அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2015 வாழ்த்துகள்!!!
Printable View
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2015 வாழ்த்துகள்!!!
கலை சார்,
இதோ உங்களுக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் சீறும் நடிப்பில் நம் நாடி நரம்பையெல்லாம் சிலிர்க்க வைக்கும் 'வணங்காமுடி' படப் பாடல் அர்த்தம் பொதிந்த வரிகளோடு.
'ஓங்காரமாய் விளங்கும் நாதம்
அந்த ரீங்காரமே இன்ப கீதம்'
'பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
நாட்டுக்கு நல்ல பயன் தருமா
எண்ணிப் பாராமல் போராடும் மாந்தரால்
பலனற்று மாறி விடுமா'
என்று தொகையறாவுடன் ஆரம்பிக்கும் இப்பாடலில் நடிகர் திலகத்தின் உச்ச கட்ட கோபம் அனலாய்த் தகிக்கிறது. நடிப்பு நெருப்பைக் கக்குகிறது. எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்.
இப்பாடலில் வரும்,
'இயலும், இசையும், 'கலை':)யும்
இகமதில் மகிழ்வுற சுகம் தரும்'
என்ற வரிகள் அப்பட்டமான உண்மையை உரைக்கின்றதே! எப்பேற்பட்ட கோபமும், ஆத்திரமும், மன உளைச்சலும் நல்ல இசை கேட்டால் நகர்ந்து ஓடி விடுமல்லவா!
'நாதம்' எனும் போது நடிகர் திலகம் உதடுகளைக் குவித்து, ஆனால் முழுமையாக ஒன்று சேர்க்காமல் இதழ்களுக்குள் சற்று இடைவெளி விடுவது (அதாவது பாடகர் திலகத்தின் குரலுக்கேற்றவாறு) அவர் ஒரு தெய்வக் கலைஞர் என்று உணர்த்தி விடும்.
அணு அணுவாக நம்மை ரசிக்க வைத்து அணுக்களில் அமைதி ஏற்படுத்தும் அமரகானம்.
நன்றி கலை சார்.
http://www.youtube.com/watch?feature...&v=j7eCsFO-Wkg
திரு. வாசு சார்,
பாடலை தரவேற்றியதற்கு மிகவும் நன்றி. அதில், ‘கலை’ என்ற வார்த்தை வரும்போது உங்களுக்கே உரிய கைவண்ணம். நன்றி.
வணங்காமுடி படத்தை மறுவெளியீட்டில் நான் பார்த்து 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இருந்தாலும் என் நினைவில் தங்கிவிட்ட ஒரு காட்சி. கிளைமாக்சில் வாள் சண்டையின்போது, திரு.நம்பியாரின் வாள், அங்குள்ள ஒரு சோபாவில் சொருகிக் கொண்டு விடும். நிராயுதபாணியான திரு.நம்பியார் பயத்துடன் திரு.சிவாஜி கணேசனை பார்ப்பார். அப்போதே அவரை கொன்றிருக்க முடியும். இருந்தாலும், ஒரு வாய்ப்பு கொடுப்பதற்காக, சோபாவில் சொருகிக் கொண்டிருக்கும் வாளை தன் கையில் உள்ள வாளால் திரு.சிவாஜி கணேசன் தட்டி, அதை எடுத்துக் கொள்ளச் சொல்லி ஜாடை காட்டுவார். ‘அட! வாத்யார் பாணியில் இருக்கிறதே’ என்று நான் ரசித்த சண்டைக் காட்சி அது.
(எங்கள்) வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால்
வறியவர்க்கெல்லாம் சுபதினம்...
என்பதைப் போல,
உங்களின் கையில் கம்ப்யூட்டர் இருந்தால்
எங்களுக்கெல்லாம் சுபதினம்.
நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ராஜ் ராஜ் சார்,
'பூங்கோதை' என்ற படம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்தது. (தெலுங்கில் 'பரதேசி' 1953) நடிகர் திலகம், ANR, அஞ்சலிதேவி நடித்த இப்படத்தில் 'நான் ஏன் வர வேண்டும்... ஏதுக்காகவோ... யாரைக் காண்பதற்கோ' என்ற ஜிக்கியின் பாடல் உண்டு. இந்தப் பாடல் 1951-ல் வெளிவந்த 'jadoo' இந்தித் திரைப்படப் பாடலின் தழுவல் ஆகும். இந்த வீடியோவை அப்லோட் செய்த வேம்பார் மணிவண்ணன் 'பூங்கோதை' திரைப்பட தமிழ்ப் பாடலை ஒரிஜினல் ஹிந்தியிலேயே இணைத்து ரீமிக்ஸ் செய்துள்ளார். ஏன் இப்படி இவர்கள் இஷ்டத்திற்கு குழப்புகிறார்கள் என்று புரியவில்லை. மணிவண்ணன் பல அரிய அற்புத பாடல்களை 'யூ ட்யூப்' இணைய தளத்தில் தரவேற்றி அரும் பெரும் சாதனை புரிந்து வருகிறார். அவருக்கு நம் நன்றிகள். ஆனால் ஒரிஜினலாக தமிழ்ப் படத்தில் வர வேண்டிய பாடலில் இந்தி மூலத்திலேயே இணைத்து ரீமிக்ஸ் செய்வது வருந்தத்தக்கது. இது கண்டிப்பாக நிறுத்தப்பப்ட வேண்டும். இதனால் ஒரிஜினல் படத்தின் பாடல்கள் எந்தப் படம் என்று குழம்பக் கூடிய வாய்ப்புகள் அதிகம். நீங்களே பாருங்கள்.
'Lo pyar ki ho gai jeet'
'Jadoo' இந்திப் படப் பாடல் லதாஜியின் குரலில்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vRTYEcnEY0w
'பூங்கோதை'யில் இடம் பெற்ற 'நான் ஏன் வர வேண்டும்... ஏதுக்காகவோ... யாரைக் காண்பதற்கோ' தமிழ்ப் பாடல் வேம்பார் மணிவண்ணன் புண்ணியத்தால் மீண்டும் இந்தி 'jaadu' படத்தில் இந்திப் பாடலுக்கு பதிலாக அழகாக குந்திக் :)கொண்டது.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5neBmH_yzeU
'பூங்கோதை' தமிழ்ப் படத்தின் தெலுங்கு மூலமான 'பரதேசி' யில் இதே பாடல் தெலுங்கில் அதே ஜிக்கி பாடியது. வீடியோ கிடைக்கவில்லை. ஆடியோ மட்டுமே.
'நேனெந்துக்கு ராவாலி
எவரிக்கோசமோ'
http://www.cineradham.com/newsongs/player/player.php?song[]=845
vasu: When Manivannan has trouble getting the Tamil version he posts the Hindi version for video with Tamil audio.
I don't think it is a big issue. Just enjoy the song ! :) If you find the Tamil video you can help him with the link. Unfortunately Tamil movie world has not preserved all Tamil movies. Or, it may be a copyright issue as one producer did for some 1940s movies.
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 19)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
'முள்ளும் மலரும்' பாடல்கள்... தொடர்கிறது...
http://i.ytimg.com/vi/k4Szjiw9Ih0/hqdefault.jpg
'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே ஹோய்'
http://i.ytimg.com/vi/GCGbU1H27Lk/maxresdefault.jpg
சுயமரியாதையோடு கூடிய என்ன ஒரு அகம்பாவ அலட்சிய தொனி! கதையின் நாயகனுக்கு கனப் பொருத்தமான காட்சிக்கேற்ற பாடல். 'வேலை போனாதான் என்ன? வாழ்வே அத்தோடு முடிந்து விடுமா?' என்று தனக்குத் தானே தைரிய சமாதானம் சொல்லி, அடுத்தவனுக்கும் அதைரியத்தைப் போக்கி, அமர்க்கள அறிவுரை கூறும் பாடல்.
http://i.ytimg.com/vi/BHgUwlvTFa8/mqdefault.jpg
கரடுமுரடான மலைப்பாதையில் பல்லக்கில் சாமி ஊர்கோலம் வர, படுகர் இனப் பெண்கள் போல மலை ஜாதிப் பெண்கள் பின்னால் பறவை போல் நாட்டியமாடி வர, விறைப்பான முறைப்பான ரஜினி பாலாவின் குரலில் வெளுத்து வாங்கும்
'நான்தாண்டா என் மனசுக்கு ராஜா'
பின்னே! எனக்கு நானே ராஜா... நீ என்னடா என்னைய வேலைய விட்டுத் தூக்கறது?
அப்படியே எதுக்கைகேற்ற மோனை.
'வாங்குங்கடா வெள்ளியில் கூஜா'
'நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கடா'
'என்ன வேண்டுமோ வரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள். எனக்கு கொடுக்கும் சக்தி இருக்கிறது. எனக்கு எவனும் வரம் கொடுக்கத் தேவை இல்லை'
என்ற மமதை கலந்த செருக்கு இயலாமையிலும் ஆற்றாமையிலும், அறியாமையிலும் காளியுடன் பொங்கிப் பிரவாகம் எடுப்பதைக் காணலாம். உள் நிறைய வேதனை வைத்து வெளி தைரியம் காட்டும் காளியின் காங்கேயன் காளை வேக கோபம்.
'யானையைக் கொண்டாங்க
குதுரையைக் கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம்
தொங்கணும் தோரணமாக
ஏண்டா டேய்! ராணியைக் கூப்பிடு (ரஜினியின் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளப் பாய்ச்சலை முகத்தில் கண்டு மிரளலாம். கண்கள் கோர தாண்டவம் ஆடும்)
அவளோட சேடியைக் கூப்பிடு
ஏ மதுரா ராஜ்ஜியம் என்னது
உனக்கொரு பாதியைக் கொடுக்குறண்டா'
'எனக்கு ஒருத்தன் என்ன வேலை தருவது? மதுரா ராஜ்யத்துக்கே நான் சொந்தக்காரன். அதில் உனக்கு ஒரு பாதியைக் கொடுக்கிறேன்'.
கர்ணனாக காளி இதை கொடையாகத் தரவில்லை. யாரும் கேட்காமலேயே அவன் ராஜ்யத்தை பங்கு போட்டுத் தர அவன் தயார். இது அவன் அசராத அயர்ந்த மனநிலை. ஜனரஞ்சக வாழ்வின் பிரதிநிதிகளின் சாதராண குணத்தைத்தான் காளி இப்பாடலில் பிரதிபலிக்கிறான் சற்று உயர்நிலை கோபத்தோடு. எல்லோருக்கும் இருக்கும் அந்த எதிர் வேகம் இவனிடம் கொஞ்சம் ஜாஸ்தி.
பொன்னா பூப்பூத்து வைரம் காயாக
காய்க்கும் என்னோட தோட்டம்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சிக் காட்டுறன் (கை போகப் போவது தெரியாமல் நம்பிக்'கை' யோடு)
மனசிருக்கு பொழச்சிப் பாக்குறேன்
ஏ போனா போகுது வேலை
உனக்கொரு வேலையக் கொடுக்குறண்டா
அத்தனை வரிகளும் உடன் ஆடுபவர்களுக்கோ, ஏனையோர்களுக்கோ காளி சொல்வதல்ல. அத்தனையையும் அவன் தன் உயர் அதிகாரி எஞ்சினியரை மனதில் வைத்தே வஞ்சம் தீர்க்கப் பாடும் பாடல் புலம்பல். 'நீ என்னை என்ன செய்தாலும் அது துரும்பளவு கூட என்னை பாதிக்காது' என்ற ரீதியிலேயே பாடல் முழுதும் அர்த்தம். அவன் ஆத்திரம் முழுதும் அதிகாரி மீதே. அவன் தன்னை வேலை நீக்கம் செய்தானே என்ற வெறி குடியில் இன்னும் குதி போட்டு கும்மாளமிடுகிறது.
மென்மையான பாடல்களுக்கும், குழைவான பாடல்களுக்கு மட்டுமே பாலா என்றிருந்த நிலைமையை மாற்றி ஆண்மையின் ஆவேச ஆணிவேர் பாலாவின் குரலில் ஊடுருவி கம்பீரத்தை கர்வமாய் அந்தக் குரலில் நமக்களித்த அதிகப்பட்ச ஃபாரன்ஹீட் பாடல். 'வீரப் பாடல்களுக்கு விவரம் பத்தாது' என்போரின் வாயை இந்த ஒரே பாடலில் அடைத்து ஆச்சரியப்பட வைத்தார் பாலா.
ராஜா! சொல்லவும் வேண்டுமோ!
மலை ஜாதிப் பெண்களின் அந்த கோரஸை இன்றுவரை யாராலும் மறக்க முடியுமா? அல்லது ரஜினி ஆடும் கோர தாண்டவத்தைத்தான் மறக்க முடியுமா? ஜெயக்குமாரியும், மற்ற நடன மாதர்களும் ஒருவருக்கொருவர் வரிசையாக கைகளால் மற்றவர் இடுப்பைக் கோர்த்துக் கொண்டு முன்னாலும் பின்னாலும் ஊஞ்சல் போல அசைந்தாடுவது அழகு. அந்த இனம் புரியாத வார்த்தைகள் நிறைந்த கோரஸ் 'லேலேலே' வா அல்லது 'ரெரெரெ' வா என்று பட்டிமன்றமே நடந்து நான் கேட்டதுண்டு. அழகான காட்டுவாசிகள் தரப்பு தாளங்கள். கீழே கோல் போட்டு தாண்டித் தாண்டி ஆடும்போது கொடுக்கும் இசை இங்கே அது இல்லாமலேயே ஒலிக்கும். இடையிசை முடிந்ததும் மறுபடி அந்த மலைஜாதி கோரஸ் தேனாய் காதில் நுழையும். நாட்டுப்புறப் பாடல் மெட்டையும், மலைஜாதிப் பாடல் மெட்டையும் இணைத்து தாரை, தப்பட்டை, முரசுகளின் இணைந்த கலவை ஒலியால் ஒய்யார இசை தந்த தொடரின் நாயகரை பாராட்ட வார்த்தைகளைத்தான் தேட வேண்டியுள்ளது. நாயகனின் ஆங்காரத்தில் இசையும், குரலும், வரிகளும், நடிப்பும் சம அளவில் பங்கு போட்டுக் கொள்கின்றன.
சிச்சுவேஷனுக்குத் தகுந்த பாடல். தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிடும் தன்மை. எவருக்கும் அடங்கா கொதி நிலை. எவரையும் மதியா மதி இழந்த நிலை.
சில இடங்களில் ரஜினி அக்கம் பக்கதிலுள்ள எவரையும் பார்க்காமல், கவனிக்காமல் மேளம் கொட்டி, தன்னையே முன்னிலைப்படுத்தி, தலையைச் சாய்த்து, வெறியுடன் குனிந்தபடி ஆடுவது இந்தப் பாடலில் அவர் பங்கை எங்கோ தூக்கிக் கொண்டு சென்று விடுகிறது என்பது என் கருத்து.
ரஜினியின் ஆங்காரப் பாடல்களில் ஆகாயம் தொடுவது.
அடுத்து 'அடேய் நண்பா! உண்மை சொல்வேன்'. இது என் வரிசை. உங்களுடையதும் அதுதானே!
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BHgUwlvTFa8
Vasu ji
mullum malarum writeup is amazing.. more than what mahendran showed us in screen, you shown more depth in writing
keep it up. kudos
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 20)
'முள்ளும் மலரும்' பாடல்கள்... தொடர்கிறது...
'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'
http://i.ytimg.com/vi/9JQgkQIeUzM/hqdefault.jpg
எல்லோரையும் இம்சைப்படுத்தும் காளியையே இம்சிக்கும் மங்கா. முதலிரவில். கை இழந்த காளிக்கு இழந்த கையே மீண்டது போல துணைவியாகும் மங்கா ஒரு சாப்பாட்டுப் பிரியை என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
அன்றைய ஆனந்தமான இரவில் காளி ஒரு பேச்சுக்கு மங்காவைப் பாட்டுப் பாட கோரிக்கை வைக்க, மங்கா விடுவாளா? தமிழகத்து சமையல் அனைத்தையும் தன் குரலில் பாடலாக்கி அத்துணை பேரையும் சப்புக் கொட்ட வைத்து விட்டாளே! வேறு வழியில்லாமல் அவள் பாடலைக் கேட்டு அழாத குறையாக காளி தலையில் அடித்துக் கொள்ள, அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலை கொள்ளாமல் அவள் சகட்டு மேனிக்கு மூன்று நிமிடப் பாடலில் சப்புக் கொட்டியவாறே சமையல் கலையையே நமக்கு கற்றுத் தந்து விடுகிறாளே!
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
https://encrypted-tbn1.gstatic.com/i...gKhTEKnhuLz7St
நெய் மணக்கும் கத்தரிக்கா
http://3.bp.blogspot.com/_ABIR8T9swT...0/DSC06039.JPG
நேத்து வச்ச மீன் கொழம்பு
http://www.spiceindiaonline.com/file...28.preview.jpg
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா
பச்சரிசி சோறு உப்புக் கருவாடு
http://1.bp.blogspot.com/-0skoOqbCyw...kuzhambu11.JPG
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொளக்கீர
http://farm3.static.flickr.com/2782/...3a51f514_m.jpg
வாடாத சிறுகீர
நெனக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
ஸ்....
அள்ளித் தின்ன ஆச வந்து என்ன மீறுது
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா
பாவக்கா கூட்டு பருப்போட சேத்து
http://www.microwaverecipescookbook....7/IMG_1373.jpg
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகாளான் வறுத்தாச்சு... பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வரகு கூழுக்கது ரொம்பப் பொருத்தமய்யா
http://2.bp.blogspot.com/-vETvfHuKI3...0/DSC_0059.JPG
தினம் குடிச்சா ஒடம்பு அது ரொம்பப் பெருக்குமய்யா
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
நெய் மணக்கும் கத்தரிக்கா
நேத்து வச்ச மீன் கொழம்பு
என்ன இழுக்குதைய்யா
நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு
வந்து மயக்குதய்யா
பழயதுக்கு தோதா புளிச்சிருக்கும் மோரு
https://farm8.staticflickr.com/7345/...c5e029_z_d.jpg
பொட்டுக்கட்ல தேங்கா போட்டரச்ச தொவையலு
http://www.cookatease.com/uploads/Po...Thuvayal_3.jpg
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு எண உலகத்துல இல்லவே இல்ல
அள்ளித் தின்ன எனக்கு அது அலுக்கவே இல்ல
இவ்வளவு நேரம் தனக்குப் பிடித்த சாப்பாட்டு அயிட்டங்களைக் கூறி காளியைப் பதம் பார்த்த மங்கா இறுதியில் தான் காளிக்கு எல்லாவற்றையும் விட வெகு சுவையான 'மேனி மெனு'வை அறுசுவை விருந்தாக படைக்கப் போவதை எவ்வளவு சூசகமாகத் தெரிவிக்கிறாள் பாருங்கள் அவளது பாணியிலேயே.
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமாக சொல்லப் போறேன் பொம்பளதாங்க
சூடாக இருக்கறப்போ சாப்பிட வாங்க
அடடா!அருமை! கோவில் மாடு மாதிரி தீனி தின்று ஊரை ஆம்பிளை போல் சுற்றி வந்த மங்காவுக்குள் இருக்கும் நளினமான பெண்மை இப்போது நயமாக வெளிப்படுகிறது காளியே வியந்து போகும் அளவிற்கு. அதுவும் சாப்பாடு சூடாக இருக்கும்போது சுவையாக இருப்பது போல் தான் சூடாக இருப்பதாய் நாசூக்காய் உணர்த்தி தன்னையே சாப்பிட வருமாறு அவள் கோரிக்கை வைத்து அவளுக்குள் ஒளிந்திருக்கும் அந்தரங்கப் பெண்மையை அழகாக, அருவருப்பின்றி, ஆபாசமில்லாமல் வெளிப்படுத்துகிறாள்.
பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான அருமையான ஜனரஞ்சகப் பாடல். வெள்ளிக்கிழமைகள் விநாயகர் கோவிலில் வழங்கும் சுண்டலை அனைத்துத் தரப்பினரும் வாங்கி சுவைத்து இன்புறுவதைப் போல லோ கிளாஸ் ஹைகிளாஸ் என்று அனைத்து கிளாஸ்களையும் ரசிக்க வைத்த ராஜாவின் 'ஏ' கிளாஸ் பாடல். பாடல் நெடுக வரும் அந்த 'டிய்யூங்... டிய்யூங்.. டிய்யூ டிய்யூ டிய்யூங்' இசையை லேசில் மறந்து விட முடியாது. பாடலின் முடிவில் ரஜினி 'படாஃபட்'டை இறுகக் கட்டித் தழுவ, ராஜா தரும் சிறுக சிறுக பெருகும் அந்த ascending தாள இசை ரகளை.
இந்த மாதிரிப் பாடலை ராட்சஸியை விட்டால் பாட யாரும் கிடையாது. ஆனால் ராஜாவுக்கும், ஈஸ்வரிக்கும் ஆரம்பத்திலிருந்தே டெர்ம் சரியில்லாததால் மிகப் பொருத்தமாக ராஜா வாணி வசம் இந்தப் பாடலை ஒப்படைத்து விட்டார். இன்னொன்று. இந்தப் பாடலை அவரது ஆஸ்தானப் பாடகி ஜானகிக்கும் அவர் அளிக்கவில்லை. ஜானகிக்கு அளித்திருந்தால் நன்றாக இருந்தாலும் விரகதாபம் தூக்கி மேலோங்கியிருக்க வாய்ப்புக்கள் அதிகம். வாணியிடம் வந்ததால் பண்பாட்டு வாசனை மாறாமல், எல்லை மீறாமல் பாடல் மிக அருமையாகப் பரிமளித்தது. இந்த சாப்பாட்டு சமாச்சாரமெல்லாம் ராஜா 'அன்னக்கிகிளி'யிலேயே புகுந்து மேயந்து விட்டார். இசை அதைவிட இதில் கம்மிதான். ஆனால் மண்வாசனை மாறாமல் அமர்க்களப் படுத்தியிருபார்.
'படாஃபட்' மிகப் பொருத்தம். கிராமத்துக்கே உரித்தான அந்த பட்டுப் புடவை செல்க்ஷனும் ஏ.ஒன். சாப்பாட்டு வகைகளை ரசித்து பாடுவது நாமே ருசிக்கக் கூடிய அளவிற்க்கு டாப். ரஜினி அனுபவிக்கும் சித்ரவதைகளும் ரசம்.
வாசு,
ஒரு வாரத்திற்கும் மேலாக முள்ளும் மலரும் படத்திற்காக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கடைசிப்பதிவு...?
பாவி (செல்லமாகத்தான்) . இப்படி நாக்கில் எச்சில் ஊறும் படங்களைப் போட்டு எல்லோரையும் படுத்த வேண்டுமா? வேண்டும். வேண்டும்!!!