http://i501.photobucket.com/albums/e...psb8f1a86d.jpg
Printable View
Wonderful collection Mr. RKS. Please keep it up.
எங்கள் கர்ணன் ஓடிய படம். மற்ற நடிகரின் படம் மாதிரி ஒட்டப்பட்ட படம் அல்ல - அதுவும் ஒரே ஒரு சென்னை தியேட்டரில், ஒரே ஒரு ஷோ!!??
Regards
நடிகர் திலகத்தின் படங்கள் ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தர் மட்டுமே வாங்கி அந்த விநியோகஸ்தர் அவரை வசூல் சக்ரவர்த்தி என்று புகழாரம் சூட்டவில்லை.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பல தரப்பட்ட விநியோகஸ்தர்கள் வாங்கி அவற்றை விநியோகம் செய்து அதில் வந்த வருமானத்தில் பல தரப்பட்ட தொழில்களை (diversified பிசினஸ்) இன்றும் செய்து வருகிறார்கள்.
நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே அதிக அளவில் எந்த காலகட்டத்திலும் தயாரிக்கப்பட்டது.
நடிகர் திலகம் தயாரிப்பாளர் வசதிக்காக பல தரப்பட்ட சம்பளங்கள் நிலவில் கொண்டுவந்தவர்.
இன்று அனைவரும் பேசும் ..." இந்த நடிகர் ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் சம்பாதிக்கிறார் " போன்றவை நடிகர் திலகம் 1950இல் கொண்டுவந்ததுதான். திரைப்படம் : அந்த நாள்
அதே போல "இந்த நடிகர் திரைப்பட சம்பளமாக ஒரு கணிசமான தொகையும் அத்துடன் இந்தேந்த ஏரியாவின் விநியோக உரிமையும் பெறுகிறார் என்று கேள்வி படுகிறோமே" ..அதையும் 1950இல் நடைமுறைக்கு கொண்டுவந்தவர் முதன் முதலில் நடிகர் திலகமே.
ஆகவே நடிகர் திலகத்தின் சம்பளம் ஒரு கணிசமான தொகையுடன் சென்னை நகர் விநியோக உரிமையும் கொண்டது. அவருடைய பல படங்களின் விளம்பரங்கள் பார்த்தாலே நமக்கு உண்மை புரியும்.
இதுதவிர...இதிகாச, சரித்திர கதாபாத்திரம் என்றால் ஒரு தொகை, சமூக திரைப்படம் என்றால் ஒரு தொகை இப்படி பெற்றுவந்தார்.
தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தின் சம்பளம் இவ்வளவு உள்ளது என்பது தெரிந்தும் அவரை வைத்து தொடர்ந்து பல படங்கள் தயாரித்து அவற்றை விட அதிக லாபம் சம்பாதிக்கவும் செய்தார்கள்.
எந்த பத்து வருட காலேண்டர் எப்படி எடுத்துபோட்டாலும் அதிக நூறு நாட்கள் படங்கள் மற்றும் அதிக வெள்ளிவிழா படங்கள் கொடுத்துள்ளது நடிகர் திலகம் மட்டுமே என்பது இதிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறது.
நடிகர் திலகத்தின் வெள்ளிவிழா (175 days) படங்கள் - 1960 - 1970 வரை
1. இரும்புத்திரை - கோவை கர்நாடிக்
2. பாவ மன்னிப்பு - சென்னை சாந்தி
3. பாசமலர் - சென்னை சித்ரா
4. திருவிளையாடல் - சென்னை சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
5. தர்தி - டெல்லி - அம்பா, லிபர்ட்டி, நடராஜ், மோட்டி
பாம்பே : மினேர்வ, ஆனந்த், அசோக் மற்றும்
கல்கத்தா - இம்பெரியால்
1960 முதல் 1970 வரை நடிகர் திலகத்தின் 100 நாட்கள் திரைப்படங்கள் எண்ணிக்கை 37.
100 நாட்கள் ஓடிய படங்கள் - 1960 - 1970 வரை
1. இரும்புத்திரை
2. தெய்வபிறவி
3. படிக்காத மேதை
4. விடிவெள்ளி
5. பாவமன்னிப்பு
6. பாசமலர்
7. ஸ்ரீவள்ளி
8. மருதநாட்டு வீரன்
9. பாலும் பழமும்
10. பார்த்தல் பசி தீரும்
11. படித்தால் மட்டும் போதுமா
12. ஆலயமணி
13. இருவர் உள்ளம்
14. அன்னை இல்லம்
15. கர்ணன்
16. பச்சை விளக்கு
17. கை கொடுத்த தெய்வம்
18. புதிய பறவை
19. நவராத்திரி
20. சாந்தி
21. திருவிளையாடல்
22. மோட்டார் சுந்தரம் பிள்ளை
23. சரஸ்வதி சபதம்
24. கந்தன் கருணை
25. இரு மலர்கள்
26. ஊட்டி வரை உறவு
27. கலாட்ட கல்யாணம்
28. தில்லான மோகனம்பாள்
29. உயர்ந்த மனிதன்
30. தெய்வமகன்
31. திருடன்
32. சிவந்த மண்
33. தர்தி (ஹிந்தி)
34. வியட்நாம் வீடு
35. ராமன் எத்தனை ராமனடி
36. எங்கிருந்தோ வந்தாள்
37. சொர்க்கம்
தமிழ் திரை உலகில் அதிக நாட்கள்
அதிக வசூல்
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் என்று சாதனைகள்
புரிந்து முதலிடத்தை பெற்று சாதனைகள் நிகழ்த்தியவர் யார் என்பதை இதிலிருந்து பொதுமக்கள் புரிந்துகொள்ளலாம் .
வசூல் சக்கரவர்த்தி என்று எல்லா பத்திரிகைகளும் - வார - மாத இதழ்களும் - தயாரிப்பளர்களும் - விநியோகஸ்தர்களும் வாய் வார்த்தையால் மட்டும் கூறாமல் அவர்களது செயலால் திரும்ப திரும்ப பல புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள் நடிகர்திலகத்தை வைத்துதான் திரைப்படங்கள் தயாரிக்கலானார்கள், அவர் படங்களை தான் அதிக அளவில் விநியோகம் செய்து பயனடைந்தார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
தமிழ் திரை உலகில் நடிகர் திலகம் படங்கள் படைத்த சாதனைகள் .
1971 - 1977
1971
1. சவாலே சமாளி - அதிக தொடர்ந்த அரங்கு நிறைவு காட்சி சாதனை - வசூல் வசூல் என்று சவால் விட்டவர்களுக்கு சவுக்கடி கொடுத்த படம்
2. குலமா குணமா - அனைத்து குடும்பங்களும், பத்திரிகைகளும் பாராட்டுபெற்ற 100 நாட்கள் ஓடிய படம்
3. எந்தவித முக அலங்காரமும் இல்லாமல் ஒரு நாயகனால் நடிக்க முடியுமா ? முடியும் என்று மீண்டும் நிரூபித்த படம் மூன்று தெய்வங்கள். இதில் நடிகர் திலகம் மேக் அப் துளி கூட இல்லாமல் நடித்தபடம். மற்ற மசாலா படங்களுக்கு இணையாக வசூல் செய்த படம் !
4. பாபு - நீண்ட இடைவெளிக்கு பின் பல நட்சத்திர பட்டாளங்களுடன், பல விளம்பரங்களுடன் பரபரப்பாக வந்த வண்ண படங்களை மண்ணை கவ்வ செய்த 100 நாட்கள் மேல் ஓடிய கருப்பு வெள்ளை படம் . இரண்டு மூன்று கதாநாயகிகள் கேட்கும் நாயகர் மத்தியில் கதாநாயகி இல்லாமல் கனவு காட்சி கூட இல்லாமல் நடிப்பால் மட்டுமே ஓடிய சிறந்த படம்.
தேசிய விருதை நடிகர் திலகம் அவர்களுக்கு வேண்டுமென்றே அரசியல் காரணங்களுக்காக , காழ்புனற்சிக்காக அப்போதைய ஆட்சியாளர்கள் ஒரு சிலரை திருப்தி படுத்த சௌந்தர கைலாசம் என்பவரை பயன்படுத்தி நடிகர் திலகம் பெயரை வேண்டுமென்றே முன்மொழியாமல் இருந்தது திரை உலகில் அனைவராலும் வன்மையாக அந்தகாலத்தில் கண்டிக்கப்பட்டது.
1972 -
நடிகர் திலகம் வெற்றியின் உச்சதிலிருந்தபடியே அதீத வெற்றிப்படங்கள் கொடுத்த ஆண்டு - எந்த நடிகரும் பொறாமைப்படும் அளவுக்கு நடிகர் திலகம் வெற்றியின் வீச்சு இருந்தது .
1972 வெளிவந்த படங்கள் - 7 ..அதில் 6 படங்கள் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடியது. அந்த ஆறில் 2 படங்கள் 175 days கடந்து பெருவெற்றி பெற்றன !
1. ராஜா - தென்னகமெங்கும் புதிய வசூல் சாதனை - நடிகர் திலகத்தின் ஸ்டைல் இதுவரை திரை உலகம் காணாதது !
2. ஞான ஒளி - சென்னையில் பிளாசா அரங்கில் அதுவரை வந்த அனைத்து படங்கள் வசூல் முறியடிக்கப்பட்டன. தபால் முறையில் மக்களிடம் கேட்டறிந்து சென்னையில் மக்கள் விருப்பம் போல 5 திரை அரங்கில் வெளிவந்த திரைப்படம். தொடர்ந்து 1000 வெற்றி காட்சி சாதனை
3. பட்டிக்காட பட்டணமா - கருப்பு வெள்ளை படங்களில் தமிழகத்தில் இதுவரை அதிக வசூல் சாதனை புரிந்த படம் - 175 நாட்களுக்கு மேல் ஓடிய படம். - அதிக காட்சிகள் அரங்கு நிறைவு கண்ட படம். முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன !
4. தர்மம் எங்கே - நூறு நாள் தவற விட்ட ஒரே ஒரு படம் இந்த ஆண்டில்.
5. தவப்புதல்வன் - கருப்பு வெள்ளை படம் மீண்டும். 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிகாவியம். பாடல் அனைத்தும் புது ராகம். நடிகர் திலகம் ஆங்கில பாடல் பாடி அசத்திய படம்.
6. வசந்தமாளிகை - இந்திய மட்டுமல்ல , அண்டை நாடுகளில் கூட 250 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் பிரளயம் ஏற்படுத்திய படம்.
7. நீதி - 1972அம் ஆண்டின் கடைசி 100 நாட்கள் படம்
1973 -
பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன் , எங்கள் தங்க ராஜா , கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை - 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள்.,
1973 - நடித்த படங்கள் - 7 : 100 நாட்கள் படங்கள் - 5
1974 - வாணி ராணி , என் மகன் - 100 நாட்கள் தங்கபதக்கம் - 175 நாட்கள்
தங்கபதக்கம் - 175 நாட்கள் - அதற்க்கு முன் வெளிவந்த அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து 1979 திரிசூலம் வெளிவரும் வரை வசூலில் முதன்மையாக இருந்த திரைப்படம்.
1975 - அவன்தான் மனிதன் மற்றும் மன்னவன் வந்தானடி - 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள் !
1976 - மாறிய அரசியல் சூழல் ஏற்பட்டாலும் சிறிது செட்பாக் இருந்தாலும் உத்தமன் திரைப்படம் 100 நாட்கள் தமிழகத்தில் அண்டை நாடான இலங்கையில் உத்தமன் ஏற்படுத்திய சாதனைகள் பல - தொடர்ந்து அரங்கு நிறைவு , அதிக திரை அரங்குகளில் 100 மற்றும் 175 நாட்கள் - அங்குள்ள பத்திரிகையில் நடிகர் திலகம் என்பதற்கு பதில் வசூல் சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் என்று பதிவிடும் அளவிற்கு சாதனை.
1977 - தீபம் மற்றும் அண்ணன் ஒரு கோவில் - 100 நாட்களை கடந்து ஓடிய படங்கள் - தொடர்ந்த அரங்கு நிறைவு மற்றும் வசூல் சாதனை - அண்ணன் ஒரு கோவில் சிறிய ஊரில் கூட 100 நாட்கள் மேல் ஓடிய அருமையான குடும்ப சித்திரம் !
nadigar thilagam is the only actor who was the real box office emperor during his time !
rks
அன்பு rks சார்
இந்த போட்டோ நான் நெல்லை மாவட்ட 1968 சிவாஜி ரசிகர் மன்ற மலரில் பார்த்த நினைவு சார் . அதில் இந்த படத்தின் தலைப்பில் 'பாளையில் கலாட்டா' என்று போட்டு இருக்கும் என்று நினைவு
காதலிக்க நேரமில்லை படத்தின் 'விஸ்வநாதன் வேலை வேண்டும் '
பாடலை எங்கு பாடினாலும் நடிகர் திலகம் அவர்கள் ரசித்து ஆடுவார்கள்
என்று கேள்விபட்டேன்
மிக அபூர்வமான போட்டோ
வலது புறத்தில் வீ கோபாலகிருஷ்ணன் (டவுன் கோபி) சிரித்து கொண்டு இருப்பார்
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 4 : Action Scenes
நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைவில் வெளிவந்த சிவந்தமண் திரைப்படம் அந்தக்காலகட்டத்தில் மிகவும் வித்யாசமான தமிழ்த்திரைத்தர உயர்வுக்கு எடுத்துக்காட்டான முயற்சியாகும். தொழில்நுட்ப அடிப்படையில் நாம் பின் தங்கியிருந்தும் நல்ல திரைக்கதை அமைப்பில் அருமையான கேமரா கோணங்களிலும், மிகமிகச்சிறந்த இசையமைப்புடனும், பாடல் காட்சிகளுடனும், அரங்கமைப்புக்களுடனும், இயற்கை எழில் கொஞ்சும் வெளிநாட்டு படப்பிடிப்புடனும் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் நடிகர்திலகத்தின் சீரான நடிப்பாற்றலை முறையாகப் பயன்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த பெரும்பொருட்செலவில் தயாரான பிரம்மாண்டமான படம். வெளிநாட்டுப்படங்களுக்கு இணையாகப் பேசப்பட வேண்டும் என்ற நோக்கில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு ஹெலிகாப்டர் துரத்தலை படமாக்கியிருந்தார். நடிகர்திலகம் without a body double மிகுந்த ரிஸ்க் எடுத்து நடித்த அந்தக்காட்சி From Russia with Love (Starring Sean Connery) திரைப்படத்தை அடியொற்றியதாகும்.
https://www.youtube.com/watch?v=4oD3vvgb3vk
https://www.youtube.com/watch?v=j6OwV8cz9jE
(watch from 55:50 to 59:30) same way, the inflight fight (36:20 to 38:10) with thengai sreenivasan (!?) was inspired by Goldfinger climax plane fight.
https://www.youtube.com/watch?v=pHXevnoAciY
Pattaikada Pattanama is the highest grosser in the history of Black & White Movie.
Regards
சந்திப்பு -இரண்டாம் நாள்
இன்றைய கால கட்டத்தில் பழைய திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் pattern என்று ஒன்றை குறிப்பிடுகிறார்கள். படம் வெள்ளியன்று வெளியாகிறது. அன்று வசூல் நல்ல முறையில் இருக்கிறது. ஆனால் இரண்டாம் நாள் சனிக்கிழமை அன்று வசூல் டிராப் ஆகிறது. மீண்டும் ஞாயிறன்று பெரிய அளவில் சென்று திங்கள் செவ்வாய் என்று படிப்படியாக முடிகிறது. சென்னை மதுரை கோவை திருச்சி என்று அனைத்து நகரங்களிலும் இதே patternதான். முன்காலங்களில் வெள்ளியன்று ஆரம்பித்து சனி ஞாயிறு தினங்களில் peak-ற்கு சென்று திங்கள் அன்று sustain ஆகி பின் டிராப் ஆகும்.
நாம் சொல்ல வந்தது இப்படி இரண்டாம் நாள் சனிக்கிழமையான இன்று சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட சந்திப்பு மற்ற படங்களை விட அதிக வசூல் பெற்று முன்னணியில் நிற்கிறது. நேற்று 716 நபர்கள் பார்த்தார்கள் என்று சொன்னால் இன்று 600-க்கும் அதிகமான நபர்கள் பார்த்திருக்கின்றனர். இரண்டு நாட்களிலும் சேர்த்து 1300-க்கும் அதிகமாக பார்வையாளர்கள் வந்திருக்கின்றனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த மொத்த எண்ணிகையில் ரசிகர்கள் 20 பேர் கூட இல்லை எனபதுதான். பொது மக்கள் மட்டுமே வந்து சிறப்பித்திருக்கின்றனர்.
அரங்க நிர்வாகத்தினர் பல விஷயங்களில் அசந்து போய் பாராட்டியிருக்கின்றனர். "என்னங்க இது மார்னிங் ஷோவிற்கு லேடீஸ் வராங்க, ஆடி வெள்ளி அன்னிக்கு ஈவினிங் ஷோவிற்கு 50 லேடீஸ் வராங்க, சனிக்கிழமை நைட் ஷோவிற்கு பால்கனி டிக்கெட் 50 போகுது, அதிலும் family audience வந்திருக்காங்க, சிவாஜி படத்துக்கு மட்டும்தாங்க இப்படியெல்லாம் பாக்க முடியும்" என்று வியந்து பாராட்டியிருக்கின்றனர்.
உண்மைதானே! நமது நடிகர் திலகத்தால் மட்டும்தானே இதையெல்லாம் சாதிக்க முடியும்!
அன்புடன்
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 5 : மழலையருக்கு என்றும் 'எங்க மாமா'!
குழந்தைகள் 'வானுறையும்தெய்வத்திற்கு' சமம். 'காய்' விட்ட கோபதாபங்களை உடனே மறந்து 'பழம்' விட்டு முகம் நிறைந்த முல்லைச்சிரிப்பில் பகைவிரட்டும் பண்பு நெஞ்சங்கள்! தமிழ் திரையுலகில் எவர் மீதும் காழ்ப்போ கசப்போ இன்றி தனது குழந்தை மனப்பாங்கால் குறுகிய மனப்பான்மையில் தன்னை விட்டு விலகிச்சென்றவரையும் விரும்பி திரும்பிவந்திடும் மனநிலைக்கு வித்திட்ட பண்புக் குழந்தை NT!.
A tribute to our NT for his evergreen association with children in movies 'Enga Mama' and 'Ennaip pol oruvan'. A bonus song featuring Shammi Kapoor in the Hindi original 'Brahmachaari'!
https://www.youtube.com/watch?v=KR_0wPPEctc
https://www.youtube.com/watch?v=YzqHAAsA9h0
https://www.youtube.com/watch?v=HY9iDjNVnyY
https://www.youtube.com/watch?v=Xr4gvXXgCnU