http://i49.tinypic.com/de5vrd.jpg
Printable View
04.02.1985 ஒரு முக்கியமான நாள். நமது தலைவர் முப்பிறவி கண்டு அந்த காட்சியை பரங்கி மலை பாரி வள்ளல் பரங்கிமலை திடலில் தமிழக மக்களுக்கு வாரி வழங்கிய பொன்னான நாள்..அவர் இல்லை இனி வரமாட்டார். என்று ஏளனம் பேசியவர்களுக்கு பேரிடியாய் அதிர்ச்சி கொடுத்த நாள்.. என்னை போன்ற தலைவரின் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கிய திருநாள்..தினசரி என்ற பத்திரிகையில் தலைப்பு என்ன தெரியுமா
அதே புன்சிரிப்பு, அதே கை அசைப்பு, பழைய எம்.ஜி.ஆராகவே திரும்பினார்
அன்று நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை..இப்படியும் இவர் வருவாரா என்று எல்லோரும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நாள் அது.
அந்த பத்திரிகை முழுவதும் தலைவரை பற்றிய செய்திகள்தான்..05.02.1985 அன்று வந்த அந்த பத்திரிகை கிடைக்கவே இல்லை..அதை வாங்குவதற்குள் அவ்வளவு கஷ்டமாகிபோனது. அதிலிருந்து சில காட்சிகளை பாருங்கள்
http://i47.tinypic.com/64ne5w.jpg
பரங்கிமலை திடலில் 03.02.1985 முதலே மக்கள் வர தொடங்கிவிட்டார்கள்..அங்கே வந்தவர்கள் அதிமுகவினர் மட்டுமல்ல. தமிழக மக்கள்..பொது மக்கள்..அந்த கூட்டத்தை பார்த்த லண்டன் நிருபர் ஒருவர் வியந்து பிரிட்டிஷ் நாட்டில் பிரதமர் தாட்சர் உட்பட எந்த அரசியல் தலைவருக்கும் இப்படிப்பட்ட கூட்டம் கூடியது இல்லை என்று கூறியிருக்கிறார். அந்த செய்தியை பாருங்கள்
http://i49.tinypic.com/20ifk7l.jpg
தலைவர் அவர்கள் இந்திராகாந்தி அம்மையார் மீது அதிக மரியாதையும் பாசமும் வைத்திருந்தார். அதே போல அம்மையாரும் தலைவர் மேல் அதிக மதிப்பு கொண்டிருந்தார்கள்..தலைவர் நலம் பெற்று மும்பை விமான நிலையம் வந்த போதுதான் அவருக்கு அம்மையார் கொலையுண்ட செய்தி தெரிவிக்கப்பட்டது.அதைக்கேட்டு தலைவர் விம்மி விம்மி அழுதார் என்ற செய்தி அவர் எப்படிப்பட்ட இளகிய குழந்தை மனம் படைத்த வள்ளல் என்பது புரியும் அந்த செய்தி இதோ
http://i50.tinypic.com/2rop4w7.jpg
அன்பு தலைவன் அமெரிக்காவிலிருந்து பூரண குனம்மடைந்து
தமிழகம் வந்த நிகழ்வை அற்புதமாக பதிவுகள்
செய்த திரு கலியபெருமாள் அவர்களுக்கு மிக்க
நன்றி
அன்புடன்
வேலூர் எம்ஜியார் இராமமூர்த்தி
THALIVAN FUNCTION IN SINGAPOR-THANKS Mr.SELVAM SIR
http://i46.tinypic.com/fwppj9.jpg