Originally Posted by
makkal thilagam mgr
பொன்மனசெம்மலின் 13 வது திரைப்படமாகீய "மீரா" கதைச் சுருக்கம் :
---------------------------------------------------------------------------------------------------------------------
குழந்தை மீரா வளர்ந்த வீட்டுக்கு, கண்ணன் பிறந்த புனித தினத்தில் மகான் ரூபகோஸ்வாமி வருகிறார். அவர் கொண்டு வந்த கிருஷ்ண விக்ரகம் குழந்தையின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. பால மீரா (குழந்தை பருவத்து மீரா) நந்தவன னையே (பகவான் கிருஷ்ணனை) தன் மணாளனாக வரித்து (நினைத்து) மாலையிடுகிறாள்.
மீரா யௌவனப் பிராயத்தை அடைந்த போது பாட்டன் விருப்பத்துக்கு இணங்கி மேவார் ரானாவை மணந்து சித்தூர் செல்கி றாள். சித்தூர் அரண்மனையின் அழகிய நந்த வனங்களில் உலாவும் போது, மீராவின் உள்ளம், ஓர் மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் சிறு குழலூதிய "நீல நிறத்து பாலகனை" எண்ணி எண்ணி உருகுகிறது.
ஆரம்பத்தில், மேவார் ராணா தான் கைப்பிடித்த தர்ம பத்தினியின் கிருஷ்ண பக்தியையும், அவள் பாடிய கீதங்கள் குறித்தும் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறான். போகப் போக அவனுக்கு சலிப்பு உண்டாகிறது. ராணாவின் சகோதரி உதாவும் சகோதரன் விக்ரமனும் மீராவின் போக்கு பற்றி அவனிடம் புகார் செய்து கோபமூட்டி வருகிறார்கள். சுப தசமியன்று நடக்கும் தர்பாருக்கு தான் வருவதாக மீரா வாக்களிக்கிறாள். ஆனால், தர்பாருக்கு புறப்படும்போது கண்ணன் வேய்ங்குழலின் நாதம் அவளைக் கவர்ந்திழுக்கவே மண்டபத்துக்கு பதிலாக கோயிலுக்கு போகிறாள். ராணா அளவு மீறிய கோபம் கொண்டு கோயிலுக்கு சென்று மீராவை நிந்தித்து விட்டு வேட்டைக்கு செல்கிறான்.
இதனிடையில், விக்கிரமனின் (ராணாவின் சகோதரன்) தூண்டுதலின் பேரில், உதா மீராவுக்கு விஷம் கொடுத்து விட்டு பிறகு வருந்துகிறாள். ஆனால், பகவானின் அருளால், மீராவிற்கு எந்த தீங்கும் நேராதிருப்பதை காண்கிறாள். உதாவின் மனமும் மாறுகிறது.
மற்றொரு சம்பவமாக, டில்லி பாதுஷாவின் சபையிலிருந்து, தான்ஸிங், மான்ஸிங் என்னும் இருவர் மீராவின் தெய்வீக கீதங்களை கேட்க ஆர்வம் கொண்டு, மாறுவேடம் பூண்டு வருகிறார்கள். இரவெல்லாம் கோயிலில் மெய் மறந்து இருந்த பின், பாதுஷா அளித்த முத்து மாலையை மீராவிடம் சமர்ப்பித்து விட்டு கிளம்புகிறார்கள்.
காட்டில் இருந்த ராணா திரும்பி வமட வந்ததும் விக்கிரமனும், தளபதி ஜயமல்லும் முத்து மாலையை காட்டி ராணாவுக்கு தூபம் போடுகிறார்கள்.
"அது இனி மேல் கோயில் அல்ல. பதிதர்களின் மண்டபம், பீரங்கி வைத்து இடித்து தள்ளுங்கள்" என்று ராணா உத்தரவிடுகிறான்.
ஆலயத்தை இடிக்க உத்தரவிட்டது ராணாதான் எனத் தெரிந்ததும் மீரா, "அரண்மனை வாழ்வும், அரச போகமும் தனக்கு உகந்தவை அல்ல" என்று தீர்மானித்தவளாய், தம்புராவையே துணையாகக் கொண்டு சித்தூரை விட்டு பிருந்தாவனம் செல்கிறாள். அங்கிருந்து, ரூபகோஸ்வமியுடன் துவாரகபுரிக்கு போகிறாள். வெகு காலமாய் திறக்காமல் கிடந்த துவாரகநாதனின் சந்நிதிக் கதவை திறந்து தரிசனம் அருள வேண்டும் என்று கதறுகிறாள்
ஆலயக் கதவு திறக்கிறது அடியாள் மீரா பகவானுடைய பாதக் கமலத்தில் ஐக்கியமாகிறாள்.
================================================== ================================================== =================================
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்