பார்த்ததில் பிடித்தது - 44
மருமகள் :
1986 ல் நடிகர் பாலாஜி மற்றும் சிவாஜியின் கூட்டணியில் வந்த ஒரு வித்தியாசமான படம் . படத்தின் கதை என்பது படத்தின் டிக்கெட் பின்னாடி எழுத கூடிய அளவு சின்ன கதை தான் , தாத்தா சேகர் (சிவாஜிக்கும்) , பேரன் ராஜா (சுரேஷ்) இருவருக்கும் இடையில் இருக்கும் பந்தம் தான் கதை , தாத்தா உயிருக்கு போராடும் நிலையில் இருக்க , பேரன் காதலிக்கும் பெண் வெளிநாட்டில் இருக்க , காதலியாக நடிக்க வரும் ராதா (ரேவதி) தன் நடவடிக்கையால் , நல்ல குணத்தால் தாத்தாவிடம் நல்ல பெயர் எடுக்கிறார் , ஊருக்கு போன காதலியும் வர , ராஜா யாரை திருமணம் செய்து கொள்ளுகிறார் என்பதே கதை
படம் முழுவதும் சிவாஜி சாரின் ராஜாங்கம் தான் . தான் வரும் காட்சிகளில் படுகையில் படுத்து கொண்டே நடிப்பில் முத்திரை பதிகிறார் . முதல் காட்சியில் தன் பேரனுக்கு தெரியாமல் ஸ்வீட் சாப்பிடும் பொது இவர் கண்ணில் தெரியும் குறும்பு திருஷ்டி சுத்தி போட வேண்டும் , இவர் நண்பர் ஜெய்ஷங்கர் தான் இவர் குடும்ப டாக்டர் , இவரும் , சிவாஜி சாரும் தோன்றும் காட்சிகளில் இருவரும் விட்டு கொடுத்து காட்சிகள் நன்றாக வர நடித்து இருக்கிறார்கள் என்பது நன்றாக உணர முடிகிறது , டாக்டர் இவருக்கு கட்டுப்பாடு விதிக்கும் பொது , சிவாஜி சலித்து கொள்ளுவது ஆகட்டும் , செல்லமாக இருவரும் கட்டி பிடித்து அடித்து கொள்ளுவது ஆகட்டும் , தன் பேரன் உண்மையாக காதலிக்கும் பெண் மற்றும் அவள் தாய் இருவரும் வந்து பேசும் பொது , இவர்கள் அடிக்கும் கமெண்ட் சிரிப்பை வரவழைப்பவை , அதுவும் , இவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று Y விஜயாவிடம் மாட்டிவிடும் காட்சி , தன் வருங்கால மருமகள் பிரியாணி சமயத்து தர , அதை சாப்பிடும் சமயம் ஜெய்ஷங்கர் தடுக்க , இப்போ இதை என்ன பண்ணுவது என்று சிவாஜி கோபிக்கும் பொது நான் சாப்பிடுறேன் என்று இவர் சாப்பிடுவதும் , நம்மவர் helpless லுக் கொடுப்பதும் priceless
தன் தாத்தா நடிக்க வந்த பெண்ணை தன் மருமகள் என்று எண்ணி வீட்டின் சாவியை கொடுக்கும் பொது ராஜா அதை தடுக்க ஜெய்ஷங்கர் அதை தப்பாக புரிந்து கொண்டு ரியாக்ட் செய்வது , தொடர்ந்து எனக்கு பண தேவை வந்தால் என் நண்பன் கிட்ட வந்து உரிமையாக கேட்டு வாங்கி கொள்வேன் என்று சொல்லும் இடம் மெய் சிலிர்க்க வைத்து , தன் நண்பன் தான் செத்து போய் விடுவேன் என்று புலம்பும் பொது , இவர் helpless ஆக Stop it சேகர் என்று கூறும் இடத்தில தன் subtle performance மூலம் நாம் அனைவரையும் ஆச்சிரிய படுத்தி இருப்பார்
தமிழ் சினிமா ஜெய்ஷங்கர் சாரை இன்னும் பயன் படுத்தி இருக்கலாம்
ரேவதிக்கும் , சிவாஜிக்கும் நடக்கும் பாச பந்தம் தான் படத்தின் உயிர்நாடி அதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்து இருக்கலாம் என்பது என் எண்ணம்
ரேவதி நடிக்க வந்தவள் தான் என்றாலும் தன் தாதாவின் மனதில் மருமகள் என்ற ஸ்தானத்தில் இருப்பவர் இவர் தான் என்று தெரிந்து சுரேஷ் அமைதியாக இருப்பதும் , சுரேஷ் காதலிக்கும் பெண் மற்றும் அவள் அம்மா இருவரும் ரேவதியை illtreat பண்ணும் போதும் emotionally upset ஆவதும் ,ஆனால் காதலியை பிரிய முடியாமல் தவிப்பதும் - கிடைத்த காட்சிகளில் நடித்து இருக்கிறார்
மொத்தத்தில் சிவாஜி சாரின் வித்யாசமான நடிப்பில் , அதாவது வயதுக்கு தகுந்த நடிப்பில் தானும் முத்திரை பதித்து , மற்ற நடிகர்களையும் பதிக்க செய்து நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி