https://www.youtube.com/watch?v=6ceI-RKq44I
ORU THAI MAKKAL - 2
Printable View
https://www.youtube.com/watch?v=6ceI-RKq44I
ORU THAI MAKKAL - 2
https://www.youtube.com/watch?v=1Zzhnxr0ipw
தலைவர் பொது மக்கள் மற்றும் ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்களுடன் பில்ம்பைர் [FILMFARE] விருது வழங்கம் விழாவை கண்டு ரசிக்கிறார். திரு. ராஜ்கபூர் அவர்களுக்கு மேரா நாம் ஜோகர் [MERA NAAM JOKER] படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதினை வழங்குகிறார்.
நமது மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் இரண்டு திரிகளுக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து கிடைக்க உழைத்த அனைத்து நல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-------------------------------------------------
எம்.ஜி.ஆர். திரை உலகக் கலைஞராக- அரசியல்வாதியாக- மனிதநேயராக தங்கள் பார்வையில்...
""நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.
நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.
எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.
அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.
அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.
அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.
தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.
தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார். அதேபோல மகாகவி பாரதி நூற்றாண்டு விழாவையும் செம்மையாக நடத்தினார். பெரியார், பாரதி நூற்றாண்டு விழா கவியரங்கங்கள் எங்கெங்கு நடந்தனவோ அங்கெல்லாம் தலைமை வகித்தேன்.
http://i50.tinypic.com/jt17dc.jpg
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பாரதிதாசன் நூற்றாண்டு விழா வந்தது. அதை அவர் நடத்தவே இல்லை. அண்ணா நூற்றாண்டு விழாவை அனாதை நூற்றாண்டு விழாவாக நடத்தினார். செப்டம்பர் 14- கடற்கரைச் சாலைக்குச் சென்றேன். அங்கே கட்டப்பட்டிருந்த பதாகைகளிலும் அண்ணா கருணாநிதிக்கு மாலை போடுவது, மோதிரம் அணிவிப்பது போன்ற படங்கள்தான் இருந்தன.
காஞ்சியில் அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட "வாடகை மனிதர்கள்', "வார்த்தை வணிகர்கள்' எல்லாம் கருணாநிதியைப் பற்றி பேசினார்களே தவிர அண்ணாவைப் பற்றி பேசவில்லை.
அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.
தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''
நக்கீரன் இதழில் புலவர் புலமைப்பித்தன்.
அபூர்வமான இந்த வீடியோ பதிவை வழங்கியமைக்கு நன்றி திரு. சைலேஷ் பாசு சார். இதே வீடியோவின் மற்றொரு பகுதியினை பிரதீப் பாலு அவர்கள் தனது வெப்சைட்டில் வழங்கியுள்ளார். அவருக்கும் நன்றிகள்.(மக்கள் திலகம் இவ்விழாவிற்கு வரும் காட்சி) வீடியோவின் தரம் மிகவும் நன்றாக உள்ளது.
மக்கள் திலகம் கலந்து கொண்ட பிலிம் பேர் விழா வீடியோ அருமை சைலேஷ் சார்
மக்கள் திலகத்தின் நிழற்படங்கள் - அருமை கலிய பெருமாள் சார்