-
பெரிய எஸ்டேட் பங்களாவுக்குச் சொந்தக்காரரான கதாநாயகன், அங்கு வந்து, தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல் அந்த எஸ்டேட்டில் தங்குகிறார். ஏற்கெனவே விடுமுறையைக் கழிக்க கதாநாயகி, அந்தப் பங்களாவில் இடம்பிடித்து விடுகிறாள். காதல் நாடகம் சுவையாக நடைபெறுகிறது. இறுதியில் கதாநாயகன் யார் என்பது தெரிய வருகிறது. இந்த சிறிய ஐடியாவை வைத்துக் கொண்டு, பொழுதுபோக்கும் விதமாக நகைச்சுவை உணர்வுடன் படமாக்கப்பட்ட கதைதான் "அன்பே வா!'
எம்.ஜி.ஆர். கதாநாயகன் - சரோஜாதேவி கதாநாயகி. நகைச்சுவைக் காட்சிகளிலும் தம்மால் நடிக்க இயலும் என்பதை எம்.ஜி.ஆர் காட்டியிருந்தார். குறும்புத்தனமான காதலியாக சரோஜாதேவி சிறப்பாக செய்திருந்தார். படத்தின் டைட்டில் சாங் உள்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். புதிய வானம், புதிய பூமி, லவ் பேர்ட்ஸ், நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்பே வா, வெட்கம் இல்லை நாணம் இல்லை ஆகிய பாடல்கள் தலைமுறை தாண்டி இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ராஜாவின் பார்வை பாடல், சாரட்டு வண்டியில் நாயகனும் நாயகியும் உட்கார்ந்து போவது போல சாமர்த்தியமாகவும், புதுமையாகவும் படமாக்கப்பட்டிருந்தது. ஆரம்பப் பாடல், கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பாடலும், இசையும் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணை புரிந்தன.
இந்தப் படத்துக்கு செய்த விளம்பர வாசகம், ஏவி.எம்மின் பொழுதுபோக்கு சித்திரம் என்பதாகும். ஏவி.எம். பேனரில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் "அன்பே வா'.
நடிக, நடிகையர்
எம்.ஜி.ஆர்., அசோகன், நாகேஷ், டி.ஆர். ராமசந்திரன்,
பி. சரோஜாதேவி, முத்துலட்சுமி, ராமாராவ்,
மாதவி மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
இசை : விஸ்வநாதன்
பாடல்கள் : வாலி
வசனம் : அரூர்தாஸ்
தயாரிப்பு : ஏவி.எம்.
இயக்கம் : ஏ.சி. திருலோகசந்தர்.
-
The hindu
சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்
இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.
எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’
எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.
நடுவே மின்சாரம் நிற்கிறது. அப்போது அவரது முகம், உடல் எல்லாம் நிஜ உலகத்தில் நிற்பதற்கு அஞ்சி ஒடுங்குகிறது.
-
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு இனிக்கும் ஓர் நற்செய்தி .
ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு மெய்ப்பட போகிறது . கண்ணுக்கும் , மனதிற்கும் , விருந்து படைக்க போகிற அதிசயம்
விரைவில் ...........................
http://i59.tinypic.com/j7eujl.jpg
இதுவரை யாருமே நினைத்து பார்க்க முடியாத ........
இதுவரை யாருமே செய்ய முன் வராத ................
இதுவரை யாருமே செய்யாததை ...........................
நம் மக்கள் திலகத்திற்கு உருவாகி வரும் சரித்திர சாதனை .....பெட்டகம்
விரிவான தகவல்கள் விரைவில் ........
கொடுத்து வைத்தவர் எம்ஜிஆர் .
அவர் மட்டுமா ....
அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களும் அல்லவா ......
-
2014 ல் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திலகத்தின் இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி
2014 ல் ஆயிரத்தில் ஒருவன் ,,,,, மறு வெளியீட்டில் சென்னையில் விரைவில் 100வது நாள் .
50 ஆண்டுகள் பின் நோக்கி செல்வோம் ...............
1964 சென்னை மாநகராட்சியினை மக்கள் திலகத்தின் பிரச்சாரத்தால் திமுக முதல் முறையாக கைப்பற்றியது .
வேட்டைக்காரன் - talk of the cinema world .
என் கடமை - musical hit .
பணக்கார குடும்பம் -family super hit movie .
தெய்வத்தாய் -emotional mega hit movie
தொழிலாளி - labour's dignity
படகோட்டி - fisher 's man story WITH MUSICAL HIT
தாயின் மடியில் - sentimental story
மக்கள் திலகத்தின் 7 காவியங்கள் . மறக்க முடியாத ஆண்டு1964.
-
கோவை ராயல் திரை அரங்கில் பள்ளி பாடப்புத்தகத்தில் ENGLISH மற்றும் தமிழ் NON DETAIL புத்தகங்களில் நாம் படித்த காலம் தொட்டு இன்றுவரை வந்துகொண்டிருக்கும் POPULAR AMONG CHILDREN STORY " அலிபாபாவும் 40 திருடர்களும் "
தினசரி 4 காட்சிகள். புதிய கோப்பி PRINT
வெற்றி பெற வாழ்த்துக்கள் !
http://www.youtube.com/watch?v=MBepNZJjK-4
-
Alibabavum 40 thirudargalum in geva color at that time was a movie dominated by Banumathi with her typical acting skills and singing prowess. Unlike other subsequent MGR movies this movie makes the right usage of MGR in action sequences and in only two duet scenes. The song 'Maasilla unmaik kaadhale...' for many early years I was under the impression that it was a Gemini Ganesan song with AM Raja. In this movie, true to the story line, the role of MG Chakrapani was extended and one can enjoy his acting caliber in the scene where he is caught in the cave forgetting the password to get out. Same way the comedian Thangavelu was also given more screen space with an unforgettable song 'ullaasa ulagam unakkaga...' with sona tatoo on his fore arm and another song scene with Vaheetha Rehman 'salaam babu salam babu...'Veerappa exhibits his typical villainy and thundering laugh! But during climax one of his derogatory remarks on Alibaba should have been avoided since the role is enacted by MGR! Even the climax dance and taking on the villain group was donned by Banumathi and the comedian Saarangapani and MN Rajam, while MGR silently watches. It was also rumoured that Modern Theare Sundaram, the director filmed some scenes without MGR using his body double. MGR fills the bill as the energetic hero Alibaba with his sword fights and his acting scope was much restricted as one can feel as the movie moves on. The comedian Charangapani was also given with a song 'Chinnan chiru chitte....'! Overall an evergreen entertainer irrespective of age and generation gaps.We wish a successful rerun of this movie.
-
இனிய நண்பர்கள் திரு ரவிகிரண் , திரு செந்தில்
மக்கள் திலகத்தின் ''அலிபாபாவும் 40 திருடர்களும் '' படம் கோவை நகரில் மறு வெளியீடாக வந்திருக்கும் தகவலை பதிவிட்டமைக்கும் , படத்தை பற்றி உங்களின் கருத்துக்களை வழங்கியதற்கும் அன்பு நன்றி .
-
courtesy - net
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.
படத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)
அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார்.
அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் *சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).
உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)
அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க. பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.
அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு *ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட, பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.
சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.
திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.
அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்*சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின *பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)
பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்*சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.
படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு.
படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?
‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!
-
ஜெயம் ரவி
"அலிபாபாவும் 40 திருடர்களும்.' சின்ன வயதில் இருந்தே மனதுக்குள் நிறைந்திருக்கும் படம். எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு அந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டம், கதை சொல்லும் விதம், மாயஜாலங்கள் நிறைந்த காட்சிகள் என ஒவ்வொரு இடத்திலும் உள்ளம் கவரும் படம் அது. ""திறந்திடு சீசே...'' என்று வரும் அந்த குகை காட்சிகளின் போது சின்ன வயது மனதுக்குள் இருந்த குதூகலம், இப்போதும் இருக்கிறது. காதல், காமெடி, ஆக்ஷன் என பல விதமான சினிமாக்கள் இருந்த போதும், எனக்கு அலிபாபா மாதிரி வந்த படங்கள்தான் அதிகமாக பிடிக்கும். அந்தப் படத்தின் பிரம்மாண்டங்களை இப்போது கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிற போதும், கதையில் நிறைய மாற்றங்கள் வைக்க வேண்டிய சூழலுக்கு சினிமா மாறியிருக்கிறது. கதை அதுவாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழலுக்கு ஏற்ற திரைக்கதை அமைக்க வேண்டும். "அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்கிற எனது ஆசையை முன்பிருந்தே சொல்லி வருகிறேன். அதை ரீமேக் செய்வதற்கான வாய்ப்புகள் அமைந்தால், அந்த இயக்குநர் எனக்கு வாய்ப்புத் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.
-
courtesy - net
தமிழ் சினிமா உலகின் மூவேந்தர்கள் என எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணசேன் ஆகியோர் 1956 -ம் வருஷத்திலிருந்து கவனிக்கப்படலானார்கள். இந்த வருஷத்தில் வெளி வந்த எம். ஜி. ஆர். நடித்த மூன்று படங்களும் வசூலை அள்ளிக் குவித்தன. ஒன்பது படங்கள் சிவாஜிக்கு; அவற்றில் ஐந்து வெற்றிப் படங்கள். ஐந்து படங்கள் ஜெமினிக்கு; அத்தனையும் நல்ல வசூல்.
முதல் முழு நீள வண்ணப் படமான, மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ அதன் மூலமான இந்திப் படத்தைப் போலவே ஒவ்வொரு காட்சிகளும் அமைக்கப் பட்டிருந்தன. ஆடை ஆபரணங்கள், அரங்க நிர்மாணம் அத்தனையும் இந்திப் படத்தின் அடியற்றியே தயாரிக்கப்பட்டு, பாடல்களும் இந்தி மெட்டுக்களிலேயே புனையப்பட்டு வெளிவந்த தமிழ் அலிபாபா இந்தி அலிபாபாவைப் போலவே வசூலிலும் வெற்றிகண்டது.
குதிரை சவாரி, வாள் வீச்சு, சாகஸம், காதல் சல்லாபம், எல்லாவற்றிலும் வல்ல வீரநாயகனாக எம். ஜி. ஆர். நடித்தார். பி. பானுமதி தன் இனிய குரலில் பாடி, சாமர்த்தியமும் சாதுர்யமும் கொண்ட கதாநாயகியாக நடித்தார். கொள்ளையர் தலைவனாக எம். ஜி. சக்கரபாணி, நகைச்சுவைக்கு கே. ஏ. தங்கவேலு. டி. ஆர். சுந்தரம் டைரக்ட் செய்த இந்தப் படம் பொங்கலன்று திரைக்கு வந்தது.
‘சினிமா ராணி’ டி. பி. ராஜலட்சுமி 1939-ல் தயாரித்த ‘மதுரை வீரன்’ கதையை கிருஷ்ணா பிச்சர்ஸ் லேனா செட்டியார் தயாரித்து 1956 ஏப்ரலில் வெளியிட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களிடையே பிறந்தவன் மதுரை வீரன். அவனது குலத்திலேயே பிறந்த வெள்ளையம்மாளை மணந்தான், கட்டுமஸ்தான உடல் அழகும், வீரமும் நிறைந்த அவனை அரச குடுபத்துப் பெண் பொம்மி காதலித்தாள். அந்தக் காதலை ஏற்று, எதிர்ப்புக்களைச் சமாளித்து அவளைச் சிறையெடுத்து வந்தான் மதுரை வீரன். எதிரிகளால் மூவரும் கொல்லப்பட்டார்கள்.
ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப் பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் வீரத் தெய்வமாக மதுரை வீரனை வழிபட்டு, அவனது சாகஸங்கள் குறித்து மேன்மேலும் இனிய கற்பனைகளைச் சேர்த்து வழி வழியாகத் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லி வருகிறார்கள்.
ஒடுக்கு முறைக்கு எதிரான தங்கள் உள்ளத்துணர்வை வெளிப்படுத்த தாழ்த்தப்பட்ட மக்கள் மதுரை வீரசாமியை வழிபடுவதன் மூலம், கால காலமாய் உணர்த்தி வருகிறார்.
அத்தகைய மதுரை வீரசாமியாக, எம். ஜி. ஆர். யாரை கண்ட கிராமத்து ஏழை மக்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்; மேல் ஜாதிக்காரப் பெண் தங்கள் மதுரை விரனைக் காதலிப்பதைக் கண்டதும் புளகாங்கிதம் பெற்றார்கள்; காட்டுக் காவலை உடைத்து, மீறி, அவளைத் தங்களது மாவீரன் மதுரைவீரசாமி தூக்கி வந்தது கண்டு புல்லரித்துப் போனார்கள்; இரண்டு மனைவிகளோடு மதுரை வீரசாமி சொர்க்கலோகம் போவதைப் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.
எம். ஜி. ஆர்., பி. பானுமதி, பத்மினி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் நடித்த இந்தப் படத்தை யோகானந்த் டைரக்ட் செய்திருந்தார். வசனம் – கண்ணதாசன். கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் அது வரையிலும் அதற்குப் பின்னாலும் காணாத லாபத்தை இப்படம் பெற்றுத் தந்தது.
அலிபாபாவுக்கும் மதுரை வீரனுக்கும் நிகரான கிராமத்து இளைஞன், தாயை தெய்வமாக வணங்குபவன், அழகன், அன்பானவன்- ‘தாய்க்குப்பின் தாரம்’ படத்தின் கதாநாயகன் இப்படிப்பட்டவன். நடித்தது – எம். ஜி. ஆர். தேவர் பிலிம்ஸ் முதல் படம்; நண்பர் சாண்டோ சின்னப்பாத் தேவரின் படம்.
கிராமத்தில் நடப்பதாகக் கதை. தண்ணீர் பாய்ச்சுவதில் தேவருக்கும் எம். ஜி. ஆருக்கும். மோதல். சிலம்பச் சண்டை தூள் பறக்க நடைபெற்றது. படத்தில் பி. கண்ணாம்பா – தாய், பி. பானுமதி – தாரம். கதை வசனம் ச. அய்யாப்பிள்ளை. தம்பி எம். ஏ. திருமுகம் டைரக்ட் செய்த இந்தப் படம் செப்டம்பரில் வெளிவந்தது.