நமைக்கடித்தால் தான்சாகும் என்ப எனைக்கடித்து
யாதொன்றும் செத்ததோ இல்!
முன்னிலும் தெம்பாய்ப் பறக்கிறதே அக்கொசுவை
எங்ஙனம் செத்ததென் பேன்.
அறிவியலார் சொற்கு மறுப்பிலேன் ஆயின்
புரியாப் புதிரிதுவே தான்.
Printable View
கொசு முடிஞ்சுது..சரி..பறக்குது..
அப்புறம் அடுத்தது என்ன.. எருமைக்கும் ஒரு சிந்து எதிர்பார்க்கலாமா..
பொறுமைக் கெருமை! பொய்யாமோ என்சொல்?
அருமையில் அஃதொப்ப தில்.
கண்டாலும் தன்வழியே போமெருமை தன்னாலே
உண்டாமோ யாதும் இடர்?
பாரூட்டும் பால்தந்து நல்லெருமை! அவ்விலங்கால்
சீர்பெற்றார் செந்தமிழர் காண்!
கடித்த கொசுவையும் கண்டுகொள்ளா உள்ளத்து
எடுத்த தெருமை விருது.
செயற்பால தவ்வெருமை போற்றல் ஒருவற்
குயற்பால தோரும் கொசு.
Your expectations come true....! Enjoy it...
எருமைக் கருமையாய் ஈந்தவும் பாக்கள்
தருமே மகிழ்ச்சியைத் தான்..
பொறுமையாய்க் காத்திருக்கப் பால்போல வந்த
எருமைக் கவிதை இனிது..
அசைபோடும் அங்கிங்கே நின்றிருக்கும் ஆனால்
வசைபாட்த் தெரியாத வாயில்லா ஜீவனது
கண்ணுக்குள் கொஞ்சம் கனமாய் அமைதியையும்
திண்ணமாய்க் காட்டிடு தே
கொடுத்தீர் கொசுபற்றிக் கொள்ளாமல் இங்கே
தொடுத்தீர் எருமைக்கும் தான்..
பாருங்க நான் தான் என் க்தையை எழுதாம அல்வா கொடுத்துக்கிட்டுருக்கேன்.. நீங்க் சர்க்கரையா எழுதறீங்க..
எனவே..அடுத்து சர்க்கரைப் பொங்கல் பற்றி எழுதுக..!
நீங்கள் சர்க்கரைப் பொங்கல் கேட்ட நாள்முதலாக, சரியான வேலையாய்ப் போய்விட்டது....பொங்கல்
பா ( எதுவும் தயார்செய்ய முடியவில்லை. அலுவலகக் கணிணியும் "படுத்துக்கொண்டது". (Said to be VGA card problem....monitor goes blank after a while..)
என்றபோதிலும், இதோ சில குறட்பாக்கள். இன்னும் சிலவற்றைப் பின்பு இடுகை செய்வேன்....கைவசம் இல்லை.
=============================================
நாடோறும் சர்க்கரைப் பொங்கலை நாடுவது
நம்கோயிற் சாமிகளே ஆம். (1)
ஆண்டொருநாள் பொங்கல் நமக்கு; ஆண்டவர்க்கு
ஈண்டுதினம் வேண்டும் அது. (2)
பேருக்குச் சாமிக்குப் பொங்கலாம்; ஊருக்குள்
உண்பவர் நாமெல்லாம் தாம். (3)
சார்த்திய ஆவின்பால் சர்க்கரை பச்சரிசி
யார்க்கவை பொங்காப் பொருள் ?(4)
வெண்பருப்பு முந்திரி உள்பொதிந்து தன்சுவையை
முன்னிறுத்தும் இன்பொங்கல் சோறு. (5)
சிறுதுண்டு வாழைஇலை போதும்; பழுதின்றிச்
சர்க்கரைப் பொங்கல் உண. (6)
இனிப்புணவு நீங்குபவர் ஆயினும் நீங்கார்
தனிச்சுவைச் சர்க்கரைச் சோறு. (7)
பால்நெய் சர்க்கரை பல்சுவைச் சேர்க்கையால்
பானையள வுண்டல் அவா. (8)
எனைத்தினி தாயினும் எள்ளுக இன்னீர்
நனைத்தியலாப் பொங்கல் உணா. (9)
பசிக்குணவு வேண்டுவார் வேண்டல் புசிக்கவே
சர்க்கரைப் பொங்கல் தர. (10)
ஆவிற்கு நீரெனினும் சர்க்கரைப் பொங்கல்
நாவிற்கு இரத்தலே நேர். (11)
நிறப்பொடி தூவினும் சர்க்கரைப் பொங்கல்
மறப்பதாற் றாமை தலை. (12)
சர்க்கரைப் பொங்கல் அலாதன சார்வார்
எக்கரை சேர்ந்துதேர் வார்? (13)
பொங்கலை உண்பார் `சுவையறிவார் மற்றெல்லாம்
உண்கலை உய்விலா தார். (14)
You may scan the above and find which of them do(es) not fall into venpaa category.
Happy sarkaraip ponggal reading..
படபடவெனப் பொங்கல் படங்காட்டி நெஞ்சை
தட்தடக்கச் செய்தாரே தான்..
பொங்கிய பொங்கற் சுவையறிந்து நெஞ்சில்
தங்குமே அந்தச் சுவை..
தூக்கம் வரவழைக்கும் தேன்பொங்கல் ஆனாலும்
ஊக்கமாய் ஆன உளம்..
பாட்டொன்று கேட்டால் படபட த்தே வாழையில்
போட்டீரே பொங்கலைத் தான்..
பெய்யெனப் பெய்த மழையாக இவ்விடத்தில்
நெய்ப்பொங்கல் தந்தநீர் வாழ்..
சர்க்கரைப் பொங்கலைச் சார்ந்த சுவையெனச்
சொற்களும் பேசிய தே..
வர்றேன் வெண்பாப் பக்கம்..இன்னும் கணினி சரியாகவில்லை..அலுவலகத்தில் பகலுணவு.. வீட்டுக்காரி எனக்குப் பிடிக்காத காய்கறிப் புலவு கொடுத்து அனுப்பியிருக்கிறாள்..தயிர்சாதமாவது கொடுத்திருக்கலாம்..ம்ம் என்ன செய்ய..
புலமிக் கவர்க்குப் பசிக்கும் பொழுதில்
புலவுச் சோறதும் பொன்னாம் – நலமிக்க
நங்கையே கேளாய் தயிர்சாதம் நண்பகலில்
தங்குமே ஜாண்வயிற்றில் தான்....
என்று சொல்ல்லாமென்றிருக்கிறேன்
எனில் வெஜிடபிள் புலவ் அல்லது பிரியாணி பற்றி பாக்கள் சமயம் கிடைக்கும்பொழுதில் எழுதுவீர்களாக..
அருமையாய் போகுது இந்த திரி ... வாழ்த்துக்கள் ....
நேயர் விருப்பங்களும் பலே...
உங்கள் பாக்கள் தான் எனக்கு அளவுகோல் நான் எவ்வளவு கேவலமாக கிறுக்குகிறேன் என்பதற்கு.....
1. பொய்ப்புலால் உண்ணல் எதனால்? உடல்நல
வைப்புக்கோர் வித்தாம் நினைப்பு.
2.சோயாவில் சாறுபிற ஊற்றிப் புலால்போலும்
வாயாரத் தந்தார் வகை.
(Ar = to obtain.
ஆர் > ஆர (வாயார): பெற. சாறுபிற ஊற்றி : a reference to chemicals added.)
3. சாறுகளால் சாய்தலும் உண்டோ துயர்? மூளை
வீறுடையார் வேண்டும் வினா.
4. சாறூற்றிச் சட்டென்று செய்தவை உம்முடற்கு
ஊறேற்றும் என்பரே காண்..
(ஊறு ஏற்றும் = கெடுதல் செய்யும்.)
5.பேச்சாறு எனவே விலக்குக; தீச்சாறு
தூச்சாவு உறுத்தாத் துயர்.
(பே = அச்சம்; சாறு= ரசாயனப்பொருள்; தீச்சாறு = தீமை செய்யும் ரசாயனம்; தூச்சாவு , நல்ல சாவு. புற்றுநோய் முதலியவற்றால் இறவாமை.
பேச்சாறு என்பதைப் பேச்சு + ஆறு என்று எடுத்துக்கொண்டால், வேறு பொருள்படும்.)
6.மீனும் புலவும் விடுதல் ஆற்றார்பொய்
யூனை எடுத்துக் கொளல்.
7. பொய்யூன் உணவை விரும்பின் ஒருசிகையே
மெய்யள வென்று கொளல்.
8. கடிக்க, கொறிக்க, மெதுவசைப்பு தேன்குழைப்பு
பல்சுவையிற் சீனர்பொய் யூன்.
9. மரக்கறி உண்சீனர் பொய்யூன் உணவால்
சிறப்புடற் சீர்பலவும் சேர்.
10, பொரித்தும் குழம்பிட்டும் பொய்யூன் சுவைகாண்பார்
செரித்தது போற்றுதல் சீர்.
Thanks. Hope the above, you will find interesting.