http://i46.tinypic.com/2d1s9dv.jpg
Printable View
Puratchi thalaivar
ஜெய் சார்
1964 - படகோட்டி படம் முடிந்த கையோடு சரவணா பிலிம்ஸ் எமது அடுத்த தயாரிப்பு என்று பாட்டு புத்தகத்தில் பின் பக்க அட்டையில் பரமபிதா விளம்பரம் வந்தது .
பரமபிதா போட்டோ ஸ்டில் பல எடுக்கப்பட்டது .
நவரத்தினம் படத்தில் மானும் ஓடி வரலாம் என்ற பாடல் படமாக்கப்பட்டது . ஆனால் படத்தில் இடம் பெறவில்லை .
சர்வதிகாரி - தெலுங்கு பட வீடியோ -முயற்சி செய்கிறேன் .
ரவிச்சந்திரன் சார்
தாங்கள் பதிவிட்ட எல்லா படங்களும் சூப்பர் .குறிப்பாக படகோட்டி வண்ண படம் .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் மனதை கொள்ளை அடித்தது . நன்றி ரவி சார்
சிவகுமார் சார்
பெங்களூர் - திண்டுக்கல் நகர மக்கள் திலகத்தின் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட பிறந்தநாள் போஸ்டர் மற்றும் பதாகைகள் பதிவுகள் அருமை .
THANKS SHAILESH SIR
VERY NICE POSTER .
http://i50.tinypic.com/oppg84.jpg
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் சாதனை .
1958 வெளிவந்த நாடோடிமன்னன் 54 ஆண்டுகள் கடந்த பின்னரும் மதுரை மாநகரில் தொடர்ந்து பல வருடங்கள் பல்வேறு அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இமாலய சாதனை படைத்துள்ளது .
மதுரை மாநகரம் என்றென்றுமே மக்கள் திலகத்தின் அசைக்க முடியாத கோட்டை என்று நிரூபணம் ஆகியுள்ளது .
இந்த மாதம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளிவந்த நாடோடிமன்னன் 10 நாட்கள் ஓடி ரூ . 1,30,000 வசூலாகி வரலாறு புரிந்துள்ளது .
சற்று இடைவெளிக்கு பின்னர் சென்னை நகரில் மக்கள் திலகத்தின் 2 படங்கள் வரும் 30-11-2012 அன்று வெளியாகும் என்று தகவல்
http://i48.tinypic.com/2wh4i9e.jpg
.
1. கலங்கரை விளக்கம் - பிராட்வே
http://i48.tinypic.com/1ev0hs.jpg
2. ரகசிய போலீஸ் 115 -மகாலட்சுமி
மக்கள் திலகத்தின் மாஜிக் எண் -115
மக்கள் திலகம் அவர்கள் 1947-1977
30 ஆண்டுகளில் கதாநாயகனாக நடித்த படங்கள் 115
.http://i46.tinypic.com/29malfn.jpg
உலக சினிமா வரலாற்றில் ஒரு நடிகன் நாடாள முடியும என்ற மாபெரும் புரட்சியினை உருவாக்கி அதனை செயல் படுத்தி தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்து ,விண்ணில் மறைந்து 25 ஆண்டுகள் பின்னரும் அவரது புகழ் , அவரது ஆட்சி ,அவரது சினிமா இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பது மூல காரணம் அவர் நடித்த 115 படங்கள் .
விரைவில் அவரது 115 படங்களின் வெற்றியின் தொடர் பதிவுகள் மூலம் இந்த திரியில் பல்வேறு நண்பர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள் .
நண்பர் வினோத் சார்,
பரமபிதா & ஏசுநாதர் படங்கள் குறித்த தகவலுக்கு நன்றி.
PIC SENT by MR.RAMAMOOORTHY FROM VELLORE .
http://i50.tinypic.com/33kbpfb.jpg
மக்கள் திலகத்தின் படங்கள் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சிறு கிராமங்களில் தினசரி 2 காட்சிகளாக ஓடி கொண்டிருப்பது வியப்பாக உள்ளது .
நண்பர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஆம்பூர் , பூட்டுதாக்கு போன்ற இடங்களில் வெளியான போஸ்டர்ஸ் படத்தை மக்கள் திலகம் திரிக்கு அனுப்பி வைத்தமைக்கு நன்றி ராமமூர்த்தி சார் .
வினோத் சார்,
ராக்கெட் வேகத்தில் இந்த திரியை செலுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.
www.dinathirai.com
புரட்சித்தலைவர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கு கவியரசு கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் படமாக்கப்பட்ட பின்னரும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் வேறு சில பாடலாசிரியர்களையும் அழைத்து பாடல் எழுதச்சொல்லியிருகிறார்.
http://www.dinathirai.com/images/stories/mgr%20news.jpg
ஆனால் பல முன்னனி கவிஞர்கள் எழுதியும் திருப்தியடையாத எம்.ஜி.ஆர், ஒரு மூத்த கவிஞரை வரச்சொல்லி, உங்களால்தான் இந்த பாடலை எழுத முடியும் என்று கேட்டுக்கொண்டிருகிறார்.
கண்ணதாசன் எழுதி, படமாக்கப்பட்டுவிட்ட" நான் பொறந்த சீமையிலே நாலுகோடிப்பேருங்க, நாலு கோடிப்பேர்களிலே நானும் ஒரு ஆளுங்க -என்ற அந்தப் பாடலைக் கேட்ட அந்த மூத்த கவிஞர், “ இந்தப் பாடலே நல்லாயிருக்குதே! இதை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? ”என்று கேட்டிருகிறார்.
அதற்கு பொன்மனச் செம்மலோ, " ஆயிரத்தில் ஒருவன் என்று படம் எடுத்துவிட்டோம்! இப்போது நாலு கோடி பேர்களில் ஒருவன் என்பது மிகச் சாதாரணமாக இருக்கிரது" என்று கூறியிருகிறார்.
எம்.ஜி.ஆரின் சிந்தனையை எண்ணி வியந்த மூத்தகவிஞர் புதிய பாடல் எழுதிக்கொடுத்திருக்கிறார். அந்த பாடல் " கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்". அந்த மூத்த கவிஞர் அ.மருதகாசி.
Thank u mr.vasu for the news about kannai nambathey song.