-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
04-02-1972 வெளியான மக்கள் திலகத்தின் காவியம் "சங்கே முழங்கு" - முதல் நாள் திரையரங்கில் விற்கப்பட்ட ஒரிஜினல் பாட்டு புத்தகத்தின் பின் அட்டை தோற்றம் :
http://i58.tinypic.com/29cro6t.jpg
superb .thanks selvakumar sir
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
04-02-1966 அன்று வெளியான மக்கள் திலகத்தின் காவியம் " நான் ஆணையிட்டால் ". ஒரு சிறு தொகுப்பு :
வழக்கமாக, கதை மற்றும் காட்சியமைப்பு பற்றிதான் நாம் அலசுவோம் . சற்று வித்தியாசமாக, ஒரு மாறுதலுக்காக இம்முறை ஒவ்வொரு பாடல் காட்சி பற்றி எழுதினால் என்ன என தோன்றியதின் காரணமாக, கீழ்கண்ட தொகுப்பினை பதிவிடுகிறேன்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, கொள்ளைக் கூட்டத்தை சாந்திருந்தாலும், சிறை தண்டனை பெற்று, விடுதலையாகும் போது, ஒரு புதிய மனிதராக, புடம் போட்ட தங்கமாக மாறி, தான் சார்ந்திருந்த கொள்ளைக்கூட்டத்தினரும், திருந்தி மனம் மாற வேண்டும் என்ற எண்ணதில், நம் மக்கள் திலகம் அவர்கள் "இரு ட்டினில் வாழும் இதயங்களே ! கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள், நல்லவர் உலகம் எப்படி இருக்கும் என்பதை பாருங்கள் " என்று கருத்துக்குருடர்களின் கண்களை திறக்க, அழைக்கும்போது, அந்த கொள்ளை கூட்டத்தினரில் சிலர் மட்டுமா திருந்தியிருப்பர், நாட்டின் சில சமூக விரோத கும்பலையும் அல்லவா சிந்திக்க வைத்து திருத்த வைத்திருப்பார். இந்த பாடலின் அடுத்த பத்தியில், எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி யில்லை, அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை என்ற வரிகள் , ஒவ்வொரு மனி தனும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை நிர்ணயித்து வெற்றி பெற ஊக்கமளித்தது என்றே கூறலாம். எவர் எதை வேண்டுமானாலும் போதிக்கலாம் , ஆனால், அவற்றை மக்கள் ஏற்றுக் கொள்வது, அதை யார் அறிவுறுத்துவது என்பதை பொருத்தே. அந்த வ கையில், நம் புரட்சித்தலைவர் அவர்கள் திரைப்படங்களில் கூறிய நற் போதனைகளை, மக்கள் அங்கீகரித்து முழுவதுமாக ஏற்றுக்கொண்டனர்.
அடுத்தபடியாக, பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக, உன் திருவடி தாமரை தொடந்கிய பாதையில், தேசம் நன்மை பெறுக என்ற பாடல் திரைக்கதையை யொட்டி இந்த காவியத்தில் இடம் பெற்றிருந்தாலும், நிஜ வாழ்வில், சரியாக 19 வருடங்கள் கழித்து, அதே பிப்ரவரி 4ம் தேதி, 1985ம் வருடத்தில், நம் புரட்சித்தலைவர் அவர்கள் உடல் நலம் பெற்று, அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய போது , தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. தீர்க்கதரிசனமாக இந்த பாடல், இக்காவியத்தில் இடம் பெற்றது ஒரு தனிச் சிறப்பு.
அடுத்த பாடல் .... பாட்டு வரும், உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் ..... இந்த இனிய பாடலின் காட்சிகளில் நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் உடை மற்றும் நடைய ழகு தோற்றம், கண் கொட்டாமல், இமை மூடாமல், பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆகா, என்ன ஒரு அழகன், உலகத்திலேயே இப்படி ஒரு அழகான நடிகரை காண முடியாது என்றே கூற வைக்கிறது. ஆடியோவில் இடம் பெறாமல் போன "மனமெனும் ஓடையில் நீந்தி வந்தேன், அதில் மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன், என்று நம் தலைவர் பாட, பதிலுக்கு, அபிநயசரஸ்வதி சரோஜாதேவி அவர்கள், ஏந்திய கைகளில் இருப்பவள் நானே, இறைவனை நேரில் வரவழைத்தேனே என்று பாடும்போது, இறைவா இறைவா என்று ரசிகர்கள் நம் பொன்மனசெம்மலை பார்த்து கூக்குரலிட, திரையரங்கமே அதிர்கிறது.
தொடர்ந்து வரும் பாடல் : "நல்ல வேளை, நான் பிழைத்துக் கொண்டேன்" இந்த பாடல் காட்சியின் இடையில் வரும் ' மடி மேல் துயிலும் கொடி போல் துவளும் பேரழகை படம் பிடித்தேன் அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால் - தொட்டுப்பார்க்கையிலே உயிர் துடித்தேன் ' என்ற வரிகள் இடம் பெறும் காட்சியில், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வித்தியாசமான உடையலங்ககாரமும்,, வேகமாக , செட்டிங் மேடையின் மீது, வேகமாக, அதுவும் பக்கவாட்டில் பக்கா (PUCCA) வாக, ஸ்டைலாக (STYLE) ஏறிச்செல்லும் காட்சியிருக்கிறதே, அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நம் தலைவர்தான் ஸ்டைல் மன்னர்களுக்கெல்லாம் மன்னர், ஸ்டைல் சக்கரவர்த்தி. (ஏற்கனவே நிரந்தர வசூல் சக்கரவர்த்தி மற்றும் நிருத்தய சக்கரவர்த்தி பட்டங்கள்) பாடலின் ஆரம்பக்காட்சியில் உடுத்தியிருக்கும் வெள்ளை பாண்ட் மற்றும் வெள்ளை சட்டையுடன் அருமையான தொப்பி வேறு - WHITE & WHITE, ALWAYS BRIGHT.
http://i62.tinypic.com/28jdroj.jpg
பாடல் காட்சியின் பிற்பகுதியில், உடுத்தியிருக்கும் கருப்பு உடையை பார்த்து, அதே போன்று தைத்துக் கொண்டு திரிந்த இளைஞர்கள் ஏராளம்.
பின்னர், இடம் பெற்ற பாடல் " ஓடி வந்து மீட்பதற்கு என்ற பல்லவியுடன் தொடங்கும் "மேகங்கள் இருண்டு வந்தால், அதை மழையென சொல்வதுண்டு, மனிதர்கள் திருந்தி வந்தால், அதை பிழையென சொல்வதுண்டோ ? என்ற பாடல் காட்சியில், நம் நிருத்தய ச்க்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் காவல் துறை ஜீப்பில் அழைத்து செல்லப்படும் போழ்து, வெளிபடுத்தும் முக பாவனை இருக்கிறதே ! மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு காட்சிக்கு இது ஒன்றே போதும், உதாரணமாக காட்டுவதற்கு.
இறுதிப்பாடலாகிய "நான் உயர உயரப் போகிறேன், நீயும் வா" காட்சி படமக்கப்பட்ட விதமும், காமிரா கோணமும் வெகு அருமை. இந்த பாடல் காட்சி , விளம்பரத்தில் கையாளப்பட்டிருப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம், அதன் தன்மை குறித்து. கொள்கைப்பாடல்களும், காதல் பாடல்களும் இடம் பெற்றால் மட்டும் போதாது, சற்று வித்தியாசமாக ஒரு போதைப்பாடலும்
(இதே பிப்ரவரி 4ம் தேதி வெளியான 1972ம் ஆண்டு காவியம் "சங்கே முழங்கில்" வரும் சிலர் குடிப்பது போலே நடிப்பார் போன்ற பாடல் காட்சி) இருக்க வேண்டும் என எண்ணியிருப்பார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. ,
" நான் ஆணையிட்டால் " காவியத்தில் இடம் பெறாமால் விடுபட்ட அருமையான காதல் பாடல், வித்வான் வே. இலட்சுமணன் இயற்றி எ.ம். எஸ். வி. மற்றும் சுசீலா பாடியது. :
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே !- ஹஹா .... ஹஹா - என்னைத்
தடு த்து தடுத்து வெட்கம் மறைக்குமே
நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமே .... உன்னை
நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமே (கொடுக்க)
நினத்தேன், உடன் பார்த்தேன் ... மனம்
மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்
களித்தேன் சுகம் குளித்தேன் - கதை
படித்தேன் என்னை மறந்தேன் - என்னை மறந்தேன்
பாலும், புதுத்தேனும் பனிபோல் என்மேலே
படர்ந்தோட இடந்தேட அமுதாகவே பாய்ந்தாய்
என்னைக் கொடுத்தேன், என்னைக் கொடுத்தேன், (கொடுக்க)
சிரித்தாய், முகம் சேர்த்தாய் - வலை
விரித்தாய் சிறை பிடித்தாய்
அணைத்தாய் அதில் நிலைத்தாய் சுவை
அளித்தாய் - உடல் சிலிர்த்தேன் -- என்னை மறந்தேன்
சேரும் வரை நானும் சிலை போல் நின்றேனே
சிலை பேச, இசை பாட, தமிழ் போலவே சேர்ந்தாய்
என்னைக் கொடுத்தேன், என்னைக் கொடுத்தேன், (கொடுக்க) ,
இந்த காவியத்தின் இதர சிறப்புக்கள் :
1. வர்த்தக ரீதியாக பெரும் வெற்றியை கண்டு வருகிறது.
2. தமிழகத் திரையரங்குகளில், இன்றும் வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறது. சமீ பத்தில் கூட
(23-01-2015 முதல்), கோவை ராயல் திரையரங்கில் வெளியிடப்பட்டு வசூலை வாரிக் குவித்தது.
3. ஒரு பாடல் காட்சியில் மற்றொரு திரைப்படம் வெளிவருவதை விளம்பரமாக காட்டப் பட்ட பெருமை (நல்ல வேளை , நான் பிழைத்துக் கொண்டேன் பாடல் காட்சியில், வருகிறது - "அடிமைப்பெண்" என்ற மின்னொளி விளம்பரம்)
4. மக்கள் திலகத்தின் காவியம் ஒன்றில் இடம் பெற்ற பாடலின் வார்த்தையை, படத் தலைப்பாக கொண்டு வெளிவந்த காவியம். ( "எங்க வீட்டு பிள்ளை " காவியத்தில் இடம் பெற்ற 'நான் ஆணையிட்டால்' என துவங்கும் பாடல்)
5. 21 ரீல்கள் கொண்ட காவியம்.
6. அனைத்து பாடல்கலும் தெவிட்டாத தேன் விருந்து.
7. 'எங்க வீட்டு பிள்ளை' காவியத்தை தொடர்ந்து, சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த காவியம்.
திரு.செல்வகுமார் சார். அற்புதமாக அலசி மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். இன்று மதியம் நான் போட்ட பதிவிலும் நல்லவேளை... பாட்டில் சறுக்கு மேடையில் தலைவர் வேகமாக ஸ்டைலாக ஸ்டெப்ஸ் போட்டு வரும் காட்சியை கூறியிருந்தேன். அதைவிட விரிவாக அலசியுள்ளீர்கள். கடந்த தீபாவளியன்று மதுரையில் நான் ஆணையிட்டால் வெளியாகி 9 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. ஒரிஜினல் பாட்டுப்புத்தகங்களும் சூப்பர். தொடர்ந்து உங்களிடம் இருந்து இதுபோன்று எதிர்பார்க்கிறேன். நன்றி சார்.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Quote:
Originally Posted by
yukesh babu
meendum vara mattaaraa makkal thilagam ?
-
-
Quote:
Originally Posted by
Yukesh Babu
அன்னை ஜானகியுடன் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், உண்மைத்தலைவர், பாரத ரத்னா டாக்டர் புரட்சித்தலைவர் தோன்றும் அற்புத காட்சியை பதிவிட்ட திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி !
-
-
-
-
-