-
மாற்றுத்திரி பொய் - 2
எனக்கும் என்ன பதிவு போடுவது என்று தெரியாமல் முகநூல் பதிவுகளை எடுத்து நம் திரியில் போட்டு வந்தேன். ஆனால் மாற்றுத் திரியில் பாகம் 19-ல் 51வது பக்கத்தில் சிவாஜி கணேசனுக்கும் பந்துலுக்கும் உள்ள நட்பும் பிரிவும் என்று 2 பதிவுகளாக வந்துள்ளதில் மக்கள் திலகத்தைப் பற்றி நிறைய பொய்கள் இருப்பதால் அதற்கு ஒவ்வொரு பொய்யாக பதில் சொல்லலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொரு பொய்யாக பாப்போம்.
ஏற்கனவே ரகசிய போலீஸ் படம் 100 நாள் ஓடவில்லை என்று சொன்னது ஒரு பொய் ஆச்சா?
இரண்டாவது பொய்யை பார்க்கலாம். பொய் நம்பர் 2:
கீழ் இருப்பது அந்த பதிவில் உள்ளது….
//இதே நேரத்தில் இந்த செய்திகளெல்லாம் ராமாவரத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. எப்படியடா நடிகர் திலகம் பக்கம் இருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர்களையெல்லாம் தம் பக்கம் திருப்பலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது அல்வா சாப்பிடுவது போல் ஆகிறது. முரடன் முத்து படப்பிடிப்பில் கூடவே இருந்த அசோகன் மூலமாக குணச்சித்திர நடிகையும் பந்துலுவின் இரண்டாவது மனைவியுமான M V ராஜம்மா வழி பந்துலு அணுகப்படுகிறார். அனுதாப வார்த்தைகளும் ஆசை வார்த்தைகளும் சொல்லப்பட்டு முகாம் மாறி வந்தால் ஏக் தம் கால்ஷீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.100-வது படமாக தன் படம் வராது என்று உறுதியானவுடன் பந்துலு முகாம் மாறுகிறார். புதிய படம் துவக்க வேலைகள் ஜரூராக நடக்கிறது. //
நடந்த உண்மை:
பந்துலுவை தன் பக்கம் இழுக்க அசோகன், ராஜம்மா மூலம் பந்துலுவை மக்கள்திலகம் அணுகினாராம். ஆனால் உண்மை என்ன?
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்க போனில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே ஒப்புக் கொண்டு கால்ஷீட் கொடுத்தார் என்று 1971-ம் ஆண்டு சித்ராலயா பத்திரிகையில் பந்துலு பேட்டி கொடுத்திருக்கிறார்.
http://i63.tinypic.com/27y8w9t.jpg
இதேபோலத்தான் கொஞ்ச மாதம் முன்னாடி தமிழக அரசியல் பத்திரிகையில் நாஞ்சில் இன்பா என்பவன் பிராப்தம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சாவித்திரியின் வீடு தேடி மக்கள் திலகம் சென்றார் என்று எழுதினான். மக்கள் திலகத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத கேவலம் படுதோல்வி அடைந்து சாவித்திரியை பிச்சை எடுக்க வைத்த பிராப்தம் படத்தில் நடிக்க சாவித்திரி வீடு தேடி மக்கள் திலகம் சென்றாராம்.
இதை அவர்கள் திரியில் போட்டார்கள். அப்போதே நம் திரியிலும் கண்டித்தோம். நாஞ்சில் இன்பாவுக்கு போன் போட்டு ஏன் இப்படி பொய் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் கட் செய்துவிட்டான். பொய்யே இவன்களுக்கு பிழைப்பா போச்சு.
http://i67.tinypic.com/2v0gzmo.jpg
மாற்றுத் திரி பதிவின் பொய்களை தொடர்ந்து பார்ப்போம்.
-
மஸ்தான் சாஹிப் சார்,
இதற்கெல்லாம் பதில் சொல்லாதீர்கள். மிஞ்சிப் போனால் அவர்கள் திரியில் பதிவிடுவார்கள். அல்லது அவர்களின் ரசிகர்கள் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவிடுவார்கள். சுற்றிச் சுற்றி அவர்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வார்கள். அவர்களுக்கு நாம் விளக்கினாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இந்த வட்டத்தை தாண்டி பொதுமக்களுக்கு இந்த பொய்கள் எல்லாம் தெரியப் போவது இல்லை. ஏற்கனவே இதை எல்லாம் தாண்டி திரை உலகிலும் அரசியலிலும் மக்கள் திலகம் மகா சக்தி என்ற உண்மை பொது மக்கள் மனதில் அழிக்க முடியாத கல்வெட்டாக பதி்ந்துவிட்டது. இதை யாரும் மாற்ற முடியாது. இப்பவும் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி ஊடகங்கள் நடத்தும் விவாதங்களிலும் பத்திரிகை விமர்சனங்களிலும் புரட்சித் தலைவரின் சினிமா அரசியல் வெற்றிகள் பற்றியே பேசப்படுகிறது. டிவி விவாதங்களின்போது மற்றவர்களின் தோல்வி பற்றியும் விவாதம் நடத்துபவரே கேள்வி கேட்டு பங்கேற்பவர்களை மடக்குகிறார்கள். மக்களுக்கு உண்மைகள் புரிகிறது.
எனவே, விடுங்கள். நாம் புரட்சித் தலைவரின் புகழ்,பெருமை, சாதனைகள் பற்றி மட்டுமே பதிவு போடுவாம்.
-
டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று தமிழில் பெயர் மாற்றம் செய்திட தண்டவாளத்தில் தலை வைத்ததாக கருணாநிதி பற்றிய செய்தி மட்டுமே அதிகப்படியான பேருக்கு தெரிகிறது.
#எந்த ஒரு போராட்டம் என்றாலும், போராட்டத்திற்கு முன்பும்,
போராட்டத்திற்கு பின்பும் நிதியுதவி இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
போராட்டத்தை வென்றெடுக்க முடியாது.
#டால்மியாபுரம் போராட்ட நிதிக்காக 1953ல் திமுகவில் இருந்த எம்ஜிஆர், அவரது அண்ணன் சக்கரபாணி ஆகியோர் நிதி திரட்டுவதற்காக இடிந்த கோயில் நாடகத்தை நடத்தி அதில் வந்த நிதியை மேற்படி போராட்டத்திற்கு வழங்கினர்.
#புரட்சிநடிகர் வழங்கும் முதல் காணிக்கை என்ற சிறப்போடு.
இதை எல்லாம் புரட்சித் தலைவர் தம்பட்டம் அடித்துக் கொண்டது இல்லை. அதனால், நிறைய பேருக்கு அவரது இந்த உதவி தெரியவில்லை.
http://i68.tinypic.com/2pt1lit.jpg
ஜெயராமன். ரெ. முகநூல்
-
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,
மாற்று முகாம் நண்பர்களின் பொய் தகவலுக்கு தகுந்த சான்றுகளுடன் பதில் அளித்து வருவதற்கு நன்றி.
டிஜிட்டல் கர்ணன் மறுவெளியீடு விழாவில் பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்
கர்ணன் படம் பார்க்கவில்லை என்றால் மாணவ மாணவியருக்கு வீட்டில் பெற்றோர்கள் சாப்பாடு போட கூடாது .கண்டிக்க வேண்டும் .தண்டிக்க வேண்டும்
என்று பேசினார். தன் அபிமான நடிகருக்கு புகழ் , பெருமை சேர்ப்பதற்கு எப்படி எல்லாம் பாடுபடுகிறார் பாருங்கள். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை எம்.ஆர்.சி.நகர்
மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் , பெரியவர் திரு. சக்கரபாணி அவர்கள் குடும்ப திருமணத்தில் சந்தித்தபோது , தாங்கள் இப்படி பேசலாமா என்று கேட்டதற்கு ,உடனே நிலைமையை புரிந்து கொண்டு, நாடோடி மன்னன், எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களை பார்க்க தவறினால் கூட நான் இப்படி சொல்லுவேன் என்று கூறியபடியே எஸ்கேப் ஆகிவிட்டார் .என்கிற கூடுதல் தகவல் தங்கள் கவனத்திற்கு
இருப்பினும் நண்பர் திரு. மகாலிங்கம் மூப்பனார் அவர்கள் தெரிவித்த கருத்தின்படி
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ், பெருமைகள், அருமைகள் , சாதனைகள் ,
ஆகியன பற்றிய பதிவுகளுக்கு முன்னுரிமை அளித்து நேரத்தை , உழைப்பை
வீணாக்க முயல வேண்டாம் என்பது எனது வேண்டுகோள் .
மதுரையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா பற்றிய
செய்திகள் , புகைப்படங்கள் விரைவில் பதிவிட உள்ளேன் . எங்கே நண்பர் திரு. சுந்தர பாண்டியன் அவர்களை வெகுநாட்களாக காணவில்லை . மதுரை மாநகரில்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பற்றிய செய்திகள் ,புகைப்படங்கள்
பதிவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.
-
இன்று (04/07/2017) பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "நவரத்தினம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i67.tinypic.com/5wlg60.jpg
-
மதுரை மாநகரில் மக்கள் இதயங்களில் மறைந்தும் மறையாமல் வாழும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழா (30/06/2017) பற்றிய புகைப்படங்கள்
தொகுப்பு . - உதவி : மதுரை நண்பர் திரு. எஸ்.குமார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
http://i68.tinypic.com/2hwllck.jpg
-
-
-
-