வாசு அண்ணா
சூப்பர் அண்ணா இன்னிக்கு திரி
வேந்தர் அண்ணா பகலில் விசிட் (அண்ணனுக்கு பிறகு எங்களுக்கு கிடைத்த அண்ணன் )
கூட கார்த்திக் அண்ணா (அண்ணானு சொல்லலாமா .கார்த்திக் அவர்களிடம் பயந்து கேட்கணும்)
கலக்கல் சைலஸ்ரீ பதிவுகள்
Printable View
வாசு அண்ணா
சூப்பர் அண்ணா இன்னிக்கு திரி
வேந்தர் அண்ணா பகலில் விசிட் (அண்ணனுக்கு பிறகு எங்களுக்கு கிடைத்த அண்ணன் )
கூட கார்த்திக் அண்ணா (அண்ணானு சொல்லலாமா .கார்த்திக் அவர்களிடம் பயந்து கேட்கணும்)
கலக்கல் சைலஸ்ரீ பதிவுகள்
தெய்வீக ராகங்கள் பதிவை ஸ்ரீகாந்த் திரியிலும் பதிக்கலாமே.
பிள்ளையாண்டான் திரி ரொம்பநாளா சலனமில்லாமல் கிடக்கிறது...
கார்த்திக் அண்ணா
சாரதா madem ஸ்ரீகாந்த் திரியின் முதல் பக்கத்தில் இதை பற்றி எழுதி உள்ளார்கள்
'Vennira Aadai' SHREEKANTH
'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த்
UPDATES.....
முழு ஆய்வுக்கட்டுரைகள் / விமர்சனங்கள் (Analysis / Reviews)
1) வெண்ணிற ஆடை
2) அவள்
3) கோமாதா என் குலமாதா
4) ராஜ நாகம்
5) வியட்நாம் வீடு
6) ராஜபார்ட் ரங்கதுரை
7) சில நேரங்களில் சில மனிதர்கள்
8) தெய்வீக ராகங்கள்
9) இவர்கள் வித்தியாசமானவர்கள்
10) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
11) காசி யாத்திரை
12) திருமாங்கல்யம்
13) வெள்ளிக்கிழமை விரதம்
குறு ஆய்வுகள் / தகவல்கள் (Tid-Bits):
1) எதிர் நீச்சல்
2) அவன் ஒரு சரித்திரம்
3) இளைய தலைமுறை
4) வசந்த மாளிகை
5) வாணி ராணி
6) ஞான ஒளி
7) அன்னப்பறவை
8) வெற்றிக்கனி
9) சித்திரச் செவ்வானம்
சிறப்புப் பதிவுகள்:
ஸ்ரீதரின் அறிமுகத்தில் ஸ்ரீகாந்த்
காங்கிரஸ் பேரியக்கத்தில் ஸ்ரீகாந்த்
நடிகர்திலகத்தின் ‘ஸ்ரீகாந்த் பாசம்’
'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த்
இதுவரை கேட்டிராத பல தமிழ் பாடல்களை பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி .
அவன்தான் மனிதன் படத்தின் மூலப்படமான கஸ்தூரி நிவாசா என்ற படம் 1971ல் வந்தது .
கருப்பு வெள்ளை படம் . தற்போது வண்ணத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள் .
பி.பி ஸ்ரீனிவாஸ் - சுசீலா குரலில் நடிகர் ராஜ்குமார் - ஆரத்தி இணைந்து பாடும் பாடல் மிகவும்
பிரபலம் .
http://youtu.be/_IW35sLC6n0
கிருஷ்ணா
ஜீவபூமி தாங்கள் வார இதழில் படித்திருப்பீர்கள்.. ராணி முத்துவில் அது இடம் பெற்றதாகத் தெரியவில்லை...சாண்டில்யனின் தொடராக வந்த போதே ஒவ்வொரு அத்தியாயத்திலும் நடிகர் திலகத்தை நினைத்து நினைத்து அந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருப்போம். ஓவியமும் அதே போல் இருக்கும்.
thanks karthik
சாரதா madem பதிந்த பதிவு ஸ்ரீகாந்தின் திரியில்
தெய்வீக ராகங்கள்'
ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து 1980-ல் இப்படி ஒரு படம் வந்தது எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை. கதாநாயகனால் வாழ்வு சூறையாடப்பட்டு, உயிரை இழந்த மூன்று பெண்கள் ஆவியாக வந்து (?????) அவரைப் பழிவாங்கும் கதை. நம் திரைப்படங்களுக்கு கதை 'பண்ணுபவர்களும்' கதாநாயகன் ஒரு படத்தில் நடித்ததை மனதில் கொண்டு, அந்த மாதிரியே அவருக்குத் தொடர்ந்து கதை பண்ணுவார்கள் போலும். அல்லது இம்மாதிரி கதை என்றால், அதுக்கு ஸ்ரீகாந்த் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள் போலும். இப்படி குறிப்பிட்ட நடிகருக்கு குறிப்பிட்ட முத்திரை குத்துவதால்தான் அவர்கள் உண்மையான திறமைகள் வெளிவராமல், அல்லது வெளிவர வாய்ப்பளிக்கப்படாமல் போகிறது. ஒரு படத்தில் அவன் பிச்சைக்காரனாக நடித்தால் போச்சு. அப்புறம் பிச்சைக்காரன் ரோலா? கூப்பிடு அவரை என்ற கதைதான். ('ஞான ஒளி'யில் பாதிரியார் ரோலில் மணவாளன் என்கிற கோகுல்நாத் அருமையாக நடித்தார். சரி. உடனே 'பாரதவிலாஸ்' படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் பாதிரியாராக வந்து 'நிற்பதற்கு' அவரை தேடிப்போய் அழைத்து வந்தார்கள்). சார்லிக்கு 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் சேரன் துணிந்து கொடுத்த அற்புதமான ரோலின் மூலம்தானே சார்லியின் பன்முகத்திறமை வெளித்தெரிந்தது?. அப்படியில்லாமல், ‘கற்பழிப்புக்காட்சி கொண்ட பாத்திரமா?. கொண்டா ஸ்ரீகாந்தை’ என்று அப்போதைய இயக்குனர்கள் கடிவாளம் பூட்டிய குதிரைகளாக இருந்தனர், சிலரைத்தவிர. (ஸேஃப்டிக்கு இப்படி ஒரு வார்த்தையை போட்டு வச்சிக்குவோம்).
தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களை கற்பை சூறையாடி, அவர்களை அருவியில் தள்ளி, தற்கொலை அல்லது விபத்துபோல செட்டப் செய்யும் ஸ்ரீகாந்தை, சட்டமோ, போலீஸோ தண்டிக்க முடியாத காரணத்தால், அவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்களே பேயாக மாறி, ஆனால் பெண் உருக்கொண்டு அவரைப்பழி வாங்குவதான (??) புதுமையான (??) கதை. அதில் ஒரு பேயாக, அதாவது ஸ்ரீகாந்தினால் ஏமாற்றப்பட்ட பெண்ணாக வடிவுக்கரசி நடித்திருந்தார். மற்ற இருவர் யாரென்பது சட்டென நினைவுக்கு வரவில்லை, எனினும் அப்போதிருந்த இரண்டாம் நிலைக் கதாநாயகிகள்தான்.
ஆரம்பத்தில் ஸ்ரீகாந்தை ஒரு சிதார் இசைக்கலைஞனாக அறிமுகப்படுத்தி, கேட்போர் மனம் உருகும் வண்ணம் சிதார் இசைப்பவராக காண்பித்தபோது, 'பரவாயில்லையே, நல்ல கௌரவமான ரோல் கொடுத்திருக்காங்களே என்று தோன்றும். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே (அடடே நாம ஸ்ரீகாந்துக்கல்லவா கதை பண்ணுறோம் என்பது கதாசிரியருக்கும் இயக்குனருக்கும் நினைவு வந்திருக்க வேண்டும்) அவரை காம விகாரம் கொண்டவராகக் காண்பித்து, வழக்கமான ட்ராக்கில் திருப்பி அந்தப் பாத்திரத்தின் தன்மையையே குட்டிச்சுவர் பண்ணி, கதையை சொதப்பி விட்டனர்.
படத்தில் பாதிக்கு மேல் பேய்கள் ஸ்ரீகாந்தின் வீட்டில் வந்து டேரா போட்டுக்கொண்டு அவரை பாடாய் படுத்துவது, பார்க்க கொஞ்சம் தமாஷாக இருக்கும். மூன்று பேயகளுக்குள் நல்ல கூட்டணி. அதனால் கொஞ்சம்கூட பிசகாமல் ஸ்ரீகாந்திடமிருந்து அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றுகின்றன. பேய்களுக்கு கால்கள் இல்லையென்று யார் சொன்னது?. அதில் ஒரு பேய் பரதநாட்டியமே ஆடுகிறது. பேய்களின் அட்டகாசத்திலிருந்து தன்னைக் காப்பாற்றச்சொல்லி ஸ்ரீகாந்த் ஒரு ஏஜென்ஸியை நாடிப்போக, அதிலிருந்து வரும் இரண்டு அதிகாரிகள் சரியான கோமாளிகள். தங்களது அசட்டுத்தனத்தால் நம்மைச் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் பேய்களை அண்டாவுக்குள் தேடுவது நல்ல தமாஷ். அவர்களில் ஒருவர் வி.கோபாலகிருஷ்ணன், இன்னொருவர் வெண்ணிற ஆடை மூர்த்தியா? நினைவில்லை.
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இன்னொருவர் சுருளிராஜன். பேய்களுக்குப்பயந்து தன்னுடன் இரவில் தங்க ஸ்ரீகாந்த் சுருளியை அழைத்துவர, அவரோ கனவில் பேயைக்கண்டு அலறி ஸ்ரீகாந்தை இன்னும் அச்சமூட்டுகிறார். கனவில் சுடுகாட்டுவழியே செல்லும் சுருளி, அங்கே ஒரு சமாதியின்மேல் அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரிடம், 'ஏன்யா, எந்த பெரிய மனுஷன் சமாதியோ. அதுல காலையும் மேலே வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கியே' என்று கேட்க அதற்கு அவர் (அது..?) 'நான்தான் தம்பி, உள்ளே புழுக்கம் தாங்கலைன்னு வெளியே வந்து உட்கார்ந்திருக்கேன்' என்றதும் அலறியடித்துக்கொண்டு ஓடும்போது, அங்கே நடந்து போய்க்கொண்டிருக்கும் இன்னொரு பெரியவரிடம் 'ஏங்க இந்த பேய் பிசாசையெல்லாம் நம்புறீங்களா?' என்று கேட்க, அவர் 'எவனாவது உயிரோடு இருப்பன்கிட்டே போய்க்கேளு. நான் செத்து அஞ்சு வருஷமாச்சு' என்று சொன்னதும் அலறிக்கொண்டு எழுவாரே... அந்த இடத்தில் தியேட்டரே சிரிப்பில் அதிரும்.
பேய்களுக்குப்பயந்து வீட்டைவிட்டுத் தப்பிப்போகும் ஸ்ரீகாந்தை ஒவ்வொருமுறையும் பேய்கள் வழியில் மடக்கி வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பது சுவையான இடங்கள். அதுபோலவே, தனக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோனதை நியூஸ் பேப்பர் மூலம் படிக்கும் ஸ்ரீகாந்த், அப்படியானால் தான் திருமணம் செய்துகொண்டு அழைத்து வந்த பெண்கூட உண்மையான பெண்ணல்ல அதுவும் கூட ஒரு பேய்தான் என்று அதிர்ச்சியடைவதும் இன்னொரு சுவாரஸ்யமான இடம். பேய்களின் அட்டகாசத்துக்குத் தோதாக ஒரு காட்டு வனாந்திரத்தில் இருக்கும் ஸ்ரீகாந்தின் பங்களா, முடிந்தவரையில் திகிலூட்டுவதற்காக பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்திலேயே (தமிழில் சொன்னால் 'நைட் எஃபெக்ட்') எடுத்திருக்கும் புத்திசாலித்தனம் தெரிகிறது.
நடிப்பைப்பொறுத்தவரை ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அவருடைய ரோல் ஒருமாதிரியாக சித்தரிக்கப் பட்டிருந்தபோதிலும், அதிலும் தன் திறமையான நடிப்பால், ஈடுகட்டி பேலன்ஸ் பண்ணியிருந்தார். கதை இவரைச்சுற்றியே அமைந்ததாலும், படத்தில் குறைவான கதாபாத்திரங்களே பயன்படுத்தப்பட்டிருந்ததாலும், படத்தின் அதிகப்படியான காட்சிகளில் இவரே நிறைந்திருந்தார். இவருக்கு அடுத்து மூன்று பேய்களுமே நன்றாக நடித்திருந்தனர். மூவரும் பெண்ணாக வந்ததை விட பேயாக வந்தபோது கச்சிதமாகப்பொருந்தினர். (same side goal).
படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் சிதார் இசைக்கலைஞராக ஸ்ரீகாந்தைக் காண்பிக்கும்போது, அழகாக இதமான சிதார் இசையால் வருடியிருப்பார். பின்னர் பேய்கள் அட்டகாசம் துவங்கியதும் அவருக்கே உரிய அதிரடி திகில் பின்னணி இசையால் நம்மை பயமுறுத்துவார். இவரது இசையில் இப்படத்தில் வாணி ஜெயராம் பாடிய இரண்டு பாடல்கள் கேட்கும்படி இருந்தன. ஆனால் முதலடிதான் எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு எட்ட மறுக்கிறது. படத்தில் கேட்டதோடு சரி. பின்னர் வானொலி/தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் அல்லவா நினைவில் நிற்கும்?. அவர்கள் ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொண்டு அவற்றையே திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... திரும்ப... ஒளிபரப்பிக்கொண்டு இருப்பார்கள்.
எல்லாம் சரிம்மா, படம் எப்படி ஓடியதுன்னு கேட்கிறீங்களா?. இயக்குனர் (பாடலாசிரியர்/இசையமைப்பாளர்) கங்கை அமரன் (இப்படத்தின் இயக்குனர் அவர் அல்ல) தான் இயக்கிய சில படங்கள் வெற்றி வாய்ப்பை இழந்த நேரங்களில் ஒரு காரணம் சொல்வார். அதாவது, 'தன்னுடைய படம் வெளியான நேரம், மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போனதால், மக்களால் அந்தப்படத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டது' என்பார். அதுபோலவே 'தெய்வீக ராகங்கள்' என்ற இந்தப்படம் வெளியான நேரத்திலும் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது. புரிந்திருக்குமே..!
ரவியின் படங்களில் அதிகம் பேசப்படாத படங்களில் செல்வியின் செல்வனும் ஒன்று. சில பல பக்கங்களுக்கு முன் இதைப் பற்றிய குறிப்பும் வந்துள்ளது. புகழேந்தியின் இசையில் நான் உங்களைக் கேட்கின்றேன், கொஞ்சவா கொஞ்ச நேரம் , இந்த இரண்டு பாடல்கள் பிரசித்தம். இசையரசியின் குரலில் இன்னொரு பாடலும் இப்படத்தில் நன்றாக இருக்கும். வந்தால் இந்த நேரம் வா வா வா... இது வரை இப்பாடலைக் கேட்காதவர்களுக்காக..
http://www.inbaminge.com/t/s/Selviyn%20Selvan/