super design. Makkal thilagam MGR looks very handsome. Thanks Ravichandran sir
Printable View
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் .
சங்கே முழங்கு - கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
நல்ல நேரம் - சின்னப்பா தேவர் மற்றும் ஜஸ்டினுடன் மோதும் சண்டை காட்சி .
ராமன் தேடிய சீதை - அசோகனுடன் மோதும் காட்சி .
நான் ஏன் பிறந்தேன் - ஓட்டலில் நம்பியாருடன் மோதும் காட்சி .
அன்னமிட்ட கை - கம்பு சண்டை
இதய வீணை - மனோகருடன் மோதும் காட்சி .
உலகம் சுற்றும் வாலிபன் - மனோகர் - ஜஸ்டின் - அசோகன் - ஸ்கேடிங்
4 சண்டை காட்சிகள் .
நேற்று இன்று நாளை - நம்பியாருடன் மோதும் சண்டை காட்சி .
உரிமைக்குரல் - கிளைமாக்ஸ் சண்டை காட்சி
சிரித்து வாழ வேண்டும் - ஜஸ்டின் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
நினைத்ததை முடிப்பவன் - மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் காட்சி .
நாளை நமதே - க்ளைமாக்ஸ் சண்டை காட்சி .
இதயக்கனி - ஜஸ்டின் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
பல்லாண்டு வாழ்க - நம்பியார் மற்றும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி
நீதிக்கு தலை வணங்கு - ராமதாசுடன் மோதும் காட்சி .
உழைக்கும் கரங்கள் - மான் கொம்பு சண்டை காட்சி .
மீனவ நண்பன் - நம்பியாருடன் மோதும் காட்சி .
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - பி .எஸ். வீரப்பா , நம்பியார் , ஜஸ்டின் மூன்று சண்டை காட்சிகள் .
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - சரோஜாதேவி நிழற் படங்கள் .
http://i61.tinypic.com/a9trw4.jpg
இனிய நண்பர் திரு குமார் சார்
உங்களுக்கு [எங்களுக்கும்] பிடித்த மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் லிஸ்ட் அருமை ..
திரு தெனாலி அவர்களின் கவிதை - இனிமை
திரு ரவிச்சந்திரன் வழங்கிய மக்கள் திலகம் ஸ்டில் - புதுமை
MAKKAL THILAGAM SUPER DANCE SCENE . OLIVILAKKU . MELLISAI MANNAR MSV SUPERB MUSIC.
https://youtu.be/E9gFrOlgC9E
" மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்." இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.
அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார். .
இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.
- திரு காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து