தங்கள் கூறிய அறிவுரைக்கு மிக்க நன்றி.
அந்த அறிவுரை வரியில் ஒரு சிறு திருத்தம் திரு பரணி அவர்களே
தாங்கள் ஒத்துகொண்ட எனது திறமையை தலைவர் குறித்த விஷயத்திலும் காட்டுவேன் !
Printable View
முதலில் ராமர்
பிறகு நாயகர்
அதன் பிறகு நட்சத்திரம்
அடுத்து முருகர்?
மக்கள் திலகம் பாகம் 12 திரியில் ஒரு நண்பர் பதிவிட்ட செய்தி படிதேன்.
வெட்கப்படவேண்டிய, வேதனைபடவேண்டிய ஒரு செயல் மதியிழந்து ஒருவர நெல்லையில் செய்துவிட்டார் !
மக்கள் திலகம் திரியில் கருத்து கூறிய அந்த நண்பர் கூறியிருப்பது சரியே !
ஒரு விஷயத்தை சிலர் புரிந்து கொள்ள வேண்டும். நடிகர் திலகம் சிலை அகற்ற மறைந்தும் ஏழை எளிய மக்கள் மனதில் வாழும் மக்கள் திலகம் காரணம் அல்ல ! ஆகவும் முடியாது ! ஆகவும் மாட்டார் !
தொழில் துறையில் போட்டி அவர்களுக்குள் என்றுமே இருந்தாலும் அது ஆரொக்யமானதாக இன்று வரை இருக்கிறதே தவிர அநாகரீகமாக இன்றுவரை இருந்ததில்லை.
நடிகர் திலகமும் மக்கள் திலகமும் அவர் அவர் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்..
அப்படி இருக்கும்போது இது போன்ற தரமற்ற காழ்புனற்சியுள்ள செயலால் நடிகர் திலகதிற்கு எந்த பெருமையும் நன்மையும் பயக்காது மக்கள் திலகத்திற்கு எந்த சிறுமையும் எள்ளளவும் ஏற்படாது என்பதை உணரவேண்டும்.
மாறாக தனி மனித விரோதம் வளர வகை செய்யும்.
ஆயிரம் கருத்து - எதிர்மறை கருத்து ஒருவருக்கொருவர் இருக்கலாம் தவறில்லை. ஆனால் ஈனசெயல்கள் நிச்சயம் கண்டனத்திற்குரியவை.
நடிகர் திலகத்தின் உண்மையான ரசிகர்கள் சார்பில் எங்கள் வருத்தத்தை பதிவு செய்வதுடன் தங்களுடைய கண்டனத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்பதை மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும், அவரை தெய்வமாக போற்றும் பக்தர்களுக்கும் மக்கள் திலகம் திரியில் செய்தி பகிர்ந்த நண்பருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
சின்னப் பிள்ளையிலிருந்தே எம். ஜி. ஆரும் நானும் நெருங்கிய நண்பர்கள். என் வீட்டிற்கு அவர் வருவதும், அவர் வீட்டிற்கு நான் செல்வதும் என் தாயார் கையால் அவர் சாப்பிடுவதும், அவர் தாயார் கையால் நான் சாப்பிடுவதும் சகஜம். ஒரு கதை மாதிரி எங்கள் நட்பின் வரலாற்றைச் சொல்கிறேன்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம், 1943 – 44 ல் நான் சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கத்திலுள்ள ஒற்றைவாடை தியேட்டர் அருகில்தான் குடியிருந்தேன்.
‘லட்சுமிகாந்தன்’ நாடகமெல்லாம் நடத்தினோமே அந்த நேரத்தில், எனது வீட்டுக்குப் பக்கத்தில்தான் எம். ஜி. ஆர் அவரது தாயார், சகோதரர் எம். ஜி. சக்ரபாணி ஆகியோர் குடியிருந்தனர். அப்போதுதான் எம். ஜி. ஆர். சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்கள்.
நானும் என்னுடைய நண்பர் காகா ராதாகிருஷ்ணனும் அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அனேகமாக சாப்பாட்டு நேரத்தில் அங்கேயே இருப்போம். எம். ஜி. ஆர். ‘பசிக்கிறது’ என்றாலும், ‘இருப்பா கணேசன் வரட்டும்’ என்பார்கள். அவருடைய அம்மா அந்த அளவுக்கு அவர்களுக்கு என்மேல் பாசம்.
எம். ஜி. ஆர். இரவு நேரத்தில் என்னையும், ராதாகிருஷ்ணனையும் டவுனுக்குப் பக்கத்திலுள்ள தியேட்டருக்கு சினிமா பார்க்கக் கூட்டிச் செல்வார். திரும்பி வரும்போது, சப்பாத்தி, பால் போன்றவைகளைச் சாப்பிடுவோம். எல்லோருக்கும் அவர்தான் செலவு செய்வார். அதுபோல நீண்ட நாட்கள் இருந்தோம். பிறகு நான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவுடன் சேர்ந்துவிட்டேன்.
அண்ணாவின் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் முதலில் எம். ஜி. ஆர். நடிப்பதாக இருந்தது. அவர் என்ன காரணத்தினாலோ நடிக்கவில்லை. அண்ணா என்னைத் தேர்ந்தெடுத்தார். நான் நடித்தேன். மறுபடியும் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. சில வருடங்கள் கழித்து நான் சினிமாவில் சேரும்போது, எம். ஜி. ஆரைச் சந்தித்தேன்.
ஒரே காலகட்டத்தில் இருவரும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தோம். அதேசமயத்தில் இருவரும் அரசியலிலும் ஈடுபட்டிருந்தோம். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா? நாங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால், இருவருக்கும் ஒரே ரசிகர்கள்தான் இருப்பார்கள். நாங்கள் இருவரும் தனித்தனியே செயல்பட்டதால் அவருக்கு வேறு ரசிகர்கள், எனக்கு வேறு ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னை அவர் விமர்சிப்பார். அவரை நான் விமர்சிப்பேன். அது அரசியல் பற்றித்தான் பெர்சனலாக ஒன்றுமில்லை. பலர் இதை வைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் விரோதிகள் என்று பேசிக்கொண்டார்கள். அதைப் பற்றி நாங்கள் இருவருமே கவலைப்படவில்லை.
பல வருடங்கள் சென்ற பின் அவர் முதல் மந்திரியானார். அவர் பதவியிலிருந்த போது, பல முறை நான் சந்தித்திருக்கிறேன். அவரும் பல சம்பவங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வந்திருக்கிறார். அவர் கையால் விருதுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கும் அவருக்கும் உள்ள நட்பு என்றும் மாறவில்லை.
எனக்கு சென்னையில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதுவும் எம். ஜி. ஆரின் தோட்டத்திற்கு பக்கத்திலேயே இருக்கிறது. என் தாயார் மறைந்த பிறகு அவர்கள் நினைவாக என் தோட்டத்தில் என் தாயாரின் உருவச்சிலையைத் திறப்பதற்கு வரவேண்டுமென்று எம். ஜி. ஆருக்குச் சொல்லியனுப்பினேன். உடனே ஒத்துக்கொண்டு, தன் மனைவியுடன் வந்து எனது தாயார் சிலையைத் திறந்து வைத்தார்.
தனது தாயைப்போல் கருதிய என் அம்மாவின் உருவச் சிலையைத் திறந்துவைத்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.
இதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. தஞ்சாவூரில் எனக்கு சாந்தி கமலா என்றொரு தியேட்டர் இருந்தது. இப்போது இல்லை. அந்த தியேட்டர் திறப்பு விழாவின் போதும் ‘நானே வந்து திறக்கிறேன்’ என்று சொல்லியனுப்பினார். தஞ்சாவூர் வந்து அந்தத் தியேட்டரைத் திறந்தார். எனக்கும் அவருக்கும் நட்பும், உறவும் இல்லையென்றால், இவையெல்லாம் நடந்திருக்குமா?
= சிவாஜி - பிரபு அறக்கட்டளை வெளியிட்ட
' எனது சுய சரிதை ' என்ற நூலிலிருந்து .- Courtesy Face book
thuglaq CHO's views in this issue is worth remembering......... had there been an initiative to re-locate all statues located in the middle of the road then it is a welcome one, rather to target only one particular statue is avoidable............ taking cue out of this........ if some one would have filed a PIL to study and identify all statues similar to Sivaji statue case and give a uniform judgement for all such cases, then it would have made things different I believe.....
Dear KCS Sir.your fluent speech during the debate in Kalaignar news channel echoed views if millions of fans.Thanking the other two guests for their points.Hats off to Kalaignar Tv to give a platform to raise our voice.
Unaraadhavargalukku adhu SILAI
Adhan adaiyaalamo KALAI
Kai vaiththaal kodukka vaendi irukkum VILAI
Idhudhaan manasaatchi ullavargalin NILAI.
திரு ரவி கிரண் சூர்யா உங்கள் போன் எண்ணை என் மெயிலில் போடவும். நான் நேரில் பேசுகிறேன்.
Nakkeeran News
http://i1234.photobucket.com/albums/...ps87d7f0cf.jpg
Dear Mr.Bharani
உங்கள் போன் எண்ணை என் மெயிலில் போடவும்.
நான் பேசுகிறேன்
சிவாஜிக்கு `பால்கே' விருது: தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
சனிக்கிழமை, ஜனவரி 04, 10:15 pm ist
சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.
இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.
1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை. இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள்.
கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது. "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-
"எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.
சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.
குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.
சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.
சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான். அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன்.
அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள். குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது.
மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள். இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.
நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம். ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது. ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது.
"இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம். கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.
அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை. பின்னர் நான் எழுந்தேன்.
"இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார். "சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு.
அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.
வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார். சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.
இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி'' என்றார். நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.
மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம். குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.
இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன். தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.
தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது. மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம். ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம்.
தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி. நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ஸ் பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.
அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன். நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம். அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.
பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு. அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
Dear Mr. Ravikiran surya,
Please see your mail.
NT the legend far from any discrimination of politics or other color coating as he lives in the hearts and minds of millions of his fans apart from tamils. He is the teacher who taught the tamils how to pronounce tamil with appropriate modulations. The only actor of versatility all over the globe who brought before our eyes the characters Karnan, VPKB, .... what not? We pray, as the matter is court based, that this is time we all forgot our differences to unite for a common cause of bringing respect and honour to an incomparable legend of our times by the least of retaining his statue undisturbed!
Excellent post, Ravikiran.
Nalla vela. Indha oru virudhaavadhu avar uyirudan irukkumbodhu koduthaangale.Quote:
"அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?''
:bow: to Balachandar
& to Late Nageshwara Rao for saying:
Unmai dhaan, aana ippadi solradhukku rombave perundhanmai venum.Quote:
"சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு''
Republic day - remembering the Agilaulaganayagar Nadigar Thilagam - Courtesy Facebook Id : Anand Pandurangan
Attachment 3022
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan
Attachment 3023
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan
Attachment 3024
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan
Attachment 3025
REPUBLIC DAY - REMEMBERING THE AGILAULAGANAYAGAR NADIGAR THILAGAM - courtesy Facebook id : Anand Pandurangan
Attachment 3026
எந்த நடிகன் இவரை போல தேசியத்தை தனது திரைப்படத்தின்மூலம் வளர்த்தான்?
இன்று குடியரசு தினம்...இந்த ஒரு பாடலுக்கு நிகர் வேறு பாடல் உண்டா ? ஆனால் இவருக்கு நம் அரசும், மக்களும், நீதிமான்களும் தந்த பரிசு ?
இருந்த ஒரே ஒரு தமிழர் அடையாள சின்னத்தையும் அகற்றவேண்டும் என்பது..!
இந்த கேவலம் தமிழ்நாட்டில் தான் நடக்கும் ....பொதுமக்களே சிந்திப்பீர் !
ஆங்கிலயேன் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியை ஒப்பிட்டால் !
- Courtesy - Facebook Id : Subramanian Subbaraman
http://www.youtube.com/watch?v=zKUpbXldBA4
Hi all
I just got to see this video of Our Nadigar Thilagam's Political Outfit "Thamizhaga Munnetra Munnani" Inauguration Video though for couple of minutes. The title so apt focusing the exclusivity for Thamizhagam and Thamizh's. Unfortunately, our people did not take it serious and decided to be all along slaves of Dravidian Parties..!
http://www.youtube.com/watch?v=BOu_XJZO0Jw
இன்று இந்திய நாட்டின் குடியரசு தினம். இதை போற்றும் வகையில் நினைவு கூறும் வகையில் தேசப்பற்றை வளக்கும் வகையில்
தமிழ் கடவுள் சிவாஜி நடிப்பில் கப்பலோட்டிய தமிழன் பொதிகை தொலைக்காட்சி மூலம் உலக மக்கள் கண்டு களித்துள்ளனர்.
ந்டிப்புலக தெயவம் நடிப்பில் மகாபாரததின் பெருமை போற்றும் கர்ணன் என்ற ரீரிலிஸ் படங்களில் கின்னஸ் சாதனை படைத்த 2012ம் ஆண்டு வெளிவந்து புது படங்களுக்கே தண்ணி காட்டிய 10 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த 150 நாட்கள் சென்னையிலும் தமிழகமெங்கும் 14 திரைகளில் 50 நாட்கள் ஓடி இனி எவரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனை படைத்த சரித்திர நாயகன் உலகதமிழர்களின் மணிமகுடம் சிவாஜியின் கர்ணன் காவியத்தை ராஜ் தொலைக்காட்சி மூலம் உலக மக்கள் கண்டு களித்தனர்.
அடுத்து பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற அற்புத அவதாரத்தால் உலகையே புரட்டி போட்டஉண்மை தமிழன் சிவாஜியின் கௌரவம் காவியத்தை ஜெயா தொலைக்காட்சி மூலம் உலக மக்கள் கண்டு களித்தனர்.
இப்படி சமுதாயத்திற்காக இறைவனின் அவதாரங்களின் பெருமையை சொல்லிய நாட்ட்டுப்பற்றை வளர்க்கும் விதமாக, நாட்டுக்காக உழைத்தவர்களின் பெருமைய உலகுக்கு திரைப்படம் மூலம் உணர்த்திய ஒரே நடிகர் உலகம் போற்றும் சிவாஜி ஒருவரே - சிவாஜி ஒருவரே
இதற்கு சான்று இந்த தலைமுறை அவர்க்கு கொடுத்த இமாலய வெற்றி - கர்ணனின் விண்ணை முட்டிய வெற்றி
அன்பு தெய்வமே நடிகர் திலகமே உன்னால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை
இன்னும் 10 தலைமுறைகள் கழித்தும் உன்னால் மட்டுமே வெற்றி காண முடியும்
SUNLIFE is Telecasting on account of Republic Day, Our Nadigar Thilagam's Kappal Oatiya Thamizhan.
Who else has enacted such films so appropriate for all Indian Functions, Important Days, representing our Tradition, Culture etc., and brought laurel to the entire Tamizh Community and our Country.
Certain segment of people in Tamizhnadu may be backstabbers but not all !
நடிகர் திலகம் பிறந்தநாளை முன்னிட்டு SUNLIFE தொலைக்காட்சி ஒளிபரப்பிய " பாக்ஸ் ஆபீஸ் மன்னன் " -
நடிகர் திலகம் அவர்கள் தமிழ் சினிமாவை பொருத்தவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை உணரவைக்கும் சிறப்பு நிகழ்ச்சி.
https://www.youtube.com/watch?v=MmYciykHXMM
Dear RKS
26-1`-1966
MOTAR SUNDARAM PILLAI
http://i42.tinypic.com/1zgw3et.jpg
26-1-1972
RAJA
http://i44.tinypic.com/iveelv.jpg
என்ன சார் நடக்குது ?
நடிகர் திலகம் பாகம் -12 திரியை துவக்கி வைத்த திரு பார்த்த சாரதி
திறமையான பதிவாளர்கள்
திரு ராதாகிருஷ்ணன்
திரு ராகுல் ராம்
திரு கண்பத்
திரு சின்னகண்ணன்
திரு ரவி
திரு கோபால் - ஆய்வாளர்
திரிக்கு வருவதே இல்லை . ஏன் இந்த புறக்கணிப்பு ?
ஏற்கனவே நம்முடைய ராகவேந்திரன் சார் - வாசுதேவன் சார் மனதை பன்முக பதிவாளர் ஒருவர் மனதை புண்படுத்தி திரிக்கி வரவிடாமல் செய்து விட்டார் .
சிலை விவகாரத்தை முன்னிட்டு ஆதிராம் [எட்டில் ஒருவர்- எட்டும் அவரே ] உண்டாக்கிய குழப்பம் - உச்ச கட்டம்
எட்டு பேர் புகழ் கார்த்திக் திரிக்கு வந்து பதிவிடவும் . மற்றவர்களும் உண்மையான அடையாளத்துடன் வந்து பதிவிடவும் .
வீறு நடை போட்ட நம் திரி சிலரின் தவறான போக்கினால் திசை மாறி செல்வது வேதனை .
உரிமைக்குரல் ஆசிரியர் b.s. ராஜ் அவர்களை பாருங்கள் !
நம்முடைய கர்ணன் வெற்றியினை உருவாக்கி தந்த திரு சொக்கலிங்கத்தை, அவர் சிவாஜி ரசிகர் - கர்ணன் வெற்றி இல்லை என்று கூப்பாடு போட்டவர் இன்று நம் சிவாஜி படத்திற்கு டிவிடி தயாரித்து அமோக வியாபாரம் செய்கிறார் .
இன்று சொக்கலிங்கத்தின் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக அவருடன் கை கோர்த்து சொக்கலிங்கத்திற்கு ஆதரவு தருகிறார் .
மாற்றுமுகாம் சேர்ந்தவர்கள் இன்று நம்முடைய சிவாஜி புகழ் பாடும்போது இந்த முகாமில் உள்ளவர்கள் மவுனம் காப்பது ஏன் ?
Dear vinod sir,
thankyou very much for uploading the rare still of nt,i think this is for the movie jallikattu
உரிமைக்குரல் ஆசிரியர் திரு b s ராஜு அவர்களுக்கு
சில தினங்களுக்கு முன் மதுரை மாநகர் அலுவல் நிமித்தமாக செல்ல நேர்ந்தது. இரண்டு மூன்று தினங்கள் அங்கு தங்க வேண்டிய சூழல். ஆகையால் சில திரைப்பட cd மற்றும் dvd வாங்க அருகில் இருந்த கடைக்கு சென்றேன்.
அங்கு சென்று பார்த்ததும் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அந்த சந்தோஷத்திற்கு காரணம் தாங்கள்தான். தங்களுடைய மதிர்ப்பிற்குரிய நிறுவனம் வெளியிட்ட எங்கள் தங்கராஜா திரைப்படம் வாங்க நேர்ந்தது. ப்ரிண்டின் தரம் அபாரம்.
அனைவருக்குமே தாங்கள் மிகபெரிய மக்கள் திலக தீவிர ரசிகர் என்பது தெரியும், நான் உட்பட. அப்படி இருக்கும்பட்சத்தில் வியாபாரம் என்று வரும்போது தங்களுடைய நிலைபாட்டை தளர்த்தி நடிகர் திலகம் அவர்களின் மதோன்னத வெற்றி பெற்ற படங்களை விநியோகம் செய்து எங்களை போன்ற அவர் ரசிகர்களின் மனம் சந்தோஷப்பட வைத்துளீர்கள்.
என்னதான் கர்ணன் வெளியீடு சமயத்தில் தாங்கள், கர்ணன் படம் வெற்றியல்ல...சொக்கலிங்கம் ஒரு சிவாஜி ரசிகர் என்று அனைவரிடம் கூறினாலும், வியாபாரம் என்று வரும்போது நடிகர் திலகம் படங்களையும் விநியோகம் செய்து லாபம் பார்த்தது மிகவும் வரவேற்க்கதக்கது...
உரிமைக்குரல் ஆசிரியர் திரு ராஜ் அவர்களின் பெருந்தன்மைக்கு எமது வாழ்த்துக்கள் .
1. நடிகர் திலகத்தின் படங்களின் டிவிடி uk [உரிமைகுரல் நிறுவனம் ] வெளியிட்டு சாதனை .
2. நடிகர் திலகத்தின் ரசிகர் திரு சொக்க லிங்கத்தின் ''ஆயிரத்தில் ஒருவன் '' எடுக்கும் விழாக்களுக்கு ஆதரவு தருவது .
இதயக்கனி ஆசிரியர் சிவாஜி ரசிகராக இருந்தாலும் எம்ஜிஆர் அவர்களுக்கு பத்திரிகை போட்டு புகழ் பெற்றது போல் எம்ஜிஆர் ரசிகரான ராஜ் அவர்கள் சிவாஜிக்கு டிவிடி போட்டு
உலகறிய இரண்டு திலகங்களின் புகழ் பாடும் உரிமைக்குரல் ஆசிரியர் - திரு ராஜ், இதயக்கனி ஆசிரியர் - திரு விஜயன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .
NT with Sri Lanka then minister Thondamaan
http://i1302.photobucket.com/albums/...ps80c775d8.jpg
http://i1302.photobucket.com/albums/...ps131839eb.png
http://i1302.photobucket.com/albums/...pse58a6925.png
http://i1302.photobucket.com/albums/...psdfaa519f.png
http://i1302.photobucket.com/albums/...ps2ba048bf.png
http://i1302.photobucket.com/albums/...ps53075c66.png
http://i1302.photobucket.com/albums/...ps192d67b4.png
Thanks for our great style king Sivaji's Raja stills
Real Style begins from Nadigar thilagam only. No doubt
ஜனவரி 26 - என்றுமே நடிகர் திலகத்திற்கு ராசியாக அமைந்த நாள். அது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த பொருத்தம் இன்றளவும் தொடர்கிறது எனபதனை கடந்த 26 ந் தேதி ஞாயிறன்று நடந்த நமது NT FAnS அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா கொண்டாட்டமும் அதை உறுதிப்படுத்தியது.
T Nagar பாரத் கலாச்சார் அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கும் பின் திரையிடப்பட்ட மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்திற்கும் திரளான மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். கிட்டத்தட்ட அதில் 80% பொதுமக்கள் என்றால் அதில் பெரும்பான்மையோர் பெண்கள் என்பது சிறப்பு செய்தி. அனைத்து இருக்கைகளும் நிறைந்து விட்ட காட்சி மிகுந்த மகிழ்வை தந்தது.
சிறப்பு விருந்தினர்களாக அந்தப் படத்தில் பங்கு பெற்ற திருமதி காஞ்சனா மற்றும் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளருமான குமாரி சச்சு ஆகிய இருவரும் கலந்துக் கொண்டு நடிகர் திலகத்துடன் நடித்த போது ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். விழாவிற்கு தலைமையேற்ற கலைப்புலி தாணு அவர்கள் நடிகர் திலகத்துடன் தனக்கு உண்டாயிருந்த நட்பை சுட்டிக் காட்டி பேசியதோடு நடிகர் திலகம் அவர்களின் இறுதி காலத்தில் அவருடன் அதிக நாட்களை செலவழித்தது பற்றியும் நடிகர் திலகத்தின் இறுதி நாட்களில் அவருடனே இருந்தததைப் பற்றியும் மேடையில் குறிப்பிட்டார். விழாவிற்கு வருவதாக இருந்த சௌகார் ஜானகி அம்மா தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போய் விட்டது.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது. மக்கள் மிக ரசித்து படம் பார்த்தனர்.படம் முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் இருந்து ரசித்ததைப் பற்றி தனியாகவே எழதலாம்
ஓரு அருமையான் படத்தை நல்ல ரசிப்பு தன்மையோடு அதே அலைவரிசையில் உள்ள நண்பர்களோடு பார்த்து ரசிப்பது என்பது அருமையான அனுபவம். அது சென்ற வார ஞாயிறன்றும் கிடைத்தது என்பதும் என்றென்றும் மகிழ்வை தரக் கூடிய நிகழ்வாகும்.
அன்புடன்
தூத்துக்குடி நகருக்கு வெளியே அமைந்துள்ள முல்லை நகர் சத்யா அரங்கில் ரங்கதுரை கலக்கியது பற்றி எழுதியிருந்தோம். நடிகர் திலகத்தின் படங்கள் அங்கு பெரும் வரவேற்பு பெறுவதை பார்த்துவிட்டு சென்ற வெள்ளியன்று ஊட்டி வரை உறவு திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியிருக்கிறது. ஞாயிறு மாலை நல்ல திரளான கூட்டம் என்று நேரில் பார்த்தவர் குறிப்பிட்டார்,
தூத்துக்குடி நகருக்கு அருகாமையில் உள்ள ksps திரையரங்கிற்கு கோட்டிஸ்வரன் விஜயம்! சில நாட்களுக்கு முன்பு சொன்னது போல் திராவிட மன்மதன் கலக்கிய எங்க மாமா வரும் வெள்ளி ஜனவரி 31 முதல் திரையிடப்படுகிறது.
தமிழகத்தின் தென்திசையில் இப்படி என்றால் மேற்கு பகுதிக்கு தொழிலதிபர் ரவிகுமார் விஜயம். தொழில் மாநகரமாம் கோவையில் ராயல் திரையரங்கில் வரும் வெள்ளி 31 ஜனவரி முதல் அவன்தான் மனிதன் திரையிடப்படுகிறது.
செய்திகளை பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமஜெயம் மற்றும் நண்பர்களுக்கு நன்றி!
அன்புடன்
Dear Ravi kiran surya
Great to see your contributions and also good on your part to acknowledge the contributions of other senior eminent hubbers,