சாவித்ரி :
நடிகையர் திலகம் பெயருக்கு ஏற்ப தேர்ந்த நடிப்பு , மிடுக்கான இளவரசி பாத்திரத்திலும் , தன் விருப்பதை அழகாக தன் தந்தைடம் சொல்லும் விதமும் , தன் வருங்கால மாமியாரின் அன்பை பெற அவர் பாடும் நீ என்னைப் போல் பெண்ணல்லவோ பாடலில் அவர் காட்டும் முகபாவம் எத்தனை கனிவு ,ஒரு இளவரசி இத்தனை அன்பாக இருக்க முடியுமா என்று ஆச்சர்ய பட வைக்கிறார் , தன் காதலனை கை பிடிக்க தன் தந்தையும் சமாளித்து , சதிசெய்யும் தளபதயின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்து , முதலில் தன் காதலை ஏற்க மறுக்கும் தன் மனம் கவர்ந்த நபரின் அன்பையும் பெறுவதும் , கடைசியில் ஒரு வழியாக வெற்றி பெறுவதும் ஒரு பாத்திரம் என்றால் இதற்கு total contrast ஆக totally freak out tribal girl பாத்திரம் வேறு பரிணாமம் அதில் ஒரு பாடலில் நன்றாக ஆடி இருப்பார்