அவன்தான் மனிதன் டிஜிட்டலில் மறுவெளியீடு.
3/12/2021 முதல் மதுரை ,கோவை, ஈரோடு , திருப்பூர்
மற்றும் பல ஊர்களில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் 17/12/2021 முதல் திரையிடப்படவுள்ளது.
Attachment 5818
Attachment 5819
Printable View
அவன்தான் மனிதன் டிஜிட்டலில் மறுவெளியீடு.
3/12/2021 முதல் மதுரை ,கோவை, ஈரோடு , திருப்பூர்
மற்றும் பல ஊர்களில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் 17/12/2021 முதல் திரையிடப்படவுள்ளது.
Attachment 5818
Attachment 5819
அவன்தான் மனிதனும் அவரது ரசிகர்களும் மதுரையில்.....
Attachment 5820 Attachment 5823
Attachment 5821 Attachment 5824
Attachment 5822
அவன்தான் மனிதனும் அவரது ரசிகர்களும் மதுரையில்.....
Attachment 5825
Attachment 5826
Attachment 5827
மதுரையை அதிர வைத்த சிவாஜி ரசிகர்கள் ( அவன்தான் மனிதன் டிஜிட்டல் வெளியீடு )
அவன்தான் மனிதன் டிஜிட்டல் வெளியீட்டை கோலகலமாக கொண்டாடிய சிவாஜி ரசிகர்கள்
https://youtu.be/BJBnkGc0BAU
Thanks சிவாஜி ரசிகன் Sivaji Rasigan
That's our sivaji sir
ஒரு முப்பது ஆண்டுகளாக பிதற்றி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது 1989 ஆம் ஆண்டு பொது தேர்தலில் நடிகர்திலகத்தின் தோல்வியில் இருந்து....
அரசியல் பண்டிதர்கள்,நடிகர்கள் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களில் பலர்..
அரசியல் தலைவர்களில் சிலர்......
இப்படி பல தரப்பட்டவர்கள்...
அவர்களின் பிதற்றல் இதுதான்...
ஆனான பட்ட சிவாஜிகணேசனே அரசியலில் தோற்று போனார்........
இந்த மதியூகிகள் அனைவருமே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தை இரண்டே ஆண்டுகளில் சுருக்கி முடித்து கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் தங்கள் முகாரியை ஆலாபனை செய்கிறார்கள்.
ஆனான பட்ட சிவாஜியே அரசியலில் தோற்று போனார்.......
அறியாமையால்..
உள்நோக்கத்தோடு..
சொந்த லாபம் கருதி..
அந்த முகாரியை ஆனந்தமாக அரங்கேற்றி வருகிறார்கள்....
நடிகர் திலகம் தேர்தல் அரசியலுக்கு 1957 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டார்....
தீவிர பிரச்சாரத்தை 1962 ஆம் ஆண்டு பொது தேர்தலில் செய்தார்.
அவரது வார்த்தையிலே சொல்வதென்றால் அந்த ஒரு தேர்தலிலே சில லட்சங்களை செலவு செய்திருக்கிறார்.
படப்பிடிப்புகளை ஒத்தி வைத்ததால் வருவாய் இழப்பு வேறு....
தீவிர பிரச்சாரத்தால் தொண்டை வலி யேற்பட்டு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்க பட்டிருக்கிறார்.
சில நாட்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார்.
இது 1962 ஆம் ஆண்டு பொது தேர்தல் அனுபவம் மட்டும்.....
அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் திமுக ஐம்பது இடங்களை வென்றது.
அதில் ஒருவர் லட்சிய நடிகர் SSR....
தேர்தலில் 50 mla க்கள் கிடைத்ததால் இரு MLC சீட்கள் கிடைத்தன திமுகவிற்கு..
ஒருவர் mgr,மற்றவர் அன்பழகன்...
ஆக அந்த தேர்தலிலேயே நடிகர்கள் இருவரை சட்ட மன்ற இரு அவைகளுக்கும் அனுப்பி வைத்து அழகு பார்த்தார் அண்ணா...
ஆனால் கர்மவீரருக்கும் காங்கிரசுக்கும் அப்படி ஒரு சிந்தனை வரவில்லை.
1967,1971 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் mgr பரங்கிமலையில் திமுக வேட்பாளராக நின்றார்...வென்றார்....
நடிகர் திலகமோ பிரதிபலன் கருதாது உழைத்தார்...
கை பணத்தை செலவிட்டார்...
வருவாய் இழப்புக்கு ஆளானார்...
தனக்கோ தன் ரசிகர் மன்றத்திற்கோ தொகுதி ஒதுக்கீடு கேட்டாரில்லை...
1963 ஆம் ஆண்டில் பக்தவத்சலத்தை முதல்வராக்கி அழகு பார்த்தார் பெருந்தலைவர்...
C.சுப்ரமண்யத்தையும் தமிழக அமைச்சர்,மத்திய அமைச்சர் என்று பதவிகள் வழங்கினார்....
இன்றைய இளைஞர்களே,அந்த பக்தவத்சலம் 1967ஆம் ஆண்டு கட்சி தோற்ற மூன்றே ஆண்டுகளில் கர்மவீரரை கை கழுவி விட்டு கலைஞரிடம் தொகுதி உடன்பாடு பேச வந்து விட்டார் C.சுப்ரமண்யத்துடன்.
அதே 1967 ஆம் ஆண்டிலேயே தேர்தல் தோல்விக்கு பின் கட்சி நடத்த கூட காசில்லாமல் நடிகர் திலகத்தை நாடி வந்து கண்ணீர் விட்டார் கர்மவீரர்..
நடிகர் திலகம் வார்த்தைகள் தான் இது...
என்னுடைய பசப்பு மொழியல்ல..
சில மணிநேரத்திலேயே மூன்று லட்சம் ரூபாயை திரட்டி காமராஜரிடம் கொடுத்தார்,தனக்கென கட்சியிடம்,பெருந்தலைவரிடம் எதுவும் கேட்டு பெறாத நடிகர் திலகம்....
அரசியல் பண்டிதர்களே! ஊடக நெறியாளார்களே!
அந்த 1967 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு மாநிலம் முழுக்க சுற்றி அலைந்து கலைஞர் தேர்தல் நிதியாக திரட்டி அண்ணாவிடம் விருகம்பாக்கம் மாநாட்டில் கொடுத்த தொகை 11 லட்சம் ரூபாய்.
அண்ணா பூரிப்போடு சைதை தொகுதி வேட்பாளராக அதே மாநாட்டில் கலைஞரை வேட்பாளராக அறிவித்தார் இப்படி...
Mr.பதினொரு லட்சம் என்று......
சில மாதங்களில் நடிகர் திலகம் சில மணி நேரத்தில் கட்சி நடத்த நிதி கேட்டு கண்ணீரோடு வந்த கர்மவீரருக்கு ஏறத்தாழ கலைஞர் மாநில முழுதும் சென்று திரட்டிய தொகையில் நான்கில் ஒரு பங்கை,மூன்று லட்சத்தை தனிநபராக,பெருந்தலைவரின் விசுவாசியாக அவரிடம் வழங்கினார்...
எந்த நடிகருக்கு வரும் இந்த தயாள சிந்தை...
தலைவன் மீது விசுவாசம் ...பயன் கருதா அன்பு..
1987 ஆம் ஆண்டு mgr இறக்கும் வரை பொதுத்தேர்தல்கள்,அவ்வப்போது வந்த இடைத்தேர்தல்கள் வரை பிரதி பலன் கருதாமல் உழைத்தார் இயக்கத்திற்காக..
கொண்ட கொள்கைக்காக..
ஏற்று கொண்ட தலைமைக்காக....
எத்தனை எத்தனை வெற்றிகள் அந்த தேர்தல்களில்......
நடிகர்திலகத்திற்கு அந்த வெற்றிகளில் பங்குண்டு என்று MGR அவர்களே அங்கீகரித்தார்...
தேர்தல்களில் வெற்றி கணக்கு போட,சந்தர்ப்ப அரசியல் செய்ய தவறினார் நடிகர் திலகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
நம்பியவர்களை கை விட்டார்...
தலைமைக்கு துரோகம் செய்தார்..
துரோக சிந்தனையால் தனி கட்சி துவங்கினார் என்றெல்லாம் நடிகர் திலகத்தை பற்றி விரல் நீட்ட முடியுமா?
பச்சை வயல் மனது அவருக்கு....
களைகள் அந்த மனதில் விளைந்ததில்லை....
பதர்கள் தோன்றியதில்லை அந்த நிலத்தில் விளைந்த நெல் மணிகளில்...
அவர் இந்த மண்ணின் அசல் வித்து.....
ஒரு 33 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் அவருக்கு பங்கிருந்தது...
அந்த அரசியல் வாழ்வில் பெரும் வெற்றிகளும் சில தோல்விகளும் இருந்தன....
துரோகமும் சந்தர்ப்ப வாதமும் அறவே இருந்ததில்லை...
அடிநாளில் இருந்தே தமிழுக்கும் தமிழருக்கும் தன் உடல் பொருள் ஆவியை கொடுத்தார் விளம்பரம் இல்லாமல்...
நடிகர் திலகத்தின் மீது நீங்கா அன்புடன்..
மாறா மதிப்புடன்...
பிரமிப்புடன்...
Vino Mohan.V.
Thanks Vino Mohan.V.
இரு திலகங்களின்...
வெள்ளை ரோஜா வில்...
மதுரை சென்ட்ரல் திரையரங்கில்...
19.12.21
மாலை காட்சியில்..
மக்கள் தலைவரின்
மகத்தான இதயங்களோடு..
Attachment 5828
Thanks Sundar Rajan
தமிழ் திரையுலகில் 150க்கூம் மேற்பட்ட வண்ணப்படங்களில் நடித்து முடித்த முதல் நடிகர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன்! அவர் நடித்து முடித்த 151 வண்ணப் படங்களில் 63 படங்கள் 100 முதல் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி இருக்கின்றன. அவை என்னென்ன படங்கள்? எத்தனை நாட்கள் அதிகபட்சமாக ஓடின? என்பதைப் பற்றிய தொகுப்பு தான் இந்தக் காணொளி.
https://youtu.be/y8k-PXy0zlI
Thanks Nilaas Thiraikkoodam
பட்டினி கிடந்து நடித்த சிவாஜி... கண் கலங்கிய இயக்குநர்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சில புகைப்படங்களுடன் நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்திகள் காணப்படுகிறது.
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பான நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொழில் பக்தியில் அவருக்கு நிகர் அவர்தான். ஆரம்பக்காலம் தொடங்கி இறுதிக்காலம்வரை தான் செய்த தொழிலை 100 சதவிகித அர்ப்பணிப்புடன் செய்தவர். இதைப் பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பத்திரிகைகளிலும்கூட படித்திருக்கிறேன். ஆனால், இதை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.
ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னர் கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 'படிக்காத பண்ணையார்' என்ற திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. 'பணமா பாசமா', 'சித்தி' உள்ளிட்ட பல குடும்பப்படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் 'படிக்காத பண்ணையார்' படப்பிடிப்பு தளத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. சிவாஜி, அனுராதா சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை அன்று படமாக்கிக் கொண்டிருந்தனர். சிவாஜி கணேசனின் எதிரிகள், கவர்ச்சி நடனம் ஆடும் அனுராதா மூலம் ஊரில் கௌரவத்தோடு வாழும் பண்ணையாரான சிவாஜி கணேசனை வீழ்த்தி, அவருடைய பெயரைக் கெடுக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்கான காட்சிகள் அனைத்தையும் ஒரு பாடலாக எடுக்க கே.எஸ்.கோபால கிருஷ்ணன் முடிவெடுத்திருந்தார். பாதி காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் மதியவுணவு இடைவேளைக்குச் சென்றிருந்தனர். நான் அந்த நேரத்தில்தான் அங்குச் சென்றேன்.
அனைவரும் அங்கே சேர் போட்டு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்குச் சிவாஜி கணேசன் இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கு எங்குமே அவர் இல்லை. நான் அப்படியே ஸ்டூடியோவிற்குள் சென்றேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழே இருந்த ஷோபாவில் சிவாஜி கணேசன் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த அறையில் வேறு யாருமே கிடையாது. நான் அந்த அறைக்குள் நுழைந்த சத்தம் கேட்டவுடன் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தார். சிவாஜி கணேசனின் பார்வையைப் படங்களில் கூர்ந்து பார்த்தாலே ஒருவித பயம் வரும். நேரில் பார்த்தவுடன் பயத்தில் அந்த அறையிலிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன். என்ன சார் எல்லாரும் வெளியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... சிவாஜி கணேசன் மட்டும் உள்ளே தனியா உட்கார்ந்தது இருக்கார் என்று வெளியே இருந்த கோபாலகிருஷ்ணனிடம் சென்று கேட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு வாங்க... எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு உள்ளே சென்று அவர் அமர்ந்திருப்பதாகக் கோபால கிருஷ்ணன் கூறினார். என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன். பண்ணையார் கதாபாத்திரத்திற்காக அடர்த்தியான மீசையை அவருக்குப் பசை போட்டு ஒட்டியிருக்கிறோம். அதை எடுத்தால் அவருக்கு எரிச்சலாக இருக்கிறதாம். சாப்பிடுவதற்காக எடுத்தால் பிறகு மறுபடியும் ஒட்ட வேண்டிவரும். அதனால் எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் இரவு வீட்டில் சென்று சாப்பிட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.
எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு பட்டினியோடு இருந்து நடிக்கிறார். என்ன மனுஷன்யா இவர் என்று கோபாலகிருஷ்ணன் கூறும்போதே கண்கள் கலங்கிவிட்டன. சிவாஜி கணேசன் அர்ப்பணிப்பு பற்றி அதுவரை செவிவழிச் செய்தியாகவும் பத்திரிகைளிலும் படித்த எனக்கு, முதன்முறையாக அந்த அர்ப்பணிப்பைக் கண்கூடாகப் பார்த்தது சிவாஜி கணேசன் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. காலத்தைக் கடந்தும் திரையுலகில் சிவாஜி கணேசனின் பெயர் சாகாவரம் பெற்று நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் சிவாஜி கணேசனின் இந்த அர்ப்பணிப்புதான்.
thanks Nakkeeran
இந்திரா காந்தி உயிரை காப்பாற்ற துப்பாக்கியை உயரே பிடித்த சிவாஜி. "சுட்டு பொசுக்கிடுவேன் 1977 October.
https://youtu.be/wJApponXx6Y
Thanks Nadigar thilagak T V
அனைவருக்கும் வணக்கம். சென்ற வரம் பெய்த பெரு மழையின் காரணமாக சட்டென்று ஏற்பட்ட ஒரு நாள் நீண்ட மின்சார தடை அதன் காரணமாக டைப் செய்து வைத்திருந்ததை இழந்து மீண்டும் டைப் செய்ய வேண்டிய நிலைமை. அதனால் சென்ற வாரம் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது. மன்னிக்கவும். இப்போது ஒரு சிவாஜி ரசிகனின் சினிமா டைரி தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம் - பார்ட் 78
அவன்தான் மனிதன் படம் பற்றியும் அதன் வெற்றி சாதனைகள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். நடிகர் திலகத்தின் காலை அரசியல் உலக பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.
அவன்தான் மனிதன் நடிகர் திலகத்தின் 175வது படமாக வெளியானதும் ஏற்கனவே அறிவித்திருந்தபடி 175வது பட விழாவை மதுரையில் கொண்டாடுவது என்ற முடிவிற்கேற்ப மே 17,18 தேதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க அப்போது நிலவிய கடுமையான வானிலை, மின்வெட்டு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு விழா ஜூலை 5,6 தேதிகளுக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு வந்தது.
நடிகர் திலகம் வழக்கம் போல் படப்பிடிப்பு மற்றும் இயக்க பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து கொண்டேயிருந்தார். சென்னை ராயபுரத்தில் 1975 ஏப்ரலில் பெருந்தலைவர் சிலையை திறந்து வைத்தது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான். அந்த சிலை அமைய நிதி உதவி செய்ததுடன் பா.ரா. அவர்கள் தலைமையில் அந்த சிலையையும் திறந்து வைத்தார்.
ஒரு இடைவெளிக்கு பிறகு சித்ரா பௌர்ணமி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அந்த படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு முதல் கட்டத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. மீண்டும் தொடங்கியபோது அதை மாட்ச் செய்யும் விதமாக ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்றது.
அதே போன்றே ரோஜாவின் ராஜா படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் ஆரம்பமானது. திருவனந்தபுரம் நகருக்கு அருகே கோவளம் கடற்கரை மற்றும் கொல்லம் அருகே வர்கல போன்ற இடங்களில் ஓட்றா ஓட்றா பாடலும் மற்றும் நடிகர் திலகம் மனோகர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதன் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் சென்ற நடிகர் திலகத்தை வரவேற்க மிக பெரிய கூட்டம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூடியிருக்க அந்த கூட்டத்தின் நடுவே நடிகர் திலகத்தை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு போலீசார் மிகுந்த பாடுபட்டனர் என்று பத்திரிக்கை செய்தி. எவ்வளவு பெரிய கூட்டம் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் நடிகர் திலகத்துடனே பயணம் செய்த அவரது காஸ்ட்யூமர் ராமகிருஷ்ணன் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்து கால் விரலில் எலும்பு முறிவு ஏற்படும் அளவிற்கு கூட்டம்.
Dr சிவா படத்துக்காக நடிகர் திலகம் மெர்காரா தலைக்காவேரி ஆகிய இடங்களுக்கு சென்றார், மலரே குறிஞ்சி மலரே பாடலும் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் பாடலும் படமாக்கப்பட்டது என்ற செய்தியும் பத்திரிக்கை மற்றும் சிவாஜி ரசிகன் போன்ற இதழ்களிலும் வந்தது. மன்னவன் வந்தானடி படம் முடியும் தறுவாயிலிருக்கிறது என்றும் அன்பே ஆருயிரே படமும் அது போலத்தான் என்ற செய்திகளும் வந்தன. தேவன் கோவில் மணியோசை படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு மற்றும் ஏபிஎன் இயக்கிய கிருஷ்ண லீலா படத்தின் படப்பிடிப்பு பற்றியும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த நேரத்தில் கிருஷ்ணா லீலா படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றாலும் அவர் நடிக்கிறார் என்றே குறிப்பிடப்பட்டது.
இந்திய விண்வெளித்துறையின் மிக முக்கிய மைல்கல்லான ஆர்யபட்டா விண்வெளி கலம் 1975 ஏப்ரல் 19 அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விண்வெளி கலம் ஆர்யபட்டா. இப்போது நாம் நம்முடைய ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து நேரிடையாக அனுப்புகிறோம் .ஆனால் அன்றைய நாட்களில் அந்தளவிற்கு முன்னேற்றம் அடையாதிருந்த காரணத்தினால் ஆர்யபட்டா ரஷ்யாவிலிருந்து அனுப்பபட்டது. அன்றைய இந்திரா காந்தி அரசுக்கு மக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும்படியாக இது ஒன்றுதான் அமைந்தது.
காரணம் அன்று நாடு முழுவதும் அரசுக்கு எதிரே ஏற்பட்ட அதிருப்தி அலை. ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பிஹாரில் ஏற்பட்ட கிளர்ச்சி, குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற மொரார்ஜியின் உண்ணாவிரதம் இவை நாடு முழுக்க எதிரொலிக்க அரசுக்கு நெருக்கடி. மொரார்ஜியின் உண்ணாவிரதம் காரணம் மத்திய அரசு குஜராத்தில் தேர்தலை அறிவித்தது. மற்றொரு முக்கிய திருப்பம் அதுவரை மன்னர் ஆட்சியில் இருந்த சிக்கிம் இந்தியாவோடு இணைவது என்ற முடிவை எடுத்து இந்தியாவின் அன்றைய 22வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை மிக மோசமான சூழல். கடுமையான மின்வெட்டு. தொழிற்ச்சாலைகளுக்கு 100% மின்வெட்டு, கடுமையான குடிநீர் பற்றாக்குறை, சென்னை நகரிலே ஒரு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை என்ற நிலைமை. பஸ் ஊழியர் போராட்டம் கடுமையான வறட்சி என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. ஆனால் வழக்கம் போல் ஆளும் கட்சி லாவணி பாடிக் கொண்டிருந்தது. எப்போதும் கருணாநிதியும் சரி மற்ற திமுக தலைவர்களும் சரி (ஏன் இரண்டு கழகங்களுமே), பதில் சொல்ல முடியாத கேள்வியோ அல்லது சூழலோ வரும்போது சம்பந்தமில்லாமல் வேறு ஒரு பிரச்சனையை கொண்டு வருவார்கள். மிக பெரிய ஊழல் நடக்கிறது என்று சொல்லும்போது உங்கள் ஆட்சியில் துப்பாக்கி சூடு நடந்ததே அதுவும் ஊழலில் சேர்ந்ததுதான் என்று கருணாநிதி பதில் சொன்னார். துப்பாக்கி சூடு எப்படி ஊழல் ஆகும் என்று அதை பற்றி பேசும்போது முதலில் சொன்ன விஷயம் மக்களின் கவனத்திலிருந்து போய்விடும். இந்த வித்தையை நன்றாக செய்வார்கள். இன்னமொரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பதில் சொல்ல முடியாத கேள்வி வரும்போது கேள்வி கேட்டவரை பார்த்து 1963 ஜூன் மாதம் 7ந் தேதி வெள்ளிக்கிழமையன்று நீங்கள் இதே பிரச்சனைக்கு என்ன சொன்னீர்கள் தெரியுமா என்று சும்மாவது சொல்வார். உடனே கூட இருப்பவர்கள் அனைவரும் பாருய்யா வருஷம் மாதம் தேதி கிழமை எல்லாம் கரெக்டாக சொல்றார் பாரு. சூப்பர். அட்றா அட்றா என்று கைதட்ட விஷயம் திசை திருப்பும் முயற்சி சக்ஸஸ். உண்மையிலே அப்படி ஒன்று நடந்திருக்கவே நடந்திருக்காது. ஆனால் யார் அதையெல்லாம் சரி பார்க்க போகிறார்கள்?
இந்த நேரத்தில் அதாவது மே முதல் வாரத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன் தமிழகத்திற்கு விஜயம் செய்தார். ஜெபியின் இயக்கத்தை அதிமுக எதிர்த்துக் கொண்டிருந்தது. அதற்காகவும் இந்திரா காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற காரணத்திற்காகவும் திமுக அவருக்கு வரவேற்பு கொடுக்கும் என்று அறிவிக்க சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திமுகவினர் கூட ஜெபிக்கு கருப்பு கொடி காட்டுகிறோம் என்று இந்திரா காங்கிரஸ் மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்து அவர்களும் ரயில் நிலையத்தில் கருப்பு கொடி காட்ட அவர்கள் தாக்கப்பட்டனர். அங்கே ஒரு களேபரம் ஏற்பட்டு கலவர சூழல் உருவானது. ஜெபி திமுகவை ஆதரிக்கிறார் என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் பிளான்.மிக சரியாக காய் நகர்த்தி நடத்தி காட்டினார்கள். ஆனால் ஜெபி என்ற மனிதர் அவருக்கு தமிழகத்திலே இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல பேரையும் இழந்தார். சென்னை கடற்கரையில் அவர் பேசிய கூட்டத்திற்கு மிக குறைவான ஆட்களே வந்திருந்தனர். அவரை அந்த நேரம் சந்தித்து பேட்டி கண்டது துக்ளக் அந்த பேட்டியில் ஜெபி குழப்போ குழப்பமாக பதில் சொல்லியிருந்தார்.
கருப்பு கொடி காட்டியபோது ஏற்பட்ட வன்முறையை கண்டித்து கருணாநிதிகு எதிராக கருப்பு கொடி காட்டப் போவதாக எம்ஜிஆர் அறிவித்தார். அனைவருக்கும் ஆச்சரியம். காரணம். கருப்பு கொடி காட்டி அடிவாங்கியது இந்திரா காங்கிரஸ்காரர்கள். அதற்கு ஏன் அதிமுக கருப்பு கொடி காட்ட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதன் விளைவாக செங்கல்பட்டில் கருணாநிதிக்கு கருப்பு கொடி காட்ட போன அதிமுகவினருக்கும் திமுகவினருக்கு பயங்கர மோதல் ஏற்பட்டு ரணகளம் ஆனது.அன்றைய அதிமுக எம்எலஏ எஸ் எம் துரைராஜ் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியும் வந்தது. உடனே கருணாநிதியின் அடுத்த சுற்றுப்பயணத்தின்போது பந்த் என்று அதிமுக அறிவிக்க பதிலுக்கு எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன்பு மறியல் என்று திமுக அறிவிக்க ஒரே பதட்ட நிலை. பெருந்தலைவர் இந்த நேரத்தில் அழகாக சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து தமிழ்நாட்டை கெடுத்து குட்டிசுவராக்கி விட்டார்கள். 1971ல் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம் மக்கள் கேட்கவில்லை. இப்போது ஒன்றுக்கு இரண்டாக ஒருவருக்கு ஒருவர் வன்முறை போராட்டம் நடத்தி மக்களின் அமைதியை அதுவும் இது போன்ற கடுமையான வறட்சி நேரத்தில் தொழில்கள் ஸ்தம்பித்து போயிருக்கும் நேரத்தில் செய்வதை எப்படி பார்த்துக் கொண்டிருப்பது என்று கேட்டார்.
அவன்தான் மனிதன் 175வது படவிழா ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜூலை 5,6 தேதிகளில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி அன்று காலை மதுரை ரயில் நிலையத்திலிருந்து நேராக நடிகர் திலகம் விளக்குத்தூண் சென்று அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பெருந்தலைவர் சிலையை திறந்து வைப்பார் என்றும் அந்த நிகழ்விற்கு பா.ரா அவர்கள் தலைமை வகிப்பார் என்றும் தகவல்கள் அறிவிக்கப்பட்டன. மிக பெரிய ஊர்வலம் காலையில் மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து புறப்பட்டு அனைத்து மாசி வீதிகளையும் சுற்றி தமுக்கம் மைதானத்தை அடையும் என்றும் அதன் அருகே மிக பெரிய மேடை அமைத்து அந்த மேடையில் நின்று நடிகர் திலகம் ஊர்வலத்தை பார்வையிடுவார் என்றும் தமிழ் திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பிற மொழி திரைப்படத்துறையினரும் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பாக இந்தி திரைப்பட நடிகர் சத்ருகன்சின்ஹா நடிகர் திலகத்தோடு மேடையில் நின்று ஊர்வலத்தை பார்வையிடுவார் என்று சின்ன அண்ணாமலை அறிவித்தார். மதுரை நகரில் 175 அலங்கார வளைவுகள் அமைக்கப்படும் என்றும் ஊர்வலத்தில் 175 திரைப்படங்களிலிருந்து காட்சிகள் பானர்கள் வடிவில் ஊர்திகளில் எடுத்து செல்லப்படும் என்றும் தகவல்கள் சொல்லப்பட எங்களுக்கெல்லாம் மிக பெரிய எதிர்பார்ப்பு.
பெருந்தலைவரை பொறுத்தவரை பிப்ரவரி முதல் வாரம் காங்கிரஸ் செயற்குழுவில் இரண்டு கழகங்களுடனும் அவர்களுடன் சேர்கின்ற எந்த கட்சிகளோடும் ஓட்டும் இல்லை உறவும் இல்லை என்று தீர்மானம் போட்டுவிட்டு இடைவிடாத தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதுவும் அந்த வருடம் கோடைகாலத்தில் மிக கொடுமையான வெய்யில் நேரத்தில்கூட மக்களை சந்தித்துக் கொண்டேயிருந்தார். இரண்டு கழகங்களையும் அவற்றுக்கு துணை போக கூடிய கட்சிகளையும் மக்கள் முன் தோலுரித்து காட்டினார். வாழ்நாள் முழுக்க மக்கள் நலம் பற்றி சிந்தித்தவர் செயல்பட்டவர் அந்த நேரத்திலும் தன்னை பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக கவலைப்பட்டார். அப்போது கூட அவரை கொச்சைப்படுத்தும்விதமாக காமராஜருக்கு 72 வயதாகிவிட்டது. இப்போதும் முதல்வர் பதவி ஆசை விடவில்லை என்று ஏகடியம் பேசினார் கருணாநிதி.(அதே கருணாநிதி 92 வயதிலும் முதல்வர் பதவி ஆசை விடாமல் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக 2016ல் நின்றதையும் நமக்கு காலம் காட்டிக் கொடுத்தது). அவரின் தன்னலமற்ற பொதுத்தொண்டை மக்களின் நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட அந்த பயணத்தை முழுமையாக "வாடிய பயிருக்கு வான்முகில் காமராஜ்" என்று தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை வடிவில் வெளியிட்டது கல்கி வார இதழ்.
இப்படியாக ஒரு கடினமான காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய அரசியலையே புரட்டி போட்ட ஒரு சம்பவம் நடந்தது. அதற்கு முன்பு அந்த வழக்கு விசாரணைக்கு வந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்தியாவின் பிரதமர் விசாரணைக்கு வர வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வாசகர்களுக்கு புரிந்திருக்கும். ஆம், இந்திரா காந்தி அவர்கள் 1971 பொது தேர்தலில் ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அவரை எதிர்த்து போட்டியிட்டிருந்த ராஜ்நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். பிரதமர் பதவியை பயன்படுத்தி அரசு ஊழியர்களையும் குறிப்பாக பிரதமர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராக இருந்த யஷ்பால்கபூர் போன்றவர்களை தனது தேர்தல் வேலைகளுக்கு பயன்படுத்தினார் என்பதுதான் முக்கிய குற்றசாட்டு. அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அழைத்தார் இந்திரா. இரண்டு முறை ஆஜரானார் இந்திரா. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
1975 ஜூன் 12 வியாழக்கிழமை அந்த சரித்திர பிரசித்தி பெற்ற தீர்ப்பு வந்தது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சின்ஹா இந்திராவின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு வழங்க அந்த நிமிடம் இந்திய அரசியல் தலைகீழாக புரட்டப்பட்டது. முதன்முறையாக ஒரு பிரதமரின் தேர்தல் வெற்றி செல்லாது என தீர்ப்பு வருகிறது. அதுவும் தவிர 6 வருடங்களுக்கு தேர்தலில் நிற்க தடை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆளும் கட்சியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு மிக பெரிய ஒரு களத்தை உருவாக்கி கொடுத்தது. ஏற்கனவே ஜெபி, மொரார்ஜி போன்றவர்கள் முன்னெடுத்த இந்திரா எதிர்ப்பு அலை நாடெங்கும் வீச துவங்கியது. இந்திராவிற்கு அப்பீல் செய்யும் உரிமை வழங்கிய அலகாபாத் நீதிமன்ற தற்காலிகமாக தீர்ப்பை நிறுத்தி வைத்தாலும் இந்திரா பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை வலு பெற்றுக் கொண்டேயிருந்தது. அதே நாளில்தான் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் வெளிவந்து ஸ்தாபன காங்கிரஸ் தலைமையில் ஜனதா முன்னணி ஆட்சி அமைத்தது. ஸ்தாபன காங்கிரஸை சேர்ந்த பாபுபாய் படேல் முதல்வராக பதவியேற்றார்.
இந்திரா பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முற்பட்டபோது இந்திரா அந்த முடிவை எடுத்தார். ஏற்கனவே 1971ல் பாகிஸ்தான் போரின்போது அறிவிக்கப்பட்ட அவசர நிலை அமலில் இருக்க இப்போது உள்நாட்டில் மிகுந்த குழப்பம் நிலவுவதால் அவசர நிலைமை இந்தியாவெங்கும் உடனே அமலுக்கு வருகிறது என்று 1975 ஜூன் 25 அன்று அறிவிப்பு வந்தது. எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பத்திரிக்கைகளுக்கு சென்சார் ஏற்படுத்தப்பட்டது. எந்த செய்தியாக இருந்தாலும் சென்சார் அதிகாரிகள் ஓகே சொன்னாலதான் பிரசுரமாகும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே சொன்னது போல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பெருந்தலைவர் ஆந்த பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பினார். அந்த இடைவிடாத பயணம், கடுமையான வெயில் அதோடு நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள், அவசர நிலை பிரகடனம், எதிர்க்கட்சியினர் கைது அனைத்தும் சேர்ந்து அவரை மனதளவிலும் உடலவிலும் பாதிக்க கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நேரத்திலும் தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்த சொன்னார். அவரால் வரமுடியாது என்பதால் கூட்டம் திருமலைப்பிள்ளை ரோட்டிலுள்ள அவரது வீட்டிலேயே நடந்தது. அவசர நிலை பிரகடனத்தை கண்டித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போன்று கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை அவசர நிலை அறிவிப்பை எதிர்த்து கண்டன தீர்மானம் போட்ட ஒரே அரசியல் கட்சி ஸ்தாபன காங்கிரஸ் மட்டுமே. திமுகவின் தீர்மானத்தில் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றுதான் இருந்தது. அதன் பிறகு பெருந்தலைவரின் உடல்நிலை மீண்டும் நார்மலாகவில்லை.உடல் பலவீனம் களைப்பு அவரை விட்டு நீங்கவில்லை என்றே டாக்டர்களின் அறிக்கை கூறியது.
மிசா சட்டத்தை பயன்படுத்தி பலரும் கைது செய்யப்படுகின்றனர் (ஜேப்பியார், முரசொலி அடியார்) என்ற செய்திகள் வந்தன. பல அரசு அலுவலகங்களிலும் பல்வேறு நடைமுறைகள் குறிப்பாக நேரத்திற்கு வருவது, அனைவரும் அலுவலக நேரம் முடியும்வரை இருப்பது என்ற நடைமுறைகளும், நியாய விலை கடைகள் ஹோட்டல்கள் போன்றவற்றில் மிக சரியான எடை, உணவு பண்டங்களுக்கு விலைப்பட்டியல் என்ற மாற்றங்களும் நிகழ ஆரம்பித்தன. ரயில்கள் நேரத்திற்கு வந்தன. வேலை நிறுத்தம் தடை செய்யப்பட்டது. பொதுவாக ஒரு ஒழுங்கு முறை உருவாவதாக தோன்றினாலும் எதிர்க்கட்சியினர் அரசை விமர்சிப்பவர்கள் என அனைவருக்கும் வாய்ப்பூட்டு என்பது நெருடலாகவே உணரப்பட்டது.
1975 ஜூலை 11 வெள்ளி இரவு 8 மணி சுமாருக்கு இந்தியாவில் அன்றைக்கு மிக பரபரப்பாக பேசப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு எல் ஐ ஸி 14 மாடி கட்டிடத்தில் தீ பிடித்தது. மிக பெரிய விபத்தாக மாறிய அந்த தீ மறுநாள் ஜூலை 12 சனி மாலை 7 மணிக்குத்தான் அதாவது 24 மணி நேரத்திற்கு பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. ஒரு நாள் முழுக்க சுற்றுவட்டாரத்தில் இருந்த அனைத்து வகை கடைகளும் கட்டிடங்களும் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அவசர நிலை அறிவிப்பிற்கு எதிராக சதி வேலையா என்ற கோணத்தில் எல்லாம் (சி பி ஐ விசாரணை) நடத்தப்பட்டது.
இந்த காலகட்டத்தில்தான் செயற்கை மழை பொழிய வைக்கிறோம் என்ற விஞ்ஞான நாடகமும் நடைபெற்றது. வளர்ந்த நாடுகளிலேயே இதனால் பயன் இல்லை என்று கண்டுபிடித்து கைவிட்ட ஒரு சோதனையை இங்கே தமிழகத்திலே அரங்கேற்றினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். விமானத்தில் பறந்து சென்று மேகக்கூட்டங்களின் மீது சில்வர் அயோடைடு என்ற வேதிப்பொருளை தூவினால் கருமேகங்கள் உருவாகி ஒன்று கூடி மழை பொழிவு உண்டாகும் என்பதுதான் அந்த சோதனை முயற்சி. ஆனால் பெரிய பலன்கள் எதுவும் நடக்கவில்லை. பிற்காலத்தில் இந்த செயற்கை மழை சோதனை முயற்சி சர்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்டது. அரிசி பேர ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளன ப.உ ச. மீது தமிழக அரசே ஒரு விசாரணை கமிஷன் போட்டது. அந்த கமிஷனின் நடவடிக்கைகளில் கலந்து கொண்ட எதிர் கட்சியினர் தாங்கள் கேட்கும் எந்த குறிப்போ பைலோ அல்லது குறுக்கு விசாரணையோ செய்து தர அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததால் விசாரணை கமிஷன் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அறிவித்தன.
நடிகர் திலகம் எப்போதும்போல் படு பிசி. அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகளை படிக்கும்போது நான் பலமுறை ஆச்சர்யத்துடன்
யோசித்திருக்கிறேன். தினத்தந்தியில் சென்னையில் ஏபிஎன் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் என்று இருக்கும். மறுநாள் நவசக்தியில் திருமணம் நடந்த அதே நாளில் பல்லடம் ஊரில் ஸ்தாபன காங்கிரஸ் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேச்சை போட்டிருப்பார்கள். அடுத்த இரண்டு நாளில் சென்னையில் ரோஜாவின் ராஜா படப்பிடிப்பு மனநல மருத்துவமனை போன்று அமைக்கப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது என்ற செய்தியும், மன்னவன் வந்தானடி படத்துக்காக பாட்ச் ஒர்க் (விட்டுப்போன ஓரிரண்டு காட்சிகள்) முடித்து கொடுத்ததாக செய்தியும் வரும். அடுத்த இரண்டு நாளில் பெங்களூரில் இளைய தலைமுறை படத்தின் ஒரு அறை கொடுத்தால் தெரியும் பாடல் படமாக்கப்பட்டது என்ற நியூஸ் வரும். இதே நேரத்தில்தான் தன்னை வைத்து தொழில் முறையில் எதுவும் செய்யாவிட்டாலும் நட்பு முறையில் சாண்டோ சின்னப்பா தேவருக்கு மணிவிழாவை அந்த 1975 ஜூன் 29 அன்று தலைமையேற்று நடத்தினார் நடிகர் திலகம். அது முடிந்து மீண்டும் பாட்டும் பரதமும் செட்டில் சிவகாமி ஆட வந்தாள் படப்பிடிப்பு. உண்மையிலேயே கடுமையான உழைப்பு.
அவசர நிலை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரையில் நடத்த இருந்த 175வது படவிழா ரத்து செய்யப்படுகிறது என்பதை நடிகர் திலகமே ஒரு அறிக்கை வாயிலாக தெரிவித்தார். மிகுந்த வேதனையோடு எழுதப்பட்டிருந்த அந்த வரிகள் பலரையும் வருத்தப்பட வைத்தன. அதே போன்று தஞ்சை நகரிலே நடத்துவதாக இருந்த பெருந்தலைவரின் 73வது பிறந்த நாள் விழாவும் ரத்து செய்யப்பட்டது. அவரது பிறந்த நாள் ஜூலை 15 அன்று வீட்டில் எளிமையாக நடந்தது. பல ஊர்களிலுமிருந்தும் தொண்டர்கள் வந்தாலும் அன்றைய சூழல் மற்றும் அவரின் உடல்நிலை காரணமாக உற்சாகம் இல்லை, நடிகர் திலகம் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றிருந்தார்(என நினைவு). இந்திரா காந்தி வாழ்த்து தந்தி அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில்தான் நடிகர் திலகத்தின் அடுத்த படமான மன்னவன் வந்தானடி திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. எங்க மாமா மற்றும் ஞான ஒளி எடுத்த ஜேயார் மூவிஸ் நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த மூன்றாவது படம். இதன் படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த படத்தில்தான் மஞ்சுளா முதன் முறையாக நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் இது வெளியாவதற்கு முன் எங்கள் தங்க ராஜா என் மகன் போன்றவை வெளியாகி விட்டன. நடிகர் திலகம் பி.மாதவன் பாலமுருகன் கூட்டணி என்பதனால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமல்லாமல் படம் வெளிவருவதற்கு முன்னரே வெளியான இசைத்தட்டின் வழியாகவும் ஆல் இந்தியா ரேடியோ மூலமாகவும் காதல் ராஜ்ஜியம் எனது பாடல் மிகுந்த வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட் ஆகி இருந்தது.
மதுரையில் முதன் முறையாக ப்ரியா காம்ப்ளக்ஸில் வெளியாகிறது. மட்டுமல்ல அந்த வளாகத்தில் இருந்த சினிப்ரியா மினிப்ரியா இரு திரையரங்குகளிலும் ரிலீஸ் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது ப்ரியா காம்ப்ளக்ஸ் மதுரையின் பிரெஸ்டிஜ் தியேட்டராக உருக் கொண்ட நேரம். மாதவன் படம் என்பதால் வழக்கம் போல் சனிக்கிழமை ரிலீஸ். இதற்குள்ளாக நடந்த மற்றொரு நிகழ்வு, என் கஸினுக்கு சென்னையில் வேலை கிடைத்து அவர் அங்கே சென்று விட்டார். ஆகையால் சிகர மன்றத்துடனான என்னுடைய தொடர்பு (தற்காலிகமாக) விட்டுப்போனது.
எப்போது பார்த்தேன்? எப்படி பார்த்தேன்? படம் எப்படி இருந்தது? தொடர்ந்து அடுத்த வாரம் பேசுவோம்.
(தொடரும்)
அன்புடன்
Thanks Murali Srinivasan ( Nadigarthilagam Sivaji Visirikal)
கூண்டுக்கிளி
➰➰➰➰➰➰
சிவாஜிகணேசன் என்பவர் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை அல்ல.சுயமுடன் சிந்திக்கும் சுதந்திரபறவை, புதியபறவை
ஞானப்பறவை.
கூண்டுக்குள் அடைத்து கதவை திறந்தவுடன் வெளிவந்து சீட்டை பொறுக்கி எடுத்து ஜாதகம் எனச்சொல்லி... அதை வளப்பவருக்கு சாதகமாக்கி ஒரு நெற்மணிக்காக பொய் சொல்லும் கூண்டுக்கிளியல்ல.
➰
கூண்டுக்கிளி என்ற படம் நடிகர்திலகமும் மக்கள்திலகமும் இணைந்து நடித்த ஒரேபடம்.
முன்னணியில் இருக்கும் இருபெரும் நடிகர்கள் நடித்த படம். இந்தியாவிலுள்ள அனைத்து
முன்னணி நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்க தயங்குவதில்லை. இங்குமட்டுந்தான்... ஒருவரை மிஞ்சி ஒருவர் பெயர் வாங்கிவிடுவார்களோ என்ற நடுக்கம் இன்றுவரை எல்லா கதாநாயகர்களுக்குமே இருந்துவருகிறது. ஆனால் அதில் சிவாஜி ஓர் விதிவிலக்கு.
அவர் தொழில் மேல் கொண்ட மரியாதை... திறமையின் மேல் அசைக்கமுடியாத நம்பிக்கை.
அதனால் கதாநாயகர் பாத்திரத்தில் மட்டுமல்ல எந்த வேடத்தையும் ஏற்க தயங்குவதில்லை. கௌரவ வேடமென்றாலும் நடிப்பார் ? எதிர்மறை (வில்லன்) பாத்திரத்தில் (Negative role) நடித்தும் பெயர் வாங்குவார்.
➰
இப்படித்தான் கதாநாயகன் பாத்திரத்தை எம்ஜிஆர் ஏற்க...
எதிர்மறை பாத்திரத்தை சிவாஜி ஏற்றார். அவருக்கு எந்த அளவு நெஞ்சில் உரம் இருந்திருக்கும் ?
➰
"நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ"
➰
இப்படியாப்பட்ட படம் ஏன் உருவாக்கவேண்டும்? வேறுகதை கிடைக்கவில்லையா ? ஏன் இல்லை? இந்தப்படத்தை பாருங்கள் புரியும்... சிவாஜி கீழே படுத்திருக்க எம்ஜிஆர் அவரை கீழே தள்ளி அழுத்துவதாக உள்ளது. ஆம் சிவாஜியை அழுத்துவதற்காவே எடுக்கப்பட்ட படம். இதற்கு சி.பி.ஐ விசாரனை தேவையில்லை.
➰
ஓர் மறைக்கப்பட்ட வரலாற்றை
துருவி பார்ப்போமா ?
➰
அண்ணாவால் எழுதப்பட்ட
"சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்"
என்ற நாடகத்தின் மூலம் பெரியாரால் "சிவாஜி" என்ற பட்டம் பெற்று சிவாஜிகணேசன் என
அழைக்கப்பட்டார்.
➰
கலைஞர் எழுதிய பராசக்தி படம் 300 நாட்களை தொடக்கூடிய அளவிற்கு ஓடி பெறும் வெற்றியை பெற்றுத்தந்து பெரும் நடிகரானார்.
அவரின் வளர்ச்சியை தடைபோட எந்த சக்தியாலும், பராசக்தியின் அருளை தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஏற்கனவே சிவாஜி திமுகவில் அண்ணாவிற்கு அடுத்த நிலையில் பெயர் பெற்றவராய்
விளங்கிவந்தார். இதை அண்ணாவிற்கு அடுத்த நிலையில் தான் வரவேண்டுமென நினைத்த படித்த மேதைகளின் கூட்டம் சும்மா விடுமா ? அன்றைக்குத்தான் சதிவலை பின்னப்பட்டது. சிவாஜிக்கு மாற்று சக்தியை கொண்டுவர நினைத்தது.
➰
சிவாஜியின் வரலாறை அறிந்த நாம்
எம்ஜிஆரின் வரலாறையும் கொஞ்சம் பார்ப்போம்.
➰
இலங்கையில் கண்டியில் பிறந்த கேரளத்துகாரர் எம்ஜியார்... சிவாஜி போலவே அவரும் அவர் அண்ணன் எம்.ஜி.சாரங்கபாணியும் வறுமையின் காரணமாக நாடகத்தில் நடித்தார்கள். *1936ல் எம்.ஜி.ராமசந்தர் 'சதிலீலாவதி'எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்கள். சிவாஜி போல் முதல்படத்திலேயே கதாநாயகனாக ஆக வாய்ப்பு கிடைக்காமல் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து படிபடியாக முன்னேறினார். 11ஆண்டுகள் கழித்து *கலைஞரின்* கதை வசனத்தில் *1947ல் 'ராஜகுமாரி' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார்கள்.
➰
1952ல் கலைஞரின் வசனத்தில் பராசக்தியில் சிவாஜி அறிமுகமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவரின் வளர்ச்சியை தடுக்க வேண்டுமானால் எம்ஜிஆரை கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டது. எம்ஜிஆர் ஓர் பட்டைபோட்டு கொட்டை கட்டிய எம்ஜிஆர் காமராஜர் மேல் பற்றுள்ள காங்கிரஸ்காரர். ஆனால் பெரிதாக
காங்கிரஸில் அவர் ஈடுபடவில்லை.
➰
1953ல் அண்ணாவின் முன்னணியில் எம்ஜிஆர் திமுகவில் சேர்க்கப்பட்டார். எம்ஜிஆரும் திமுகவால் வளர நினைத்தார்.
➰
1954ல் கூண்டுக்கிளி படம் வந்தது. ஆனால் இரண்டு ரசிகர்களிடமும் மக்களிடமும் வரவேற்பு பெறாமலே இந்தபடம் ஓடமுடியாமல் போனது.
➰
சிவாஜியை வில்லனாக சித்தரித்து
எம்ஜிஆர் சிவாஜியின் நெஞ்சை
பிடித்து அழுத்துவதாக நஞ்சு தூவப்பட்டது.
➰
வெள்ள நிவாரண நதி வசூல் செய்துகொடுக்க அண்ணா அவர்கள் கட்சிகாரர்களை கேட்டதினால் அதிக பணத்தை வசூல் செய்து கலைஞரிடம் கொடுத்து அண்ணாவிடம் கொடுக்கசொல்லி சென்னை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார் சிவாஜி. ஆனால் எம்ஜிஆர் அண்ணாவிடம் நிதி கொடுக்க வைத்து முன்னணிபடுத்தப்பட்டார். அதன் பாராட்டுவிழாவிற்கு அழைப்பார்கள் தன்னை அண்ணா பாராட்டுவாரென சிவாஜி நினைத்திருந்தார்.ஆனால் அதிக வசுல் செய்து கொடுத்தும் சிவாஜியை அழைக்கப்படாமல் ஏமாற்றப்பட்டார். சிவாஜி மிக மிக வேதனை அடைந்தார். இனி ஒரு உறையில் இரண்டு கத்தி தேவையில்லை எம்ஜிஆரே இருக்கட்டும்... என்று நினைத்து மனம் நொந்த நிலையில் அவர் திருப்பதி சென்றார். பகுத்தறிவு பாசறையில் ஊறியவர்களல்வா
கடவுள் மறுப்பு இயக்கத்தில் சேர்ந்தவர்கள் அல்லவா? கோயில் குளமெல்லாம் போகக்கூடாதல்லவா?
திருப்பதி சென்று வந்த கணேசா...
உனக்கு திமுக ஒரு கேடா ? கணேசா கோயிந்தா... கோயிந்தா... என்றார்கள்.
➰
1955வரை திமுகவில் இருந்தார் சிவாஜி. அதன்பிறகு ஒதுங்கியிருந்தார். ஆனாலும் அவர் வளர்சியை ஏதும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.
➰
அன்றைக்கு ஓடாத கூண்டுக்கிளி மறுவெளியீட்டில் நன்றாக ஓடியது. ஆனால் சிவாஜி ரசிகர்களுக்கும் எம்ஜிஆரின் ரசிகர்களுக்கும் பிரட்சனைகள் அடிக்கடி வந்தது.
பிற்காலத்தில் அதுவே தொடர்ந்தது.
➰
5ஆண்டுகளுக்கு பின்னர்....
அந்த 'கூண்டுக்கிளி' தானே கதவை திறந்து சுயமாக சிந்தித்து சுதந்திரபறவையாக, புதியவையாக ஞானபறவையாக
1961ஆம் ஆண்டு காமராஜர் அவர்களின் தோளில் அமர்ந்து காங்கிரஸில் இணைந்தது. காமராஜர் இருக்கும்வரை அந்தப்பறவையை யாரும் துன்புறுத்தவில்லை.
➰
வாழ்க கூண்டுக்கிளி சிவாஜி !
வாழ்க புதியபறவை சிவாஜி ! !
வாழ்க ஞானபறவை சிவாஜி ! ! !
➰
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராஜன்/:
Thanks ப.நடராஜன் (Nadigarthilagam Sivaji Visirikal)
சென்சாருக்காக, கலைவாணர் செய்த தந்திரம் |Sivaji Life History | Writer M.G.S.Inba | Part-19
https://youtu.be/1qzA6jHQoxs
Thanks Thirai Chirpi
சிவாஜி நடித்தப் படங்கள் அழுகாச்சிப் படங்களா? |பட்டையைக் கிளப்பிய நகைச்சுவைப் படங்களின் பட்டியல்
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் அனைத்தும் அழுகையான, சோகமயமான படங்கள் என்று ஒரு குற்றச்சாட்டு நிலவுவது உண்டு. ஆனால், அவர் பக்தி, சரித்திரம், திரில்லர், கமர்சியல், குடும்பக்கதை, காதல், வீரம், வரலாற்று மாந்தர்களின் வாழ்க்கை கதை, நகைச்சுவை என்று எல்லா வகையான படங்களிலும் நடித்து இருக்கிறார். அவர் நடித்த ஏராளமான நகைச்சுவை படங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அவை வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. அவற்றைப் பட்டியலிட்டு, சுட்டிக் காட்டுவது தான் இந்தக் காணொளி!
https://youtu.be/cqra5YXDGJ0
Thanks Nilaas Thiraikkoodam
சிவாஜியால் கிடைத்த எம் ஜீ ஆரின் மாபெரும் வெற்றி.
சிவாஜி, சினிமாவின் மையப்புள்ளியானார் |Sivaji Life History | Writer M.G.S.Inba | Part-23
https://youtu.be/0BmFzISe7Vc
Thanks Thirai Chirpi
Sivaji Ganesan: A legend and an Incredible Actor : Unbelievable !
Dad's Den You Tube Channel Hosted by Ken Lee .He is doing reviews and reactions to movies, music, food, tech and more. Dad’s Den Media’s goal is to make the viewers smile for a few brief minutes of your day.
https://youtu.be/J6baCP3ft24
Thanks ENDRENDRUM SIVAJI
தமிழ்நாடு காமராஜர் சிவாஜி கணேசன் பொது நலமக்கள் இயக்கத்தின் சார்பில் அனைவருக்கும் காலை வணக்கம் .நடிகர் திலகத்தின் 175வது திரைக்காவியம் அவன்தான் மனிதன் திரைப்படம் சென்னை மற்றும் தமிழகமெங்கும் திரையிடப்படுகிறது ..மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறோம் ..தலைவர் PN.நஞ்சப்பன் ...செயலாளர் சன்G.ராமலிங்கம் கணேசன் .பொதுச்செயலாளர் பாசமலர்R பாண்டியன் அவர்கள்.
Attachment 5829
Thanks Dr Sivaji Ganesan Fanbook
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் திரைப்படச் சாதனைகள் - 1
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரைப்படச் சாதனைகளைப் பற்றிய தொகுப்பு - 1. இலங்கையில் அவர் நடித்து வெளியாகி, 200 நாட்களைக் கடந்து ஓடிய திரைப்படங்களைப் பற்றிய புள்ளிவிபரங்கள் அடங்கிய காணொளி.
https://youtu.be/cTMNrC1KHa8
Thanks Nilaas Thiraikkoodam
பட்டிக்காடா பட்டணமா !
லண்டனில் இருந்து படித்துவிட்டு சொந்த ஊரான மதுரைக்கு வருகிறார் ஜெயலலிதா (கல்பனா). அவரை வரவேற்க, அப்பா வி.கே.ராமசாமியும் அம்மா சுகுமாரியும் விமானநிலையத்துக்கு வந்து அழைத்துச் செல்கிறார்கள். அங்கே அவர்களின் சொந்தக்காரப் பையன் குடியுடனும் இடுப்பில் கைவைத்து அணைத்தபடி ஒரு பெண்ணுடனும் வருகிறான்.
இதையடுத்து, மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற சோழவந்தானில் இருந்து, கோயில் திருவிழாவுக்கு வரச்சொல்லி, தாய்மாமா வி.கே.ஆருக்கு கடிதம் போடுகிறார் மூக்கையா சேர்வை (சிவாஜி). ‘அந்த குடுமிமாமாவை பாத்து ரொம்ப வருஷமாச்சு. கிராமத்தையும் சுத்திப் பாக்கலாம்’ என்று கல்பனா விரும்புகிறாள். எல்லோரும் சோழவந்தானுக்கு வருகிறார்கள். ஊரில் சிவாஜிக்கும் இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் அவரின் வீரத்தையும் அவருக்கு பயந்து நடுங்குகிறார்கள் என்பதையும் கண்டு ரசிக்கிறார் ஜெயலலிதா. வியக்கிறார்.
‘நான் மட்டும் லண்டன்ல படிச்சிருந்தேன்னா, உங்க பொண்ணுக்கு இந்நேரம் தாலி கட்டிருப்பேன்’ என்று விளையாட்டாகச் சொல்கிறார் சிவாஜி. மதுரைக்கு வந்தவர்கள், தன் சொந்தத்தில் இருக்கிற அந்த குடிகாரப் பையனை, பெண்ணுடன் வந்தவனை தன் மகளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்கிறார் சுகுமாரி. இதைக் கண்டிக்கிறார் வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் தெரிவிக்கிறார். அந்தக் கல்யாணத்தின் போது வந்து, ஜெயலலிதாவை தூக்கிக்கொண்டு சோழவந்தானுக்கு வருகிறார். ‘நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிவைக்கிறேன்’ என்கிறார். ஆனால் ஊர்மக்களும் உறவுக்காரர்களும் ‘மணமேடைலேருந்து அவளைத் தூக்கிட்டு வந்தே. இனி அவளை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க’ என்கிறார்கள். ‘நீயே கட்டிக்கோ’ என்கிறார்கள்;
இதற்கு ஜெயலலிதாவிடம் சம்மதம் கேட்க, அவரும் சரியென்கிறார். திருமணம் நடக்கிறது. அவள் நாகரீகமாக இருக்க, சோபா, ஏ.ஸி, பாத்ரூமெல்லாம் கேட்க, அவற்றையெல்லாம் செய்துகொடுக்கிறார் சிவாஜி. மாடர்ன் டிரஸ்ஸில் இருப்பவருக்கு புடவைக் கட்டிவிடுகிறார்.
அவருக்கு பிறந்தநாள் வருகிறது. ஊரில் இருந்து நண்பர்களையெல்லாம் வரவழைக்கிறார். கேக் ரெடியாக இருக்கிறது. ஒரு பஞ்சாயத்துக்குச் சென்றிருக்கிறார் சிவாஜி. காத்திருக்கிறார்கள். பிறகு கேக் வெட்டுகிறார் ஜெயலலிதா. எல்லோரும் குடித்துவிட்டு ஆடுகிறார்கள். பாடுகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் பதைபதைத்துப் பார்க்க, சிவாஜி வந்து கடும் கோபமாகிறார். சாட்டையால் எல்லோரையும் விளாசித் தள்ளுகிறார். விரட்டுகிறார். மனைவி ஜெயலலிதாவுக்கு சாட்டையால் வெளுத்தெடுக்கிறார். விடிந்ததும் ஜெயலலிதாவைக் காணவில்லை. மதுரைக்குச் சென்று அழைக்கிறார். விடமாட்டேன் என்கிறார் சுகுமாரி. வீட்டுக்கு வந்த சிலநாளில், வக்கீல் நோட்டீஸ் வருகிறது. திரும்பவும் சென்று கெஞ்சுகிறார். ‘ஊர்ல எனக்குன்னு மிகப்பெரிய மரியாதை இருக்கு. இதுவரைக்கும் கோர்ட் படியை நான் மிதிச்சதே இல்ல. இனி அடிக்கமாட்டேன். உன் இஷ்டத்துக்கு நடந்துக்கோ’ என்று கெஞ்சுகிறார். இதற்கு அம்மாக்காரி சுகுமாரியும் சம்மதிக்கவில்லை. மனைவி ஜெயலலிதாவும் மனமிரங்கவில்லை.
அடுத்தகட்டமாக, மதுரையில் இருந்து சென்னைக்குச் சென்றுவிடுகிறார்கள். அங்கே, ‘கணவர் எங்கே’ என்று கேட்க, ‘அவர் லண்டனில் இருக்கிறார்’ என்கிறார்கள். ‘பெயர் முகேஷ்’ என்கிறார்கள். இதையெல்லாம் கண்டு கொதிக்கிற வி.கே.ஆர். சிவாஜிக்கு தகவல் சொல்கிறார். அங்கே, சென்னையில் குடுமியும் கடுக்கனுமாய் மூக்குத்தியுடன் இருந்த சிவாஜி, ஹிப்பி கிராப்பும் பேண்ட்டுமாக ஸடைலாக வருகிறார். அன்றிரவு வீட்டுக்குள் புகுந்து, மனைவியின் சம்மதமில்லாமல், முரண்டு பிடிக்க, மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார். இதில் அவர் கர்ப்பமாகிறார்.
ஒரு பார்ட்டியில், ஜெயலலிதா தலைசுற்றி மயக்கமாக, அங்கே உள்ள பெண் மருத்துவர் சோதித்துப் பார்த்து கருவுற்றிருக்கிறார் எனும் விஷயத்தைச் சொல்ல,அங்கே வரும் சிவாஜி, ‘லண்டனில் மாப்பிள்ளை. இங்கே மனைவி கர்ப்பம். எப்படி?’ என்று கேள்வி எழுப்புகிறார். ‘அதானே’ என்கிறார்கள் அனைவரும்.
ஆனால், சிவாஜியின் எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.மனமொடிந்து ஊர் திரும்புகிறார். இங்கே, சென்னையில், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறக்கிறது. பிறந்த கையுடன் குழந்தையை அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டு போட்டுவிடுகிறார். குழந்தை எங்கே என்று ஜெயலலிதா கேட்க, அம்மாக்காரி விஷயத்தைச்சொல்ல, கோபமாகி, அழுகையுடன் ஆஸ்ரமத்துக்கு ஓடுகிறார். அங்கே குழந்தையைக் கேட்கிறார். தத்து கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். எங்கே, யார், விலாசம் என்ன என்று கேட்க, ‘மூக்கையா சேர்வை, சோழவந்தான்’ என்கிறார்.
இந்தசமயத்தில், சிவாஜி சென்னைக்கு வருகிறார். சொந்தக்காரப் பெண் ‘ராக்கம்மாவுக்கு கல்யாணம்’ என்கிறார். பத்திரிகை கொடுக்கிறார். அதில் மணமகன் மூக்கையன் என்றிருக்க, அனைவருக்கும் அதிர்ச்சி.
இந்தநிலையில், தன் குழந்தையைக் கொடுங்கள் என்று கேட்க, சோழவந்தான் வருகிறார் ஜெயலலிதா. அப்போது திருமணம். ஊரும் உறவும் திரண்டிருக்க, ‘முதல் மனைவி நானிருக்கும்போது இவர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்கிறாரே நியாயமா?’ என்று முறையிடுகிறார். அப்போதுதான் மணமகனின் பெயரும் மூக்கையன், அவர் வேறொருவர் என்பது தெரியவருகிறது. சிவாஜியும் ஜெயலலிதாவும் ஒன்றுசேருகிறார்கள். மாமியார் சுகுமாரியும் மனம் மாறி மன்னிப்புக் கேட்கிறார். அந்தக் காலத்தில், மிகச்சிறந்த கதாசிரியர் என்று பெயர் பெற்றவர் பாலமுருகன். இவரின் கதை வசனம் என்றாலே படம் சூப்பர் என்பது முடிவாகிவிடும். அந்த அளவுக்கு நேர்த்தியாகக் கதை சொல்லுவதிலும் ஆழமாகவும் உணர்வுபூர்வமாகவும் வசனம் எழுதுவதிலும் கில்லாடி என்று பேரெடுத்தவர். ‘பட்டிக்காடா பட்டணமா’வுக்கு கதை, வசனம் பாலமுருகன் தான்!
அதேபோல், அந்தக்காலத்தில் சிவாஜி, பி.மாதவன், பாலமுருகன் கூட்டணி என்றாலே அது சக்ஸஸ்தான் என்பார்கள். சிவாஜியை ரசித்து ரசித்து படமாக்குவார் இயக்குநர் பி.மாதவன். சிவாஜி, ஜெயலலிதா, வி.கே.ராமசாமி, சுகுமாரி, மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.என்.லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி முதலானோர் நடித்திருந்தார்கள். கணவனுக்கு அடங்காமல் இருக்கிற ஜெயலலிதா, கணவனை அடக்கியாளும் சுகுமாரி, கணவனைத் தேடி சென்னையில் அலையும் மனோரமா என்று அழகாகக் கேரக்டர் பிடித்திருப்பார்கள். ஒவ்வொரு முறை வி.கே.ஆர். பொங்குவதும் பிறகு தோற்றுப்போவதும் பார்க்கிற வீட்டுப் பணியாள் சாமிக்கண்ணு திக்குவாய். ‘என் பொண்டாட்டி மட்டும் இப்படிச் செஞ்சிருந்தா அவளைக் கொன்னுபோட்டிருப்பேன்’ என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவதும் கடைசியில் வி.கே.ஆர்., சுகுமாரியை சாட்டையால் விளாசியதும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பதும் இன்னொரு டச்.
ஊரில் மைனராக அடாவடி பண்ணும் எம்.ஆர்.ஆர்.வாசுவை மனோரமாவுக்கு கட்டிவைப்பதும் இதனால் அவர் சோழவந்தானிலிருந்து சென்னைக்கு ஓடிவிடுவதும் அவரைத் தேடிப் பிடிக்க மனோரமா வருவதும் காமெடிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
படித்த திமிர், பணக்காரத் திமிர், நவநாகரீக நங்கை, எதிலும் அலட்சியம் என்பதெல்லாம் ஜெயலலிதாவின் கேரக்டர்கள். ஒவ்வொரு தருணத்திலும் பிரமாதப்படுத்தியிருப்பார். ‘குடுமி அங்கிள் குடுமி அங்கிள்’ என்று சிவாஜியைக் கொஞ்சுவதாகட்டும், திட்டியதையும் அடித்ததையும் பொறுக்கமாட்டாமல் இங்கிலீஷில் புலம்புவதாகட்டும், குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பதற்கு தவிக்கிற தவிப்பாகட்டும்... ஜெயலலிதாவின் திரை வாழ்வில் முக்கியமான படம் இது.
குடுமியும் முழங்காலுக்கு சற்றே கீழே வரை கட்டிக்கொண்டிருக்கிற வேஷ்டியாகட்டும், சில்க் ஜிப்பாவாகட்டும், காதில் கடுக்கனும் மூக்கில் மூக்குத்தியும் கொண்டு சோழவந்தான் மூக்கையா சேர்வையாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி. அப்பத்தாவுக்கும் ஊர்மக்களுக்கும் தாய்மாமாவுக்கும் கொடுக்கிற மரியாதையும் பண்பும் மதுரைக்காரராகவே அவர் நடை உடை பாவனையெல்லாம் காட்டியிருப்பது அசத்தல். ஜெயலலிதாவைப் போலவே சிவாஜியின் இன்னொரு முறைப் பெண் (புதுமுகம் சுபா) ராக்கம்மாவுடன் விளையாடுவதும் விகல்பமில்லாமல் பழகுவதும் நெகிழவைக்கும்.
மனைவிக்கு விட்டுக்கொடுப்பதும் கலப்பையைக் கொல்லையில் போட்டதால் மனைவியிடம் கோபம் கொள்வதும் பிரிந்து சென்றதும் வருந்திக் கெஞ்சுவதும் குடுமியும் கடுக்கனும் எடுத்துவிட்டு, நவநாகரீக வாலிபனாக கிடாருடன் பாடுவதும் ‘உன் மனைவி கூட வாழமுடியலை. நீ பஞ்சாயத்து பண்றியா?’ என்று ஊர்மக்கள் அவமதிப்பதைக் கேட்டு புழுங்கிப் போவதும் என சிவாஜிக்கு ப்ளேட் ப்ளேட்டாக கொடுத்ததையெல்லாம் மனிதர், அல்வா சாப்பிடுகிற மாதிரி அசத்தியெடுத்திருப்பார். டைட்டிலில் கட்டியம் கூறுவது போல் ஒரு பாடல். அதில் கொஞ்சம்கொஞ்சமாக சிவாஜியைக் காட்டும் ரசனை. டைட்டில் முடிந்ததும் ‘அம்பிகையே ஈஸ்வரியே’, அடுத்து ‘என்னடி ராக்கம்மா’, ‘கேட்டுக்கோடி உருமிமேளம்’, ‘நல்வாழ்த்து நான் சொல்லுவேன்’ என்று எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுத, எம்.எஸ்.வி. தன் இசையால் மாபெரும் ஹிட்டாக்கினார்.
மதுரை பாஷையில் சிவாஜி பிரமாதப்படுத்தியிருப்பார். மனோரமாவுக்கு சொல்லவா வேண்டும். சோழவந்தானில் முக்கால்வாசி படப்பிடிப்பு. நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்த ஊர் இதுதான். இங்கே படப்பிடிப்பு நடத்த பல உதவிகள் செய்தார் டி.ஆர்.மகாலிங்கம். ஆகவே, டைட்டிலில் அவருக்கு நன்றி சொல்லப்பட்டிருக்கும்.
1972ம் ஆண்டு, மே மாதம் 6ம் தேதி வெளியாகி, பல ஊர்களில் நூறுநாட்களைக் கடந்து ஓடியது ‘பட்டிக்காடா பட்டணமா’. அந்த சோழவந்தான் கிராமத்தை அழகாகப் படம்பிடித்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம். படத்தின் சண்டைக்காட்சிகளும் மலைக்கவைக்கும்.
சென்னையில், சிவாஜியை காரிலேற்றிக்கொண்டு, ஒவ்வொரு இடமாகக் காட்டி அடிப்பார்கள். ‘இதான் எல்.ஐ.சி’ என்று ஒரு அடி. ‘இதான் சாந்தி தியேட்டர்’ என்று ஒரு அடி. பிறகு சிவாஜி அடிக்கும் போது, ‘சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?’ என்று வெளுப்பார். அட்டகாசமான கிராமத்துப் படமாக, அழகான குடும்பப்படமாக, பிரமிக்க வைக்கும் சிவாஜி படமாக, வியக்கவைக்கும் பி.மாதவன் படமாக வந்து பட்டையைக் கிளப்பியது ‘பட்டிக்காடா பட்டணமா’.
படம் வெளியாகி 48 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் ‘பட்டிக்காடா பட்டணமா’வையும் சோழவந்தானையும் ‘மூக்கையா சேர்வை’யையும் முக்கியமாக ‘என்னடி ராக்கம்மா’வையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்!
நன்றி ! இந்து தமிழ் திசை இணையத்திலிருந்து ...
Thanks Ganesh Pandian ·
நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL
திண்டுக்கல் ஆர்த்தி கிராண்ட் சினி பிளக்*ஸ் 2k திரைஅரங்கில்
4/02/2022 முதல் காட்சியளிக்கிறது
அவன்தான் மனிதன்.
Attachment 5830
திண்டுக்கல்லில் அவன்தான் மனிதன் கொண்டாட்டம்.
Attachment 5831
Attachment 5832
Attachment 5833
Attachment 5834
கலியுக கர்ணன் வள்ளல் சிவாஜி கணேசனின் மிகச்சிறந்த கொடைகளில் ஒன்று.
#போராட்டம்_தொடருகிறது
தமிழக அரசு தூங்குகிறது
சிவாஜி கணேசன் 1965-ல்
பறையர்களுக்கு வாங்கி கொடுத்த
நிலத்தினை மீட்டுக்கொடு
________________________________
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கீழஊரணி பகுதியில் 200-க்கு மேற்பட்ட பறையர் குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பதற்கு மனையில்லாமல் துயரத்தோடு வாழ்ந்த இந்த மக்களின் நிலையை நினைத்து வருந்திய நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் 1965-ம் ஆண்டு இந்த பகுதிக்கு வந்து தேன்கூடு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி நாடகத்தின் வாயிலாக கிடைத்த வருவாயை வைத்து AVM.பழனியப்ப செட்டியார் என்பவர் மூலமாக இரண்டரை ஏக்கர் நிலத்தினை வாங்கி பறையர் மக்களின் பிரதிநிதிகள் பெயரில் பட்டா செய்து கொடுத்தார்கள்.
சிவாஜி கணேசன் காலனி என்னும் பெயரில் மக்களால் இந்த இடமானது அழைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது இந்த பகுதியில் வாழ்ந்துவரும் பறையர்களை அச்சுறுத்தி ஆதிக்க சாதியை சேர்ந்த பண முதலைகள் சிலர் சிவாஜி கணேசன் காலனியை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்து வட்டாச்சியர் யுவராஜ் என்பவரை பயன்படுத்தி தங்கள் பெயர்களில் சட்டவிரோதமாக திருட்டு பட்டா மாற்றம் செய்துள்ளார்கள். எனவே பல ஆண்டுகளாக பறையர்குடி மக்கள் தங்களுக்கு சொந்தமான சிவாஜி காலனியை மீட்டுதரும்படி போராடி வருகின்றார்கள்.
பறையர் மக்களின் அறவழியிலான போராட்டத்தை ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ ஒரு பொருட்டாகவே கருதாமல் இம்மக்களை ஏமாற்றி வருகின்ற காரணத்தால், நடக்கவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் புறக்கணித்து வீடுதோறும் கருப்பு கொடிகளை ஏற்றி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எனவே தமிழக அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து பறையர்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தினை மீட்டுதர வேண்டும்.
___ சடையன்பெயரன் ஊ.ம.த
Attachment 5835
நன்றி Vijaya Rai Kumar-( Nadigarthilagam Fans)
வள்ளல்.
"பெருவெள்ளம்"
1960ஆம் ஆண்டு சென்னையைச் சூழ்ந்த போது, மக்கள் பசி தீர்க்கும் பணியில் திரைப்படத் துறையில் இருந்து முதலில் ஈடுபட்டவர் சிவாஜிகணேசன் என்கிறது வரலாற்று தகவல்கள்.
மக்கள் ஒருவர் கூட பசி பட்டினியோடு இருக்கக்கூடாது என்று தன் வீட்டில் தன் மேற்பார்வையில் பெரிய பெரிய பாத்திரங்களில் சமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் பணியைச் செய்துள்ளார் சிவாஜிகணேசன்.
அரசியல்வாதிகள், விளம்பரப் பிரியர்கள் ஒரு நேரம் உணவுப் பொட்டலங்களை கொடுத்து விளம்பரம் தேடிக் கொள்வதைபோல் இல்லாமல்,
மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்கு திரும்பும் வரை, சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது.
அப்போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது .
Attachment 5836
Thanks Ganesh Pandian (Nadigar thilagam Sivaji Visirigal)
காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார்
அதற்கான ஆதாரம்.
நன்றி திரு ஆர்.சுந்தரம்
நடிகர் திலகம் அவர்கள் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமல் உள்ளது. அதில் இதுவும் ஒன்று.
காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த வீடற்ற ஆதி திராவிடர்களுக்கு உதவும் வகையில் காரைக்குடியில் தேன்கூடு என்ற நாடகம் நடத்தி அதில் வசூலான தொகையில் இடம் வாங்கி கொடுத்துள்ளார். அது தற்போதும் சிவாஜி கணேசன் காலணி என்று அழைக்கப்படுகிறது.
Attachment 5837
Attachment 5838
Thanks Vijaya Rai Kumar(NadiGar Thilagak Fans)
சிவந்த மண் கட்அவுட் சென்னை குளோப் தியேட்டர்.
எதிர்காலம் திரைப்படத்தின் Title .
Attachment 5839
நன்றி புகைப்படம் உதவி திரு ராகவேந்திரா சார்.
மதுரை சென்ட்ரல் திரையில் பெப்ரவரி 18 முதல்
அவன்தான் மனிதன்.
Attachment 5840
திருந்தவே மாட்டோம் என்று வாத்தி ரசிகர்கள் அடம்பிடிப்பது ஒன்றும்புதிய விடயமல்ல.
ஆதாரம் கிடைத்தாலும், பார்த்தாலும் கண்ணைமூடிக்கொள்வது வாத்தியாரின் வாரிசுகளின் பச்சை குத்திய கொள்கை.
பச்சை குத்த வைத்து கண்ணை மூடிக்கொண்டு கண்டதையும் எழுதுங்கள் என சொல்லிவிட்டு
வாத்தியார் மறைந்து விட்டார். பாவம் வாத்தியின் கைகூலிகள் அல்லாத பொய்யாக எழுதிக்கொண்டு திரிகிறார்கள்.
சினிம உலகில் நடிகர் திலகத்தின் வெற்றியை பொறுக்கமுடியாமல் எம் ஜீ ஆர் எப்படி நித்திரை இல்லாமல்
புழுங்கித்தவித்தாரோ, அதேபோல வாத்தியின் கைகூலிகள் நடிகர் திலகத்தின் சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
நித்திரையின்றியும் ,அரைகுறை நித்திரையில் அலறித்துடித்து எழுந்தும் பரிதாபமாக இல்லாத பொய்களையெல்லாம்
எழுதி தங்களை தாங்களே ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள்.
சிற்றரசர் குழு எழுதுகிறது நெல்லையிலும் மதுரையிலும் வாத்தியின் படங்கள்தான் சாதனையாம்.அதுவும் தவறான தகவல்களை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அப்போ ஏனைய ஊர்களில் எல்லாம் மற்றைய நடிகர்களின் படங்கள்தான் சாதனை என்பதை சிற்றரசர் குழு ஏற்றுக் கொள்கிறதா?
படங்களில் இயக்குனர் எப்படியும் காட்சியமைப்பை வைக்கலாம் . அதைகூட புரிந்து கொள்ளமுடியாதவர்கள்தான்Quote:
சிற்றரசர் குழுவில் எழுதியது
மக்கள் திலகத்தின் படங்களில் சண்டை காட்சிகளின் துவக்கத்தில் வில்லனோ, வில்லனின் அடியாட்களோ ஆரம்பத்தில் எதிர்பாராதவிதமாக ஒன்று அல்லது இரண்டு குத்துகள் விடுவதை வாங்கிக் கொள்வார். அதன் பின்பு ஒரு அடி கூட வாங்காமல் திருப்பி கொடுப்பார். இதை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள்.
வாத்தியின் ரசிகர்கள் அதை வேறு பெருமையாக எழுதுகிறார்கள்
ஆக எங்க வீட்டுப் பிள்ளை வசூலை பணமா பாசமா முறியடித்துவிட்டது என்பதை தங்களை அறியாமலேQuote:
அதுபோல ஒன்றிரண்டு சம்பவம் அவரது படங்களின் வசூல் விஷயத்திலும் நடந்தேறி இருக்கிறது. இந்த சம்பவம் நெல்லையிலும், மதுரையிலும் அரங்கேறி இருக்கிறது. நெல்லையில் எப்போதுமே மக்கள் திலகத்தின் படங்கள்தான் வசூலில் முன்னணியில் இருக்கும். ஆனால் 1968 ல் வெளியான "பணமா பாசமா" எதிர்பாராதவிதமாக அந்த ஆண்டு அதிக வசூலை எட்டிப்பிடித்தது. சுமார் ரூ1,60,000 தாண்டி வசூல் செய்தது.
ஒப்புக் கொண்டுவிட்டது சிற்றரசர் குழு. ஆனால் வாதப்பிரதிவாதம் செய்யும்பொழுது மட்டும்
இல்லை எங்க வீட்டுப் பிள்ளை பட வசூலை பணமா பாசமா நெருங்கவே இல்லை என பல்டி அடித்து கூப்பாடு போடுவார்கள்.
உண்மையை உள்ளதை வாத்தியின் கைகூலிகள் மறுப்பது மறைப்பதுபோல் நாங்கள் மறுப்பதும் கிடையாது மறைப்பதும் கிடையாது. பணமா பாசமா மதுரை வசூலை அடிமைப் பெண்ணோ மாட்டுக்கார வேலனோ முறியடிக்கவில்லை .Quote:
அதுபோல மதுரையில்
1969 மற்றும் 1970 ல் வெளியான "அடிமைப்பெண்" மற்றும் "மாட்டுக்காரவேலன்" ரூ430000 கடந்து இரட்டை வெற்றி பெற்று "பணமாபாசமா" சாதனையை முறியடித்தது. மீண்டும் 1972 ல் பெண்கள் சென்டிமென்ட் மூலம் அதிக வசூல் பெற்ற படம் "பட்டிக்காடா பட்டணமா". முதன் முதலாக ரூ 560000 வசூல் பெற்று சாதனை செய்தது. அதுவும் கதாநாயகனுக்கு கிடைத்த வெற்றியல்ல. கதைக்கு கிடைத்த வெற்றிதான் அது.
அதன்பின்பு வந்த "வசந்த மாளிகை" 200 நாட்கள் ஓட்டியும் அந்த வசூலை எட்ட முடியவில்லை. 1973 ல் வந்த "உலகம் சுற்றும் வாலிபன்" ஒரு சாதாரண திரையரங்கில் வெளியாகி ரூ685000 வசூலாக பெற்று "ப.பட்டணமா" சாதனையை தவிடுபொடி ஆக்கியது. அதன்பின்பு வந்த "உரிமைக்குரல்" ரூ 7 லட்சத்தை கடந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றுக்கு இரண்டு சாதனையுடன் முற்றுப்புள்ளி வைத்தார் மக்கள் திலகம். அதன் பின்பு வந்த "தங்கப்பதக்கம்" ரூ 5 லட்சத்தோடு நின்று விட்டது. மக்கள் திலகம் திரையில் இருக்கும் வரை யாரும் வெல்ல முடியாத சாதனையை படைத்து விட்டார்.
பணமா பாசமா......... மதுரை தங்கம்..........140 நாள் வசூல் 4,75,250.09
அடிமைப் பெண்.........மதுரை சிந்தாமணி...175 நாள் வசூல் 4,34,643.75
மாட்டுக்கார வேலன்...மதுரை சிந்தாமணி....177 நாள் வசூல் 4,33,744.54
எம் ஜீ ஆர் என்ற கதாநாயகனுக்காக படங்கள் ஓடுவதென்றால் வாத்தியின் எல்லா படமும்
வெள்ளிவிழா ஓடியதா ? மற்றைய நடிகர்களின் எல்லா படங்களையும் விட வாத்தியின்
எல்லா படங்களுமா வசூலில் முன் நிற்கின்றது?
வாத்தி கதாநாயகனாக நடித்த கடைசிப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளிவந்தது 1978 அம் ஆண்டு.எம் ஜீ ஆர் நடித்து பாதியில் நின்றுபோன அண்ணா நீ என் தெய்வம் என்ற படம் சிறிது மாற்றத்துடன் எம் ஜீ ஆர் துணை பாத்திரமாகவும் பாக்கியராஜ் கதாநாயகனாகவும் நடித்து அவசரப்பொலிஸ் 100 என்ற பெயரில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.ஆக மொத்தத்தில் 1990 ஆம் ஆண்டு வரை திரைஉலகில் எம் ஜீ ஆர் நடித்த படங்கள் வெளிவந்திருக்கின்றன.Quote:
மக்கள் திலகம் திரையில் இருக்கும் வரை யாரும் வெல்ல முடியாத சாதனையை படைத்து விட்டார்.(இது சிற்றரசர் குழு சொல்கிறது)
ஆனால் சீடர்கள் என்ன சொல்கிறார்கள் வாத்தியார் திரை உலகில் இருந்த வரை மதுரையில் யாரும் வெல்லவில்லையாம் .
பூனை கண்ணைமூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமாம்.கற்பனையில் மட்டுமல்ல பொய்யிலேயும் வாழுகிறார்கள் வாத்தி சீடர்கள்.
திரிசூலம்......................மதுரை சிந்தாமணி..........................200 நாள் வசூல் 10,28,819.55
பதினாறு வயதினிலே....மதுரை மினப்பிரியா /சினிப்பிரியா..266 நாள் வசூல்....9,12,767.20
தங்களுக்கு ஏற்ற விதமாக எழுதி தங்களையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவது
வாத்தி ரசிகர்களின் கலை. முன்னர் பத்திரிகைகள் மற்றும் வாய்வழி மட்டுமே தகவல் பரிமாற்றமாக இருந்தன .
ஆனால் தற்பொழுது அப்படியல்ல எல்லோரது விரல் நுனியிலும் தகவல் அறியும் சாதனம் உண்டு.
எல்லோரும் எந்தவிடயமானாலும் தகவலை பெற்றுக்கொள்ளும் சூழலிலும் வாத்தி சீடர்கள் மாறப் போவதில்லை.
பொய்யையே பரப்பிக்கொண்டிருப்பார்கள்.
எட்டாவது வள்ளல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்@Sivaji samrajiyam YouTube channel
https://youtu.be/B7dusLM9hcY
Thanks Sivaji samrajiyam YouTube channel
சிவாஜி கணேசன் காலனி
நண்பர்களுக்கு வணக்கம்,
நடிகர்திலகம் சிவாஜி அவர்களால் விளம்பரம் இல்லாமல் தரப்பட்ட நன்கொடைகளில் இதுவும் ஒன்று. நம் ரசிகர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்திருக்கமாட்டோம். இந்தத் தகவலும் பிரச்சினைக்குரியதாக ஆனதால் அனைவரும் அறியும்படி ஆனது.
இந்த நலச் சங்கத்தின் பொறுப்பிலிருந்தவர்களே, நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதுதான் பிரச்சினையின் மூலக் காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது நடைபெற்றுவரும் பிரச்சினை குறித்து இந்தச் சங்கத்தின் நிர்வாகிகளுடன் தொடர்புகொண்டு பேசினேன். அதுமட்டுமில்லாமல், எனக்குத் தெரிந்த அரசியல் பிரமுகர் மூலமாகவும் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளப்பட்டது.
இப்போதிருக்கும் நிலையில், நடிகர்திலகம் அவர்களால் வாங்கித் தரப்பட்ட இந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி வழக்கில் உள்ளது. அந்த வழக்கிலும் தங்களுக்கு சாதகமான முடிவே வரும் என்று நலச் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அடுத்து மீதமுள்ள மற்றொரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதுதான் தற்போது பிரச்சினையாக உள்ளது.
விரைவில் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, நிலம் மீட்டுத் தரப்படும் என்ற உறுதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. அதற்கு மேலும் தாமதமோ, அல்லது பிரச்சினையோ தொடருமானால், மாநிலம் தழுவிய ஒரு போராட்டத்தை முன்னெடுக்க நான் தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் உறுதியளித்திருக்கிறேன்.
நம்பிக்கையுடன், நல்ல செய்திக்காக காத்திருப்போம்.
அன்புடன்,
கே.சந்திரசேகரன்
தலைவர், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை
Attachment 5841
Attachment 5842
Thanks Sivaji Peravai
திருப்பூர் மனீஸ் திரை அரங்கில்
வெற்றிகரமான 2 வது வாரமாக
ராஜா
Attachment 5843
Thanks Vengateswaran (Facebook)
படத்தில் துடித்தது போல், நேரில் துடித்த சிவாஜி
https://youtu.be/SGNKCzw1Sm4
Thanks Thirai Chirpi
சிவாஜி கொடையாக கொடுத்த நிலம் எங்கே?
https://youtu.be/2gyBhh9VXoQ
Attachment 5844
Thanks சிவாஜி முரசு ".
யூடியூப் லிங்க்:
1962 இல், 40,000 மக்கள் குவிந்தனர். அதிரவைத்த சிவாஜியும், அதிர்ந்துபோன சிங்கப்பூரும்.
https://youtu.be/PaMLz6zpMWA
Attachment 5845
Attachment 5846
Thanks Nadigar Thilagam Sivaji TV
நடிகர்திலகத்தின் உடல்,முக, தொடு மொழிகள்-. கவிஞனை மீறும் நடிப்பு அதிசயம்.
கோபால் எழுதியவை
***தவப்புதல்வன் படத்தில் தன் அறையில் திருட வந்த வாசுவுடன் போராடும் காட்சி. பூட்ஸ் சத்தத்தை வைத்து அவர் ஒரு பக்கமாக முகம் திருப்பி. காதால் ஒலி வாங்கி போராடும் காட்சி
***தவப்புதல்வனில் தற்செயலாக அறையில் அரைகுறை உடையில் சகுந்தலாவை பார்த்து அடையும் கூச்சம் , அருவருப்பு டன் வாலிபலுக்கே உரிய ஆவலும் ஒரு பத்து சதம் எட்டிப் பார்க்கும் தவிப்பு.
**பந்த பாசத்தில் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ பாட்டில் , தான் மணந்து கொண்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் அன்னையிடம் அவர் பணம் பெறும் போது ஒரு பக்கம் தந்தையின் சுமை குறைவதை எண்ணி ஆசுவாசம் , இந்த மாதிரி பணம் பெறும் விதத்தை எண்ணி சுய வெறுப்பு கலந்த இயலாமை , தன் வாழ்வை துறந்து இன்னொரு உயிரை அரவணைக்க வேண்டிய சுமை. அனைத்தும் 15 நொடிக்குள். ஒரு கதாசிரியனின் வர்ணிப்பில் விவரித்தால் ஒரே கணத்தில் நிகழும் கலப்பு மனநிலைகள்.
***நான் நினைப்பதுண்டு. எப்படி இந்த மாதிரி cliched ஆக படங்களில் காட்சியமைப்புகள் வருகின்றனவே என்று!! என்னதான் காதலியை சந்திப்பது இதம் என்றாலும் , கதாநாயகனுக்கு குடும்ப பிரச்சினை காரணமாய் mood -out ஆகியிருந்தாலோ, அல்லது constipation போன்ற உடல் உபாதைகள் இருந்தாலோ, அவனால் காதல் காட்சியில் எப்படி romantic ஆக இருக்க முடியும்?ஆனால் எனக்கொரு பெரிய surprise பந்தபாசம் (1962)படத்தில்.
காதலியை, வழக்கமான பார்க்கில் சந்திப்பார். ஆனால் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக குழப்பத்தில் இருப்பார். காதலி பேச பேச,பதில் கூட பேசாமல் ,கடு-கடுவென்று உட்கார்ந்திருந்து ,நகர்ந்து விடுவார்.
NT is always a wonder and much ahead of his time !!!
உயர்ந்த மனிதன் படத்தில் குடித்து விட்டு விருந்தினர் முன் உளரி சொல்ல கூடாதவைகளை சொல்ல முயலும் அசோகனை பார்த்து பதறி சங்கடம் கலந்து அவமானமடையும் மனைவியை கைவிரல்களால் அவள் விரலை முதல் முறை அழுத்தும் போது பதட்டப் படாதே என்ற ஆறுதல் , இரண்டாவது அழுத்தலில் நான் சமாளிக்கிறேன் என்ற நம்பிக்கை.
-புது வேலைக்காரன் தவறு செய்து விட்டான் என்று தன் மனைவி அவனைக்காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது,கையில் ஒரு செய்தித்தாள் சகிதம் அமர்ந்து அதை கேட்காமல் கேட்டு ரசிக்கும் "உயர்ந்த மனிதன்".
"நீ நல்லவன் ,ஆனால் அப்பாவி. அதனால் நீ உன் எஜமானியிடம், (அதாவது என் மனைவியிடம்) படும் பாட்டை பார்த்து வருந்திகொண்டே, ரசிக்கிறேன்.ஏனெனில் அவளும் அப்பாவிதான்! ஆனால் என்ன, பணக்கார அப்பாவி! enjoy. ஆனால் நான் உன் எஜமானன்; பணக்கார சமர்த்தன். ஆகவே நம் இடைவெளி அப்படியே இருக்கட்டும்" என சிவகுமாரிடம் சொல்லாமல் சொல்லும் ஒரு உயர்ந்த மனிதனின் நேர்மையான அலட்சியத்தை சொல்வதா,
----படிக்காத மேதை"தன்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லும் பெரியவரோடு அப்பாவித்தனமாய் வாக்குவாதம் செய்யும் காட்சி."உன்னால தனியாப் போய்
வாழ முடியாது..?"-என்று கோபமாய் பெரியவர்கேட்க..."முடியாது...முடியாது"என்கிற வார்த்தையை ஒரு பதிலாகசொல்லிக் கொண்டு வருபவர்,அப்படியே அந்த "முடியாது"என்கிற வார்த்தையை, தனதுஇயலாமையைக் குறிப்பிடும்
வார்த்தையாக மாற்றும்
லாவகம்.
----பாகப் பிரிவினை."தாழையாம் பூ முடிச்சு" பாடல்."தன்னன்னா"வுக்குப் பிறகுவரும் துவக்க இசைக்கு, ஊனம்மறந்து துள்ளும் சந்தோஷத்
துள்ளல்.
---வியட்நாம் வீட்டில் ஒய்வு பெற்ற பிறகு ஆபிஸ் வந்து ,அலுவலக பணியாளர்களுடன் பேசி கொண்டு மேசையை தொட்டு விட ,தூசி படிந்ததை தன் கை விரல் களின் மூலம் உணர்த்தும் காட்சி.
---நிச்சயதார்த்தத்தில் முதல் முறை குடிக்க்கும் புகைக்கும் அறிமுகம் ஆகும் போது உடல் மொழியில் காட்டும் uneasiness மற்றும் கொட்டாவி
----பாரத விலாஸ் படத்தில் சகுந்தலா நடனமாடும் போது,பக்கத்து மேசையில் புகைக்கும் போது காட்டும் முகசுளிப்பு மற்றும் கைகளினால் புகையை ஒட்டும் அருவருப்புணர்வு.
---பந்தம் படத்தில் break down ஆன காரிலிருந்து இறங்கி ஒன்றும் சொல்லாமல் அந்த driver ஐ ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்து போவார்.
---வீரபாண்டிய கட்டபொம்மன்".போருக்குக் கிளம்புகையில்
மனைவியிடம் விடைபெறும்
போது, பல பக்க வசனங்கள்
விளக்க வேண்டிய வீரத்தை,
"சர்ர்ர்...ட்ட்" என்று தனது
குறுவாளை உறைக்குள்
செலுத்துவதில் காட்டி விடுவது.
---தன் தம்பி மகள் (குழந்தை) நடனமாட அதை ரசித்துக்கொண்டே ,ஏதோ சொல்லவரும் தன் தம்பி மனைவியை தன் வலது மணிக்கட்டு அசைவிலேயே dispose செய்யும் "வீர பாண்டிய கட்டபொம்மன்"
---இரவில் கிசு கிசு( whisper)குரலில் தன். நண்பனுடன். நான். காதலித்த பெண்ணை. இன்னொரு நண்பன் விரும்புவதை உணர்ந்து பேசும் சுய பச்சாதாப*. ஆறுதல், நடைமுறை. உணர்ந்த. சமாதானம்.நெஞ்சிருக்கும். வரை நினைவிருக்கும்.
---தன் நண்பன் அவன் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கையில்,சற்றே தள்ளி சங்கோஜத்துடன் நின்றுகொண்டு கையில் உள்ள suitcase handle ஐ இரண்டு கைகளாலும் பிடித்திருக்கும் அக்காட்சி நம் "நெஞ்சிருக்கும் வரை" அகலுமா?
"என்ன?" எனும் சொல்லை, தான் உயிர் நண்பன் என நினைத்திருக்கும் தன் நம்பிக்கை சின்னாபின்னமாக, தன் மேல் அபாண்ட களங்கம் சுமத்தி, தன் தங்கையை திருமணம் செய்ய மறுக்கும் ஒரு சந்தேகப்பேர்வழியை, பயமுறுத்தி, திருமணத்திற்கு இணங்க செய்துவிட்டு, "எப்படியோ எடுக்கப்படவேண்டிய இந்த முடிவு, இப்படி எடுக்க நேரிட்டதே!" எனும் விரக்தி கலந்த துக்கத்தைத் தேக்கி, நண்பன் அறையை விட்டு மெதுவாக வெளியேறும் போது, "ஆனால் ஒன்று!" என அவன் கூவ, மிக அலட்சியமாகக் திரும்பிச் சொல்லும் அந்த காட்சி, நெஞ்சிருக்கும் வரை நிலைத்திருக்கும் அல்லவா?
---தன் உடல், மனைவி யாக நடிக்கும் பெண்ணை நோக்கி இருக்க ,முகமோ தான் நேசிக்கும் "புதிய பறவையை" நோக்கி இருக்க முன்னவள் சொல்லும் பொய்யை பின்னவள் நம்பி விடபோகிறாளே என்ற பதட்டம் உடலில் தெரிய கண்களால் காதலியை கெஞ்சும் கோபால்.
.
---வயது பெண் ஒருத்தியின் பின்புறத்தை தட்டும் செயல் ஒன்று காதலை அல்லது காமத்தை, மட்டுமே வெளிக்காட்டும் செயல் என்ற நியதியை மாற்றி அதன் மூலம் உரிமையையும் வெளிக்காட்டலாம் என உணர வைத்த அந்த மஹா கலைஞனுக்கு அல்லவோ நாம் "முதல் மரியாதை" செய்யவேண்டும்.
--- சிற்றின்பம் கலவாமல் 100 பாடல்கள் பாடுவதாக ஒப்புக்கொண்டு அம்பிகாபதியாக அவையில் அமர்ந்ததும், இதெல்லாம் தனக்கு ஒரு சிறிய விடயம் என்பதுபோல, ஒரு முழுமையான தன்னம்பிக்கையுடன் ஓரக்கண்ணால் அவையிலிருப்போரை நோட்டம் விடுவார். நம்பியாருக்கு எரிச்சலில் முகம் கோணலாகும்.
தில்லானா மோகனம்பாள்" உள்ளே நுழைய,அவளை சைட் அடித்து விட்டு தன் தவில் சகாவைப்பர்த்து 'என்ன பார்த்தீரா?" என கண்சிமிட்டும் நாதஸ்வர வித்வான்,
---அழகர் கோவிலில் கச்சேரியை பாதி முடித்துக்கொண்டு போகும்போது, எதிரே வரும் மோகனாவை நேருக்கு நேர் அண்மையில் பார்த்ததும் awestruck ஆகி, கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதும். (பின்னணியில் "அற்புதம், ஆனந்தம் ....என்று குரல்கள்)
"***என்னால் அலட்சியப்படுத்தப்படும் அளவிற்கு கூட உனக்கு தகுதியில்லை. நீ ஒரு வெத்து சவடால் வைத்தி! கபடனும் கூட" என நாகேஷிற்கு சொல்லாமல் சொல்வது போல அவருடன் இணையும் ஒவ்வொரு காட்சியிலும் காட்டும் அலட்சியத்தை சொல்வதா,
--- மோகனப்புன்னகை'யில் அடுத்தடுத்து வரும் காதல் தோல்விகளால் மெல்ல மெல்ல உடைந்து, கடைசியில் கடற்கரையில் total dismay இல் உட்கார்ந்திருப்பதும்.
---துணையில், மருமகள் தந்த பிரச்சினையால், சோர்ந்து போய், சிந்தனையில், அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் போது ,அங்கு மகன் வந்து அப்பா என்று அழைக்கும் போது ,தன நிலையில் இல்லாது, குரல் வந்த திசை கூட அறியாமல், ஒரு வினாடி, தவறான திசையில் பார்த்து சமாளிப்பது......
----படித்தால் மட்டும் போதுமா?"மனைவியால் வெறுக்கப்பட்ட
வேதனையுடன் தான் மட்டும்
வீடு திரும்புவார்.
மகனுடன்,மருமகளைக் காணாத வியப்போடு தாய்
"மீனா வரலையாப்பா?" என்று
கேட்பாள்.விரக்தியில், ஏதோ சிந்தனையில்.. தாய் கேட்டதை
கவனிக்காதவர்.. "ம்ம்? "எனும்
ஒலியையே பதில் கேள்வியாக்குவாரே?
---ஆட்டுவித்தால் பாடலில் ,ஆரம்பம். ஏதோ சிந்தனையில் உள்ள போது ,கண்ணன் வேஷத்தில் வந்த ,நண்பனின் குழந்தையை, ஆச்சார்ய பார்வை பார்த்து சுதாரிப்பது.....
---பாசமலர் ,வாராயென் தோழி வாராயோ பாடலில், மலராத பெண்மை மலரும், வரிகளில், தங்கை மற்றும் அவளின் நண்பிகளை கடந்து செல்லும் போது , வெட்கம், embarassment , பெருமிதம் கலந்த 10 வினாடி shot ......
---கிருஷ்ணன் வந்தான் படத்தில் செல்வம் இழந்த நல்லவன் ஒருவனின் மன அழற்சியைக் காட்டும் அந்த வெறித்த பார்வை..
பத்தி பத்தியாய் '' டிப்ரஷன்' பற்றிச் சொல்லும் நூல்கள் பலவற்றின் அத்தியாயங்களை வெல்லும் இதிகாசம்!
---நவராத்திரியில் ஆனந்த் தன் காதலி திரும்பியவுடன், வறண்ட கோடை வானத்தில் திடீரென இருண்ட மேகங்கள் திரண்டாற்போல், சிலநாள் தாடி அடர்ந்த சோகமுகபாவத்தைக் கீறிக் கிளம்பும் மின்னல்கள்....
மகிழ்ச்சி, உரிமை, கோபம், பரவசம், பச்சாதாபம்...தளர்ந்த உடல்மொழி மெல்லமெல்லக் கிளர்ந்து கிளைத்து எழும் அந்த அன்பு ஊட்டத்தின் வெளிவேகம்...
---ரோஜாவின் ராஜாவில் ,மன நோயின் ஆரம்ப அறிகுறிகளை காட்டும், யாரோ அருகில் தன்னோடு பேசுவதான பாவம்,
---எங்கிருந்தோ வந்தாள் ,இறுதி காட்சியில், ஏதோ சொல்ல வரும் ஜெயலலிதாவின் பால் பரிவு,அதே நேரம் ஒன்றுமே நினைவில்லாத நிலை, ஒரு மைய்யமான blank expressions கொடுத்து ,ஜெயலலிதா தவறாக நினைக்காமல் இருக்க ஒரு ஆறுதல் பார்வை,ஆறுதல் சிரிப்பு.
---அமர தீபம் படத்தில், amnesia நோயின் அறிகுறியை காட்டும், வெறித்த,சூன்ய பார்வை.
---விண்ணோடும் முகிலோடும் பாடலில்(புதையல்) ,காதலின் இன்ப லாகிரியை உணர்த்தும் குட்டி கரணம்.
--- பேசும் தெய்வத்தில், பத்மினி பிள்ளையை அழைத்து போகும் போது ,மாத்தி மாத்தி instructions மேல் instructions கொடுக்கும் போது ,தலைவரின் reaction .
---நீலவானத்தில், ஓடும் மேகங்களே பாட்டில், வருடம் தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே என்ற வரிகள் இரண்டாம் முறை உச்சரிக்க படும் போது ,தலைவரின் reaction .
---நான் வாழ வைப்பேன் படத்தில், போலீஸ் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடையும் போது , நினைவு படுத்தி கொள்ள முயலும் தலைவரின் action .
---புதிய பறவை ,பார்த்த ஞாபகம் பாடலில், அன்னையின் இழப்பின் மெல்லிய சோகம், இழப்பை ஈடு செய்யும் ,பாடகியின் பாட்டில் அடையும் பரவசம்,sophisticated upbringing தந்த style ,எல்லாம் தேக்கி, நாக்கில் நெருடும் புகையிலை துகளை ,விரலால் எடுக்கும் நேர்த்தி.
---அதே புதிய பறவையில், கதையை சொல்லி முடித்து, அதீத துக்கத்தினால், அடைத்து கொண்ட மூக்கை, கைகுட்டையால் சிந்தும், improvisation .
---பார் மகளே பார் படத்தில், அழையா விருந்தாளியாய், வந்திருக்கும் வீ.கே.ராமசாமியுடன் காட்டும் நாசுக்கான உதாசீனம் கலந்த அலட்சியம்.(இவன் எங்கே இங்கே. அழையாமல்)
---அதே பார் மகளே பார் படத்தில், தனக்கு பிடிக்காத ஒரு வியாபார விஷயத்தை பேசும், வீ.கே.ஆரிடம், light ஆக சோம்பல் முறித்து, சோர்வையும்,அக்கறையின்மை கலந்த எதிர்ப்பை காட்டும் அற்புத உடல் மொழி.
---ஆண்டவன் கட்டளை, ஆறு மனமே ஆறு பாடலில், துறவறம் கலந்த,mystic detachment உடன் வேர்கடலை ஊதி சாப்பிடும் காட்சி.
---திருவருட்செல்வரின், அப்பூதி அடிகள் மனைவியின் முன் காஞ்சி பெரியவர் போல், ஒடுங்கிய துறவற pose .
---சவாலே சமாளியில், தற்கொலை முயற்சியில் ஜெயலலிதாவை காப்பாற்றி, அவர் tandrum throw பண்ணும் பொது, இவ்வளவுதானா நீ, என்னை புரிந்து கொண்டது என்று உடலசைவின்றி,பார்வையில் உணர்த்தும் அழகு.
---சுமதி என் சுந்தரியில், பலூன் காட்சியில், மரத்தை கைகளால் சுரண்டி, வாலிபர்களை உன்மத்தம் கொள்ள வைத்த அழகு.
---ஹ, என்ன துப்பாக்கி காட்டினால் பயந்துவிடுவேன் என நினைத்தாயா? நீ என் மனைவி தானே! கத்துவதை கத்திவிட்டு சமையலறைக்குள் ஒடுங்கு" என சொல்வது போல தான் பாட்டிற்கு துணிமணிகளை பயணத்திற்கு பெட்டிக்குள் வைத்துக்கொண்டே,பண்டரிபாயை அலட்சியப்படுத்துவதை சொல்வதா?அந்த நாள் பசுமையாக.
***தன்னை ஏமாற்றி. விட்டதாக. சொல்லும் பெண்ணிடம். தன். பொறுப்பற்ற* உதாசீனம். காட்டி , கேலியாக* உதவும். அரையிருட்டு. சில்லௌட். காட்சியில். சைட். ஆங்கிளிளில். அவர். முகபாவத்தை உணரலாம். அந்தநாள். அதிசயமே.
***பாச மலரில், கொல்ல வந்த revolver ஐ வைத்து,பாசத்தினால் துளிர்க்கும் கண்ணீரை துடைக்கும் கவிதை.
--- "நாயே! சில காலத்திற்கு முன் என்னிடமே வேலைதேடி வந்து, என் தயவால் வாழ்ந்து கொண்டு, இப்போ எனக்கு எதிராகவே கொடி பிடிக்கிறாயா,உன் வாலை ஓட்ட நறுக்குகிறேன் பார்!" என சொல்வது போல , தன் முன்னே குதித்துக்கொண்டிருக்கும் ஜெமினியை, பர்ர்க்ககூட செய்யாமல், ஒரு பென்சிலை தன் கண் முன் நிறுத்தி, அதை பார்த்து பேசும் அலட்சியத்தை சொல்வதா?
--- "என்னை அவன் ஜெயிச்சுடுவானோ! ஹ! நாளைக்கு, அவனுக்கு வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை கோர்ட்டில் கறபிக்கிறேன்!" என அலட்சியத்தை உடலாலும்,ஆனால் 'அப்படி எதாவது அவன் ஜெயிச்சுட்டானா?' எனும் மனதில் உதிக்கும் ஒரு சிறிய பயத்தை கண்ணாலும்,அதை அடக்க இன்னும் அலட்சியத்தை ஏற்ற, புகைக்கும் பைப்பை ஊதி ஊதி காட்டுவது..
எனும் இந்திய திரைப்படங்களுக்கே ஒரு கெளரவம் ஏற்படுத்திய காட்சியை சொல்வதா,
---"எனக்கு எப்படிடா நீ வந்து பொறந்தே? உதவாக்கரை! வயசுதான் ஆறது கழுதைபோல. ஆனால் படிப்பும் கிடையாது! வேலை வெட்டியும் கிடையாது!" என சொலவது போல "அப்பா!" என மரியாதையை கலந்த பயத்துடன் விளிக்கும் பாண்டியராஜனை "என்ன?" என ஒரு சொல்லால் குத்தி சாய்க்கும் அந்த தந்தைக்கே உரித்தான affectionate அலட்சியத்தை சொல்வதா,
---உத்தம புத்திரனில் ,மாட்டி கொண்ட பார்த்திபனை, குரூரம்,வன்மம், குரோத சிந்தனை இவற்றோடு சுற்றி வருவது. அதே காட்சியில் பத்மினியிடம், காமம் கலந்த வன்மத்துடன் நோக்குவது.
---தெய்வ மகனில், தன்னை தானே வெறுக்கும், சுய வெறுப்பின் உச்சமாக, கண்ணாடியில் தன உருவத்தின் மீது தானே காறி உமிழ்வது.
---ராஜபார்ட் ரங்கதுரையில், பத்து நிமிட , தங்கையின் கணவனின் இரண்டாவது திருமண காட்சி. வேதனை, வெதும்பல், தன்னிரக்கம், வெறுப்பு, இறைஞ்சல், குற்றம் சாட்டும் குறிப்பு எல்லாம் கலந்த மௌன காட்சி.
-தூக்குத் தூக்கி:- "கோமாளி" வேட எபிசோட் முழுவதும்; கடைசியில் நீதி மன்றத்தில், தனக்காக வாதாடத் துவங்கும் போது - "மாசுண்டாள் உமது மகள் ... தெய்வம் பொறுக்குமா இத்திருக்கூத்தை?" என்று முடிக்கும் கோபம், அவமானம், ஆத்திரம், போன்ற ரசங்களைக் கொணர்ந்த அந்த கர்ஜனை;
---ராஜா ராணி- "சேரன் செங்குட்டுவன்" - இந்த ஒரே டேக்கில் எடுக்கப் பட்ட காட்சியைப் பலரும் பேசி சிலாகித்தாகி விட்டது. இந்த ஷாட்டை எடுக்கும் முன், நடிகர் திலகம் அந்த செட் முழுவதையும் ஒரு முறை நோட்டம் விட்டு, பின்னர் சுற்றி ஏகப்பட்ட கோடுகளைப் போடச் சொன்னாராம். யாருக்கும் புரியவில்லை; பின்னர், ராஜ சுலோச்சனாவை, நான் பேசும் வசனங்களில் வரும் அந்தந்த இரசங்களுக்கு / உணர்ச்சிகளுக்கு ஏற்ப சரியான ரியேக்ஷனைத் தரச் சொல்லி விட்டு, ஒரே இடத்தில் நின்று கொண்டு பேசாமல் இங்குமங்கும் இலேசாக நடந்து கொண்டு பேசினாராம். அதை விட, ஒவ்வொரு வர்ணனையாக விவரித்துக் கொண்டே சொல்லும் போது, அவரது கைகளின் அபிநயத்தை கவனியுங்கள். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வசனத்தைப் பேசுவது கடினம் என்றால், அதை அந்தந்த உணர்சிகளுக்கேற்ற பாவங்களுடன் நடிப்பது தான் மிக மிகக் கடினம்.
--- இதே படத்தில், சாக்ரடீஸ் பாத்திரத்தில் வரும் போது, வரும் அந்த வயதான பாத்திரத்தின் உடல் மொழி; கூடவே, ஒரு தத்துவ ஞானிக்குரிய உடல் மொழி.
---வணங்காமுடி:- தர்பாரில், தனக்கு பதிலாக, தன்னுடைய நண்பன் தான் பாடகன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, தங்கவேலுவைப் பாடப் பணித்து, அவர் பாடுவதற்கு யோசிக்க, அவர் அடி வாங்கிய அந்தக் கணமே, "ஆ...ஆ...ஆ... பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் நாட்டுக்கு நல்ல பலன் தருமா?" என்று துவங்கும் பாடலில், அந்த "ஆ...." விற்கு, அவர் காட்டும், கோபமும், ஆத்திரமும், அப்பப்பா! அதாவது, இந்த பாவங்களைக் காட்டிக் கொண்டே பாடத் துவங்க வேண்டும்!
---பாபு , இதோ எந்தன் தெய்வம்--குழந்தையை ஆலவட்டம் சுற்றிய நடுவயது மனிதனுக்கு வரும் அந்த தலைச்சுற்றல்..
சில நொடிகளில் அது சரியாகும்போது வரும் விழி+ முகத்தெளிவு ----> செய்துகொண்டிருக்கும் பணியை அச்சிறு தடங்கல் தாண்டி செவ்வனே தொடரும் மனநிறைவு முகபாவம்..
--- படிக்காத மேதை..பாடச்சொன்னது சௌகார் ஜானகியை..பாடவிரும்பி இடையில் வருபவர் ஓசையின்றி கை ஜாடையால் '' இரு... இங்கு நான் தொடர்வேன்'' என ஜதி விலகாமல் சொல்லும் அந்த வினயமான கைமொழி..
---உயர்ந்த மனிதனில் காதல் மனைவி பார்வதியைத் தீவிபத்தில் பறிகொடுக்கும் முன் அவர் விழிகளில் தெறிக்கும் மகிழ்ச்சியை , பின்னாளில் வரும் காட்சிகளில் ஒன்றிலாவது நான் கண்டேனில்லை..
---ஓட்டுநர் வீட்டு காரசார விருந்து உண்ணும் சிறு சிறு மகிழ்வுக்கட்டங்களில் கூட கோடைக்கானல் மார்கழிக்காலைச் சூரியன் போல் ஒரு சோகச்சீலை போர்த்திய விழிக்கதிர்கள்
---ஒற்றை அடியில் மரத்தடியில் சித்ராவைச் சாய்ப்பதற்கு முன் இருந்த அந்த செல்வக்குழந்தையின் குதூகலம் கொஞ்சும் முகம்...கள்ளமற்ற அந்த வெள்ளைப்பார்வை...அந்த நொடிக்குப் பின் கோபால் விழிகளில் தென்படவே இல்லை..
---பாசமலரில், தன் மனைவியுடன் முதலிரவின் போது ,தங்கை மற்றும் அவள் கணவன் கொண்ட புகைப்படத்தை திருப்பி வைக்கும் ,நாணம் கலந்த பாச பண்பு.
---கௌரவத்தில், மன அமைதியிழந்து தவிக்கும் தந்தை, இரவில் சரியாக தூக்கம் இல்லாத போது , ARTIFACT யானை மரமிழுக்கும் பொம்மையிலுள்ள அறுந்து போன CHAINLINK ஒன்றை சீர் செய்ய முயலும் காட்சி.
---தங்க சுரங்கத்தில், சந்தன குடத்துக்குள்ளே, கிணற்று காட்சியில், SWING ஆகி ,திரும்பி வரும் , BUCKET ஐ ,ஸ்டைல் ஆக காலால் நிறுத்தும் அழகு.
---எங்க மாமாவில், நான் தன்னந்தனிக்காட்டு ராஜா பாடலில், குழந்தைகள் ஊதல்,horn ஊதி லூட்டி அடிக்கும் போது ,அடைத்து கொள்ளும் காதை ,விரலால் CLEAR செய்யும் 10 வினாடி GESTURE .
---சுமதி என் சுந்தரி, ஒரு தரம் பாட்டில், இளமை குறும்புடன், குளத்தில் கல் வீசும் bowling action .
---தெய்வ மகனில், வீட்டில் திருடன் புகுந்து விட்டான் என்றெண்ணி, இளைய மகன் hocky மட்டையை எடுத்து, anxiety , சிறிது அச்சம் கலந்த, தைரியத்துடன் ,முகம் தெரியாத திருடனை எதிர்கொள்ளும் அழகு.
---உத்தமபுத்திரன்.யாரடி நீ மோகினி" பாடல்.ஆடிக்கொண்டே நகரும் அழகி பேரின்பமே காண்போம் வா
மன்னவா" எனப் பாடிச்
செல்ல...அந்தப் பெண்ணைப் பிடிக்கமுனையும் போது, மதுவின்
போதை கொஞ்சம்,கொஞ்சமாக
ஏறுவதைக் காட்டும் அந்த
மெல்லிய தள்ளாடல்.
---உத்தம புத்திரனில், பாதி ஆட்டம் பாட்டத்தில், அம்மா அட்வைஸ் பண்ண வரும் இடைஞ்சலை, ஒரு குழந்தையின் பிடிவாத மன நிலையில், காலை உதைத்து வெளியிடும் விக்ரமன்.
---அதே காட்சியில், no love ,no hate ,மனநிலையில், அம்மாவிடம் உணர்ச்சி பூர்வமான ஈடு பாடு இன்றி, மறுத்தும் பேச இயலாமல், ஊஞ்சலில் casual ஆக ஆடி கொண்டு, ஓர கண்ணால் அன்னையை பார்த்து, அவர் அறிவுரைகளை ,காதில் வாங்காத பாங்கு.
---அன்னையின் ஆணையில், உணர்ச்சி வச பட்டு, முரண்டி பனியனை கிழித்து, கீறி விடும் சாவித்திரியிடம் உடனே பதிலுக்கு வன்முறை பிரயோகிக்காமல்,washbasin போய் ,clean செய்து கொள்ளும், காட்சி.
---சிவந்த மண் படத்தில் ,ஒரு நாளிலே பாடல் காட்சியில் ,முதல் சரணம் முடிவில் வரும் ,வரும் நாளெல்லாம் இது போதுமே என்ற இடத்தில் ஒரு திருப்தி கலந்த கிறக்க காமத்தில் கண் மூடுவார் பாருங்கள். நான்கு வினாடி கவிதை.
----சுமதி என் சுந்தரி படத்தில் திடீரென்று தடுப்பின் அந்த பக்கம் ஜெயலலிதா அழ ,கீழே மேலே என்று எதேச்சையாய் சுழன்று ,ஜெயலலிதா பக்கம் திரும்பும் அப்பாவி நகைச்சுவை.
----அதே படத்தில் முதலிரவுக்காக திட்டமிடும் தங்கவேலு ,டவல் உடன் திருப்பும் ஒவ்வொரு முறையும் திரும்ப வைத்து ஏதோ சொல்ல ,நாலாவது முறை சொல்லாமலே திரும்பும் spontaneity .
----துணை படத்தில் விரக்தியுடன் பிரமை பிடித்தது போல அலுவலகத்தில் உட்கார்ந்திருக்கும் போது , சுரேஷ் அவர் வலப்புறம் வந்து அப்பா என்று கூப்பிட ,திடீரென்று யாருப்பா என்று குரல் வராத திசைகளை நோக்கி, நிதர்சன உலகிற்கு வரும் இடம்.
---பராசக்தி படத்தில் ,ஹோட்டல் ரூமில் நுழைந்து நோட்டம் விட்டு, ரூம் பாய் நோக்கி காசு சுண்டும் இடம்.
-பராசக்தி:- முதலில், சென்னைக்கு வந்து ஹோட்டல் அறையில், அறிமுகமில்லாத பெண்ணைப் பார்த்தவுடன், வேர்த்து, சட்டென்று டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்வது; நிறைய சொல்லலாம்;
---பாசமலரில், மலராத பெண்மை மலரும் காட்சியில் , தற்செயலாய் அந்த பக்கமாய் செல்லும் போது ,நாணம், பெருமிதம்,கூச்சம் கலந்த முறுவல்.
---யாருக்கு மாப்பிள்ளை பாட்டில் பக்க வாட்டில் கீழே நகரும் காமிராவில், ஸ்டைல் கலந்த ,விந்திய நடையுடன் செல்ல சிரிப்புடன் உல்லாசம்.
----வசந்த மாளிகையில் பிளம் கடித்து காமம் இழையோடும் காதல் வேட்கையை சொல்லி, கொள்ளி கட்டையால் சிகரெட் கொளுத்தும் இடம்.
---வசந்த மாளிகை குடிமகனே பாட்டில், ஒரு காமம் கலந்த mischievous பார்வை. காந்தம் போல் இருக்கும்.
---அதே பாடலில், அலட்சிய செல்லத்துடன் , CID சகுந்தலாவை உதைப்பது.
----ராஜாவில் , ஓடி போக பார்க்கும் ரந்தாவிடம், ஸ்டைல் கலந்த அலட்சியத்துடன் சிகரட்டை கீழே எறிந்து, ஒரு தீர்மானத்துடன் நசுக்கும் இடம்
----ராஜாவில் ,ஜெயலிலதா மற்றும் ,அவர் தாயுடன் பொய் பேசும் போது , வாயை மறைத்து பேசுவது.
---அதே ராஜாவில், ஜெயலலிதா,பாலாஜி follow செய்வதை சொல்லும் போது ,சிறிதே திரும்பி, பிறகு பாலாஜிக்கு சந்தேகம் வராத படி, romance செய்ய குனிவது போன்ற பாவனை.
---ராமன் எத்தனை ராமனடி".கே.ஆர்.விஜயாவிடம், "உங்களுக்காக நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க. இந்த கையை வெட்டிக்கணுமா?"
என்று தனது வலது கையைக்
காட்டுகிறவர், வேகமாய்ச்
சுதாரித்துக் கொண்டு இடது
கையைக் காட்டுவார்.வலது கை இல்லையென்றால்
சாப்பிட முடியாதே?
----ஆலயமணி."கல்லெல்லாம்" பாடல்.பாடிக் கொண்டே ஓவியம்
வரைந்து முடித்த பிற்பாடு,
ஓவியர்களுக்கே உரித்தான
பாணியில்.. சற்றே பின் தள்ளி
ஓவியத்தை மேற்பார்வையிடல்.(simultaneously cleaning the hand)
கோபால் எழுதியவை.
Thamks Gopalakrishnan Sundararaman (Nadigarthilagam fans )
Nadigarthilagam celebrated Pongal Festival in his farm every year in a grand manner.When MGR was shot in January 1967 just few weeks before General Elections,NT was very much distressed over the incident.He cancelled Pongal celebration What great human being he was! This news was revealed from a question and answer published in the March issue of 'Pesun Padam',a popular film monthly.
Attachment 5847
Thanks N.Swami durai velu (Nadigar Thilakam sivaji visirigal)
Attachment 5848
Attachment 5849
ஓலைக்குடிசை, கை ரிக்*ஷா, கருப்பு வெள்ளை .
நான்கே முக்கிய கதாபாத்திரங்கள் .
கிழிந்த உடைகள், தாடி, மீசை ,இவற்றோடு நடிகர் திலகத்தின்
பாபு போட்ட போட்டில் வண்ணங்கள் வெளுத்துப் போயின.
பிரமாண்டங்கள் சரிந்தன, பாபுவோ சர்வசாதாரணமாக
வசூலை வாரிக்குவித்தது.(வாசுதேவன்)
இந்த நடிகளுக்குத்தான் எத்தனை தன்நம்பிக்கை,
"ஓடையில் நின்னு" மலையாளப் படத்தழுவல்.
"பாபு"படத்தின் வெற்றியை negative ஆக பார்த்தவர்கள்
"பாபு" படத்தின் இமாலய வெற்றி கண்டு வியந்தனர்.!
இயக்குனர் திருலோகசந்தர் தன் நண்பர் சிவாஜிமேல்
அசாத்திய நம்பிக்கை வைத்தார்,
அதை நிஜமாக்கி தமிழ்பட உலகை திணறவைத்தவர் எளிமையான ஆனால் வலிமையான "பாபு".
(This filmbecome a blockbuster at the box office and running over 100 days in many theatres ),!
(இமேஜில் உள்ளவை)
Thanks Thilak Ganesan (Face book)
ப்ளாஷ்பேக்.
ரசிகர்களும்,தயாரிப்பாளர்களும்,திரையுலகம் பெரிய மாறுதலை நோக்கி பயணிக்க தொடங்கியது 1952 ம் ஆண்டு ...எல்லோருக்கும்
தெரிந்த விஷயங்களையே மறுபடியும் சொல்வதில்
எனக்கு உடன்பாடில்லை...ஒரு முன் கதையை பார்ப்போம் .....
திண்டுக்கல்லில் கே.என்.ரத்தினம் என்பவர் நடத்தி வந்த "என் தங்கை நாடகத்துக்கு தலைமை தாங்க
சென்றிருந்தார் ஏ.எஸ்.ஏ.சாமி ...நாடகத்தை எழுதியவர் டி.எஸ்.நடராஜன் ...நாடகத்தில் நடித்த ஒரு நடிகரின்..உணர்ச்சிகரமான நடிப்பு ஏ.எஸ்.ஏ.சாமியை மிகவும் கவர்ந்தது ...
திண்டுக்கல்லில்லிருந்து திரும்பியதும் தான் பார்த்தநாடகத்தை பற்றியும் தன்னை கவர்ந்த நடிகரை பற்றியும் ஜீபிடர் சோமுவிடம் சொன்னார்.
என் தங்கையை ஜீபிடருக்காக படமாக்க போவதாகவும் அதை ஏ.எஸ்.ஏ.சாமியே இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் ..
ஆனால் ஜீபிடருக்காக மூன்று படங்களை இயக்கி கொண்டிருந்த சோமு தனக்கு நேரமில்லை என்றும்
வேறு இயக்குநரை வைத்து இயக்கலாம் ஆலோசனை சொன்னதுடன் ..அந்த இயக்குனரை
என் தங்கை நாடகத்தை பார்த்து வரச்சொன்னார்.
அவருக்கு நாடகம் பிடிக்கவில்லை திட்டம் கிடப்பில்
போடப்பட்டது .
சில மாதங்களுக்கு பின் பி.ஏ.பெருமாள் தான்
பராசக்தி நாடகத்தை படமாக இருப்பதாகவும் அதற்கு..திரைக்கதை வசனம் எழுதி தரும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டார். அவரும் "பராசக்தியும்
என் தங்கையும் தங்கை பாசத்தை டிப்படையாக கொண்டவைதான் அதிலும் என் தங்கையில் பல சிறப்பான சம்பவங்கள் இருப்பதாகவும் அதனால்
இரண்டு கதைகளையும் இனைத்து புதிய புதிய திரைக்கதை யை அமைக்கலாம் "என்றார் சாமி.
நாடகத்தை பார்க்க ஆசைப்பட்டார் பெருமாள் ..
திருச்சியில் என் தங்கை நாடகத்தை பார்த்தார்கள்
மறுநாள் "காதல்"பத்திரிகை ஆசிரியர் அரு.ராமனாதன் வீட்டில் என் தங்கை நாடகாசிரியர்
டி.எஸ்.நடராஜனை சந்ததித்து பேசினார்கள்.
அவர் ஒத்து வரவில்லை ...இதோடு இதை நிறுத்தி
கொள்ளலாம் ..
"பராசக்தி கதையை ஏ.வி.எம்.கூட்டணியுடன் பெருமாள்..தயாரிக்க போகிறார் என்று கேள்வி பட்ட அசோகா பிக்சர்ஸ்...என் தங்கை கதையை
வாங்கி அதே பெயரில் தயாரித்து பராசக்திக்கு முன் வெளியிட்டார்கள் படச்சுருளையே சோகத்தில்
முக்கியெடுத்து விட்டார்கள் ..சரி அதைவிடுவோம்
பின்னர் கலைஞர் கதைவசனம் எழுதியதும்
மெய்யப்ப செட்டியாரின் தடுமாற்றமும் பி.ஏ.பெருமாளின் பிடிவாதமும் அனைவரும் அறிந்த விஷயம்தானே ..இங்கே ஒரு ட்விஸ்ட்
என் தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தவர்
#நடிகர்திலகம்சிவாஜிகணேசன்..
மீண்டும் பராசக்திக்கு வருவோம் ..
படம் பத்தாயிரம் அடிக்கு மேல் எடுக்கப்பட்டது
எடிட் செய்துபார்த்தார்கள் ...சிவாஜியின் நடிப்பு படத்தின் பிற் பகுதியில் சிறப்பாக இருந்ததை
மெய்யப்ப செட்டியார் உணர்ந்தார் ..ஆரம்பத்தில் எடுத்த 7ஆயிரம் அடியை நீக்கி விட்டு மறுபடியும் இரவு பகலாக படமாக்கினார்கள் ..
1952 அக்டோபர் 17ந்தேதி பராசக்தி வெளியானது
அது வரையில் இப்படி கம்பீரமான குரலை கேட்டறியாத தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள் ..படம் வெளியாகும் முன்பே
"பணம்""பூங்கோதை "மனிதனும் மிருகமும் "ஆகிய படங்களில் ஒப்பந்தமானார் ...இப்போது ஒரு சிறப்பு செய்தி பராசக்தி வெளியான அதேநாளில்
சௌகார் ஜானகி நடித்த..முதல் படமான "வளையாபதி "யும் வெளியானது.....
Attachment 5850
Thanks Ganesh Moorthy (வசந்தம் (பல்சுவைக் குழு)
பொய், பித்தலாட்டம், திருகுதாளம், உருட்டல், பிரட்டல், மிரட்டல் ,போன்ற அனைத்து சித்துவேலைகளையும் தாங்களே செய்துகொண்டு அதனை நாங்கள் செய்வதுபோல் எங்கள்மேல் பழிபோடும் வாத்தியின் கைகூலிகளது பித்தலாட்டம் ஆதாரத்துடன் அம்பலம் .
திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் 100 நாட்கள் ஓடிய படம் மதுரைவீரன் என்று, இன்றுவரை கப்சாவிட்டுகொண்டு திரிகிறார்கள் வாத்தியின் கைகூலிகள்.ஒவ்வொரு வாத்தியின் கைசும் நேரத்துக்கு ஒரு கதை ,32 அரங்கில் 100 நாட்கள் என்று ஒரு கைகூலி சொல்லுவார், மற்றைய கைகூலி எழுதுவார் 34 அரங்கில் 100 நாட்கள் என்று, இன்னுமொரு கைகூலி 36 அரங்கில் என்பார். பொய் சொல்வதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.
வாத்தியின் ரசிகர்களை உண்மையை உணரவிடாமல் மூளைச்சலவை செய்யும் உரிமைக்குரல் என்ற பத்திரிகையில் மதுரைவீரன் 100 நாட்கள் ஓடிய தியேட்டர் விபரங்களுடன் வெளியிடப்பட்ட பதிவு இது. இதில் காஞ்சிபுரம் முருகன் தியேட்ரிலும், கடலூர் நியூ சினிமாவிலும் ,திருவாரூர் பேபி தியேட்டரிலும் 29/06/1956 முதல் அமரதீபம் திரையிடப்படடுவிட்டது.மேற்படி 3 தியேட்டர்களிலும் அமரதீபம் திரையிட்டு ஓடிக்கொண்டிருப்பதற்கான பத்திரிகை ஆதாரம் இது.13/04 1956 ல் மதுரைவீரன் திரையிடப்பட்டது.29/06/1956ல் அமரதீபம் திரையிடப்பட்டது.எனவே மேற்கண்ட 3 தியேட்டர்களிலும் ஏப்ரல் மாதத்தில் 18 நாட்கள், மே மாதத்தில் 31 நாட்கள், யூன் மாதத்தில் 28 நாட்கள் மொத்தம் 77 நாட்கள்தான் வருகின்றது. ஆனால் வாத்தியின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு .காஞ்சியில் 156 நாட்கள் வந்திருக்கிறது. கடலூரில் 111 நாட்கள் வந்திருக்கிறது .திருவாரூர் பேபியில் 105 நாட்கள் வந்திருக்கிறது.எங்கும் பொய் எதிலும் பொய். பொய்! பொய்!! பொய் !!! இது எங்களுக்கு கிடைத்த ஆதாரத்தின் வெளிப்பாடு ,ஆதாரம் கிடைக்காததால் இன்னும் எத்தனை பொய்கள் ஒளிந்து கிடக்கின்றனவோ.?
அடுத்ததாக மதுரைவீரன் திரையிடப்பட்ட அதே நாளில் சதாராம் என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. அந்தத்திரைப்படம் விழும்புரம் சீதாராம் தியேட்டரில் திரையிடப்பட்டது .அதற்கான பத்திரிகை விளம்பர ஆதாரம் இங்கே இருக்கிறது.ஆனால் ரத்தத்தின் கைகூலிகளுக்கு மதுரைவீரன் அதே தியேட்டரில் 108 நாட்கள் ஓடியதாம் .இனி என்ன செய்வார்கள் தொப்பியை பிரட்டுவார்கள் எப்படி? இப்படி, முதல் வெளியீட்டில் அல்ல இரண்டாம் வெளியீட்டில் என்று தொப்பியை பிரட்டுவார்கள் அப்பாடா ஒருவழியாக மக்களை ஏமாற்றியாச்சு என்று அவர்களே தங்களுக்கு சமாதானம் சொல்லிக் கொள்வார்கள். எத்தனையோ பொய்களுக்கு மேல் பொய்களைச்சொல்லி வருடக்கணக்காக மக்களை ஏமாற்றி கொண்டு திரியும் வாத்தியின் கைகூலிகளுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.
Attachment 5851
Attachment 5852
Attachment 5853
நடிகர் திலகம்
ஒரு முறை திருச்சி சிவா ஒரு கூட்டத்துக்கு வந்திருந்த போது நிரம்பி வழிந்த சபையைப் பார்த்து சொன்னது
உலகத்திலேயே இறந்து 20 ஆண்டுகள் ஆகியும் எந்த அரசியல் ஆதாயமோ , பலன் கருதியோ இல்லாமல் சிவாஜி ஒருவருக்கே பெயரை சொன்னாலே இவ்வளவு கூட்டம் சேரும் என்றார்.
2012 கர்ணனுக்குப் பிறகு நவீன தொழில் நுட்பத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படங்களே அதற்கு சாட்சி.
ஒரு ரசிகர் திருவனந்த புறத்திலிருந்து தினமும் வாட்ஸ் அப் செய்வார் . 2019 இலிருந்து தொடரும் தினநிகழ்வு. எந்தெந்த சானலில் சிவாஜியின் எந்தெந்த படங்கள் எந்த நேரம் என்று*
உதாரணம்
Good morning. Today main NT AIYA movies:-
SIVANTHA MANN at 11am in Sun Life tv.
VAZHKAI at 1.30pm in Mega tv.
THANGA PATHAKKAM at 4pm in Jaya movies.
OOTTY VARAI URAVU at 10.30pm in Vendhar tv.
____________________________
Tomorrow (4-3-22) main NT AIYA movies:-
"RATHA THILAGAM" at 11am in Murasu tv.
"THANGAMALAI RAGASIYAM" at 3.30pm in Raj Digital plus.
MOONDRU DEIVANGAL at 7.30pm in Vasanth tv.
"RAJA RAJA CHOZHAN" at 9pm in Raj tv.
Parameswaran
Trivandrum.
நான் வந்த செய்தியை தொகுத்தலில் 2020*, 2021 வருடங்களில் மட்டும் சுமார் 3200 முறை அவருடைய 138 படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டுள்ளன.
அதே போல் 50 ஆவது படம் நூறாவது படம் என்று மொத்த எண்ணிக்கையை நடிகர்களுக்கு குறிப்பிடும் நாட்களில் சுமார் 30 வருட திரை வாழ்வில் நடிகர் திலகத்தின் பிரத்யேக சாதனையாக அவரின் 25 ஆவது 100 நாள் படம் , 50 ஆவது , 75 ஆவது , 100 ஆவது 100 நாட்கள் ஓடிய படங்கள் என்று தொகுக்கலாம்
நடிகர் திலகம் 100 நாள் படங்கள் மொத்தம் 112 films.
முதல் படம் பராசக்தி 100 நாட்கள் தாண்டி வெள்ளி விழா கண்டது 1952.
25 வது 100 நாட்கள் படம் பாலும் பழமும் 1961
50 ஆவது 100 நூறு நாட்கள் படம் சிவந்த மண் 1969
75 ஆவது 100 நாட்கள் படம் அண்ணன் ஒரு கோவில் 1977
100 வது 100 நாட்கள் படம்* முதல் மரியாதை 1985. வெள்ளி விழா கண்டது.
அதேபோல் அவரது landmark படங்கள் அனைத்தும் பெரு வெற்றிப் படங்கள்.
சிவாஜியின் முதல் படம் பராசக்தி 100 நாட்கள்.தாண்டி வெள்ளி விழா
அவரது 75 ஆவது படம் பார்த்தால் பசி தீரும் 100 நாட்கள்.
100 ஆவது படம் நவராத்திரி 100 நாட்கள்.
125 ஆவது படம் உயர்ந்த மனிதன் 100 நாட்கள்.
150 ஆவது படம் சவாலே சமாளி 100 நாட்கள்.
175 ஆவது படம் அவன்தான் மனிதன் 100 நாட்கள்.
200 ஆவது படம் திரிசூலம் வெள்ளி விழா
225 ஆவது படம் தீர்ப்பு வெள்ளி விழா
Thanks Gopalakrishnan Sundararaman (Nadigar Thilakam sivaji visirikal)
"கொடை வள்ளல் " கலை உலக முதல்வர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் வழங்கிய நன்கொடைகள் 🙏
------------------------------------------ சிலவற்றை நிகழ்ச்சிகளை தந்து உள்ளேன் எனக்கு கிடைத்த தகவலின் படி (இது போக இன்னும் எண்ணற்ற நிகழ்ச்சிகளுக்கு பல கோடி ரூபாய்யை நன்கொடையாக வழங்கி உள்ளார்
📽 செய்தி தகவல் தொகுப்பு 🎞🎬✍
🙏 கவிஞர் தின குரல் ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர்✍
தேசிய திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்------
சிவாஜி கணேசன் எனும் உலகப்புகழ்பெற்ற மகா கலைஞனை நடிகர் திலகமாகவும், சிம்மக்குரலோனாகவும் அனைவரும் அறிவோம். சிவாஜி கணேசனின் கொடைத்தன்மையை பற்றி இந்த தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க வாயப்பில்லை. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழக்கையிலும் கர்ணனாகவே வாழந்தவர். சிவாஜி கணேசனை போல கொடை பண்பில் சிறந்தவர் வேறு யாரும் இலர் எனும் கூறும் அளவுக்கு, எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்த கொடைகள் பல. இவர் தமிழ் இனத்தின் சொத்து. தமிழ் தாய் ஈன்ற முத்து. சிவாஜி கணேசன் அளித்த கொடைகளில் பொதுவெளியில் பதிவு செய்யப்படாதது பல. வெளி உலகத்திற்கு தெரியவந்தது சில.
அவற்றை காண்போம்.
* தமிழக அரசு ஆடும் வைஜெயந்தி மாலாவுக்கு மாதம் ரூ 1000 மும், பாடும் மதுரை சோமுவுக்கு மாதம் ரூ 1000 மும் அளித்துவிட்டு, வறுமையில் வாடிய கக்கன்ஜிக்கு வெறும் ரூ 500 ஐ அளித்தது. அதைக்கண்டு வெகுண்ட சிவாஜி கணேசன் தனது 10 பவுன் தங்க சங்கிலியோடு( இன்றைய மதிப்பில் 2,50,000 ரூ) சேலம் நேரு கலை அரங்கில் " தங்கப் பதக்கம்" நாடகம் நடத்தி கிடைத்த தொகை ரூ 15000 ( இன்றைய மதிப்பு 5 லட்சம்) அளித்தார்.
* பல கோடிகள் மதிப்புள்ள , தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக அளித்தார்
* கயத்தாரில் கட்டபொம்மன் தூக்கிலப்பட்ட இடத்தை ( 47 சென்ட்) வாங்கி தனது சொந்த செலவில் கட்டபொம்மனுக்கு சிலை வைத்து அது நினைவு சின்னமாக திகழ்கிறது.
* பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு பகலுணவு நிதியாக ரூ 1 லட்சம்( இன்றைய மதிப்பில் ரூ 51 லட்சம்) அளித்தார்.
* மதுரையில் சரஸ்வதி பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்த பொழுது பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு ரூ 50 லட்சம்)
* கோயில் திருப்பணிகளுக்காக கிருபானந்த வாரியாரிடம் பல்லாயிரம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கினார்.
* தமிழக வெள்ள நிவாரண நிதியாக முதல்வர் எம்ஜிஆரிடம் நாடக வசூல் மூலம் ரூ 1 கோடிக்கு மேல் அளித்தார்.( இன்றைய மதிப்பு :11 கோடிக்கு மேல்)
* சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில் அண்ணல் அம்பேத்காருக்கு சிலை அமைத்தார்.தமிழகத்தில் பல பகுதிகளில் அம்பேத்கார் சிலை அமைய தாராளமாக நிதியுதவி செய்துள்ளார்.
* சென்னை பெசன்ட் நகரிலுள்ள மங்கையர்கரசி மகளிர் மன்றக் கட்டிடத்திற்காக தங்கப்பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* தேசப்பாதுகாப்பு நிதிக்காக தமிழகத்தின் சார்பில் ரூ 5 லட்சம் வசூலித்து கொடுத்தார்.
* 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1.5 கோடி கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
* மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 8.5 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
* 1959ல் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் , மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் 70 லட்சம்) வழங்யுள்ளார்.
* சேலத்தில் தங்கப்பதக்கம் நாடகம் நடத்தி அதன்மூலம் வசூலான தொகையில் சேலம் முள்ளுவாடி கேட் அருகில் உள்ள மாவட்ட காங்கரஸ் கமிட்டி கட்டிடத்தை வாங்கிக் கொடுத்தார்.
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது பிரதமர் நேருவை சந்தித்து ரூ 40 ஆயிரம் யுத்த நிதியாக கொடுத்த முதல் இந்தியர் சிவாஜிதான்.( இன்றைய மதிப்பு :26 லட்சம்)
* 1962 ல் இந்தியா சீனா போரின் போது டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மீண்டும் ரூ 25000 த்தை( இன்றைய மதிப்பு 16 லட்சம்) போர் நிதியாக கொடுத்தார்.
* 1962ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்ட ராக்கி திரைப்படத்தின் அகில இந்திய ஒரு நாள் வசூல் முழுவதையும் யுத்த நிதியாக அளித்தார்.
* 1960 களில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 22 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின் போது அப்போதைய குடியரசு தலைவர் ஜாகிர் உசேனை சந்தித்து ரூ 50 ஆயிரத்தை(இன்றைய மதிப்பு 21 லட்சம்) யுத்த நிதியாக அளித்தார்.
* பெங்களூர் நாடக அரங்கம் கட்ட" கட்ட பொம்மன்" நாடகம் மூலம் ரூ 2 லட்சம்( இன்றைய மதிப்பு 1.5 கோடி) நன்கொடையாக அளித்தார்.
* பெங்களூர் மக்கள் நலனுக்காக ரூ 15 லட்சம்( இன்றைய மதிப்பு 10 கோடி) நிதியினை வழங்கினார்.
* கம்யூனிஸ்ட் கட்சிக்காக கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவாவிடம் நிதி உதவி அளித்துள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில் திமுகவை வளர்த்தவர்கள் வரிசையில் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
* திமுகவை வளர்க்க பல நாடகங்களை ஒரு பைசா கூட பெறாமல நடத்திக்கொடுத்தவர் சிவாஜி, மற்றும் பல நாடகங்கள் மூலம் நிதி வசூல் செய்து திமுகவிற்கு அளித்தவர் சிவாஜி என கலைஞர் தனது நூலான நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
* தேசத்தந்தை காந்திக்கு சிலை, நேருவுக்கு சிலை, இந்திரா காந்திக்கு சிலை, பெரியாருக்கு சிலை, கன்னியாகுமரியின் தந்தை ஐயா நேசமணிக்கு சிலை என நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு சிலை வைத்து அழகு பார்த்தார் சிவாஜி. பெருந்தலைவர் காமராஜருக்கு தமிழகமெங்கும் சிலைகள் வைத்து பெருமை சேர்த்தார்.
* தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கட்டிட நிதிக்காக " வியட்நாம் வீடு" நாடகம் மூலம் ரூ 30 ஆயிரம் நிதியை அளித்தார்.( இன்றைய மதிப்பு : 12 லட்சம்)
* வேலூர் பென்லன்ட் மருத்துவமனை கட்டிட நிதிக்காக வியட்நாம் வீடு நாடகத்தின் மூலம் ரூ 2 லட்சம் நிதி அளித்தார்.( இன்றைய மதிப்பு 80 லட்சம்)
* தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவராக 8 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது பெரிய நாடக அரங்கம் ஒன்றினை சங்கரதாஸ் சுவாமி பெயரிலும், திரையரங்கம் ஒன்றினை தேவர் பெயரிலும் கட்டினார்.
* கோயில் நிதி என்றால் ரூ 2 ஆயிரம், வெள்ள நிவாரண நிதி என்றால் ரூ 75 ஆயிரம், பாரதி விழாவிற்கு ரூ 50 ஆயிரம், மருத்துவமனை கட்ட ரூ 50 ஆயிரம், பள்ளிக்கூடம் கட்ட ரூ 25 ஆயிரம், தேச பக்தர்களுக்கு சிலை அமைக்க ரூ 25 ஆயிரம், அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்க ரூ 10 ஆயிரம் எனவும் அளித்துள்ளார்.
* சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமண மண்டபத்தின் கட்டிட நிதிக்காக தங்கப் பதக்கம் நாடகத்தின் ஒரு நாள் வசூலை அளித்தார்.
* நாகை மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்கு கோவில் மணி அமைக்கும் முழுச்செலவையும் ஏற்றார்.
*திருச்சி திருவானைக்கால் கோயில், தஞ்சை பெரிய கோயில், தஞ்சை முத்து மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களுக்கு யானைகளை வழங்கினார்.
*வல்லக்கோட்டை முருகன் கோயில் திருப்பணிக்காக ரூ 10 ஆயிரம் த்தை கிருபானந்த வாரியாரிடம் அளித்தார்.(இன்றைய மதிப்பில் பல லட்சம்)
* சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் தெப்பக்குளத்தில் செய்த திருப்பணி செலவை முழுமையாக ஏற்றார்.
* 1953 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதிக்காக விருது நகரில் தெருத்தெருவாக சென்று பராசக்தி வசனங்களைப் பேசி ரூ 12 ஆயிரம்( இன்றைய மதிப்பில் 10 லட்சம்) வசூலித்துக் கொடுத்தார்.
* 1957ல் இருந்து 1961 வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவுக்காக ரூ 5 லட்சத்தை ( இன்றைய மதிப்பு 3.5 கோடி) கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான்.
* 1960ல் தமிழகம் பெரும்புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, சிவாஜி கணேசன் 1 லட்சம் உணவுப் பொட்டலங்களையும், 800 மூட்டை அரிசியையும் தானமாகக் கொடுத்தார்.
* 1961 ல் பிரதமர் நேருவிடம் கிழக்கு தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ 1 லட்சம் கொடையாக அளித்தார். (இன்றைய மதிப்பில் 70 லட்சம்)
* 1964 ல் மகாராஷ்டிரா கொய்னா பூகம்ப நிதியாக அம்மாநில முதல்வர் ஒய் பி சவானை சந்தித்து ரூ 1 லட்சம் கொடுத்த முதல் இந்திய நடிகர் சிவாஜி தான்.( இன்றைய மதிப்பு 60 லட்சம்)
* 1964 ல் விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையை அமைத்துக் கொடுத்து வாயில்லா ஜீவன்கள் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.
* 1965 ல் பிரதமர் நேருஜி நினைவு நிதியாக ரூ 1.5 லட்சம் கொடுத்தார்.
( இன்றைய மதிப்பு 75 லட்சம்)
* 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-18 தேதிகளில் நீதியின் நிழல், களம் கண்ட கவிஞன் நாடகங்கள் நடத்தி வசூலான ரூ 1 லட்சத்தை யுத்த நிதியாக தமிழக முதல்வர் பக்தவச்சலத்திடம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 55 லட்சம்)
* 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது நிதியுதவியாக ரூ 10,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு :5 லட்சம்)
* 1967 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு சிறக்க வள்ளுவர் சிலை அமைத்ததுடன் முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் ரூ 5 லட்சம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு : 2.5 கோடி)
* 1968 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியின் கட்டிட நிதிக்காக ரூ 40,000 அளித்தார்.( இன்றைய மதிப்பு 15 லட்சம்)
* 1968 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி கட்டிட நிதிக்காக ரூ 1,30,000 அளித்தார்.( இன்றைய மதிப்பில் 50 லட்சம்)
* 1971 ல் இராணுவ வீரர்கள் முகாமில் தானும் தனது மனைவி கமலாவும் இரத்ததானம் செய்து தனது ரசிகர்களிடம் இருந்து பெருந்தொகை வசூலித்துக் கொடுத்தார்.
* 1972 ல் காஷ்மீர் மாநில முதலமைச்சர் மீர்காசிமை சந்திந்து அம்மாநில தாழத்தப்பட்ட மாணவர்கள் கல்விநிதிக்காக ரூ 25 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 8.5 லட்சம்)
*1972 ல் ஈரோடு ஸ்தாபன காங்கரஸ் மாநாட்டில் கட்சி நிதியாக ரூ 1.25 லட்சத்தை அளித்தார்.( இன்றைய மதிப்பில் 45 லட்சம்)
* 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
* 1974 ல் சிங்கப்பூர் சிறுநீரக மருத்துவமனைக்கு ரூ 45 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 12 லட்சம்)
*1974 ல் கடற்படை வீரர்கள் நிதிக்காக அட்மிரல் குல்கர்னி அவர்களிடம் ரூ 50 ஆயிரம் வழங்கினார்.( இன்றைய மதிப்பு 14 லட்சம்)
* 1975 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு வந்து ஆசீர்வதித்த காமராஜரிடம் ரூ 1 லட்சம் பொதுநிதியாக அளித்தார்.( இன்றைய மதிப்பு 30 லட்சம்)
* பீகாரில் வெள்ளம் ஏற்பட்டபோது பெரும் நிதியை நிவாரண நிதியாக அளித்தார்.
* 1975 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் வறட்சி ஏற்பட்டபோது நிதியுதவியாக 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 22 லட்சம்)
* 1977ல் தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபொழுது கொடி நாளுக்காக 1.2 கோடியை வசூலித்து கொடுத்தார்.
* 1978ல் புயல் நிவாரண நிதியாக மூப்பனாரிடம் ரூ 20 ஆயிரம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 4.5 லட்சம்)
* 1982 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களை இளைய திலகம் பிரபு நேரில் சந்தித்து தன் சார்பில் 25 ஆயிரமும் சிவாஜி கணேசன் சார்பில் ரூ 1 லட்சமும் சத்துணவு திட்டத்திற்கு அளித்தார்.( இன்றைய மதிப்பு 20 லட்சம்)
* 1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு ரூ 1 லட்சம் அளித்தார்.( இன்றைய மதிப்பு 10 லட்சம்)
* 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நிதியாக கலைஞரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தார்.( இன்றைய மதிப்பு 6 லட்சம்)
தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகம் மறைந்த பின்பும், இளைய திலகம் பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்!
சிவாஜி கணேசன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டு மக்களுக்காக வாரி வழங்க தவறியதில்லை. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சிவாஜி கணேசன் தமிழ் உலகிற்கு செய்த தொண்டுகள் ஏராளம்.
சிவாஜி கணேசனுக்கு ஏன் அரசாங்க செலவில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என வினவியவர்கள் அவரை பற்றி முழுமையாக அறிந்துக்கொள்வது அவசியம். அவர் தமிழுக்கும் இந்திய தேசத்திற்கும் செய்த தொண்டுகளுக்கு எத்தனை மணிமண்டபங்கள் கட்டினாலலாலும் ஈடாகது ....
தகவல்கள் தொகுப்பு✍ கவிஞர் தின குரல்🙏
ப சிவகுமார் பிரபு (எழுத்தாளர்) மூத்த பத்திரிகையாளர்🤝🙏
Attachment 5854
Thanks Vijaya Rai Kumar (Nabigar Thilagam Fans)
ஆடு பகை
குட்டி உறவு
என்பார்களே
அது போல அண்ணன் சிவாஜியிடம் போலித்தனமான அன்பும் நட்பையும் கொண்ட அன்றைய MGR ஆட்சி
சிவாஜி மன்றத்தினர் மீது பகையுனர்வோடு நடந்து கொண்டது
அன்றைய ஆட்சியாளர்களுக்கு
சிவாஜி மன்றம் தான்
சிம்ம சொப்பனமாக இருந்தது
அதன் செயல்பாடுகள் அப்படி
நாடாளமன்ற உறுப்பினர் பதவி ஏற்று சென்னை திரும்பிய அண்ணன் சிவாஜியை வரவேற்க அனைத்து ஊர்களில் இருந்தும் மன்றத்து மறவர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடினர் கட்டுக்கடங்காத கூட்டம்
MGRன் காவல் துறை கூட்டத்தை கலைப்பதற்காக மன்ற பொதச் செயலாளர் மாவீரன் V.இராஜசேகரன் அவர்களை குறிவைத்து தாக்கியது மன்றத்து மறவர்கள் மாவீரன் V. இராஜசேகரன் அவர்களை சூழ்ந்து நின்று பாதுகாத்தனர் மீண்டும் காவல்துறை தடியடி நடத்தியது அப்படியும் அவர்களால் கூட்டத்தை கலைக்க முடியவில்லை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு
MGRன் காவல் துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது அதற்கும் நம் மன்றத்து மறவர்கள் சளைக்காமல் கூடி நின்றனர் பின் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் பலர் குண்டடிபட்டு காயம் அடைந்தனர்
மன்றத்து மறவர்கள் வந்த வாகனங்கள் காவல் துறையினராலேயே கடுமையாக தாக்கப்பட்டு சேதம் அடைய செய்தனர்
அண்ணன் சிவாஜி அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்தவுடன் போர் களம் போல் காட்சியளித்ததை பார்த்து நிலைமையை உணர்ந்தார் தொண்டர்கள் படைசூழ வரவேற்று ஊர்வலமாக அழைத்து வரப்பற்றார்
இடையிடையே நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது இந்த காட்டுமிராண்டிதனமான ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கடுமையாக சாடினார்
தடியடி குண்டடிபட்டு காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார் அதன் பின் தான் தன் இல்லம் சென்றார்
இருந்தும் கெடுத்தான்
செத்தும் கெடுத்தான்
என உறவாடி கெடுத்ததை
இது போல் பல உதாரணங்களுடன்
சொல்லிக் கொண்டே போகலாம்........
MGR ஆட்சியின்
குறைகளையும்
ஊழல்களையும் உடனுக்குடன் அரசியல் அமைப்புகளை விட
சுட்டி காட்டுவது அப்போது சிவாஜி மன்றத்தின் செயல்பாடாக இருந்தது இதனால் சிவாஜி மன்ற செயல்பாடுகளை அடக்கு முறையால் அடக்க MGR முயற்சி மேற்கொண்டார்
சிவாஜி மன்றத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அதன்
இறக்கைகளை வெட்ட வேண்டும் என்று கூறினார் அதன் படி தான்
மன்றத்து மறவர்களும் மாவீரன்
V. இராஜசேகரன் அவர்களும் தாக்கப்பட்தோடு அல்லாமல்
பல வழக்குகளும் போட்டனர் சிவாஜி மன்றத்தினர் மீது
அப்போது அரசியலில் ஒரு அங்கமாக
சிவாஜி மன்றத்தின் கெளரவம்
கம்பீரம் தலை நிமிர்ந்து இருந்தது
Attachment 5855
Attachment 5856
Attachment 5857
Attachment 5858
Thanks Satha Venkatraman