Wish everyone a safe, healthy & happy 2015! :)
Printable View
Wish everyone a safe, healthy & happy 2015! :)
கோபால்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நீங்கள் திரியில் தொடர்வது சந்தோஷமே!
ஆனால் புத்தாண்டும் அதுவுமாக தனிப்பட்ட நபர் தாக்குதல்கள் தேவைதானா?... தொடர்வு இப்படியா ஆரம்பித்து தொடர வேண்டும்? கடவுளே! இது அழகல்லவே! இதை சங்கடத்துடன் தெரிவிக்கிறேன்.
வாசு,
திரியில் நானாக தொடரவில்லை. கொண்டாட நினைத்த சிலரின் தயவு.
அடடா ,புத்தாண்டும் அதுவுமாக தனிப்பட்ட நபரையா தாக்கி விட்டேன் ?புத்தாண்டும் அதுவுமாக சிலர் போனாத்தான் நிம்மதி என்று வாழ்த்தியவரை ,வழிமொழிந்த அல்லக்கை ஈஸ்வரையரை சேர்த்திருந்தால்,தனி பட்ட நபர்கள் என்றாகியிருக்கும்.தாங்கள் குறையும் நீங்கியிருக்கும்.
கிருஷ்ணா ,ராமா என்று போகாமல், இதிலும் சொந்தமாக தாக்காமல்,வெட்டி ஓட்டும் பாணியில் ஆமாம் சாமி போட்ட அந்த பிறவியையும் சேர்த்திருக்கலாம். ஆனால் ரவி புகழுக்காக எச்சில் விட்டு (அவ்வப்போது மற்றவர் எச்சில் தானம் செய்து, எச்சில் ஏற்ற வேண்டிய அளவு இழப்பார்)அலைவாரே தவிர சிறிது ரோஷம்,சொரணை கொண்டவர். இவையெல்லாம் இல்லை என்று போஸ்டர் அடித்து விட்டவரை ரவியுடன் சேர்க்க தயங்கி "நபர் "ஆக முடிந்தது.மன்னியுங்கள் வாசுதேவன்.
புத்தாண்டு சிறப்புப் பாடல்.
http://i922.photobucket.com/albums/a...thiyagam-1.jpg
'உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு'
நடிகர் திலகத்தின் இந்த ஜாலியான தத்துவப் பாடலோடு இந்த கானத்தை நான் தொடங்குகிறேன்.
'தியாகம்' வெள்ளி விழாப் படத்தின் வீழாத பாடல்.
எல்லோரும் போற வழி
நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
எந்த எமனையும் கேள்வி கேட்பனடா
கேள்... கேள்வி கேள். தயங்காதே. பயப்படாதே. இரண்டில் ஒன்று பார். உன் நெஞ்சில் கள்ளமில்லை என்றால் உன்னில் பயம் எதற்கு? எவனாய் இருந்தால் என்ன?... எமனாய் இருந்தால் என்ன?
சொத்தை வஞ்சகம் செய்து பிடுங்கி தன்னை சதி செய்து சிறைக்கு அனுப்பிய கூட்டத்தை வெளியே வந்து கூலாய் பாட்டுப் பாடி கலாய்க்கும் நடிகர் திலகம். உடன் அவரின் சிறுத் தொண்டர்கள்.
தேடும் காசு பண வெட்டு
நீ ஊரடிச்ச மூட்டு
ஒரு காலம் வந்தா தாளம்
தந்தினதன்னா
திருடிச் சேர்த்த பணம் நிக்காதுடா
உன்ன வைக்காதடா
அது போற வழிக்காகதடா
நிதர்சனம். நேர்மையான மனிதரின் உண்மையான கருத்து.
நல்லது கெட்டது எத்தனை வந்தது
எத்தனை நின்னுது எத்தனை போச்சுது
சுத்தன காசுக்கு பத்திரம் பண்ணுற டேய்
சுத்துன காசுக்கு பத்திரம் பண்ணுறவன் இன்னைக்கு அனுபவிக்கிறதை நேரிடையாகப் பார்க்கிறோம். ஆனா அப்படி இருந்தும் இன்னும் பேயாதான் பணத்துக்கு 'அலை'யிறாங்க. தலைவர் அறிவுறுத்திச் சொல்லியும் திருந்தாத இவர்களை என்னவென்று சொல்வது?
ஜாதி ரெண்டுன்னு
சொன்னது அவ்வை சொன்னது
அங்கேயே நின்னுது
தர்மம் என்ன பண்ணுது?
எவ்வளவு உண்மை! ஜாதி அவ்வையோடு ஆயிடுச்சே!
தத்துவத்தை படிக்காதே தேங்காய் சாமி
ஜாதி பேதம் பார்ப்பதில்லை நம்ம சாமி
அட அம்மன் சாமி!
அம்மன் சாமி வேலை பாரு
ஆமாம் சாமி வேலை எதுக்கு?
'ஆமாம் சாமி' போட்டு கவிழ்த்தவர்களை தலைவருக்குத் தெரியாதா? அம்மன் முன்னால் நடந்த அக்கிரமத்திற்கு, அட்டூழியத்திற்கு அங்கேயே கொடுவாளால் பழி தீர்த்த 'பராசக்தி' மைந்தனுக்குத் தெரியாதா'? எந்த கவிழ்ப்புக்கும் மயங்காத, கண்ணியத்துக்கு பெயர் போன 'கலைச் சக்கரவர்த்தி'க்குத் தெரியாததா? அதனால்தான் புத்தி பிசகியவர்களுக்கு இந்த புத்திமதி.
பூஜை நாலு தரம் பண்ணு
நீ ஏழு தரம் தின்னு
நீ ஊர்ப்பணத்தை தின்னா வாயில மண்ணு
உடம்பு ரப்பரைப் போல் வீங்குதடா
பூமி தாங்குதடா
சாமி எப்போதும் தாங்காதடா
கட்டி முடிச்சவன் வீட்டில இல்லடா
வீட்டுல உள்ளவன் கட்டியதல்லடா
எத்தனை சொல்லியும் புத்தி பொறக்கல டேய்... யா
http://shakthi.fm/album-covers/ta/6f6e54eb/cover_m.jpg
4-3-1978 இல் வந்த 'தியாகம்'. 50 வயசு நடிகர் திலகத்திற்கு. தண்ணியடிப்பது போல பாவனை செய்து ஆடும் ஆனந்த ஆட்டம். அன்று காலை முதல் காட்சியில் 'தியாகம்' வெளியான தமிழக தியேட்டர்கள் இப்பாட்டில் இரண்டு பட்டது. இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டமா என்று வாய் பிளந்தது ஜனம். இது நிஜம். இத்தனைக்கும் காலில் அடிபட்ட வலியுடன் ஆடுவார். ('ஜாதி ரெண்டுன்னு சொன்னது' வரிகளில் நடந்து வரும் போது காணலாம். வேதனையை வெளிக்காட்டாமல், ஆட்டத்திலும் சோடை போகாமல் வலியுள்ள காலை மேலே உயர்த்தி பேலன்ஸ் செய்வார் அழகாக) விக்கும், மீசையும் வியக்க வைக்கும். சாதரணமான ஒரு ஷர்ட் இவருக்குள் பொருந்தி அசாதரணமான ஸ்டைலில் மிளிரும். கையில் உள்ள பாட்டிலில் தாளம் போட்டு, நெற்றியில் முடிக்கற்றைகள் விழுந்து மறைக்க, அதைக் கையால் ஒரு பக்கம் ஸ்டைலாக ஒதுக்கிவிடும் நேர்த்தி நெத்தியடி. 50 வயதில் இருபது வயது இளைஞன் போல இளக்கார ஆட்டம். படு கேஷுவல்.
உடன் கிருஷ்ணமூர்த்தியும், ஜூனியர் பாலையாவும். வி.கே.ஆரும், வாசுவும் வில்லன் கோஷ்டி. பாலாஜி இன்ஸ்பெக்டர்.
ஜாலியான பாடல். ராஜாவின் ரசிக்க வைக்கும் இசை. பாடகர் திலகத்தின் ஈடு செய்ய முடியாத நடிப்புச் சிங்கத்துகான 100% குரல். ஜாலியான நடனம், கேரளக் கரை தென்னந்தோப்புக்குள் மீண்டும் 'ராஜா'. அதே பிரம்மாண்ட வெற்றி
பாட்டு முடிந்ததும் சொந்தக்குரலில் பாலாஜியிடம் இதே பாடலை இரண்டு வரிகள் ஜோராகப் பாடிக் காட்டி வி.கே.ஆரை விரட்டுவார்.
ஜனரஞ்சகப் பாடலில் சுயவஞ்சகப் புலிகளின் முகத் திரையைக் கிழிக்கும் கருத்துக்கள்.
தலைவர் சொன்னது போல் இந்தப் புத்தாண்டில் ஜாதி பேதம் இல்லாமல் இருண்ட உலகத்தில் அறிவு விளக்கேற்றி, பணத்தாசை பித்து இல்லாமல் வாழ முயற்சி செய்து, சகோதரத்துவம் உணர்வு கொண்டு வம்பு எதுவும் இல்லாமல் அன்போடு வாழ உறுதி கொள்வோம்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
1.40 இலிருந்து 1.45 வரை பாடலை ரசிக்கலாம்.
https://www.youtube.com/watch?featur...&v=bPrQVL8kico
நண்பர் வாசு அவர்களுக்கு
புது வருடம் அன்று போடப்படும் முதல் பதிவு தனி நபர் தாக்குதலுடன் ஆரம்பிக்க வேண்டுமா ? என்று கேட்டு உள்ளீர்கள். மறக்க முடியாத 2015 ம் ஆண்டின் முதல் பதிவு கீழ் வரும் பதிவு
திரு கோபால் அவர்களுக்கு
தேவை இல்லாமல் என் பெயரை இழுக்க வேண்டாம்.அனாவசியமாக கீழோரின் வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் .நீங்கள் திரியில் தொடர்வதால் எனக்கு துக்கமோ அல்லது திரியில் இருந்து விடை பெற்று கொள்வதால் சந்தோஷமோ கிடையாது . உங்களை திரியை விட்டு நான் போக சொல்லவில்லை. இங்கு எல்லோரும் சக பதிவர்கள் . யாரும் கருத்து எழுதலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்தந்த கருத்தை அவரவர்கள் அவரவர்கள் பாணியிலே வெளிபடுதுவார்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கருத்து பிடிக்கவில்லை,கருத்தில் பிழை இருக்கிறது என்று சொல்லத்தான் உங்களுக்கு உரிமை உண்டே தவிர தனி நபர் தாக்குதல் என்பது 'நான் நிரம்ப படித்தவன்' என்று சொல்லி கொள்ளும் ஒருவருக்கு அழகல்லவே. இதை விட கேவலமாக எழுத எல்லோராலும் எழுத முடியும் ஆனால் படித்தவர்கள் யாரும் அப்படி எழுத மாட்டார்கள்.
நண்பர் ரவியின் பதிவு நான் ரசித்த பதிவு .அதற்கு என் பாராட்டை என் பாணியில் தெரிவித்தேன். எனக்கு தெரிந்து அந்த பதிவில் அவர் எங்கும் உங்கள் பெயரை உபயோகித்ததாக தெரியவில்லை. இதுவும் அவருக்கு வக்காலத்து வாங்கி கொண்டு எழுதவில்லை. என்னை பொறுத்த வரையில் அந்த பதிவு உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி போடப்பட்ட பதிவாகவே நான் கருதவில்லை. மேலும் நண்பர் ரவியின் தொடர்பான என் எதிர் பதிவு உங்களை எந்த விதத்தில் காயபடுதுகிறது என்பதும் புரியவில்லை. 'மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் ' என்று சொல்வார்கள். நீங்களாக அந்த பதிவு உங்களை தாக்கி போட்ட பதிவு என்று நினைத்து கொண்டால் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பாளி ஆக மாட்டேன்.
இறுதியாக ஆனால் உறுதியாக சொல்கிறேன் 'நீங்கள் என்னை புத்திசாலி என்று அழைக்க வேண்டும்' என்று நானும் என்றும் கருதியதும் இல்லை . ஆனால் என்னை 'அல்லக்கை,சூடு சொரணை அற்றவன்' என்று சொல்வதற்கு உங்களுக்கு எந்தவிதத்திலும் உரிமையும் கிடையாது.உங்களுக்கு அந்த தகுதியும் கிடையாது.
ஏற்கனவே நடிகர் திலகம் திரியில் நண்பர் ஒருவர் 'உங்களுக்கு இந்த திரி சரி வராது. நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க போவதாக சொன்னீர்களே எப்போது ஆரம்பிக்க போகிறீர்கள் ' என்று ஒரு பதிவு போட்டு அதை படித்தவன் என்ற முறையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மணி வாசகமான திருவாசகத்துடன் முடிக்கிறேன் .
'மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானமுள்ள தமிழனுக்கு அவ்வை சொன்னது
அவ்வை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது '
கிருஷ்ணா,
உங்களை விட்டது தவறு என்று எல்லோரும் சொல்லும் அளவு அறுத்து தள்ளி விட்டீர்கள்.இந்த அழகில் கர்வம் வேறு. உங்கள் நிறுவனத்தில் உங்கள் இணைப்பையே துண்டித்து விடுவதால்,சற்றே எல்லோரும் அயர்ந்து நிம்மதியாக இருந்தார்கள்.என்னவோ சம்மந்தா சம்மந்தமில்லாத பதிவுகளால் ,கார்த்திக்,என்னை வெறுப்பேற்றி ,நாங்களாக வெளியேறுகிறோம்.
ஆனால் நான் போட்ட பதிவுகள் என் சொந்த கருத்தென்று நீங்கள் எண்ணியிருந்தால் நீங்கள் முழு முட்டாள்.அது குறைந்தது அறுவரின் கருத்து.(இந்த அறுப்பவரை அறுத்து விடுங்கள் என்ற அறுவர் விண்ணப்பம் வைத்ததால் ,நான் பணம் வாங்காமல் செய்த பொதுசேவை)இதை முதலில் நாசூக்காக சொன்னவரே கார்த்திக்.(நாசூக்கு,உங்களிடம்)
ஆனால் என் பணியில் தோற்று விட காரணம், கரப்பான் பூச்சிகளை அழிப்பது கடினம்.உண்ணிகளை அழிப்பது அதை விட கடினம்.
உங்களை வீட்டில் நுழைய விட்டதற்கு வீட்டின் பெயரையே மாற்றி உங்கள் போர்டு போட்டு விட்டாயிற்றே." மயக்கும்"என்ற வார்த்தை எப்போது கவரும் ஆனது?
‘ஆங்கார உள்ளமே, அமைதியும் பெறுமே....’
திரு. சின்னக் கண்ணன் சார் அவர்களுக்கு,
என் எழுத்துக் கலை வரும் ஆண்டுகளில் மேல் மேலும் பிரகாசிக்கட்டும் என்று வாழ்த்தியதற்கு நன்றி. புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசியும் கொண்ட நாளில், தமிழ் கற்றறிந்த உங்களிடம் இருந்து கிடைக்கும் வாழ்த்து அந்த ‘சின்னக் கண்ணனே’ வாழ்த்தியது போலிருந்தது. நன்றி.
என்றாலும், ‘ராம நாடக கீர்த்தனைகள் பற்றி வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள்’ என்ற உங்கள் பாராட்டுக்கு நான் தகுதி உடையவனல்ல. அந்த கட்டுரை நான் நெட்டில் படித்து ரசித்தது. அதை நான் குறிப்பிட்டும் இருக்கிறேன். இவற்றையெல்லாம் ஆழ்ந்து படித்து வருகிறேன். உங்களின் வாழ்த்துக்களோடு விரைவில் அது குறித்து எழுதுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நன்றி.
திரு.கோபால்,
நீங்கள் திரும்பி வந்தது மகிழ்ச்சி. திரு.ரவி சாருக்கு நான் கொம்பு சீவி விடுவதாக கூறியிருக்கிறீர்கள். அவருடைய பதிவு நன்றாக இருந்ததால் பாராட்டினேன். மற்றபடி, கொம்பு சீவி விடவில்லை. பதிவுகளை வைத்துப் பார்க்கையில் அவர் ஐதராபாத்தில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேனே தவிர, அவர் எப்படி இருப்பார், என்று கூட எனக்கு தெரியாது. பேசியதும் இல்லை. அவர் மட்டுமல்ல, திரு.வாசு சார், திரு.ராகவேந்தர் சார், திரு. கிருஷ்ணா சார், திரு. சின்னக் கண்ணன் சார் யாரையுமே எனக்கு தெரியாது. அவர்களை விடுங்கள். உங்கள் பதிவுகளில் இருந்து வியட்நாமில் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டேனே தவிர, உங்களையும் எனக்கு தெரியாது. கருத்து மாறுபாடு காரணமாக உங்களை கருத்து ரீதியாக தாக்க வேண்டுமென்றால், நீங்களே கூறியபடி நானே தாக்குவேன். யாரையும் கொம்பு சீவி விட மாட்டேன்.
நான் ஒருவருடன் விவாதிக்கிறேன் என்றால் அவர் எனக்கு சமமாகவோ, என்னை விட உயர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்று நினைப்பேன். என்னிடம் இல்லாத சில திறமைகள் உங்களிடம் இருப்பதை பார்க்கிறேன். உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.... ஆக்கபூர்வமாக. நன்றி.
திரு. ரவிக்குமார் சார், திரு.கிருஷ்ணா சார்.
நீங்கள் இருவரும் திரு.கோபாலை குறிப்பிடவில்லை என்றாலும் கூட, அவரை மீண்டும் திரிக்கு கொண்டு வரும் சக்தி உங்கள் எழுத்துக்களுக்கு இருக்கிறது. பாராட்டுக்கள்.
திரு. வாசு சார்,
திரு. சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த வணங்காமுடி படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
‘ஓங்காரமாய் விளங்கும் நாதம்..’. அருமையான பாடல். சிற்பம் செதுக்கும் இடத்துக்கு திரு.சாவித்திரி செல்லும்போது திரு.சிவாஜி கணேசனுடன் இருக்கும் திரு.தங்கவேலுதான் பாடியதாக அவரை நம்ப வைப்பார்கள். இருவரையும் அரசவைக்கு கொண்டு வந்து பாடச் சொல்லும்போது, தங்கவேலு விழித்தபடி சமாளிப்பார். பாடு என்று சொல்லி சேனாதிபதியாக இருக்கும் திரு.நம்பியார், தங்கவேலுவின் கன்னத்தில் அறைவார்.
அதுவரை சாவித்திரியை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் திரு.சிவாஜி கணேசன் நண்பனுக்கு அடி விழுந்தவுடன் அவரை அணைத்தபடி, பாடுவார். அதுவும் அடிதாங்காமல், ‘ஆ.... ’ என்று உச்ச ஸ்தாயியில் தொடங்கி ‘பாட்டும் பரதமும் பண்பட்ட கலைகளும்... ’ என்று தொடங்கும் கருத்து மிக்க பாடல்.
ஓங்கார நாதத்தின் சிறப்பை குறிக்கும் வகையில்,
‘ஆங்கார உள்ளமே
அமைதியும் பெறுமே
நீங்காத துயர் மாறி
நிம்மதி பெறுமே....
நிகரேது.... புவி மீது..’
என்ற வரிகளும், டி.எம்.எஸ்.சின் கம்பீர குரலும் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் சிறந்த நடிப்பும், எப்பேர்பட்ட ஆங்கார உள்ளத்தையும் அமைதிப்படுத்தும்.
இந்தப் பாடலை நீங்கள் தரவேற்றினால், மகிழ்ச்சி. எனக்கு தரவேற்றத் தெரியாது. உங்களுக்கு சிரமம் கொடுக்கிறேன். மன்னிக்க வேண்டும்.
புத்தாண்டில், ஆங்காரமும், துயரமும் நீங்கி உள்ளங்கள் அமைதியும், நிம்மதியும் பெறட்டும். ஓங்காரம் ஒலிக்கட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பொங்கும் பூம்புனல்
மதுரகான நாயகரே வாசுதேவரே..
இதோ தங்களுக்கு என் புத்தாண்டுப் பரிசு..
இசை தெய்வம் மெல்லிசை மன்னரின் பெயரை ஆண்டாண்டு காலத்திற்குச் சொல்லும் பாடல்..
என் உயிரே இப்பாடலில்...
வெண்ணிலவில் கண்கவரும் ஷாஜஹானின் தாஜ்மஹல்..
https://www.youtube.com/watch?v=LHf2fkHD_TI
பொங்கும் பூம்புனல்
விரல் மீட்டாமல் இருக்கின்ற வீணை என்னாகும்..
பாடல் விளக்குகிறது..
பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை.. ஆஹா.. இசைக்கென்றே ஒரு படம்...
அண்ணன் ஒரு கோயில் ஆட்டுக்கார அலமேலு வின் ஓசையில் சுத்தமாக அடங்கி விட்டது.
இசையரசியின் குரல்...
ஆஹா... என்னென்பது..
வார்த்தைகளே வரவில்லை...பாராட்ட...
https://www.youtube.com/watch?v=BLXPGwHiUAY
பொங்கும் பூம்புனல்
வாசு சார்
இதோ இன்னோர் புத்தாண்டு பரிசு
ஈஸ்வரியின் சூப்பர் டூப்பர் பாட்டு
யாரடி வந்தார் என் எண்ணத்தைக் கொள்ள.. நீயும் நானும் படத்திலிருந்து..
https://www.youtube.com/watch?v=N6A2e2oYqvg