-
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி -
இங்குஇயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
பாடல் வரிகள்
சத்தியமான வரிகள்
மக்கள் திலகத்தின் புகழ் இன்றும் ஜாதி -மொழி -இனம்- கடந்து புகழ் பரவி உள்ளது .
-
விண்ணும் அழுதது , மண்ணும் அழுதது
மன்னவன் மறைகையிலே - நகக்
கண்ணும் அழுதது , கவிதையும் அழுதது
காவலன் பிரிகையிலே !
இப்படி ஒருவன் பிறந்ததில்லை
இனியும் ஒருவன் பிறப்பதில்லை !
சந்திர , சூரியர் வாழ்கின்ற வரையிலும்
சந்திரன் புகழ் இருக்கும் ;
ராமச்சந்திரன் என்னும் பேருக்குள்ளே
சரித்திரம் ஒளிந்திருக்கும் !
= கவிஞர் வைரமுத்து .
-
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை -
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை
மக்கள் திலகத்தின் புகழ் - செல்வாக்கு அவரை தேடி வந்தது . மக்களும் மக்கள் திலகத்தை மனதார ஏற்று கொண்டு எங்கவீட்டு பிள்ளையாக கருதினார்கள் .அவர் மறைந்து 26 ஆண்டுகள் பின்னரும் எம்ஜிஆரின் புகழ் இன்னமும்ஜெக ஜோதியாக பிரகாசத்துடன் இருப்பதற்கு காரணம் எம்ஜிஆர எல்லா மொழி , இனத்தவரிடம் காட்டிய
பரிவு - பாசம் என்பது முக்கிய காரணம் .
-
967 தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது.
= தகவல் : சு.திருநாவுக்கரசு , திராவிட இயக்க ஆய்வாளர் . —
-
முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல் அவர் அமரராகும் வரை…அந்த 11 ஆண்டுகளில் 1 சென்ட் நிலமோ அல்லது வீடோ..இந்தத் தமிழ்நாட்டிலோ, வேறெந்த மாநிலத்திலோ அவர் வாங்கியது கிடையாது. அதேசமயம் திரையுலகில் இருந்தபோது தான் சம்பாதித்த சொத்துக்களை மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நலனுக்கும், கட்சிக்கும் என தமிழக மக்களிடமே திருப்பிக் கொடுத்து லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர்போல இடம் பிடித்தவர் வேறு யாரும் கிடையாது. ஏனெனில் தான் சம்பாதித்த மாபெரும் சொத்து மக்கள் செல்வாக்கு என்பதைத்தான் அவர் மதித்தார், அதில் துளிகூட கீறல் விழாமல் கடைசிவரை காத்தார்.
-
-
PATHU VARUDAM SOORIYANAI PINNUKU THALLIYA ENGAL SRI RAMA CHANDRAN
http://i1170.photobucket.com/albums/...pse10e62e9.jpg
-
-
-