கடந்துள்ளது. ஆனாலும் நடிகர் சிவாஜிகணேசன் ஜெமினிகணேசன் என இவர்கள் நடித்த படங்கள் 1952 முதல் 1955 வரை எந்த படமும் சென்னையில் ஒடவில்லை. இவ்வருடங்களில் பல புகழ் பெற்ற படங்களும் வியாபார ரீதியில் வெற்றியடைந்துள்ளது. மேலும் தகவல் பின்னாளில்..நன்றி!. உரிமைக்குரல் ராஜு...... Thanks wa.,
-
மறக்க முடியாத மக்கள் திலகம்
கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் - எம்.ஜி.ஆர்.
நீங்கள் நடிக்க வந்தது ஏன்?
வறுமைதான். நடிகன் ஆனதை உங்கள் பெற்றோர் ஏற்றுக் கொண்டார்களா? வேறு என்ன செய்ய முடியும்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்களே. பசியை போக்க நடிக்க வந்தேன். அதற்கு ஏன் தடை சொல்ல போகிறார்கள்.
முதல் அனுபவம் எப்படி? நடிப்பு சொல்லிக் கொடுத்தது யார்?
ஆறு வயது இருக்கும் என்று நினைக்கிறேன். நாடகம் பெயர் லவகுசா. அதில் நான் குசன். அந்த பாத்திரத்தை எப்படி நடிக்க வேண்டும் என்பதை என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லித் தந்தார். அவர் பெயர் ஞாபகம் இல்லை. மேடையில் எப்படி அனுபவம்? மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். அங்கே காளி என் ரத்தினம் நடிப்பு சொல்லித் தந்தார். அப்புறம் எம். கந்தசாமி முதலியார் கற்றுக் கொடுத்தார்.
பெண் வேடம் போட்டீர்களா? கதாநாயகன் வேடம் எது?
பல நாடகங்களில் பெண் வேடம் போட்டிருக்கிறேன். மனோகரா நாடகத்தில் முதல் தடவையாக கதாநாயகன் ஆனேன். மனோகரன் பாத்திரம்.
உங்களுக்கு பாட வருமா?
பின்னணி, டப்பிங் எல்லாம் அப்போது இல்லை. நடிப்பவர்கள் சொந்தக் குரலில் பாட வேண்டும். பாடத் தெரிந்தால்தான் கதாநாயகன் வேடம் கிடைக்கும். நானும் அதில் தப்பவில்லை.
சினிமாவுக்கு வந்தபோது கேமராவை பார்த்தபோது எப்படி இருந்தது?
வேல் பிக்சர்ஸ் என்று ஒரு ஸ்டுடியோ இருந்தது. பிற்பாடு அதுதான் வீனஸ் ஸ்டுடியோ ஆனது. அங்கேதான் முதல் ஷாட். எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா உடன் இருந்தார்கள். எங்கள் எல்லாருக்குமே நாடக அனுபவம் இருந்ததால் கேமரா முன்னால் நடிக்க தயக்கம் இல்லை.
நாடகம், சினிமா இரண்டில் உங்களுக்கு அதிக திருப்தி தருவது எது?
நாடகம். அதனால்தான் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும் விடாமல் ஊர் ஊராக சென்று நாடகம் நடத்துகிறேன், நடிக்கிறேன். ஒரு காட்சி நன்றாக நடித்தால் மக்கள் உடனே கைதட்டி பாராட்டுவதை நாடக கொட்டகையில்தான் பார்க்க முடியும். சினிமாவில் அது முடியாதே.
நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம் உணர்கிறீர்கள்?
நிறைய உண்டு. ஒன்றை சொல்கிறேன். என் தங்கை நாடகத்தில் நன்றாக அழுவேன். மக்களும் நன்றாக ரசித்தார்கள். அதனால் சினிமாவிலும் அசலாக அழ நினைத்தேன். கிளிசரின் போட மாட்டேன் என்று சொல்லி விட்டேன். அப்புறம் படம் பார்க்கும்போது நான் அழுத மாதிரியே இல்லை. கஷ்டப்பட்டு நான் விட்ட கண்ணீர் மொத்தமும் ஆர்க் லேம்ப் வெளிச்சத்தின் சூட்டில் உடனே உலர்ந்து விட்டது. பிறகுதான் நானும் கிளிசரின் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
பம்பாயில் நாடகம் போட்டீர்களே, எப்படி வரவேற்பு?
நாடகம் எப்படி என்பதை பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல வரவேற்பு. கடைசி நாளில் வந்தவர்கள் பலர், ‘ஆரம்பம் முதலே வராமல் தவற விட்டேனே' என்று வருத்தப் பட்டார்கள். பிருதிவிராஜ் வந்திருந்தார். பழைய அனுபவங்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம்.
உங்களை வளர்த்தது நாடகமா, சினிமாவா?
சினிமாவுக்கும் தாய் நாடகம்தானே. நடிப்பு கற்றுக் கொள்கிற பட்டறையாக நாடகம் இருக்கிறது. சினிமாவில் நிறைய வசதிகள், தொழில்நுட்ப உத்திகள் இருக்கிறது. காட்சிகளை நமது வசதிப்படி மாற்றி மாற்றி எடுக்கலாம். திரும்பத் திரும்ப எடுக்கலாம். பிறகு தேவை இல்லாததை வெட்டி எறிந்து விட்டு தொகுக்கலாம். ஒவ்வொரு காட்சிக்கும் மெருகூட்ட முடியும். நாடகத்தில் அப்படி இல்லை. ஒரே காட்சியில் சிரிப்பு, அழுகை, கோபம் என்று பல பாவங்களை வெளிப்படுத்த வேண்டும். சுருக்கமா சொல்வதென்றால் நாடகத்தில் நான் என் திறமையை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். சினிமாவில் மற்றவர்களின் திறமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படி பார்க்கும்போது இரண்டுமே என்னை வளர்த்தது என்பதுதான் சரி.
ஆங்கில படத்தில் நடிப்பீர்களா?
இங்கிலீஷே நமக்கு சரியா தெரியாதுங்க. இதுல இங்கிலீஷ் படத்துல நடிக்கிறதாவது. அடிமைப்பெண் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்தபோது ராஜ்ஸ்ரீ பிக்சர்ஸ் தாராசந்த் ஒரு விருந்து கொடுத்தார். இந்திப் படத்தில் நான் நடிக்கணும்னு சொன்னார். நான் பேசுகிற இந்தியை தாங்கிக் கொள்ளும் சக்தி இந்தி ரசிகர்களுக்கு இருக்குமானால் நடிக்கிறேன்னு சொன்னேன். இங்கிலீஷ் படத்துக்கும் அதுதான்.
மலையாளம் தெரியுமா? மலையாள படத்தில் நடிப்பீர்களா?
தெரியும். முன்னோர் மலையாளிகள் என்றாலும் நான் பிறந்தது இலங்கை கண்டியில். அங்கிருந்து தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பேசவும் எழுதவும் தெரிந்த மொழி தமிழ்தான். மலையாளம் மட்டும் தெரிந்தவர்களுடன் அதில் பேசுவேன். மலையாளப் படம் தயாரித்து நடிக்கும் எண்ணமும் உண்டு. இந்தியிலும் அப்படி செய்ய விருப்பம்.
கடவுள் நம்பிக்கை உண்டா? கோயிலுக்கு போவீர்களா?
நிச்சயமா கடவுள் நம்பிக்கை உண்டு. கோயில்களுக்கு போவேன். 12, 13 வயதில் திருப்பதிக்கு இரண்டு தடவை போயிருக்கிறேன். அங்கே தாமரை மணி மாலை வாங்கினேன். ரொம்ப காலம் அதை கழுத்தில் அணிந்திருந்தேன். சிலர் நினைப்பது போல அது ருத்ராட்ச மாலை இல்லை. கோயில்களுக்கு போவேனே தவிர, அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் கிடையாது. வேண்டுவதுகூட தப்பில்லை. நமக்கு நேரும் கஷ்டங்களுக்கு கடவுளை குறை சொல்வதுதான் எனக்கு பிடிப்பதில்லை.
உங்களுக்கு குல தெய்வம் உண்டா?
காளி எங்கள் குல தெய்வம். காளியையும் விஷ்ணுவையும் தவறாமல் வணங்கி வந்தார் என் தாய். திருப்பதி வெங்கடாஜலபதி மேல் அவருக்கு ரொம்ப பக்தி.
உங்கள் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த கடவுளை வணங்குகிறீர்கள்?
என் வீட்டு பூஜை அறையில் இருப்பதெல்லாம் என் தாய், தந்தை, என் மனைவியின் தாய் தந்தை, மகாத்மா காந்தி ஆகியோரின் படங்கள்தான்.
நிறைய பேருக்கு உதவி செய்கிறீர்கள். நீங்கள் யாரிடமாவது உதவி கேட்டிருக்கிறீர்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க. நான் வளர்ந்ததே மற்றவர்கள் செய்த உதவிகளால்தான். என்றுமே அதை மறக்க மாட்டேன்.
அப்படி உதவி செய்தவர்களில் ஒருவரை சொல்லுங்களேன்?
கலைவாணர் அப்போது கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தார். அவர் வீட்டில் கோவிந்தன் என்ற தோழர் வேலை செய்தார். மாதம் 15 ரூபாய் சம்பளம். அந்த நிலையில் எனக்கு ஒரு தேவை வந்தபோது 2 ரூபாயை உடனே எடுத்துக் கொடுத்தார். இன்றும் மனதில் நிறைந்து இருக்கும் அந்த நண்பனைத் தேடுகிறேன். கிடைக்கவில்லை.முகநூலில் தேவராஜ்கணேஷ் அவர்களின் பதிவு........ Thanks fb.,
-
1.எம்ஜிஆரால் வளர்ந்த கருணாநிதி
2.எம்ஜிஆர் கண்டெடுத்த ஜெயலலிதா
3.எம்ஜிஆரை மறந்துவிட்ட ஜெயலலிதா & அடிமைகள்
மூன்று தரப்பினரும் எம்ஜிஆர் ரசிகர்களால் என்றென்றும் நிராகரிக்கப்பட்ட அனாதைகள் .
மக்களால் மறக்கப்பட்ட நன்றி கெட்டவர்கள் ........ Thanks wa.,
.
-
-
தினகரன் -17/3/19
http://i66.tinypic.com/2d55j4.jpg
அன்றும் இன்றும் என்றும் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உடலால் மறைந்தாலும் அவர் உருவம், சிலையை கண்டு எங்கே மக்கள் வாக்கு அளித்துவிடுவார்களோ என்று எண்ணி தேர்தல் அதிகாரிகளும், எதிர் கட்சியினரும் அலறும் நிலையை பாருங்கள் . தலைவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் .பல காலம் நம்முடன் வாழ்வாங்கு வாழ்ந்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார் என்பது திண்ணம் .உலகில் எந்த நடிகருக்கும், அரசியல் தலைவருக்கும் இந்த நிலை இதுவரையில் ஏற்பட்டுள்ளதா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்லலாம் ..ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் தலைவரின் மதிப்பு, செல்வாக்கு, புகழ், பெருமைகளை சிறுமை படுத்தும் வண்ணம் இன்னும்
நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது . இந்த தேர்தல் நிச்சயம்
அதற்கு தகுந்த பாடம் கற்பிக்கும் என்று நம்புவோமாக .
-
அத்தியாயம் - 8
ஒரு நடிகன் நாடாள முடியுமா??? இதுதான் அன்றைய கேள்வி!
முடியும் என்று புரட்சித்தலைவர் நிரூபித்தார் [ அவரால் மட்டுமே முடிந்தது], அதற்கு அடிப்படை காரணங்கள் பல உள்ளது. எட்டாவதாக:
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
வெற்றி தேவதையே அவர் வீட்டு பணிப்பெண் என்றாலும். போட்டி என்பது தனது நடத்தைக்கு/வாழ்க்கை பாதைக்கு ஒரு முக்கிய அம்சமாகும் என்று நம்பினார்.
"தனது திறமையுடனும் போட்டி" மற்றும் மற்றவர்களின் திறமையுடனும் போட்டி என்று செயல்பட்டார். தான் மற்றும் தனது காவியங்கள்/கழகம் மற்றவர்களுடன் திறந்த சூழ்நிலையில் போட்டி அதில் வெற்றி மகுடம் சூடினார். தனது திறமை உள்நாட்டில் மட்டும் தெரியவேண்டும் என்று நினைக்காமல் சர்வதேச அரங்கிலும் முதலாவதாக திகழவேண்டும் என்றும் உறுதியுடன் செயல்பட்டார்.
சாதிக்கவேண்டும் அதற்கு அதிகமான லட்சியங்களை அடையவேண்டும் அடைவதற்கு தனது கடந்த கால சாதனைகளுடன் போட்டி [ அவர் திரை காவியங்கள் படைத்த சாதனைகளை அவரது வேறு ஒரு திரை காவியம் தான் முறியடிக்கமுடியும், சட்டசபை தேர்தல் முடிவுகள் 1977-144 / 1980 - 162 / 1984 - 195 இடங்களில் வெற்றி என்று ஏறுமுகமாக தான் இருந்தது]
போட்டி என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்க்கையில் ஒரு வழிமுறையாகும், அது உந்துதல் குறைந்துவிடும், உற்சாகம் குறைந்துவிடும், தீர்மானத்தின் தீப்பிழம்புகள் இறந்துவிடும். வரலாறு காணாத முப்பிறவி எடுத்த முதல்வன் எங்கள் புரட்சித்தலைவன்.
.....
தொடரும்................. Thanks wa.,
-
-
-
சர்வாதிகாரி படம் தவறுதலாக கற்புக்கரசி என பிரசுரம் ஆகியுள்ளது
http://i66.tinypic.com/xndl61.jpg
-