மது,
பெண்ணுக்கு பெண்ணு என்னடி எனக்கு ஞாபகம் இருந்த வரை செல்வியின் செல்வன் இல்லை என நினைக்கிறேன்.
Printable View
மது,
பெண்ணுக்கு பெண்ணு என்னடி எனக்கு ஞாபகம் இருந்த வரை செல்வியின் செல்வன் இல்லை என நினைக்கிறேன்.
'மகுடம் காத்த மங்கை' படத்தில் ஜிக்கி, டி.ஏ மோத்தியின் அருமையான குரல்களில்
'ஆஹா என்னைப் பார் மன்னா
அருகில் வா கண்ணா'
பாடல்.
ஹெலன் அழகாக இருப்பார்.
http://www.youtube.com/watch?v=czIe3...yer_detailpage
ராகவேந்திரன் சார்,
'Nee Bandu Ninthaga' 'கஸ்தூரி நிவாஸ்' பாடல் அற்புதம்.
இதே மெட்டில் சுசீலா அவர்கள் தமிழிலும் பாடி நான் கேட்ட ஞாபகம். மனதில் இருக்கிறது. வருவேனா என்கிறது. லீலா வினோதம் என்று இரண்டாவது வரி வரும் என்று நினைக்கிறேன்.
தங்களுக்குத் தெரியுமா?
வாசு ஜி, ராகவேந்திரா ஜி பாடல்களின் அணிவகுப்பு அருமை.
பூவினும் மெல்லிய பூங்கொடி பாடல் பதிவின் போது இசையரசி கர்ப்பமாக இருந்தாராம். சங்கர் கணேஷ் அடிக்கடி சொல்வார். இந்த பாடலை பதிவு செய்துவிட்டு பின்னர் நேரே மருத்துவமனை சென்றாராம்.
================
ரங்காராவ் என்ற ஒரு வயலின் கலைஞர் முதன் முதலாக கன்னட படத்திற்கு இசையமைப்பாளரானார்
ஆம் எம்.ரங்காராவ் .
படம்: நக்கரே அதே ஸ்வர்கா என்ற படத்தின் மூலம் அறிமுகமானர், அவர் தான் பாலாவை கன்னடத்தில் இசையரசியுடன் ஒரு டூயட் பாட வைத்தார்
அது கனசிதோ நனசிதோ என்ற பாடல் (பாலாவின் குரல் கண்டசாலாவை ஞாபகப்படுத்தும்)
புட்டண்ணாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான “சாக்*ஷாத்காரா”
ராஜ்குமார், ஃப்ரித்விராஜ்கபூர்(ஹிந்தி),ஜமுனா, நாகேந்திர ராவ் என பலர் நடித்த இந்த படத்தில் பாடல்கள் அபாரம்
அதிலும் ஒலவே ஜீவன சாக்*ஷாத்காரா பாடல் இனிமையிலும் இனிமை(வாசுஜி கட்டாயம் கேட்டு பார்க்கவும்)
இதோ அந்த பாடல்
சோலோ இசையரசியின் குரலில் (என்ன இனிமை என்ன தெளிவு)
http://www.youtube.com/watch?v=TMsasOay9ng
டூயடோ(சோகம்)
http://www.youtube.com/watch?v=TlOBlOAsjws
எத்தனையோ பெண் டூயட்கள் இருந்தாலும் இசையரசியும் ஈஸ்வரியும் இசைத்தது போல் எதுவுமே இல்லை
தமிழில், தெலுங்கில் என பல உண்டு
இதோ கன்னடத்திலும் ஒன்று . அருமையான பாடல் .. இது தமிழ் குங்கும பொட்டு குலுங்குதடி போல உள்ள பாடல்
http://www.youtube.com/watch?v=tHCg2By7RKI
psusheela இணையதளத்தில் இது தட்டுங்கள் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் நிச்சயமாக அந்தப் படம் இல்லை.
முன்பெல்லாம் தினமணி பேப்பருடன் ஞாயிறன்று தினமணி சுடர் என்று ஒரு இணைப்பு வரும். அதில் ஒரு பக்கத்தில் சினிமா செய்திகள
இருக்கும். அதிலே செல்வியின் செல்வன் படத்தில் .. விஜ்யகுமாரியும் இன்னொரு பெண்ணுமாக ஏதோ தண்ணீர்த் துறையில் நிற்பது
போல படம் போட்டு இந்தப் பாட்லைப் பற்றி எழுதி இருந்ததாக நினைவு...
இது எந்தப் படம் என்று நண்பர்கள் கண்டு பிடித்து சொல்லுங்களேன் ப்ளீஸ்...
இன்றைய ஸ்பெஷல் (40)
http://www.oursongspk.com/movieimage...gal%201971.jpg
'திருமகள்'
இந்தப் படத்தின் உலக உரிமை ஓரியண்டல் பிக்சர்ஸ் என்று போடுவார்கள். பின்னால் இதே ஓரியண்டல் நிறுவனம் எம்ஜிஆர் அவர்களை வைத்து அதிக பொருட்செலவில் 'நினைத்ததை முடிப்பவன்' படத்தை வழங்கியது.
கோவிந்தராஜ் பிலிம்ஸ் 'திருமகள்' படத்தில் ஏ.வி.எம் ராஜன், ஜெமினி, சிவக்குமார், பத்மினி, லஷ்மி என்று நிறைய நட்சத்திரக் கூட்டம். பாடல்களை கண்ணதாசன் எழுத கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் ஒளிப்பதிவு 'காமிரா மேதை' கர்ணன். இயக்கம் ஏ.எஸ்.ஏ.சாமி
https://i.ytimg.com/vi/E85hQ10aDGU/mqdefault.jpg
இப்படத்தில் ஏ.வி.எம் ராஜனுக்கும், லஷ்மிக்கும் ஒரு அருமையான டூயட் பாடல். அப்போது சிலோன் ரேடியோவில் ஏக பிரபலம்.
டி.எம்.எஸ்,சுசீலா இருவரும் மிக அழகாகப் பாடிய ஒரு பாடல்.
'காலாலே' என்று டி.எம்.எஸ், சுசீலா இருவரும் தனித்தனியே நிறுத்தித் தொடர்வதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்
காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்
காதோரம் கூந்தல் இறங்க
கட்டழகு மேனி மயங்க
கையேடு வளையல் குலுங்க
கட்டிக் கொள்வேன் காதல் விளங்க
காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்
குறிஞ்சிப் பூவைப் போல் மணக்கும்
உன் குறுநகை என்னை இழுக்கும்
குறிஞ்சிப் பூவைப் போல் மணக்கும்
உன் குறுநகை என்னை இழுக்கும்
கோவைச் செங்கனி இனிக்கும்
அதைக் கொடுக்க ஆசைதான் எனக்கும்.
கொத்துங்கிளி என்ன அதில் முத்தமிட்டு
முத்தமிட்டு சித்திரங்கள் இட்டு விடவோ
ஆ ஆ
கொண்டு வந்த தேன் குடத்தை
வண்டு வந்து பார்த்த பின்பு
உண்டு விடக் கேள்வி என்னவோ
ஓஹ்ஹோ
கொத்துங்கிளி என்ன அதில் முத்தமிட்டு
முத்தமிட்டு சித்திரங்கள் இட்டு விடவோ
கொண்டு வந்த தேன் குடத்தை
வண்டு வந்து பார்த்த பின்பு
உண்டு விடக் கேள்வி என்னவோ
காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வாய்.
பவளப் பூவைப் போல் இருக்கும்
உன் பருவம் கையிலே மிதக்கும்
பவளப் பூவைப் போல் இருக்கும்
உன் பருவம் கையிலே மிதக்கும்
தவழும் பிள்ளை போல் துடிக்கும்
இந்த சரசம் வேறெதில் கிடைக்கும்
அத்தைமகள் முத்துநகை ரத்தினத்தை
மெத்தையிட்டு மற்ற கதை சொல்லித் தரவோ
ஆஹா
விட்டகுறை தொட்டகுறை
மிச்சமில்லை என்றபடி
அத்தனையும் அள்ளித் தரவோ
அத்தைமகள் முத்துநகை ரத்தினத்தை
மெத்தையிட்டு மற்ற கதை சொல்லித் தரவோ
விட்டகுறை தொட்டகுறை
மிச்சமில்லை என்றபடி
அத்தனையும் அள்ளித் தரவோ
காலாலே நிலம் அளந்து
கண்ணாலே முகம் அளந்து
நூல் போலே இடை அசைத்து
நூறுமுறை ஜாடை செய்வேன்
ஆஹஹஹாஹாஹஹாஹா
ம் ஹுஹுஹும் ம் ம்ம் ஹும்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=MaFPEesEkjA
ராஜேஷ் சார்
ஒரு நிழற்படம். நாம் நேற்று பேசியது தொடர்பாக.
தந்தையும், மகனும்
http://i1087.photobucket.com/albums/...-2/suthar1.jpg
பேசும்பட' பொற்சித்திரம். (1)
'தெய்வத்தின் தெய்வம்' படத்தில் அழகான கீதாஞ்சலி. என்ன ஒரு போட்டோகிராபி! அப்போது மணி என்ற பெயரில் இருந்தார்.
http://i1087.photobucket.com/albums/...75abfc36a9.jpg