Originally Posted by
KALAIVENTHAN
பொன்மனச் செம்மலின் புகழ் பாடும் மக்கள் திலகம் திரி பாகம் 16 - ஐ தொடங்கியுள்ள சகோதரர் திரு.வி.பி.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அண்ணா நாளிதழ்களின் அற்புதமான ஆவண பதிவுகளுக்கும் பாராட்டுக்கள். நன்றி.
மக்கள் திலகம் திரியின் 15-வது பாகத்தை நிறைவு செய்து அரிய ஆவணங்களை பதிவிட்ட திரு.குமார் சாருக்கு நன்றிகள்.
என்ன மாயம் இது ? நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் நமது திரியின் கடந்த பாகத்தில் நான் பதிவிட்டபோது 394-வது பக்கத்தில் இருந்தது. நேற்று 6 பக்கங்கள் நிரம்பி 15வது பாகம் முடிந்து நேற்று இரவு 9 மணி அளவில் 16-வது பாகம் தொடங்கப்பட்டு, 19 மணி நேரத்துக்குள் 16 பக்கங்கள் நிறைந்து 17-வது பக்கம் வந்துள்ளது. அலுவல் நெருக்கடிகள் காரணமாக நேற்று திரியை பார்க்க முடியவில்லை. இப்போது பார்த்தால் புதிய பாகம் தொடங்கப்பட்டு இவ்வளவு பக்கங்கள் நிறைந்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். நண்பர்களின் சுறுசுறுப்புக்கு பாராட்டுக்கள்.
மய்யம் தளத்தில் 16-பாகங்களை தொட்டுள்ள முதல் திரி என்ற சாதனையும் பெருமையும் நமக்குத்தான் என்று கருதுகிறேன்.
சிவபுராணத்தில் ‘அவனருளாளே அவன் தாள் வணங்கி....’ என்று வரும். அதுபோல,
தலைவர் அருளாளே அவர் தாள் வணங்கி
சிந்தை மகிழ தலைவர் புராணம் தன்னை தொடர்ந்து பாடுவோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்