https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...fc&oe=5E73A7A0https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...ed&oe=5E452F53https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...2b&oe=5E83D746
Printable View
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5E7B51BEhttps://scontent.fyzd1-2.fna.fbcdn.n...eb&oe=5E7D2851
நன்றி Vcg Thiruppathi H O S
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
நடிகர்திலகம் நடித்த படங்களில்
ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்திற்கு
... பல தனி சிறப்பு உண்டு..
தன்னை சிவாஜியாக மாற்றிய,
சத்ரபதி சிவாஜி வேடமேற்று தமிழில் நடித்த
ஒரே படம் ராமன் எத்தனை ராமனடி.
2020ல் பொன்விழா காணும்
ராமன் எத்தனை ராமனடி திரைப்படம்,
தற்போது... ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சார்பில்,
நவீன டிஜிட்டல் வடிவில் தயாராகிறது.
ராமன் எத்தனை ராமனடி பொன்விழாவினை முன்னிட்டு, டிஜிட்டல் தயாரிப்பாளர்
ஸ்ரீ கணேஷ் பிலிம்ஸ் சென்னை ஜெயகுமார்
அவர்கள்,
தினசரி காலண்டர் வெளியிட உள்ளார்.
காலண்டர் வெளியிடும் ஜெயகுமார் அவர்களுக்கு
உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான
சிவாஜி ரசிகர்களின் சார்பில் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e9&oe=5E45AECE
நன்றி Sundar Rajan
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை....
கலையுலகில் நடிகர்திலகத்தின்...
பல அரிய வரலாற்று சாதனைகளை மறைப்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருந்துள்ளனர்.
... ஆம்,சிவாஜி அவர்கள் நடிக்க வந்தது.... 1952...
கருப்பு வெள்ளை திரைப்படங்களில் இமாலய சாதனையை புரிந்தவர் நடிகர்திலகம்.
சிவாஜி அவர்கள் நடித்த கடைசி கருப்பு வெள்ளை படம் 1974ல் வெளிவந்த தாய்.
இது நடிகர்திலத்தின் 169வது படம்.
22 வருடங்களில் நடிகர்திலகம் நடித்து வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 173.
இதில் கருப்பு வெள்ளை படங்கள் மட்டும் 136.
உலகில் எந்த நடிகரும் இச்சாதனையை செய்யவில்லை.. இனியும் இச்சாதனையை முறியடிக்க வாய்ப்பே இல்லை.
136ல் 40 100 நாள் படங்கள்....7 வெள்ளிவிழா படங்கள்..எதிரிகள் மற்றும் துரோகிகளின் கூட்டத்தால்.... சொற்ப நாட்களில் 100வது நாளை எட்டாத படங்கள் 25க்கும் மேலே...
சாதரண நிகழ்வினை சாதனை என்று, திரித்து எழுதும் ஊடகங்களே...தெரிந்து கொள்ளுங்கள்.....
கலையுலகில் என்றும் அசைக்க முடியாத.... இமாலய சாதனைகளை புரிந்த கல்துாண் நடிகர்திலகம் என்று....
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...33&oe=5E4A4862
நன்றி Sundar Rajan
அரசியலில் பொய்யைச் சொல்லி உண்மையான தகவல்களை மறக்க செய்ய முடியுமா??
1989 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் திலகம் சிவாஜி திருவையாறு தொகுதியில் நின்று திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்,
அந்த தேர்தலை பொறுத்த அளவில் நடிகர் திலகம் தனது பிரச்சாரத்தில் மூப்பனார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியை மட்டுமே பிரதானமாக எதிர்த்து பிரச்சாரம் செய்தார், ...
அந்த பிரச்சாரத்தில் நடிகர் திலகம் வெற்றியையும் கண்டார் என்பது தான் நிஜம்,
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் சுமார் 11992 வாக்குகள் கூடுதலாக பெற்றார்,
மேலும் ஜெயலலிதா அவர்களது தலைமையிலான அதிமுகவை விடவும் சுமார் 12903 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார்,
இதை சொல்லவேண்டிய காரணம் அன்றிலிருந்து இன்று வரையிலும் "சிவாஜி தோற்றுவிட்டார்" என அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக சொல்லிக்கொள்ளவில்லை,
மாறாக
நடிகர் திலகத்தை விடவும் 11992 வாக்குகள் குறைவாக பெற்ற மூப்பனார் கோஷ்டிக் காங்கிரஸ் சிவாஜி தோற்றுவிட்டார் என அன்றைய நாட்களில் அதிக சிரமெடுத்து பிரச்சாரம் செய்தனர். தற்போது இல்லை,
இன்னமும் இன்றைய நாட்களில் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் வரை உண்மை விவரங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல்
நடிகர் திலகத்தை விடவும் 12903 வாக்குகள் குறைவாக அதிமுக பெற்ற விவரம் தெரியாமல் ஏதேதோ உளரிக் கொண்டு வருகின்றனர்,
நன்றி Sekar Parasuram
மிகவும் குறுகிய நாட்களில் இரு மாநிலத்தின் முதல்வர்களால் சிலை திறப்பு விழா கொண்டாடப்பட்டது என்றால் அது எங்கள் நடிகர் திலகத்திற்கு மட்டுமே,
11-02-2006 புதுவை மாநில அரசு
21-07-2006 தமிழ் நாடு மாநில அரசு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...df&oe=5E7DCAC3https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...05&oe=5E48E8ED
நன்றி Sekar Parasuram
1991 வரையிலும் முதலமைச்சர் பதவியென்பதை மிகவும் அதிகாரம் கொண்டதாகவோ முதல்வராக இருப்பதால் மட்டுமே செல்வாக்கு மிக்கவர்கள் என நடிகர் திலகம் கருதவில்லை என்பது தான் உண்மை,
காரணம்
நடிகர் திலகத்தோடு அதுவரை முதல்வர் பதவிகளை வகித்தவர்களாகவும் நெருக்கமாகவும் இருந்தவர்களான கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் அணுகுமுறைகள் மிகவும் சாதாரணமாகவே அமைந்து இருந்தது, அவர்களோடு அரசியல் செய்ததில் நடிகர் திலகத்திற்கு எந்த நெருடலும் இருப்பதாக உணர்ந்ததில்லை, வெற்றி தோல்விகளைப் பற்றி சிறித...ும் கவலைப்பட்டதும் இல்லை,
பின்னர் தமிழக அரசியலில் 1991 ல் செல்வி ஜெயலலிதா முதல்வராக பதவிக்கு வந்த பிறகு நடந்த அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை மூத்த அரசியல் தலைவர்களுக்கு நேரிடையாகவே நெருடல்களை உருவாக்கும் சூழல்கள் அமைந்தன,
அதன் தொடர்ச்சியாகவே இப்படிப்பட்டவர்கள் எல்லாம் அரசியலில் அதிகாரம் பெற்ற பிறகு நாம் அவர்களோடு அரசியல் செய்வதோ பேசுவதோ என்பது நாகரீகமாக அமையாது என்பதை உணர்ந்து கொண்ட நடிகர் திலகம் அரசியலில் நீடிக்க விரும்பாமல் அரசியலில் இருந்து விலகுவதென முடிவெடுத்தார்,
மற்றபடி அவர் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனதால் விலகினார் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,
1971 ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து ஊடக செய்திகளுமே காங்கிரஸ் வெற்றி உறுதி எனவும் பெருந்தலைவர் காமராஜர் மீண்டும் முதல்வராகிறார் என்றே உண்மை நிலையை உணர்ந்து எழுதின
அப்படி எதிர்பார்த்த தேர்தலிலேயே தோல்வியை சந்தித்த நடிகர் திலகம் சிறிதளவு கூட சோடை போகாமல் மீண்டும் மக்களை ஒன்று சேர்க்க அயராது உழைத்தார், அரசியலில் தொடர்ந்தார்,
நன்றி Sekar Parasuram
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...2b&oe=5E444A15
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...4c&oe=5E4931F0
நன்றி Gururo Vmurugesan (முகநூல்)
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...d5&oe=5E7620E6
நன்றி Gururo Vmurugesan (முகநூல்)
தற்சமயம் பொக்கிஷங்கள் பல வெளிவந்து கொண்டிருக்கின்றன
அப்படி கிடைத்ததில் ஒன்று சென்னையில் சிங்கத்தமிழனின் அமரதீபம்
100 காட்சிகள் கொட்டகை நிறைந்ததற்கான பொக்கிஷ விளம்பரம்.
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...80&oe=5E8AAA5B
நன்றி நிலா
கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?". !!!
இன்று 01/12/2019 - காலை 10.30 மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த"சரஸ்வதி சபதம்" !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், சாவித்திரி கே.ஆர்.விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...50&oe=5E7D8659
நன்றி Jeyavelu Kandaswami (முகநூல்)
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...c7&oe=5E8B7A5A
நன்றி Raja luxmi
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...e6&oe=5E750E9C
நன்றி Gururo Vmurugesa
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b0&oe=5E7276EB
நன்றி Gururo Vmurugesan
29/11/2019 வெள்ளி முதல் திண்டுக்கல் N V G B தியேட்டரில்
வீரபாண்டிய கட்டபொம்மன்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5E3F5970
நன்றி நிலா
மதிப்பிற் சிறந்த மகோன்னத மனிதர்.. சினிமா.. அரசியல்.. இந்த இரண்டு உலகிலுமே நடிகர் திலகத்திற்கு வேண்டாத மனிதரில்லை.. இதற்கும் இந்த இரண்டு துறைகளிலுமே போட்டிகளும் பொறாமைகளும் மிக்கது.. சினிமாவை தள்ளி வைத்த இரு பெரும் மனிதர்கள்.. பெருந்தலைவர்.. தந்தை பெரியார்.. ஆகிய இருவரும் கூட கலைஞன் என்கிற நிலையில் சிவாஜியை நேசித்தார்கள்.. ஒருபுறம் தேசிய சினிமாக்களில் சிவாஜியின் பங்கு நிறைய இருப்பதினால் பெருந்தலைவரும்.. ஒரு காலத்தில் நாடகத்துறையில் நடிப்பால் தன்னை கவர்ந்ததற்காக தந்தை பெரியாரிட...மும் பாராட்டுகளை பெற்றவர் இந்த மதிப்பிற்குரிய மகோன்னத கலைஞர்.. மேற்கண்ட இருபெரும் மனிதர்களுமே தங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு மனதில் தோன்றிய கருத்துகளை பட்டென கூறிவிடும் குணமுள்ளவர்கள்.. அப்படிப்பட்ட இருவர்கூட ஒருவரை பாராட்டி இருப்பார்களென்றால் அவர் நடிகர் தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? திரையுலகிலும் அரசியலிலும் இரு துருவம்.. நடிகர் திலகமும் மக்கள் திலகமும் ஆவர்.. திரைப்பட சந்தையில் இவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.. அரசியலில் இவர் தேர்வு செய்த தலைவருக்கும் அவர் தேர்வு செய்த தலைவருக்கும்கூட நிறைய வித்தியாசம் உண்டு.. சினிமாவில் மோதிக் கொண்ட ரசிகர்களுக்கும் அரசியலில் மோதிக் கொண்ட தொண்டர்களுக்கும் அப்பாற்பட்ட நெருக்கமும் பரிவும் இருவரிடத்திலும் காணப்பட்டது.. ஒருசில சம்பவங்களை தவிர்ப்போம்.. திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் உள்மனதிலும் உயர்ந்த மனிதர் சிவாஜிதான்..
பேரறிஞர் அண்ணா.. மாற்றான் தோட்டத்து மல்லிகை எனவும்.. எங்கிருந்தாலும் வாழ்க.. என்றும் உளமாற வாழ்த்தியவர்.. எந்த சூழ்நிலையிலும் சிவாஜி என்கிற ஸ்வொர்ணத்தை அவர் உரசிப் பார்த்ததே இல்லை.. கலைஞர் என்றொரு கதாசிரியர்.... சிவாஜிக்காக குணசேகரன்.. மனோகரன்.. என்று பல கதாபாத்திரங்களை
உருவாக்கி நடிகர் திலகத்தை அதற்குள் நுழைத்து விட்டவர்.. அரசியலில் எதிரும் புதிருமான நிலையிலும் ஒரே பாதையில் பயணம் செய்த போதும் சரி.. பெரும்பாலும் மதிப்பு குறையாமல் போற்றி வந்தனர்.. ஆன்மிகம்.. சிவாஜி வேறு ஆன்மிகப் பாதை வேறல்ல.. தன் வாழ்நாளின் இறுதி மூச்சு உள்ளவரை அப்பழுக்கற்ற ஆன்மிகவாதியாக திகழ்ந்தவர்.. திருப்பதியில் மலர்ந்தவர்.. வாரியார் சுவாமிகள் முதற்கொண்டு சாய்பாபா.. சங்கராச்சாரியார்.. மற்றும் அனைத்து மதத்தலைவர்களிடமும் நம்பிக்கையை பெற்றவர்.. தேசபக்தி.. தெய்வபக்தி.. இரண்டையும் ஒருங்கே பெற்ற பசும்பொன்னார் முதற்கொண்டு.. தேசியத்தலைவர்கள் ஜவஹர்லால் நேரு.. லால் பஹதூர் சாஸ்திரி.. இந்திரா காந்தி.. என்று வரிசையாக அத்தனை தலைவர்களிடமும் ஒருசேர நன்மதிப்பை பெற்றவர் இங்கே யாருண்டு அண்ணல் சிவாஜியைத்தவிர..
சினிமா துறையில் எத்தனை எத்தனை நடிகர்கள்.. எத்தனையோ தயாரிப்பாளர்கள்.. இயக்குநர் யாவரும் போற்றிப் புகழ்ந்த ஒற்றை நடிகர் யாரெனில் அவர் ஒருவரே.. கடல் கடந்த நாடுகளின் நடிகர்கள்.. நாட்டின் தலைவர்கள்.. யாவருக்கும் மணிவிளக்காய் திகழ்ந்தவர்.. நாட்டு மக்களும்.. ரசிகர்களும்.. தாய்மார்களும்.. பிள்ளை குட்டிகள் அனைவரிடமும் ஒருசேர நன்மதிப்பைப் பெற்ற தலைவர் அவர்தான்.. அதனால்தான் முத்தாய்ப்பாக சொல்கிறேன்.. "மதிப்பிற் சிறந்த மகோன்னத மனிதர்" சிவாஜியென்று.... தலைவர்கள் மதித்த மனிதர்களில் அதிக மதிப்பெண் வாங்கிய மனிதர் இவரே..
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...73&oe=5E3E3487
நன்றி Jahir Hussain
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...3e&oe=5E84015C
Thanks friends f b
1994 ல் மறு வெளியீடு கண்ட எங்கிருந்தோ வந்தாள்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...dc&oe=5E458312
நன்றி நிலா
மறு வெளியீடு கண்ட நீலவானம்
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b3&oe=5E7C7D0D