-
நான் கண்ட தலைவன் 1985
என் சிறு வயதில் எங்க வீட்டில் தலைவரின் புகைப்படம் நிறைந்து இருக்கும் அதில் இருந்து எப்படியும் தலைவரை பார் க்க வேண்டும் என்ற ஆவல் ஆசை எனக்கு இருந்தது
எனக்கு இதய தெய்வத்தை கான வேண்டும் அதற்க்காக என் தந்தையுடன் நானும் எனது அண்ணன் எனது அத்தான் முவரும் சென்னை சென்றோம்
என் தந்தை சுற்றி பார்த்து விட்டு வாங்கள் என்றார் நான் தலைவரை தான் பாக்க வேண்டும் என்றேன்
என் தந்தையின் உடன் இருப்பவர் சட்டமன்றத்திற்க்கு கூட்டி சென்றார் காலரில் அமர்ந்து காத்து கொன்டு இருந்தேன் முதலில் மாண்புமிகு ப உ சன் முகம் வந்தார் அடுத்து நாவலர் வரும் போது அவை உறுப்பினர் எழுந்து நின்றனர் நானும் தலைவர் வந்து விட்டார் என்று கை தட்டினேன் அருகில் இருந்த என் அண்ணன் இல்லை என்றார்
சரி தலைவர் வரும் வரை காத்து இருந்தேன் அவை நடந்தது மக்கள் திலகம் வரவில்லை எனக்கு ஏமாற்றம் தான் பார்வை நேரம் முடிந்து விட்டது
மிகுந்த வருத்தம்
மாலை 5மணி இருக்கும் என் தந்தை கிளம்புங்கள் என்றார் தலைவரை பார்க்க கார் வந்தது ராமனின் அவதாரம் தலைவர் என்றால் தலைவனின தோட்டம் ராமா வர தோட்டம் சென்றோம் என் தேடல் தலைவர் பற்றியே இருந்தது
7மணி அளவில் பெரியவர் ஆர் எம் வி வந்தார் அடுத்து நான் தேடிய தலைவன் வந்தார் தெய்வத்தை கண்டது போல் இருந்தது உணவு உண்ட பிறகு புகைப்படம் எடுக்கபட்டது என்னை எனது தந்தை தங்க தலைவரிடத்தில் அறிமுகம் செய்தார் தலைவர் நான் பெயர் சூட்டிவன் தானே என்றார் இல்லை இரண்டாவது மகன் என்றார் 9ஆண்டுகளுக்கு முன் எனது அண்ணனுக்கு பெயர் சூட்டிய தை நிைவைு படுத்தினார்எனது அண்ணன் நான் எனது அத்தான் முவரும் புகைப்படம் எடுததோம் அது காண வில்லை தலைவரை பார்த்த நாபகம் மட்டும் மறையவில்லை
இந்த புகைப்படம் மட்டும் என் இல்லதை இன்றும் அலங்கரித்து கொண்டுள்ளது
-
-
எம்ஜிஆர் பாடல்கள் என்றென்றும் ...
உற்சாகம்
நேர்மறை சிந்தனை
எளிமையான வரிகள்
சமூக சீர் திருத்த கருத்துக்கள்
இனிமையான இசை
மனதில் ஊடுருவும் எம்ஜிஆர் பிம்பம
நினைவில் நிலைத்து நிற்கும் காட்சிகள் .
இப்படி பல காரணங்கள் சொல்லி கொண்டே போகலாம் . என்னதான் உயர்கல்வி பெற்று , உயர்ந்த இடத்தில இருந்தாலும்
வயது ஏறிக்கொண்டே போனாலும் ,,இயற்கை குணங்கள் ( ஆத்திரம் , வன்மன் , கோபம் , எரிச்சல் ,தூண்டுதல் } கொண்டோர்களை மக்கள் திலகம் தன்னுடைய பாட்டின் மூலம் அறிவுரை கூறியுள்ளார் . திருந்துபவர்கள் உணர்வார்கள் .திருந்தாத உள்ளங்கள் ?
கடவுள் செய்த பாவம் .....
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம்
யாவும் என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் கொண்ட கோலம் ..ம் ..
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான் ..........
கடவுள் செய்த ................
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும் ..........
கடவுள் செய்த ................
கொடுப்பவன் தானே மேல் ஜாதி
கொடுக்காதவனே கீழ் ஜாதி
படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான்
பாழாய்ப்போன இந்த பூமியிலே
நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும் .ம் ...உலகம் உருப்படியாகும் ..........
கடவுள் செய்த ................
-
தலைவரின் தனிப்பெரும் சாதனை
தலைவர் ஏழை மாணவர்கள் மீது தனி பற்று உடையவர் 1980 களில் கல்லூரில் பணகாரர் மட்டும் சேர்ந்து படிக்கும் காலம் அது தலைவரின் தனி பெரும் முயற்ச்சி போக்குவரத்து தொழிலளர் வீட்டு பிள்ளைகள் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு அதற்க்கு மேல் இளநிலை முது நிலை இவை களில் தான் சேர்வர்கள் ஒரு மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகுவது சிரமம் அதனை போக்க என்ன?வழி என்று கவலை நம் காவியத்தலைவர்க்கு
தலைவர் அமைத்த பெருந்துறை போக்கு வரத்து தொழிலாளர் கல்லூரி இது தான் ஒரு பஸ்♦ நடததுனர் அல்லது ஒட்டுனர் வீட்டுபிள்ளை மருத்துவர் பொறியாளர் ஆகலாம் என்ற நிலை வந்து இக்கல்லூரி இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் செய்ய சாதனை
போக்கு வரத்து தொழிலாளர் அவரின் பிள்ளைய ♥மருத்துவரகவும ♥இன்ஞ்சினியராகவு @50% இடஒதுக்கட்டில் படிக்கலம் தொழிளாலர் வீட்டு மகனும் உயர் படிப்பு மருததுவராக இன்ஞ்சினியராக ஆகலாம் என்ற நிலை அடைய வழி செய்தார் அவர்கள் தொழிற் கல்வி கற்பிக்க பெருந்துறை அரசு பொறியல் மற்றும் மருத்துவ கலலூரி அமைத்து
ஏழையின் பிள்ளை கல்வி சிறப்பை அடைய செய்தவர் நம் பொன்மனச்செம்மல் அண்ணாவின்
இதயகனி ன் வரலாற்று சாதனை
-
-
1977 சட்டசபை தேர்தலில் சென்னை நகரில் 14 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற ஒரே இடம்ராதாகிருஷ்ணா நகர் .வெற்றி பெற்றவர் நடிகர் ஐசரி வேலன் .மற்ற 13 தொகுதிகள் திமுகவின்கோட்டையாக இருந்தது .பின்னர் படிப்படியாக வெற்றிகள் பெற்று இன்றைய தினம் சென்னை நகரமே அதிமுகவின் கோட்டையாக மாறி இருப்பதன் மூலம் மக்கள் திலகத்தின் இயக்கம் மற்றும் இரட்டை இலை . மக்கள் திலகத்தின் புகழ் என்றென்றும் மாபெரும் சக்தியாக நிலைத்து விட்டது .
-
-
http://i62.tinypic.com/2zimyq9.jpg
திரு.கோபால்,
நீங்கள் ‘கலை’ என்று குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை கூறுவது என்னைத்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களது குற்றச்சாட்டு அர்த்தமற்றது, அபத்தமானது, கற்பனையானது. கொஞ்சம் கூட உண்மையில்லை. உங்கள் கற்பனையைப் பார்த்து சிரிப்புதான் வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் ராகவேந்திரா சாரை அவரது பிறந்த நாளுக்காக அவரது நற்குணத்தை குறிப்பிட்டு வாழ்த்தினேன். அது உங்களுக்குப் பொறுக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால்தான் ராகவேந்திரா சாரை நீங்கள் குறிப்பிடும்போது மிரட்டுகிறார் என்றும், அடைப்புகுறிக்குள் பண்பு சிகரம் என்றும் கிண்டலடிப்பதிலிருந்தே புரிகிறது. உங்களைக் கூட கடந்த வாரம் திருமண நாளுக்காக வாழ்த்தினேன். உங்களை மட்டுமே வாழ்த்த வேண்டும். உங்கள் எழுத்துக்களை மட்டுமே புகழ வேண்டும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா?
‘கலை’யை ரசிக்கலாம், அதன் மீது பற்று இருக்கலாம். வாசு சார் கூறியது போல கலைப் பைத்தியமாக மாறிவிடக் கூடாது. அப்புறம் எதையும் ரசிக்க முடியாது. நல்ல ரசிகரை இழக்க நான் விரும்பவில்லை. ஏன் இப்படி என் மீது மூர்க்கத்தனமாக, சண்டை போடும் மனோநிலையில் இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை. எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, பவுராணிகர்கள் பாஷையில் சொன்னால் என் ஜாதகம் போலும். ஆனாலும், ஒரு மகிழ்ச்சி. சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் சாமானியனான என்னை நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களே?
‘நாக்கில் தேனையும் உள்ளே விஷத்தையும் வைத்துக் கொண்டு’ என்று ஏற்கனவே என்னைப் பற்றி குறிப்பிட்டீர்கள். இப்போதும் சொல்லியிருக்கிறீர்கள். கருத்து வேறுபாடுகள், ரசனை மாறுபாடுகள் இருக்கலாம். அதற்காக மற்றவர்களை வெறுக்கும் பழக்கமோ அல்லது கடுமையாக பேசும் பழக்கமோ எனக்கில்லை. எல்லாரிடமும்.... குறிப்பாக தீய குணமும் பொறாமையும் வயிற்றெரிச்சலும் கொண்டோரிடம் கூட அன்போடு பழகுபவன் நான்.
நானே கேட்க வேண்டும் என்றிருந்தேன்....உங்கள் மூத்த மகனின் திருமணம் குறித்து சமீபத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். திருமண ஏற்பாடுகள் எல்லாம் எப்படி போகிறது? நீங்கள் பிள்ளை வீட்டுக்காரர் என்பதால் அதிகம் வேலையிருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் ஒரு ஆர்வத்தில் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யாதீர்கள். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீர்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
அனைவருக்கும் வணக்கம்.
ரிக்க்ஷாக்காரன் படத்தை பற்றிய எனது கருத்துக்களை வெள்ளிக்கிழமை எழுதுவதாக கூறியிருந்தேன். பணிச்சுமைகளால் 2 நாட்களாக திரிக்கு வரமுடியவில்லை. மன்னிக்கவும். இன்று பதிவிடுகிறேன். வழக்கமாக நமது திரியை முழுமையாக படித்து விட்டு எல்லாரையும் பாராட்டுவேன். ஆனால், பணிகள் காரணமாக படிக்கக் கூட முடியவில்லை.இன்று முழுமையாக படித்துவிடுகிறேன். எல்லாருமே தலைவருக்கு சிறப்பாக புகழ் மாலை சூட்டுவீர்கள் என்று தெரியும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , விரைவில் வெளியாகிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு "
http://i60.tinypic.com/2r5x46g.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.