http://i1170.photobucket.com/albums/...ps1effaffa.jpg
Printable View
‘கொடூரமான விலை’ பதிவுக்கு பாராட்டு தெரிவித்த திரு.எஸ்.வி.சாருக்கும், சிரித்து வாழ வேண்டும் பட காட்சிகளை தரவேற்றிய திரு.சைலேஷ் சாருக்கும் மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.எஸ்.வி.சார்,
திருவண்ணாமலையில் கிருஷ்ணா திரையரங்கில் தலைவரின் நாடோடி மன்னன் படம் மறுவெளியீட்டில் 105 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 1960ம் ஆண்டு வெற்றி விழாவும் நடந்தது. நமக்கு ஏற்கனவே தெரிந்த இந்த தகவலை மறுவெளியீட்டில் எம்.ஜி.ஆர். சாதனை திரியில் இன்று நீங்கள் பதிவிட்டிருந்ததைப் பார்த்தேன். முதன் முதலில் மறுவெளியீட்டில் 100 நாள் கொண்டாடிய படம் என்ற சாதனையை படைத்தது தலைவரின் நாடோடி மன்னன்தான்.
இதையொட்டி, கிருஷ்ணா திரையரங்கில் அப்போது வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கலைஞர்களுக்கு ஷீல்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இங்கே கவனிக்கப்பட வேண்டியது தலைவரின் உயர்ந்த பண்பு. கலைஞர்களை எல்லாரும் கொண்டாடினார்கள். திரையரங்க உரிமையாளரையும் விநியோகஸ்தரையும் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியதற்காக, படத்தின் விநியோகஸ்தருக்கும், கிருஷ்ணா திரையரங்கு உரிமையாளர் திரு. கிருஷ்ணா ரெட்டிக்கும் யாரும் எதிர்பாராத வகையில் தலைவர் தனது காரில் இருந்து ஷீல்டுகளை கொண்டு வரச் செய்து இருவருக்கும் அவற்றை வழங்கி கவுரவித்தார். இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்