Dhina Ithazh 29/05/15
http://i60.tinypic.com/2hfqoth.jpg
http://i57.tinypic.com/5jwwo1.jpg
http://i57.tinypic.com/24wui60.jpg
http://i58.tinypic.com/erd5wm.jpg
http://i60.tinypic.com/2jaarrm.jpg
Printable View
சென்னை சரவணாவில் 29/05/15 முதல் நான் ஏன் பிறந்தேன் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் http://i61.tinypic.com/14dddhw.jpg
தகவல் உதவி ஓட்டேரி பாண்டியன்
மக்கள் திலகத்தின் ''என் தங்கை '' . 31.5.1952
இன்று 63 ஆண்டுகள் நிறைவு தினம் .
ராஜகுமாரி படம் தொடர்ந்து ராஜாராணி கதையம்சம் படங்களில் நடித்த மக்கள் திலகம் சமூக கதை யான
என்தங்கை படத்தில் பாசமிகு அண்ணனாக வாழ்ந்து காட்டினார் .அமைதியான , உருக்கமான ,யதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதை வென்றார் .மறக்க முடியாத காவியம் .
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உரைக்கும் முக்கிய சாராம்சம்/ கோட்பாடு / தத்துவம் எல்லாமே கடமை என்ற கருப்பொருள் ஆகும் / வழிதான் / வாழ்க்கைக்கு உரித்தான உலகில் எல்லா ஜீவன்களும் கடைபிடிக்க வேண்டிய நிமித்தம் / நியதி ஒன்றேதான், இறைவனை அடையும் சிறந்த நெறிமுறை. இதனையேதான் நமது மக்கள் திலகம் தன் வாழ்க்கையில் கடைபிடித்து வந்துள்ளார். ஒரு ஜீவன் பிறந்து நல்லவைகளை நினைத்து, நல்லவைகளை பேசியும், நல்லவைகளை செய்தும், நல்லவைகளையே நாடி, தனக்கும், தன் குடும்பத்திற்கும், மனித குலத்திற்கும், நாட்டிற்கும் எந்த ஜீவன் நல்லவைகளை செய்கிறதோ அந்த ஜீவன் உத்தம ஜீவன் / உத்தம கொள்கையாகும். அதாவது, கடமைகளை செய்வதில் பற்றுதலையும், பலனையும் தியாகம் செய்து வருபவன் உத்தமன் ஆவான். அது சாத்வீக தியாகம் என்று கருதப்படும். இந்த ஜீவனுக்கு, நாம் செய்ய வேண்டிய கடமை நல்ல எண்ணம், நல்ல உடல்நிலை பேணுதல், நல்லவைகளை செய்தல், இந்த உடலை எந்த தீய பழக்கத்திற்கும் ஆட்படுத்தாமல் பேணி காத்தல். அதன்பிறகு நம் குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், நல்லவைகள் சொல்லி, நன்மைகளை செய்து வருதல். அந்த ஜீவன் ஒன்றேதான் இறைவன் திருவடியை சென்று அடையும். இதைதான் மக்கள் திலகம் தன் வாழ்நாளில் கடைபிடித்தார். திரை உலகத்திலும், சொந்த வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகத்தில் வாழும், அணைத்து ஜீவன்களுக்கும் ஒரு உத்தம தலைவராய் வாழ்ந்தார்.
கடமை என்ற சொல்லினை எவ்வாறு தன்னுடைய திரை காவியங்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று இதோ பாருங்கள்
http://i60.tinypic.com/2nurdl5.jpg
1.
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே
2. ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்.
3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
4. உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.
5. மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்
6. பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
7. கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
8. போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் .
9. கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே
10. நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்
http://i62.tinypic.com/33tjhpv.jpg
கடமை - மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடல் வரிகள் -அருமையான பதிவு நன்றி தெனாலி ராஜன் .
சத்யாவின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் ஸ்டில்ஸ் எல்லாமே ஜொலிக்கிறது .
என்தங்கை - 63வது ஆண்டு நினைவூட்டலுக்கு நன்றி வினோத் சார் .