-
சத்யா ஸ்டுடியோ வாங்கும் முன் அதில் இருந்த பழைய ஸ்டுடியோவில் ஒரு சிறு காட்சியில் நடிக்க எம் ஜி ஆர் சென்று அரங்குக்கு வெளியே தன் சகாக்களுடன் அமர்ந்திருந்தார் தண்ணீர் தாகம் ஏற்ப்பட குளிர் பானத்தோடு சென்ற ஊழியரிடம் தண்ணீர் கேட்க இது உங்களுக்கு கிடையாது எனகூறிச்சென்றார்
அதே ஸ்டுடியோ வை எம் ஜி ஆர் வாங்கி போதும் அந்த ஊழியரையே பணியில் அமர்த்தி சிறப்பித்தார் எம் ஜி ஆர்
படித்ததில் கவர்ந்தது
-
-
-
எம்ஜிஆர் அவர் வகுத்த பாதை தான் இன்றும் அரசியலில் பின்பற்றப்படுகிறது
வட்டம் மாவட்டம் என்று பிரித்து அதற்கு பொறுப்பா ஆட்கள் அமைப்பது செயல் வீரர் கூட்டம் நடத்தி கட்சியை வளர்ப்பது
கரை வேஷ்டீ துண்டு போடுவது
கைவிரலில் சின்னத்தை அடையாளம் காட்டியது கொடி தோரணம் அமைப்பது
மேடை ஏறியதும் மக்களை பார்த்து உற்சாகம் பிறக்க கையை அசைப்பது
எங்க ஊருக்கு நீங்கள் வரவில்லை என்றால் ஓட்டு போட மாட்டோம் என்ற மக்களின் அன்பு கட்டளையால் பிறந்தது தான் திறந்த ஜீப்பில் ஊரு ஊருக்கு பிரச்சாரம் செய்வது பேச நேரம் இல்லை தடை என்றாலும் இரட்டை விரலை மட்டும் காட்டி ஓட்டுகளை அள்ளியது பின்பு ஆள் உயர மாலை என மாறியது பிறகு மாலையில் வெடி வைத்து கொல்ல பார்த்ததில் பிறந்தது தான் சால்வே போத்து வது தங்க வாள் பரிசு என என்னற்ற கலைகளை அரசியலுக்கு மட்டும் அல்ல சினிமா துறைக்கும் வழி வகுத்து சென்ற அரிய வித்தகர்
அவர் செய்யாதது ஓட்டுக்கு துட்டு இலவசம்
courtesy net
-
-
http://i1170.photobucket.com/albums/...ps1fc88aa9.jpg
evergreen clasical movie rerleased in woodlands 2012
-
-
தமிழக தேர்தல் களத்தில்
புரட்சித்தலைவரின் இயக்கம்
1972ல் விதையாகி ...
1973ல் இலையுடன் செடியாக மலர்ந்து
1974ல் காய்கள் பூத்து கனியாகி
1977ல் நிழல் தரும் ஆலமரமாக தழைத்தோங்கி ..
44 ஆண்டுகளாக உறுதியாக தலை நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் .
மக்கள் திலகமே
வாழும் இறைவனே
உன் முகராசி
வெற்றி - உன் திரு மந்திரமே
இம் முறையும் வென்றிடுமே
எம்ஜியார் பிரியன் - net
-
தமிழகத்தில் 1967ம் ஆண்டு தேர்தலில்தான் கார் மற்றும் பிரச்சார வேன்களை அதிகமாக பயன்படுத்தும் வழக்கம் தொடங்கியது. திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்வது எம்ஜிஆர் பாணி. அப்போதெல்லாம், ஒரே நாளில் தேர்தல் நடத்துவது இல்லை. 1952ம் ஆண்டு முதலாவது பொதுத் தேர்தல் ஜனவரி மாதத்தில் 9 நாட்கள் (9 கட்டமாக) நடந்தது. பின், அது படிப்படியாக குறைந்து 1967 தேர்தல் மூன்று கட்டமாக பிப்ரவரியில் நடந்தது.
இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கியது போக 174 தொகுதிகளில் திமுக நின்றது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் முன்பு ஜனவரி 12ம் தேதி எம்ஆர் ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டார். தேர்தலில் இந்த விவகாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்வேறு பிரச்சினைகளுடன் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் சுருட்டி எறிந்தது.
தேர்தல் முடிவில், 179 தொகுதிகள், திமுக கூட்டணி வசமானது. திமுக மட்டும் தனியாக 137 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அப்போது, இந்தியா முழுவதும் 9 மாநிலங்களில் ஆட்சியை எதிர்க்கட்சிகளிடம் காங்கிரஸ் பறிகொடுத்தது. அதில், தமிழகத்தில் மட்டும் தான் அறுதி பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி ஆட்சி அமைந்தது. முன்னதாக, 1957ல் முதன் முதலில் கேரளாவில் காங்கிரஸ் அல்லாத கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1967 தோல்விக்கு பிறகு, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது இன்னமும் கனவாகவே நீடிக்கிறது.
விருதுநகர் தொகுதியில் 1200 வாக்குகளில் காமராஜரும், தமிழக முதல்வராக இருந்த பக்தவத்சலம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியடைந்தனர். பக்தவத்சலம் அமைச்சரவையில் பூவராகவனை தவிர அனைத்து அமைச்சர்களுமே தோல்வியை தழுவினர். மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.
அதே நேரத்தில், தென்சென்னை தொகுதியில் இருந்து எம்பியாக அண்ணா வெற்றி பெற்றிருந்தார். தனிப் பெரும்பான்மையுடன் திமுக வென்றதை தொடர்ந்து, எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அண்ணா. பிறகு, தமிழக சட்ட மேலவை உறுப்பினராகி (எம்எல்சி) 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி அன்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அசைக்க முடியாத ஆதிக்கம் ஆரம்பமானது.
அண்ணா தலைமையிலான தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் அமைச்சரவையில் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் உட்பட 9 பேர் அமைச்சராகினர். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்வான நாம் தமிழர் கட்சி தலைவர் சி.பா. ஆதித்தனார், சபாநாயகரானார்.
courtesy - diliban sindhanai
-
‘காவியத்தாயின் இளைய மகனும்... காதல் பெண்களின் பெருந்தலைவனுமான’ கண்ணதாசனும் சிலப்பதிகார காவியத்தின் மீது அளப்பரிய பற்று கொண்டிருந்தார். கவியரசராக மட்டுமே அவரை நோக்கும் பலரும் பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியதை அறிந்திருக்க முடியாது.
எம்ஜிஆர் நடிப்பில் உருவான மதுரை வீரன், மன்னாதி மன்னன், நாடோடி மன்னன் ஆகிய படங்களுக்கும் அவரே , வசனகர்த்தா. அதில், மன்னாதி மன்னன் என்ற திரைப்படமானது சேர, சோழ மன்னர்களைப் பற்றிய கற்பனை கலந்த கதை. அந்த படத்தை பார்த்தால் சிலப்பதிகார காட்சிகள் ஒத்துப் போவதை அறியலாம்.
வஞ்சி அரண்மனையின் ஆடல் பெண்ணான (நர்த்தகி) பத்மினி மீது இளவரசரான எம்ஜிஆர் மையல் கொண்டு மோதிரம் அணிவித்து கந்தர்வ முறையில் ஏற்றுக் கொள்வது, சோழ மண்டலமான உறையூரில் காவிரி கரையில் நடைபெறும் இந்திர விழா, சோழ அரச குல பெண்ணை எம்ஜிஆர் மணம் புரிந்ததும் புத்த நெறியை பத்மினி தழுவுவது என ‘மன்னாதி மன்னன்’ திரைப்பட கதையின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தை நினைவூட்டியபடியே செல்லும்.
மன்னர் காலத்து கதையை கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் கூட சிலப்பதிகாரம் மீது கண்ணதாசன் கொண்டிருந்த காதலால் சிலப்பதிகார காட்சிகள் வருவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. படத்தின் பாடல்களும் கூட சிலப்பதிகாரத்தின் பிரதிநிதியாகவே அமைந்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க, தென் தமிழகத்தின் மிகப் பழமையான கர்ண பரம்பரை கதைகளில் ஒன்றான ‘மதுரை வீரன்’ கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் உருவான ‘மதுரை வீரன்’ படத்துக்கும் திரைக்கதை, வசனம் கண்ணதாசன் தான். அந்த திரைப்படத்திலும் சிலப்பதிகார காட்சிகளை அவரால் தவிர்க்க முடியவில்லை.
கதையின் இறுதி காட்சியில் மதுரை வீரன் (எம்ஜிஆர்) மீது கள்வர்களுடன் கூட்டு சேர்ந்ததாக குற்றம் சாட்டி திருமலை மன்னன் அரசவையில் நடைபெறும் விசாரணை காட்சி, மன்னனிடம் நீதி கேட்டு வெள்ளையம்மாள் (பத்மினி), பொம்மி (பானுமதி) இருவரும் வாதிடும் காட்சி ஆகியவற்றை பார்க்கும்போது பற்களை நறநற என கடித்தபடி கண்ணகி வாதிடும் கோபாவேச காட்சிக்கு இணையாகவே இருக்கும். அரசவையில் கதறும் பொம்மி, ‘சிலப்பதிகார கண்ணகி’யை சுட்டிக் காட்டியே பேசுவார்.
இருவருடைய வாதங்களைக் கேட்டதும், ‘தவறு இழைத்து விட்டேன்’ என திருமலை மன்னன் மனம் திருந்தி தண்டனையை நிறுத்த புறப்பட்டுச் செல்வார். ஆனால், அதற்குள் தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும். சிலப்பதிகாரம் போலவே துன்பியலில் முடியும் இந்த கதையையும் கடைசி நேரத்தில் இன்பியலாக மாற்றி விடுகிறார், கண்ணதாசன். எப்படி..?
மாறு கால், மாறு கை வாங்கப்பட்டு வீழ்ந்து கிடக்கும் வீரனுடன் சேர்ந்து அவனது இரண்டு மனைவிகளும் உயிர் துறக்கின்றனர். விடுகின்றனர். அதன் பிறகு, விண்ணில் இருந்து பூமாரி பொழிந்து மூவருமே தெய்வமாகி விடுகின்றனர்.
இப்படி, கவியரசு கண்ணதாசனை கவர்ந்த சிலப்பதிகார காப்பியமானது தமிழின் மிக உன்னத காப்பியம் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. முற்கால தமிழ் பேரரசுகளான சோழ, பாண்டிய மண்டலங்களை கதைக்களமாக கொண்ட இந்த காப்பியத்தின் ஆசிரியரான இளங்கோவடிகள், சேர குலத்து இளவரசர்.
முத்தமிழும், மூன்று மண்டலங்களும் ஒரு சேர நிறைந்திருக்கும் சிலப்பதிகாரமானது, காலங்களை கடந்து தமிழர்களின் காதுகளில் சிலம்பு ஓசையாய் ஒலித்துக் கொண்டிருக்கும்.
Ravindhran - net