அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,
நடிகர்திலகம் திரியின் 10-ம் பாகத்தில், இன்று தாங்கள் பதிந்திருக்கும், சிக்கல் சண்முகசுந்தரத்தின் குணாதிசயங்கள் பற்றிய அலசல் சிம்ப்ளி கிரேட். எவ்வளவு அணுஅணுவாக ரசித்து அவருடைய குண்நலன்களை ஆராய்ந்திருக்கிறீர்கள். அவர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷனல்ல. மனிதனுக்குரிய எல்லா பலவீனங்களும் கொண்ட சாதாரண மனிதனே என்று விளக்கியிருக்கும் பாங்கு மிக மிக அருமை.
'நாங்கள் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுத மற்ற பதிவுகள் தடையாக இருக்கின்றன' என்று சொன்னவர்கள் ஆளையே காணோம். நீங்கள்தான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.