http://i48.tinypic.com/2qvtrw4.jpg
Printable View
கொடுக்கணும்ற எண்ணம் எனக்கு வர காரணமாய் இருந்தவர் அமரர் எம்.ஜி.ஆர் தான்.
எம்.ஜி.ஆர் காது கேளாதோர், வாய் பேசாதோர் பள்ளிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தேன். அப்ப அம்மா (திருமதி.ஜானகி எம்.ஜி.ஆர் ) அமெரிக்கா போயிருந்தாங்க. அவங்க மெட்ராஸ் திரும்பி வந்ததும் ஒரு கல்யாணத்துல அம்மாவைச் சந்தித்த போது அவர்கள்
மக்களுக்காக கொடுக்கறதை கடைசி வரைக்கு நிறுத்திடாதீங்க . எத்தனை சிரமம் இருந்தாலும் உங்க வருமானத்துல ஒரு சிறு பகுதியையாவது மக்களுக்குக் கொடுக்கறதுக்குன்னு ஒதுக்கி வைங்க. எம்.ஜி.ஆர் அவர்களின் வள்ளல் தன்மையை யஇன்னும் யாரலயும் தாண்ட முடியல.
நம்ம கிட்ட உதவி பெற்றவங்க திரும்பி வந்து நன்றி சொல்லறதுதான் மிகப்பெரிய சந்தோஷம். அதை முழுமையா அனுபவிச்சவர் எம்.ஜி.ஆர் ஒருத்தராத்தான் இருப்பார்னு நினைக்கிறேன். அவர் எப்ப எங்க யாரைப்பார்த்தாலும் உனக்கு என்ன வேணும் என்கிட்ட கேளுன்னு தான் நலமே விசாரிப்பார்.
பொம்மை இதழில் நடிகர் சத்யராஜ்
ஆகஸ்ட் 21, 1958. திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் கிராமத்தில் இன்பக் கனவு நாடகம் . நசநசவென்று மழை தூறிக்கொண்டே இருக்கிறது. எம்.ஜி.ஆரும் சில நடிகர்களும் ஒரு காரில் செங்கத்திற்குப் புறப்படுகிறார்கள். அங்கே போய் சேர்ந்தபோது இரவு 11 மணி. மழை ஓய்ந்தபாடில்லை. எம்.ஜி.ஆர் மேடையில் தோன்றியவுடனே ஒரே ஆரவாரம். மழை பெய்கிறதே. நாடகம் நடத்த வேண்டுமா? என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர். நடத்து நடத்து என்று கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. நாடகம் ஆரம்பித்து நான்கு காட்சிகள் நடந்த பின்னர் மழை வலுக்கிறது. என்றாலும் நாடகம் தொடர்ந்து நடக்கிறது. நான்காவது வரிசையில் ஒரு அறுபது வயது கிழன் கொட்டும் மழையில் குத்துக்காலிட்டு அமர்ந்து குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு நடுங்கியபடி நாடகம் பார்த்துக் கொண்டிருப்பதை மேடையிலிருந்து பார்க்கிறார் எம்.ஜி.ஆர். அந்த சீன் முடிந்து கிரீன் ரூமிற்கு திரும்பிய உடன் அந்தக் கிழவனுக்கு ஒரு டர்க்கி டவல் போகிறது. நாடகம் விடிகாலை மூன்று மணிக்கு முடிகிறது. அந்தக் கிழவனை மேடைக்கு கூப்பிட்டு விசாரிக்கிறார் எம்.ஜி.ஆர். அவன் ஒரு ரிக்ஷாக்காரன். 60 வயதிலும் உழைத்து பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன். தனது ஒரு நாள் கூலியைக் கொடுத்து டிக்கட் வாங்கியிருக்கிறான்.
சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர் ஜுரத்தில் விழுகிறார். அடுத்த நாள் நாடோடிமன்னன் ரிலீஸ். இந்தப் படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோற்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கவலையுடன் வர்ணித்த படம் . தனது சொத்து முழுவதையும் அந்தப் படத்தில் முடக்கியிருந்தார் எம்.ஜி.ஆர். பத்திரிக்கையாளர் காட்சிக்கு எம்.ஜி.ஆரால் வர முடியவில்லை. ஜுரத்திலிருந்து எழுந்த எம்.ஜி.ஆர் கேட்ட முதல் கேள்வி காரில் போய்விட்டு வந்த நாமே ஜுரத்தில் விழுந்து விட்டோமே. அந்த ரிக்ஷாக்காரக்கிழவன் இப்போது எப்படி இருப்பான். யாருக்கும் பதில் தெரியவில்லை. ஏனெனில் யாரும் அதை நினைத்துப் பார்க்கவில்லை. நாடோடி மன்னன் வெள்ளிவிழா கண்டது. அதன் வெற்றியைக் கொண்டாடுவதில் புதுமையைச் செய்தார் எம்.ஜி.ஆர். அது ரிக்ஷாகாரர்களுக்கு மழைக்கோட்டு வழங்குவது
இந்தியா டுடே செப்டம்பர் 5, 1989.
மனிதன் பிறந்தான். வாழ்ந்தான். மறைந்தான் என்பது தான் வாழ்க்கை நியதியாக இயற்கை நமக்கு அளித்துள்ளது. ஆனால், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவரோ பிறந்தார் வாழ்ந்தார் இன்றும் நம் இதயத்திலே வாழ்கிறார். இனி என்றென்றும் வாழப்போகிறார்., என்ற தனி நியதியை உருவாக்கிச் சென்றுள்ளார்.
அவர் வளர்ந்து வந்த பாதை அனைவருக்கும் பாடமாக அமையத் தக்கதாகும். இளமை முதல் அவர் வாழ்க்கையில் எதிர் கொண்ட இடர்பாடுகள் ஏதாளமாகும். அனைத்தையும் அவரது மனோபலத்தினாலும் ஒப்பற்ற மனிதாபிமான அணுகுமுறையாலும் எளிதில் வென்று எதிர்ப்புகளையும், இடர்பாடுகளையும் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்தவர் புரட்சித் தலைவர்.
கலைத்துறையிலும் பொது வாழ்க்கையிலும், தன் சொந்த வாழ்க்கையிலும் சரித்திர சாதனைகள் நிகழ்த்தி இழப்புகளையும் இடர்பாடுகளையும் சோதனைகளையும் சாதனையாக்கிக் காட்டிய ஈகைக் குணம் கொண்ட ஏந்தல், எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அவர்கள் இச்சட்டமன்றப் போரவையிலும், தமிழக ஆட்சியிலும், சாதனைகள் பலவற்றை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள்.
11 ஆண்டுகள் முதலமைச்சராய் இப்போரவையில் அங்கம் வகித்து தமிழகத்தை ஆட்சி செய்தார் என்பது மட்டுமல்ல. தொடர்ந்து எவ்வித இடைவெளியும் இல்லாமல் மும்முறை தேர்தல்களிலும் மக்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் அவர்தான் என்ற சிறப்பையும் கீர்த்தியையும் பெற்றவர் புரட்சித் தலைவர்.
இச்சட்டமன்றப் போரவையில் மற்ற எல்லா முதலமைச்சர்களையும் விட மிக அதிகமான ஆண்டுகள் 1967ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 20 ஆண்டுகள் உறுப்பினராகவும் அங்கம் வகித்து ஒரு பிரச்சினையுல் மிக அதிக நேரம் பேசியவர் என்ற சாதனையினையும் நிகழ்த்தியவர். 1979 பிப்ரவரி 26ஆம் தேதி அவரது அமைச்சரவையின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசிய மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் அன்று ஒரே நாளில் தொடர்ந்து 7 மணி நேரம் பேசினார்.
இச்சட்டப்போரவை வரலாற்றில் நிலைத்திருக்கும் சாதனைகள் பல நிகழ்த்திய மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்கள் தமிழக முதல்வராய் நிர்வாகத்திலும் வியத்தகு சாதனைளை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா அவவர்கள் சுட்டிக் காட்டிய ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற நெறியினைத் தன் ஒரே நோக்கமாகக் கொண்டு ஆட்சி நடத்தினார். தனது ஆட்சியின் மூலம் அதிகபட்ச நன்மைகள் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.
அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் பாதுகாவலாக வாழ்ந்ததால் தான் தமிழக மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் குடிகொண்டுள்ள ஈடுஇணையற்ற தலைவராக இன்றும் வாழ்கிறார் என்றும் வாழ்வார்
31.01.1992 அன்று சட்டப்போரவையில் டாக்டர் புரட்சித் தலைவர் அவர்களின் திருவுருவப் படத்தினைத திறந்து வைத்து மாண்புமிகு முதல்வர். ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து.