https://scontent-sin.xx.fbcdn.net/hp...6d&oe=55AE773A
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
Printable View
https://scontent-sin.xx.fbcdn.net/hp...6d&oe=55AE773A
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...04e6c226ec1a1b
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://scontent-sin.xx.fbcdn.net/hp...05&oe=55A4A4B2
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...6914ffdc468422
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
அரசியல் ..அரசியல்வாதிகள் அதுவும் குறிப்பாக இந்திய அரசியல் இதனை விமர்சிக்க இந்த நாட்டு பிரஜை என்ற முறையில் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து.
தேவையான இடத்தில் தேவையான தருணத்தில் அது நடைபெற்றால் யாருக்கும் எந்த எதிர்கருத்தும் வராது. அதே சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை தேவையற்ற தருணத்தில் சம்பந்தம் இலாத இடத்தில் பதிவு செய்வது தவறான ஒரு செயல்தான். அதில் மாற்று கருத்து கிடையாது. அந்த வகையில் திரு கோபால் அவர்கள் இந்த தருணத்தில் அவர் அவருடைய தனிப்பட்ட கருத்தை பதித்தது சரியா தவிர்க்ககூடியதா என்பது கேள்விக்குரிய ஒரு தனியான சர்ச்சயாகிவிடுகிறது.
நடிகர் திலகம் திரியில் பயணிக்கும்போது அரசியல் கருத்து அரசியல்வாதிபற்றிய கருத்து எதற்கு ? நடிகர் திலகம் அவர்களை தாக்கி ஏதேனும் கருத்து வந்தாலோ அது நேரிடையாகவோ மறைமுகமாகவோ தாகும்பட்சதிலோ, கருத்து நடுநிலயில்லாத கருத்தாக இருக்கும் பட்சத்தில் நம் கருத்தை கூறுவதில் தவறில்லை என்றும் ஒரு சாரர் நினைக்க வாய்ப்புண்டு !
எந்த வகையிலும் ஊழல் செய்யாத அரசியல்வாதி இந்த உலகத்தில் கிடையாது.
இன்றுவரை மட்டுமல்ல...இனி வரும்காலங்களிலும் மக்கள் பயன் அடையும் வகையில் திட்டங்களை தீட்டுவதோடு மட்டும் அல்லாமல் அதை வெற்றிகரமாக அதிக அளவில் செயல்படுத்தி மக்கள் பயனடைய வைத்த தமிழகத்தின் ஒரே முதல் அமைச்சராம் உண்மையான பொற்கால ஆட்சி கொடுத்த கர்ம வீரர் காமராஜர் அவர்கள் மீதுகூட இவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை promote செய்கிறார் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. விமர்சனத்திற்கு அவரும் ஆளானார்.
சமூகத்தை எந்த விதத்திலும் காமராஜர் ஆட்சிகாலம் பாதிப்படயவைக்கவில்லை பாதிப்படையவும் இல்லை. காமராஜர் என்பது காங்கிரஸ் அல்ல...காமராஜர் காமராஜரே...!
தமிழகம் எந்த அளவிற்கு இன்று பாதித்து உள்ளது என்பதற்கு சான்று திராவிடம் என்று கூறிக்கொண்டு ஆட்சிகட்டிலில் புகுந்த "திராவிட" என்று கூறிக்கொண்டு அமர்ந்த கட்சிகளின் ஆட்சி அவலம் என்று இன்றும் மக்கள் புலம்பிகொண்டுதான் இருக்கிறார்கள், அவர்கள் கொடுக்கும் காசையும் வாங்கிகொண்டு ஒசியும் அனுபவித்துக்கொண்டு...!
கர்ம வீரரை குறிசொன்ன வாய்கள் தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தை ஒன்றும் சொர்க்கபுரியாக மாற்றிவிடவில்லை, மாறாக அதிக அவலங்களுடன் தரித்திர பூமியாக மாற்றியதுமட்டும் அல்லாமல் பூரண நிலையில் சாராய உற்பத்தி, மக்களை குடிமகன்களாகி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, காலாச்சார சீரழிவை (சமீபத்திய திராவிட முட்டாள்தனத்தின், காலச்சார சீரழிவை உறுதிபடுத்தும் தாலி அறுப்பு விழா உட்பட ) தமிழகத்திற்கு தங்களுடைய அன்புபரிசாக தந்துள்ளனர். இது எவனும் மறுக்க முடியாது...மறைக்கவும் முடியாது !
இந்துக்கள் அதிகம் இருக்கும் தமிழகத்தில்தான் ஒரு முதுபெரும் அரசியல்வாதி ராமர் எந்த ENGINEERING கல்லூரியில் படித்தார் பாலம் அமைய என்று நக்கல் விடுத்தார் ! அதையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம் ..!
யாராவது ஒருவர் ஆமாம் அய்யா...ராமருக்கும் உங்களுக்கும் அடிப்படயிலயே ஒத்துபோகாது..உங்கள் கொள்கை வேறு அவர் கொள்கை வேறு ...அவர் ஏக பத்தினி விரதன்....என்று யாரவது ஒருவர் கூறினார்களா ? இல்லையே ..? இதை நாம் சொன்னால் அது அவரது சொந்த விஷயம் அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை என்பார்கள்....அதே சமயத்தில் ராமரை கிண்டல் செய்தால் அது பொதுவிஷயம் என்று நம்மை மௌனம் காக்க எதிர்பார்ப்பார்கள் ....இதுதான் திராவிட ஞாயம்...!
ஜாதி அடிப்படையில் ஏமாந்த ஒரே சாதியம் பிராமண ஜாதியை சாடும் இவர்கள்...ஜாதி வெறி கொண்ட அதற்காக வெட்டு குத்து வரை போகும் ஜாதிகளை சாடமாட்டார்கள்...காரணம் தமக்கும் வெட்டு விழுமோ என்ற பயம்...அகவே, பயந்து ஒதுங்கும் ஜாதியை பின்தொடர்ந்து இவர்கள் தாகும் வழக்கம் ! இதுவும் திராவிட ஞாயமே..!
ஒரு முன் உதாரணமாக இருக்கும் தகுதி இவர்களுக்கு அடிப்படையிலேயே கிடையாது...! இருந்தும் தமிழகம் இவர்களை இன்றுவரை காசுவாங்கிக்கொண்டு ஓசி வாங்கிகொண்டு தாங்கிகொண்டுதான் இருக்கிறது...!
தேச துரோக செயல் கூட இவர்கள் ஈடுபட்டிருப்பார்கள் பண்டித நேரு மட்டும் தக்க சமயத்தில் தலையிட்டிருக்காவிட்டால்...! இந்த உண்மை அனைவருக்கும் தெரியும்...!
இதற்க்கு முழுபொறுப்பு இந்த திராவிட சம்பந்தம் கொண்ட கட்சிகள் மட்டுமே !
இந்த திரியில் மேற்கூறிய விஷயங்கள் சம்பந்தம் உள்ளவா என்றால் இல்லை. ஆனால் இதுவும் வந்த பதிவுகளுக்கு பதில் உரைக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு conscious impact . அவ்வளவே..!
எந்த அரசியல்வாதியையும் அவர்கள் 100% யோகியம் உள்ளவர்களாக இல்லாத பட்ச்சத்தில் விமர்சனம் செய்ய குடிமக்களுக்கு உரிமை நிச்சயம் உண்டு...ஆனால் இந்த திரியில் அது தேவையா என்று ஒரு கேள்வியும் கூடவே எழுகிறது !
Rks
அரசியல் என்றுமே நடிகர்திலகத்தின் விருப்பமாக இருந்ததில்லை அதையும் தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து நெஞ்சங்களிலும் நடிகர்திலகமாக
வாழ்ந்து கொண்டிருப்பவரின் புகழ் பாடும் இத்திரியில் அரசியல் வட்டத்திற்குள் அவரை சிறை பிடித்து கொச்சைப் படுத்த வேண்டாமே!!
நடிகர்திலகம் பற்றிய விமர்சனங்களும் தற்போதைய சூழலில் காலம் கடந்தவையே ....ஒருவர் புகழை ஒருவர் மறைத்து வளரும் வரலாறில்லை என்றுரைத்த நடிக மாமன்னர் .........காலத்தை வென்று வளரும் நடிகர்களுக்கும் கலையார்வம் கொண்ட எதிர்கால சந்ததியினருக்கும் கல்வெட்டாய் திகழும் காவியங்களின் நாயகனை போற்றுவது அவர்தம் புகழ் பரப்புவது மட்டுமே இத்திரி வாயிலாக நமது குறிக்கோளாக இருப்பதே மனதுக்கு இதம்.
பதிவர்களிடையே கசப்புணர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். பதிவுகளின் நோக்கம் தமிழ் திரை வரலாற்றை சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என்ற நிலைக்கு உயர்வடைய நடிப்பு பரிமாணங்களை தனது சுவாசமாகக் கொண்டிருந்த நடிகர்திலகத்தை பெருமைப்படுத்துவதாக மட்டுமே இருத்தல் நம்மை மகிழ்வித்தவருக்கு நாம் செலுத்தும் உண்மையான இதய அஞ்சலி!
He remains the invincible emperor in our hearts!
https://www.youtube.com/watch?v=p36pPEucSyo
ஆரம்பிச்சுட்டார்யா .. பெரியார் / அண்ணா / கலைஞர் / எம்.ஜி.ஆர் மீது அரசியல் காழ்ப்புணர்வு இருந்தால் வேறெங்கோ போய் வாந்தி எடுக்கலாமே .. எதற்கு மீண்டும் மீண்டும் நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து இவர் வாந்தி எடுக்க அனுமதிக்கப்படுகிறார் என தெரியவில்லை .
என்னமோ பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக்கொண்டு ஏன்பா இப்படி மரண மொக்கை போடுறார் இந்த rks ?
என்னமோ நாட்டுல உள்ளவனெல்லாம் முட்டாள் மாதிரியும் இவர் மட்டுமே அனைத்தும் தெரிந்த அறிவாளி போல .
இது பெரியார் பூமி ..இப்படியே பொலம்பிட்டே இருக்க வேண்டியது தான் .
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
புரட்சித் தலைவர் பற்றி ஏதாவது வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார் என்று என்னைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். புரட்சித் தலைவரைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்குதான் நான் பதில் அளிக்கிறேன். இதில் என்ன தவறு இருக்க முடியும்? திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி எங்கள் திரியில் தவறாக விமர்சனம் செய்வோம்.(அரசியல் ரீதியிலேயே எடுத்துக் கொள்வோம்) ஆனால், நீங்கள் யாரும் எதிர்வினை ஆற்றக்கூடாது என்று நாங்கள் சொன்னால் அது நியாயமாகுமா?
திரு. முக்தா சீனிவாசன் அவர்களின் பேட்டி வெளியாகும் என்று சகோதரர் திரு.செல்வகுமார் சில மாதங்களுக்கு முன் கூறினார். ‘எதிர்மறையாக இருந்தால் அதை தவிருங்களேன்’ என்று நீங்களே கோரினீர்கள். இதை ஏற்றுக் கொண்டு அவர் அந்தப் பேட்டியை பதிவிடுவதை தவிர்த்தாரே? அதேபோன்ற கோரிக்கையைத்தான் நாங்களும் வைக்கிறோம்.
அரசியல் ரீதியாக புரட்சித் தலைவர் பற்றிய விமர்சனங்கள் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. எதிர்மறையான விமர்சனத்தை தவிர்க்கலாமே? என்றுதான் கூறுகிறோம். அப்படி உங்களுக்கு புரட்சித் தலைவரின் குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கை சரியில்லை என்று தோன்றினால், தாராளமாக அதைப் பற்றி நீங்கள் என்னிடமே கேள்வி கேட்கலாம். நானும் விளக்கம் அளிக்கத் தயார். அதை விட்டு, மதுரை திமுக மாநாட்டில் புரட்சித் தலைவர் ஊழலுக்கு வக்காலத்து வாங்கினார் என்று குறிப்பிட்டால், ஊழலுக்கு வக்காலத்து வாங்கியவர்களை எல்லாம் நாங்களும் பட்டியலிட முடியுமே? அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே கரண்ட் அஃபேர்ஸ் என்ற பிரிவு இருக்கிறது என்றால் நீங்களும் உங்கள் அரசியல் கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கலாமே? நானும் வந்து கலந்து கொள்கிறேன். எனக்கும் நீங்கள் ஆதரித்த 1975 அக்டோபர் 2 வரையிலான காங்கிரஸ் பற்றி நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபடுவோம்.
அதை விடுத்து, 1971-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பையே, ரஷ்ய மையால் கிடைத்த வெற்றி என்று சிவாஜி கணேசன் அவர்களின் திரியிலேயே கருத்து கூறுகிறீர்கள். அப்படி சொன்னவர்களை ‘‘நாம நல்லா தோத்துட்டோம். அதை முதல்ல புரிஞ்சுக்கங்க. அப்போதுதான், அடுத்த தேர்தலிலாவது வெற்றி பெறுவோம்’’ என்று கூறி பெருந்தலைவர் காமராஜரே கண்டித்தார் என்று திரு.சோ அவர்களும், நவசக்தி நாளிதழ் ஆசிரியராக இருந்த திரு.பி.சி.கணேசன் அவர்களும் பதிவு செய்துள்ளனர்.
திரு.செல்வகுமார் சார் சொல்வது போல, எங்களுக்கும் நண்பர்களான திரு.ராகவேந்திரா சார், திரு.ரவி சார் போன்றவர்களை திரு.கோபால் அவர்கள் கடுமையாக விமர்சிக்கும்போதும், நீங்கள் கூறினீர்களே எகிப்து அதிபர் நாசர் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வீடு தேடி வந்தார் என்று. ஆனால், நாசர் விசாரித்த பிறகுதான் நேருவுக்கே திரு.சிவாஜி கணேசன் அவர்களை தெரியும் என்று திரு.கோபால் கூறுகிறார். அதையெல்லாம் கேட்காமல், திரு.செல்வகுமாரை கேட்கிறீர்களே? நியாயமா?
நான் கடந்த வாரம் மதுரகானம் திரியிலேயே திரு.கோபால் அவர்களை கேட்டேன். ‘திரு.ராகவேந்திரா சாரின் வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா?’ உடனுக்குடன் பதில் சொல்லாதீர்கள், நேரம் எடுத்துக் கொண்டு, மறுநாள் சொல்லுங்கள். அப்போது, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களுக்கு கைகொடுக்கும். எழுத்தாற்றல் மிக்க நீங்கள் நல்ல கட்டுரைகள் எழுதினால் பாராட்டுக்கள் குவியும், நாங்களும் மகிழ்வோம்’ என்று நட்பு ரீதியில் ஆலோசனையும் கூறினேன். அவரும் பெருந்தன்மையாக அதை ஏற்றுக் கொண்டார். ‘எனக்கும் சண்டை போடுவதில் விருப்பமில்லை’ என்று கூறினார். நானும் மகிழ்ச்சி தெரிவித்தேன்.
ஆனால், 3 நாட்களில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ‘தூங்காதே, திருடாதே, ஏமாற்றாதே என்று பாடிய புரட்சித் தலைவர் செய்ததென்னவோ அதைத்தான் என்று கூறுகிறார். என்ன இது? மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக இருக்கிறதே? என்று வெறுத்துப் போய்விட்டேன். நீங்களும் கேட்க மாட்டீர்கள். நாங்களும் எதிர்வினை ஆற்றக் கூடாது என்று கூறுவது நியாயமா? என்பதை நீங்களே சொல்லுங்கள் திரு. முரளி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நேரடியாகவே கேட்கிறேன் ..இந்த திரியில் சிலரின் நோக்கம் நடிகர் திலகம் என்னும் கலைஞனை பற்றி பேசுவதா இல்லை திராவிட இயக்க எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதா ?
இவர்களின் அஜெண்டாவுக்கு காமராஜர் ஊறுகாய் .. என்னமோ இவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காமராசருக்கு நாம எதிரி போல ஒரு பிம்பத்தை உருவாக்குவது அபத்தம்.
காமராஜரின் அருமை பெருமைகளை நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய நிலமையில் எங்களைப் போன்ற திராவிட இயக்க ஆதரவாளர்கள் இல்லை .. தன்னுடைய சீடர்களுக்கு எதிராக காமராஜரை தொடர்ந்து ஆதரித்து வந்தவர் எங்கள் தலைவன் தந்தை பெரியார். என்னமோ தமிழக மக்கள் காமராஜரை தூக்கி வீசி விட்டு அண்ணாவை கொண்டுவந்தது போல அள்ளி விடுவது இன்னொன்று .. காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டதுக்கு யார் காரணம் என இ.வி.கே.எஸ் இளங்கோவனே சமீபத்தில் தெளிவாக சொன்னாரே.
அப்புறம் காமராசரை திராவிட இயக்கத்தார் அப்படித் திட்டினார்கள் ..ஐயகோ ..நாகரீகம் என்றெல்லாம் இவர்கள் அழுது புலம்புவார்கள் .. பேரறிஞர் அண்ணா பற்றி இவர்கள் பாடாத வசையா .. அரசியல் களத்தில் எதிர்வரிசையில் நின்றால் இரு புறமும் வரம்பு மீறுவது இயல்பு தான் , தவிர்க்கப்பட வேண்டியதென்றாலும் . இந்திரா காந்திக்காக காமராஜரை அம்போவென விட்டுட்டு ஓடினவனெல்லாம் இப்போது காமராஜர் காமராஜர் என கூப்பாடு போடுவதை விட , அரசியல் ரீதியாக எதிர்த்தாலும் அவரது இறுதி காலத்திலும் , அவர் மறைவிலும் கலைஞர் காட்டிய முதிர்ச்சிக்கு முன் இந்த காரியக்கார காங்கிரஸ் காரர்களின் விசுவாசம் ஒரு தூசிக்கு சமமாகாது .
அப்புறம் திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழகம் நாசமாய் போய்விட்டது ஐயகோ புலம்பல்கள் .. தேசிய கட்சிகள் தொடர்ந்து கிழித்த மாநிலங்களை விட தமிழகம் ரொம்ப நல்லாவே எல்லா துறையிலும் முன்னேறித்தான் இருக்கு .. அதனால இந்த குஜராத் மாடல் போட்டோ ஷாப் பருப்பெல்லாம் இங்கு வேகாது . பலருக்கு எல்லா தரப்பும் முன்னேறி விட்டார்களே என அரிப்பு இருக்கத்தான் செய்யும் ..அதற்கு ஒன்றும் செய்ய முடியாது .
இது நடிகர் திலகம் திரி .. அவர் பற்றி பேசுங்கள் ..உங்கள் திராவிட இயக்க எதிர்ப்பு வன்மத்துக்கு இது இடமல்ல .. தொடர்ந்தால் நான் பார்க்க நேர்ந்தால் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படும் . கேட்க ஆளில்லைன்னு ரொம்ப ஆட வேண்டாம் நண்பர்களே.
பெரும்பாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் திரைக்கதாநாயகர்கள் தனக்கு முக்கியத்துவம் இல்லாத பாடல் காட்சிகளில் தலை காட்டவே தயங்குவார்கள்Quote:
பாடல் காட்சிகளில் பார்வையாளராக நடிகர்திலகம் / NT as silent Spectator in Song Sequences
கதையோட்டத்துக்கும் காட்சியமைப்புக்கும் தேவையெனில் சாதாரணமாக வந்து போவதில் நடிகர்திலகம் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை
இதற்கு நல்ல உதாரணம் நான் பெற்ற செல்வம் திரைக்காவியத்தில் குழந்தைகள் பாடி நடிக்கும் ஒரு காட்சியமைப்பில் ஒரே ஒரு சீன் தலை காட்டுகிறார் நடிப்பின் பரம்பொருள்
https://www.youtube.com/watch?v=ZuByC_rcf_w
ஆமாம் ..இது பெரியார் பூமி தான் ..முடிந்தால் மாற்றிப் பார் ..
.......
திரு.ஆர்.கே.எஸ்.
ஒட்டுமொத்தமாக திராவிட கட்சிகளை, பெரியாரையும் அண்ணாவையும் தயவு செய்து மோசமாக தாக்க வேண்டாமே. காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டு மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்ன மந்திரிமார்களைக் கொண்டது காங்கிரஸ் ஆட்சி.
‘1967 தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்யச் சென்றபோது, தாய்மார்கள் தங்களைக் கண்டதும் அரிசியை மறைத்து எடுத்துச் சென்றனர்’ என்று அர்த்தமுள்ள இந்துமதம் தொடரிலே கவியரசர் கண்ணதாசன் கூறியுள்ளார். அது புத்தகமாகவும் வந்துள்ளது. காங்கிரசின் பெருமை இது.
1967 தேர்தலில் திமுகவோடு தனது சுதந்திரா கட்சியை கூட்டணி அமைத்து, ஒரு கையில் பூணுலை பிடித்துக் கொண்டு மறுகையால் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பிராமண சமூகத்தினரை மூதறிஞர் ராஜாஜியே கேட்டுக் கொண்ட அளவுக்கு மோசமான ஆட்சி, காங்கிரஸ் ஆட்சி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன்
நான் அதற்க்கு congress அனுதாபி அல்லவே.
காமராஜர் - அவரை நான் congress காரராக கருதவில்லை எந்தகாலத்திலும்.
எவர் என்ன சொன்னாலும் 1950 முதல் 1967 ஜூன் வரை அதாவது சுதந்திரம் பெற்று 17 வருடங்களில் தமிழகம் கண்ட முன்னேற்றம் (இன்னும் சரியாக சொல்லப்போனால் ஏப்ரில் 1954 முதல் 1957 வரை )அதன் பின்னர் தமிழகம் கண்டதில்லை. காரணம் பலர் வக்காலத்து வாங்கும் திராவிடர்களை 67 ஜூலை முதலே முட்டாளாக்கும் கழகங்கள் ஆண்டதால்தான் !
ஊழல் என்ற வார்த்தையை பெருமளவு புழக்கத்தில் கொண்டுவந்து அரசுத்துறைகளில் சரளமாக புழக்கத்தில் விட்டு பிரபலபடுத்திய கட்சிகள்தானே இவை...!
எலிக்கறி வசனம் ....கண்ணதாசன்...கண்ணதாசன் அவர்கள் இதுபோல பல புத்தகங்களை எழுதியுள்ளார், பலரை பற்றியும் எழுதியுள்ளார்...கட்சிகளின் அவலம் பற்றி, மனிதர்களின் குனங்கள்பற்றி இப்படி பல புத்தகங்கள் ...இவர் எழுதி வெளிவந்துள்ளது..அவை சான்றாக, ப்ரூபாக, உத்தரவாதமாக எடுத்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை. !
மறைந்த மேதைகள் திரு கண்ணதாசன், திரு வாலி, மற்றும் உயிருடன் உள்ள திரு ஆரூர்தாஸ்..கிட்டத்தட்ட ஒரே குண நலன்கள் கொண்ட கலைஞர்கள் என்பதே என்னுடைய முடிவான கருத்து !
எலிக்கறி வசனத்தால், கண்ணதாசன் எழுதிய விஷயத்தினால் இதனால் தமிழகத்திற்கு அதன் வளர்ச்சிக்கு பாதிப்பு இருந்துள்ளதா என்று தெரியவில்லை..ஆனால் லஞ்ச லாவண்யம் இவர் ஒருகாலத்தில் போற்றி புகழ்ந்த கட்சிகள் கொண்டுவந்தது எந்தளவிற்கு தனிமனிதன் பாதிப்பிற்கு உள்ளானான் என்பதை நாம் அறிவோம் நாடும் அறியும் !
Rks
நண்பர்கள் ரவிகிரண் மற்றும் ஜோ அவர்கள்
பெரும்பாலும் முகமறியா நண்பர்களாகவே நாமிருக்கிறோம். எங்கோ இருக்கும் நாம் நடிகர்திலகம் குறித்த நமது எண்ணங்களின் பரிமாறல் வாயிலாகவே இத்திரியில் இணைகிறோம். ஏகவசனம் தவிர்த்து பரஸ்பர மரியாதைகளுக்குப் பங்கம் வராது நமது திரிக்கு பெருமை சேர்ப்போமே!
வேண்டுதல்களுடன்
செந்தில்
இந்தி உனக்கு தேவையுண்ணா இந்தி பிரசார சபாவுல போய் படிச்சுக்கோ .. எங்க மேல திணிக்குறதுக்கு எப்போதும் நடக்காது ..நடக்கவும் விட மாட்டோம் ..இந்தி தெரிஞ்சவனவை விட நாங்க நல்ல நலமா தான் இருக்கோம் .. இந்த முதலைக் கண்ணீரெல்லாம் அடையாளம் காணப்பட்டு நாளாச்சு .
நண்பரே ! இந்த நபர் சிவாஜி பற்றி பேசுகிறேன் பேர்வழி என்ற போர்வையில் திராவிட இயக்கத்தை வசை பாடுவதற்கே இந்த திரியை பயன்படுத்துவது உங்களுக்கு ஒப்புதலா ? குறைந்த பட்சம் "திராவிட இயக்க எதிர்ப்பு வாந்தி' என தனியாக ஒரு திரி அமைத்துக் கொடுத்தால் இவரும் இவரைப் போல வாந்தி எடுக்க விரும்புபவர்களும் சூடாகும் போது அங்கே சென்று வாந்தி எடுக்க வசதியாக இருக்குமே என பல காலமாக நான் கோரிக்கை வைத்து வருகிறேன் ..நீங்களும் இணைந்து குரல் கொடுத்தால் நல்லது ..இந்த எழவையெல்லாம் இந்த திரியில் பார்க்காமல் இருக்கலாம் .
கவியரசர் கண்ணதாசனை நீங்கள் நம்ப வேண்டாம் திரு.ஆர்.கே.எஸ்.
ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அரிசி பஞ்சம் ஏற்பட்டதும் மக்களை எலிக்கறி சாப்பிடச் சொன்னதும் மூதறிஞர் ராஜாஜியே காங்கிரசை ஒழிக்க, திமுகவோடு கூட்டணி அமைத்து உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொன்னதும் வரலாற்று உண்மைகள். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்பு நண்பர் ரவிகிரண்/ஜோ.
நடிகர்திலகம் திரியில் வரலாற்று சிறப்பு மிக்க அவர் புகழ்பாடும் ஆயிரக்கணக்கான பதிவுகளுக்கு நீங்கள் இருவருமே சொந்தக்காரர்கள். எங்களைப் போன்ற
வளர்ந்துவரும் பதிவர்களுக்கு வழிகாட்டிகள்
இந்த விவாதத்தை இப்படியே நிறுத்தி விட்டு சற்று இளைப்பாறி நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் வைரங்களை பதிக்க வரவேண்டுமென்று இறைஞ்சுகிறேன்
செந்தில் , வணக்கங்களுடன்
ஜோ வோடு நான் உடன் படுகிறேன். ஹிந்தி தெரிந்தவர்களோடு ஒப்பிடும் போது ,நாங்கள் ஒன்றும் குறைந்து விடவில்லை. எங்களில் யாராவது ஒருவர் மிச்சம் உள்ள வரை ஹிந்தி தமிழகத்தில் நுழைய முடியாது. பெரியார் என்ற ஒருவர் இல்லாவிட்டால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது.
கலை- பஞ்சத்திற்கு காங்கிரஸ் காரணமல்ல. பல போர்கள், நிறைய இயற்கை பேரிடர். இதனை தி.மு.க நன்கு உபயோகித்து கொண்டது.
ஆனால் பக்தவத்சலத்திடம் ,காமராஜ் ஆட்சியை ஒப்படைத்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவானது.
செல்வகுமார்- உங்கள் பதிவு நன்றாக இருந்தது மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியருக்கணும் நல்ல உதாரணம். இப்போது தாலியறுக்கும் வைபவமாயிற்றே தமிழகம் முழுதும்.
ரவிகிரண் - உங்களுடையது பயங்கர எதிர்ப்பு பார்வை. எனக்கு எந்த கட்சியும் பிடிக்காது . எல்லா கட்சிகளும் பிடிக்கும்.(உங்களுக்கு புரிய முடியாது)
பி.கு- கலை ,கட்சிகளுக்கு மட்டுமே. இது பொருந்தும். private ownership அறவே ஒவ்வாது.
சிவாஜிக்கு அத்தனை கட்சிகளுடன் தொடர்பு உண்டு. அதனால் அரசியல் ஒன்றும் இங்கு தோஷம் இல்லை.
கலை,
எலிக்கறி விஷயம்,திராவிட கட்சிகள் சொன்ன படி ,காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளல்ல. ஒரு scientific Report ஒன்று
எலிகறியில் நிறைய சத்து உள்ளது. அபாயமற்றது . மலிவான ஒன்று .என்று சொன்னது. இதைத்தான் உணவு பதிலியாக ,அரசால் சிபாரிசு செய்ய பட்டது. ஆனால் இதை பயங்கர sensation ஆக்கியது திராவிட சாமர்த்திய அரசியல் சாதுர்யம்.
திரு கலைவேந்தன் அவர்களே
மூதறிஞர் ராஜாஜி சொன்னால் என்ன ...யார் சொன்னால் என்ன.
முதற்க்கண் நான் காங்கிரஸ் அனுதாபி அல்ல...ஆகையால் அது யார் சொன்னாலும் எனக்கு அக்கறை இல்லை.
காமராஜர் ஆண்ட வருடங்களில் நடந்த தமிழக வளர்ச்சி ....செயல் படுத்தப்பட்ட தொலைநோக்கு திட்டங்கள் அதன் வளர்ச்சி விகிதம் ..அவர்களது ஆட்சியை குற்றம் சொன்ன வாய்களால் இன்றுவரை கால் வாசி கூட செய்யமுடியவில்லை. செய்து காட்டவில்லை. இது வரலாற்று உண்மை ! அவருடைய அணுகுமுறையும் சரி...அவரது ஆற்றலும் சரி...அதில் எள்ளளவு கூட congressism இருந்தது இல்லை !
ஒரு செயல் வீரன் இருக்கும் இடத்தில் அந்த செயல் வீரரின் மீது கொண்ட பொறாமைகளும் வயிதேரிச்சல்காரர்களுக்கும் பஞ்சம் எள்ளளவும் இருந்ததில்லை என்பதும் வரலாற்று உண்மை !
Rks
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
Quote:
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
பகுதி 2 : திருவருட்செல்வர் (கருத்து உபயம் : நண்பர் சின்னக்கண்ணன்....ஜெமினி திரியிலிருந்து...)
திருவருட்செல்வரை விட்டு விட்டீர்களே..கதறக் கதற சுந்தரமூர்த்தி நாயனார் சிவாஜியை ஜெமினி படுத்தும் பாடு..ஜெமினி காரெக்டர் அது தான் என ப் புரிந்து உள்ளாழ்ந்து எதிர்க்கும் சுந்தர ந.தி..கடைசியில் இத்தனையும் உன்பாட்டைக் கேட்கத் தான் வந்தேன் என சிவ ஜெமினி சிரித்துவிட்டுக் கருவறையில் புகுவது.. சி. ஜெ காம்பினேஷனில் கொஞ்சம் ஓஹோ சீன் சி.செ
https://www.youtube.com/watch?v=pbte64aTKPA
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
பகுதி 3 : வீரபாண்டிய கட்டபொம்மன்
Quote:
புகழ் பெற்ற இரு நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது யார் பெரியவர் என்னும் மனப்பாங்கு மேலிட்டால் இயக்குனருக்கும் ரசிகர்களுக்கும் தலைவலியே ஆனால் சிவாஜி ஜெமினி இணைவில் மட்டும் இத்தகைய நிகழ்வு தலை காட்டுவதில்லை புரிதலும் விட்டுக்கொடுத்தலுமே அனைத்து சிவாஜி ஜெமினி படங்களின் தொடர் வெற்றிக்குக் காரணம்
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் தன்னுடைய திரை ஜோடி பத்மினி ஜெமினியுடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்கும்போது இறுதியில் ஒரே ஒரு
காட்சியில் தலை காட்டி புரிதலுக்கும் விட்டுக் கொடுத்தலுக்கும் உதாரணமாக திகழ்ந்திருப்பார் நடிகர்திலகம் அவ்வண்ணமே பாசமலர் திரைப்படத்தில் மயங்குகிறாள் ஒரு மாது பாடல் காட்சியில் வெறுமனே வீணை வாசித்துக்கொண்டு தனது புரிதலை வெளிப்படுத்தியிருப்பார் காதல் மன்னர்
https://www.youtube.com/watch?v=UamHWAa6xGk
https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY
கோபால் சார்
எதற்கு இனியும் இந்த ஏமாற்று சொற்கள் ? வேறு மொழி கற்பதில் தவறு இல்லை என்பதே எனது வாதம் !
உங்களுடைய STATEMENT "பெரியார் இல்லை என்றால் பலர் தலை நிமிர்ந்திருக்க முடியாது"...இது ஒரு மாயை ! அந்த மாயையை நீங்கள் கூறி வேண்டுமானால் த்ருப்திபட்டுகொள்ளுங்கள் !
சிவாஜி அவர்கள் சிவாஜியாக வலம் வரவில்லை என்றாலும் "கட்டபொம்மன்" கணேசனாக நிச்சயம் வலம் வந்திருப்பார் ! ஆகவே இந்த, உங்கள் கற்பனை கதை எல்லாம் எடுபடாது.
என் இறைவனின் நடிப்பு ...உங்களையும் அறியாமல் உங்கள் மனதில் ஊடுருவி உங்கள் மதியை மயக்கியதால் உங்கள் வாயே அவரை "சிவாஜி" என்ற பட்டம் கொடுத்து வாழ்த்தியது...! விஷயம் இவ்வளவுதான் ! ஆனால் வென்றது அங்கும் என் இறைவனே !
மேலும் நீங்களோ மற்றவரோ யார் நுழைய விடுவதற்கும் நுழைய விடாமல் இருப்பதற்கும்...உங்கள் உத்தரவை யார் கேட்டார்கள் சிரிப்பு தான் வருகிறது எனக்கு உங்கள் எழுத்தை படிக்கும்போது.
நீங்கள் கூறுபவை எல்லாம் மக்கள் உருப்படாமல் போகும் வழிகள்....உங்களுக்கு "வாழ்க" போட்டே அடித்தட்டில் இருப்பவன் அடங்கி ஒடுங்கி போகவேண்டும்...அவன் வாழ்வை வளமாக்க ஒரு வழியும் காண வக்கில்லாமல் அவன் வாழ்வாதாரத்தை பல வழிகளில் சுரண்டுவது அதனை இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்திகொண்டிருப்பது பச்சை அயோக்யத்தனம்.
அதை படிக்காதே...இதை படிக்காதே என்று கூற எவனுக்கும் எந்த கட்சிகாரனுக்கும் அருகதையோ உரிமையோ இல்லை ! முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள் !
மத்தியில் கூட்டணி ஆட்சியுடன் முக்கிய பதவி வகித்தவன் என்ன தமிழா அங்கு பேசினான் ? தெரிந்த வரையில் ஹிந்தியோ அல்லது ஆங்கிலமோ தானே ...அப்புறம் என்ன இந்த வீம்பு பேச்சு ஏமாற்று வித்தை ? யாரை ஏமாற்றபார்கிரீர்கள் இனியும்...!
முழு பௌர்ணமி முற்றிலும் முடிந்து தேய்பிறை காலம்....இது போல அனர்த்தங்கள் புரிபவர்களுக்கு ....அமாவாசை வர இன்னும் சிறிது காலம்தான் ! கவலை வேண்டாம் !
நடிகர் திலகம்....அவரை பற்றி பேசவோ ...அந்த பேரை உச்சரிக்கவோ மேற்கூறிய எண்ணம் கொண்ட எவருக்கும் யோக்யதை கிடையாது....!
நடிப்பு தொழிலை செய்பவனை ஏளனமாக கூத்தாடி என்று கூறிய காலம் உண்டு. கூத்தாடி என்று ஏளனம் செய்த அதே வாயால் "சிவாஜி" என்ற பட்டம் கொடுக்க வைத்தவர் எங்கள் இறைவன் !
பலவருடம் சும்மா சினிமாவில் உட்கார்ந்து கதை வசன வாய்ப்புக்காக ஏங்கியவர்கள் மத்தியில் ஒரு படம் ..."பராசக்தி" அதன் பிறகு , எங்கு திரும்பினாலும் எட்டுதிக்கும் சிவாஜி...சிவாஜி என்ற ஒரே பெயர் தான் !
அந்த காழ்புணர்ச்சியில் எங்கே இவன் நம்முடன் இருந்தால் நம்மை விழிங்கிவிடுவானோ என்ற பயத்தில் கோழைத்தனமாக சில வேலைகளை கையாண்டு அதனை அரசியல் சாதுர்யம் என்று தற்பெருமையுடன் மானியம் விட்டுக்கொண்டு....மற்றொரு நடிகர் நிழலில் தஞ்சம் கொண்டு ...தொடர்ந்து நடிகர் திலகத்தை அவர் அடைந்த பல உலக பெருமைகளை ஜீரணிக்க முடியாமல் ...தொடர்ந்து அவரை முதுகில் குத்திக்கொண்டு...தள்ளாத வயதில் அந்த இறைவன் ...இவர்கள் செய்த துரோகத்தையும் மறந்து தனது விஞ்சியுள்ள ஆயுளின் 2 தருகிறேன் வாங்கிகொள்ளுங்கள் என்று கூர ...அந்த வயதிலும் துளி கூட மனசாட்சி இல்லாமல் ...நீ தரவேண்டாம்..நான் தருகிறேன் என்று கூறாமல்...நல்லவேளை நமக்கு இன்னும் ஆயுள் கூடும் என்று நினைப்பில் அதையும் அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ....இப்போது அதற்க்கு பிராயச்சித்தமாக அதுவும் பாண்டியில் ரங்கசாமி முந்திக்கொண்டு செய்துவிட்டார் என்ற ஒரே காரணத்தால் , அரையும் குறையுமாக அரசாங்க formality முற்றிலும் முழுமை செய்யாமல் ...அங்கங்கே ஒரு சிலை திறந்து பிராயச்சித்தம்..! - இது அரசியல் சாதுர்யமா ?
எத்தனை கட்சிகள் வேண்டுமானால் சிவாஜியுடன் பெருமைக்காக தொடர்பு வைத்திருந்திருக்கலாம்....ஆனால் அவரை முதுகில் குத்தியது முதலில் நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆடும் ஆட்கள்தான். தமிழனை மண்ணின் மைந்தனை முதுகில் குத்தி வசைபாடியது உங்களுடைய .....வாழ்க தமிழ்...தமிழ் வளர்ப்போம் ...தமிழனை வாழவைப்போம் என்று இன்றளவும் ஏமாற்றுபவர்கள் தான் ! அந்த வழியைத்தான் பின்னாளில் வந்தவர்கள் பின்பற்றினார்கள், VP SINGH தவிர !
நடிகர் திலகம் ஏதோ உங்கள் நல்ல காலம் ...1953 முதல் 1987 வரை பசியின் உச்சத்தில் இருந்ததால் பிழைத்தீர்கள் ! ஆகவே....அதை உங்கள் பாக்கியமாக கருதி .பிழைத்துபோங்கள்...வம்பு பண்ணாதீர்கள் !
உனக்கு தேவையிண்ணா இந்தி என்ன சீன மொழியே கூட படிச்சுக்கோ ..யாரு கைய பிடிச்சு இழுத்து ..உன் பொருட்டு நாங்க எல்லோரும் கண்டிப்பா படிக்கணும்-ன்னு திணிக்கணும்-ன்னு கேட்டா அதைக் கூட புரிஞ்சுக்க முடியாம என்ன கைய பிடிச்சு இழுத்தியா என்ன மொக்கைத்தனமான வாதம் வைக்கிற எதுவும் புரியும்ணு நான் நினைக்கல்ல .
நான் கேக்குறது ஒண்ணே ஒண்ணு தான் . திராவிட இயக்கம் பற்றி உனக்கு அரித்தல் இருந்தால் போய் சொறிய வேறு இடம் இருக்கிறது .. தொடர்ந்து நடிகர் திலகத்தின் திரியில் உன் சொந்த அரசியல் வாந்தி எடுப்பது தேவையா ? வேறென்ஹ்காவது போய் வாந்தி எடுத்து தொலைக்க வேண்டியட்து தானே என்பது மட்டுமே என் கேள்வி .இதிவும் புரியுமென்ன்று நம்பிக்கை இல்லையென்றாலும் சொல்ல வேண்டியட்து அவசியம் என்பதால் சொல்லி முடிக்கிறேன்.
இறுதியாக ஒன்று . சிவாஜி என்னும் மகா கலைஞனின் மீது எனக்குள்ள அபிமான்த்தை நிரூபிக்க இது போன்ற சான்றிதழ் தேவையில்லை
Dear friends. Let us resume our duty on NT's service. Mudslinging won't help. It is really an unfortunate development across the smooth flow of our Thread's proceedings even as VPKB is due for its rerelease.
Ravikiran sir. Kindly break this ice. When we are on the anvil of promoting VPKB rerelease should we have confusions like this? Are we all not going to meet atleast once in our lifetime? Why unnecessary mudslinging among fans?Kindly put an end to such convoluting discussions that are not going to bring any laurels to our demigod NT. It is my personal request. All are observing us and the happenings.....unfortunate sir.
:rotfl:
இதுக்கு பேரு தான் ..என்ன கைய புடிச்சு இழுத்தியா காமெடி
நீ இந்தி படிக்கக் கூடாதுண்ணு யாருல தடுத்தது .. எல்லோரும் கண்டிப்பா படிச்சாகணும் ..அப்ப தான் நானும் படிப்பேன்னு ஏன் அடம் பிடிக்குற ? . நானும் கண்டிப்பா படிக்கணும்-ன்னு சொல்ல நீ யார்?
கண்டிப்பா படிச்சாகணும்கிறத தான் நாங்க எதிர்த்தோம் ..எப்பவும் எதிர்ப்போம் ..முடிஞ்சா திணிச்சுப் பாரு.. ஓட ஓட விரட்டுவோம்,
திராவிடம் விஷப்பூச்சி தான் .. தொடர்ந்து கடிப்போம் ..ஆக வேண்டியத பார்
சரி ..சரி ..ரொம்ப முத்திருச்சு :rotfl:
Courtesy:Chennai tamilula 2013
ஆங்கிலத்தின் அக்டோபர் முதலாம் திகதியில் பிறந்த நடிகர் திலகம் அமரர்*
சிவாஜிகணேசன் அவர்களின் நினைவலைகளை*
அலைகளில் (http://www.alaikal.com) அவர்பிறந்த மாதத்திலே*
வெளிக்கொண்டுவருவதில் மகிழ்ச்சி ,*
அலைகளின் சிவாஜி இரசிகர்களுக்கு இந்தக்கட்டுரை நிச்சயம் இனிக்கும் )*
ஒரு மனிதன் தான் சார்ந்த தொழிற்துறையில் அதீத சக்தியுடையவனாக திகழ்வது*
ஒரு சிலருக்கே கிட்டிய பேறாகும்
தான் ஏற்றுக்கொண்ட நடிப்புத்துறையில் பேராற்றலுடன் விளங்கியவர் அமரர்*
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள்
பெரியவர்களானதும் ஆற்றப்போகும் தொழிலுக்கு பலம் சேர்க்க மாணவர்கள்*
இளமையிலிருந்தே கல்வியினை கற்பார்கள்
ஆனால் நடிகர்த்திலகமோ இளமையிலிருந்தே நடிப்பினை கற்று வந்தார் ஆம்*
குடும்பத்தின் வறுமை நிலையால் வீட்டை
தாண்டி நாட்டை மகிழவைத்த நாடக மேடைக்குள் காலை வைத்தார் , கலைமகள்*
கண்திறந்து வாமகனே என்றாளோ என
நாமெல்லாம் எண்ணும் வகையில் நடிப்புக்கு கடவுள் என்று சொல்லும் விதம்*
நடித்து காட்டி இரசிகர்களின் அத்தனை உணர்வுகளுக்கும் நன்றாகவே நிறைவினை*
கொடுத்தார்,*
பேசிய வசனங்களின் பொருளுக்கு ஏற்ப கண்கள் உருண்டன கால்கள் நடந்தன கைகள்
அசைந்தன தோள்கள் நிமிர்ந்தன
முதுகு குலுங்கியது மொத்தத்தில் உச்சிமுதல் உள்ளங்கால்வரை தான்*
எடுத்துக்கொண்ட பாத்திரத்துக்கு ஏற்ப*
நூற்றுக்கு நூறு சரியாக நேர்த்தியாக உடலை நடிப்புக்கு*
வடிவமாக்கினார்,ஆம் தமிழ் தெரியாத அந்நியன் அவரின்
உடலசைவை வைத்தே காட்சியின் சூழல் என்னவென்று கண்டுகொள்வான் என்றால்*
மிகையில்லை , சிவாஜி கர்ச்சித்தால் இரசிகனின் தோள்கள் நிமிரும் அவர்*
அழுதால் இரசிகனின் தோள்கள் ஒடுங்கும் நடிகர் திலகம் சிரித்தால் இரசிகனின்*
முகம் மலரும்*
அழுதால் இரசிகனின் முகமும் வாடும் , தனது உணர்வுடனேயே இரசிகர்களை*
அழைத்து செல்வது அவரின் அளவற்ற*
ஆற்றலின் நுட்பமாகும்,இதற்கு இப்படித்தான் இது இன்னவாறே என்று*
எடுத்துகொள்ளும் காட்சியின் சூழலுக்கும்*
தனது பாத்திரத்துக்கும் குறுகிய நேரத்தில் நிறைவான முடிவினை கற்பனை*
செய்து நடித்து காட்டுவதில்*
நடிகர்திலகம் போல் உலகில் வேறு யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே,
பாத்திரத்துக்கான ஆடைகளை தெரிவு செய்வதிலும் ஆபரணங்களை அணிந்து*
கொள்வதிலும் அவரும் நன்றாகவே*
ஈடுபாடு காட்டியிருப்பார் என்பதனை அவர் அணிந்து கொண்டிருக்கும்*
எடுப்பில் வைத்து நாம் மதிப்பிடமுடியும்
இராஜா வேடத்துக்கு கம்பீரம் காட்ட ஒருநடை பணக்கார பிரமுகர் என்றால்*
அதற்கொரு நடை ஏழையானால்*
அதற்கு
ஒரு நடை களியாட்ட விழாவுக்கு ஒருநடை இப்படி ஒவ்வொன்றுக்கும் ஐயாவின்*
நடையழகு விடைபெறாமல்
தொடர்ந்திருந்தது ,எத்தனை படங்கள் எத்தனை வசனங்கள் எத்தனை எத்தனை*
பாத்திர மாற்றங்கள் அத்தனையும்*
அவரொருவருக்கே படைக்கப்பட்டதுவோ என எண்ணி எண்ணி வியக்கின்றேன்,*
ஆற்றல் மிகுந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் நடிகர்திலகத்தின் நாக்கு*
உச்சரித்த பொழுதே அழகு பெற்றது*
என்றால்
மிகையில்லை,அவருடைய குரலினிமையால் உச்சரிக்கும் வேக அளவால் வசனங்கள்*
உயிர்பெற்று ஊஞ்சலாடி*
கல்வெட்டுக்கள் போல் தமிழர்கள் உள்ளமெல்லாம் பதிந்தது,*
ராஜா என்று குறுக்கி சொல்லும் பொழுது காதில் விழுந்த அவரின் தேன்*
குரல் இதயத்தை தொட்டு*
இன்பத்தை தந்தது (ஓ ஓ ராஜா என்ற “ராஜா “படப்பாடலில் ) காதலியாக*
மனைவியாக நடிக்கும் பாத்திரத்தின்*
பெயரை*
எத்தனை அழகாக அதில் அன்பும் கலந்து நுட்பமாக*
உச்சரித்திருப்பார்,”பாலும் பழமும்”படத்தில் சாந்தி என்ற*
மனைவியின் பெயரை எத்தனை அழகாக உருக்கமாக பல விதமாகவெல்லாம்*
உச்சரித்திருந்தார், சீதா,*
பார்வதி,செல்லம்மா ,என்று பல பெயர்களை அடுக்கிகொண்டே போகலாம் ,
,அதேபோல்*
தனக்கு எதிரான பாத்திரத்தின் பெயரையும் அழகாகவே ஆத்திரம் கலந்திருந்த*
சூழ்நிலையிலும் உச்சரித்திருப்பார்*
“திருடன்” படத்தில் ஜெகன்னாதன்*
நீ ஒரு கோழை என்பார், சோகத்திலும் ஜெகன் என்று நீட்டி அழகாய்*
கத்தியிருப்பார்*
“தங்கப்பதக்கம்”
படத்தில் , ஒரு பெயரை அன்றில் வார்த்தையை எந்தச்சூழ்நிலைக்காட்சியிலும்*
அழகாக பேசியிருப்பார் மட்டுமின்றி*
வட்டார வழக்கு பேச்சினையும் அதுபோலவே பிசகின்றி பேசி*
வல்லமையைகாட்டினார்,”வியட்னாம் வீடு”படத்தில்*
பிராமணர்களின் பேச்சுவழக்கு , “நவராத்திரி” படத்தில் ஏழைக்குடியான*
கமக்காரர்களின் பேச்சு , அகம்பாவம்
பிடித்த தொழிலதிபர் பேச்சினை “பாட்டும் பரதமும்” படத்தில்,என்று*
இன்னும் பற்பல ,
பாடல் காட்சிகளில் அவரைப்போல் கச்சிதமாக வாயசைத்தவர்கள் கிடையாது,*
சிவஜியாரின் பாடல்கள் பற்றி*
எழுதவேண்டின் முக்கியமான ஒருவரை சேர்த்தே ஆகவேண்டும் அவர்தான் பாடகர்*
திலகம் டி.எம்.சௌந்தரராஜன்*
திலகத்துக்கென்றே பிறந்த திலகம் குரல்கொடுக்க இறைவனால் படைக்கப்பட்டவரோ*
என எண்ண வைக்கும்
குரலதிசயம் பாடகர்திலகம் டி. எம்.எஸ் என்றால் யாரும்*
மறுக்கமாட்டார்கள்.”பாவாடைதாவணியில்” என்று இதமாக*
பாடியவரே “படைத்தானே” என்று பதறியும் பாடி நடிகர்திலகத்தின்*
நடிப்புக்கு குரலால் உணர்ச்சி கூட்டி
பாடிக்கொடுத்திருந்தார், “நீயும் நானுமா” என்று அவர் ஓங்கிப்பாடும்*
பொழுது ஆத்திரத்தை கொப்பளித்திருப்பார் குரலில்
அவரின் அசாத்திய திறமைக்கு ஒலிவாங்கியின் தரம் போதாதோ என்று எண்ண*
தோன்றியது,அந்தளவிற்கு அவரது*
குரல்வன்மை இனிமையை கலந்து தமிழருக்கு காதுகளில் கனலாக*
விழுந்தது,”அம்மாடி ” என்று இழுத்த பொழுது*
வானத்தை ஒருக்கா முத்தமிட்டு தொட்டு வந்தது அவரின் பண்பட்ட*
கம்பீரக்குரல் ,நடிகர்திலகத்துக்கு கிடைத்த*
மிகப்பெரிய பலமானது அவரின் கலை வாழ்வுக்கு பாடகர்திலகத்தின்*
குரல்என்றால் மிகையில்லை .
நடிகர்திலகம் ஒரு மாபெரும் விருட்சத்துக்கு சமமானவர் அவரின் அத்தனை*
விடயங்களையும் ஒரு கட்டுரைக்குள் எழுதி
முடிப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல ஆதலினால் இம்மட்டில்*
உங்களிடமிருந்து தற்போதைக்கு
விடைபெறுகின்றேன்.
உருண்டு பொறண்டு சிரிகிறத பாத்தாலே தெரியுதே .....போய் அட்மிட் ஆகவேண்டியதுதானே...அப்புறம் என்ன இங்க பேச்சு வேண்டிகிடக்கு ! ஓஹோ...இததான் நான் கடிப்பேன்...அப்புடின்னு சொன்னதா ...:smile2:
Dear Sir,
It was not a discussion ...in this tone initiated by me.
I was only sharing my view and observation on what was happening since yesterday with reference to Mr. Gopal's statement here.
Mr. Joe had no business to poke his nose in my home by the way of attacking or abusing my comment ! And, the tone of this conversation in particular is set and started by him and not me if you notice.
His inferiority complex cannot demand interference unnecessarily. He is not doing this for the first time especially with reference to my views.
Anyway, i do understand the crux of your message. Am stopping here. Even if am going to be provoked by any distilled idiot, i would not react or respond. I shall treat them as stray dog barking unwanted on people.
Regards
RKS
Dear Ravikiran Sir. The crux of my request is only to pacify you two as hardcore fans of NT with of course some difference of opinion on some matters that are not relevant to drag in here lest NT's name and fame gets a dig. We the NT fans have to uphold our prestige at this crucial juncture of VPKB rerelease.
Dear Joe Sir. We have never met but I can perceive your pains being a diamond hubber who is complacent with his postings hitherto. Kindly help and guide our thread to grow in as much as lot of freshers like senthilvel, sundrajan...have started pouring in an incessant array of NT's nostalgia in tune with modern IT developments. Should we get trapped in such unwanted discussions and descriptions?
I too stop at this stage sirs, since I do not know much about the genesis of these problems that are offshoot to our icon's legacy. Perhaps Murali sir may be right solution provider.
regards, senthil